Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 20 June 2012

மாணவர்-வாலிபர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல்

0 comments

அரசு உதவிப் பெறும் பள்ளியை மூடுவதற்கு


எதிர்ப்பு மாணவர்-வாலிபர்கள் மீது காவல்துறை 


தாக்குதல் 


சென்னை, ஜூன் 18 - அரசு உதவிப் பெறும் பள் ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்-வாலிபர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.இதுபற்றிய விவரம் வரு மாறு:நுங்கம்பாக்கம் கிரி யப்பா சாலையில் சத்திய மூர்த்தி மேல் நிலைப்பள்ளி உள்ளது. பாலமந்திர் காம ராஜர் அறக்கட்டளை சார் பில் இந்த பள்ளி நடத்தப்படு கிறது. இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளியாகும். முன் னாள் முதல்வர் காமராஜ ரால் தொடங்கப்பட்ட இப் பள்ளியில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அறக்கட்டளை நிர்வா கம், பள்ளி கல்வித் துறை யிடம் அனுமதி பெறாமலும், ஒரு தீர்மானத்தின் மூலமாக 2011-2012ம் ஆண்டு 11ம் வகுப் பிற்கான மாணவர்கள் சேர்க் கையை நிறுத்தியது. இந்தச் சூழலில், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு முடித்து 11ம் வகுப்பில் சேர விரும்பிய மாணவர்களை பள்ளி நிர் வாகம் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அரசின் உதவியை பெற்று வருகிறது.2012-13ம் கல்வியாண்டில் அப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த 20 (18பேர் தலித்) மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் அவர் களை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது.இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி கிருபாகர னுடன் டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவர் சேர்க் கைக்கு நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்த மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியை மூடுவதற்கு உத்தரவிட்டுள் ளார்.பள்ளி உள்ள இடத்தை வணிக வளாகமாக மாற்ற முயற்சிக்கும் அறக்கட்டளை யின் செயலாளர் மாயாகெய் தாண்டே-வுக்கு உதவியாக மாவட்ட கல்வித்துறை அதி காரிகளும், காவல்துறையும் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண் டும், பள்ளி வளாகத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது, அரசின் அனுமதி யின்றி மாணவர் சேர்க் கையை நிறுத்தியதோடு, தவ றான தகவல்களை கொடுத்து அரசு உதவி பெற்று வந்த அறக்கட்டளை நிர்வாகத் தின் மீதும், மாவட்ட கல்வித் துறை அதிகாரி கிருபாகரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வா யன்று (ஜூன் 19) பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.வாலிபர் சங்க தென் சென்னை மாவட்ட பொரு ளாளர் எம்.தாமு, மாவட் டச் செயலாளர் செல்வக் குமார் ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் முன்னாள் மாண வர்கள்,சேர்க்கைக்காகவிண் ணப்பித்து காத்திருக்கும் மாணவ-மாணவிகள்; அவர்களின் பெற்றோர்கள், வாலிபர்-மாணவர் சங்க ஊழி யர்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.இதனிடையே அங்கு வந்த காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ராஜ ராஜன் உள்ளிட்டோர் மாண வர்கள் மீது கண்மூடித்தன மாக தடியடி நடத்தி மாண வர்களையும், பெற்றோர் களையும் விரட்டினர்.

வாலி பர்-மாணவர் சங்கத் தலை வர்களை லத்தியால் தாக்கி னர். அதன்பின்னர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வேனில் எறிந்தனர். அதன் பின்னர் வேனில் சூழ்ந்து நின்று கொண்டு, கைது செய் யப்பட்டவர்களை கடுமை யாக தாக்கினர்.குறிப்பாக மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகத்தை பூட்ஸ் கால்களால் உதைத் தும், மிதித்தும், லத்தியால் அடித்தும் துன்புறுத்தினர். இத்தாக்குதலில் ஆறுமுகத் தின் பல் உடைந்து ரத்தம் கொட்டியது. வாலிபர் சங்க தலைவர் மணியின் தலை மீது போலீசார் தாக்கியதில், அவர் மயக்கமுற்றார். இவ் விருவருக்கும் போலீசார் முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுத்துவிட்டனர்.அதன்பின்னர் சிபிஎம் தலைவர்கள் க.பீம்ராவ் எம்எல்ஏ, ஏ.பாக்கியம், டி.நந்தகோபால், கே.வனஜ குமாரி, ஜி.செல்வா, எஸ். குமார், எஸ்.கே.முருகேஷ், மாதர் சங்க தலைவர் எம். சரஸ்வதி, மாணவர் சங்க தலைவர்கள் கே.எஸ்.கனக ராஜ், ரெ.ஸ்டாலின், உச்சி மாகாளி உள்ளிட்டோர் அடிபட்டவர்களை சென்று பார்த்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதித் தனர்.

இயக்கம் நடத்த அறைகூவல்

இத்தாக்குதல் தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ் மோகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறை யின் இந்த அராஜக காட்டுமிராண்டித் தனமான நடவடிக் கையை வன்மையாக கண்டித்துள்ளனர்.மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை உரிமையை பறிக்கிற அரசின் செயலை எதிர்த்த இத்தகைய போராட்டங் கள் தொடரும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், சென்னை மாநகர காவல்துறையின் இந்த காட்டுமிராண்டிதனமான தாக் குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்து மாறு மாவட்டக்குழுக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com