Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 13 June 2012

கட்டண கொள்ளையை தடுக்க கோரி - எஸ்.எப்.ஐ போராட்டம்..!

0 comments
தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை
மாணவர்கள் முற்றுகை


தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கட் டாயக் கல்வி உரிமைச் சட் டத்தை நடைமுறைப்படுத் தாத பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி யும் மாநிலம் முழுவதும் இந் திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆயிரக்க ணக்கான மாணவ-மாணவி யர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்ட ணத்திற்கு மாறாக பெரும் பாலான பள்ளிகளில் கூடு தல் கட்டணங்கள் வசூலிக் கப்படுகிறது. மேலும் அரசு உதவிபெறும் தனியார் பள் ளிகளிலும் முறைகேடாக கட்டாய நன்கொடை வசூ லிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய தமிழக அரசோ, கல்வித்துறையோ வழக்கம் போல் தனியார் பள்ளி முத லாளிகளின் கொள்ளைக்கு துணை போகின்றன.மேலும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடை முறைப்படுத்த பெரும்பா லான தனியார் பள்ளிகள் மறுத்து வருகின்றன. குறிப் பாக, சட்டத்தில் சொல்லப் பட்டுள்ள 25 விழுக்காடு, சமூகரீதியாகவும் பொருளா தார ரீதியாகவும் பின்தங் கியவர்களுக்கு மாணவர் சேர்க்கை கொடுக்க வேண் டும். இதை உறுதிப்படுத் தாத பள்ளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் 10-ஆம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளிகளி லிருந்து தேர்ச்சிப்பெற்றவர் களை ஒவ்வொரு மாவட் டத்திலும் முதல் பத்து இடங்களை பிடித்த மாண வர்களை தமிழகத்தின் ‘தலைசிறந்த’ தனியார் பள் ளிகளில் அவர்கள் சேர்ந்து படிப்பதற்கு அரசு உதவி செய்யும் என்று முடிவெ டுத்து அறிவித்துள்ளது. கல்வி வியாபாரத்திற்கு துணைபோகும் இந்த மோச மான நடவடிக்கைக்கு இந் திய மாணவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள் ளது.அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவோ அடிப் படை வசதிகளை செய்து தரவோ மறுத்துவரும் அரசு, தனியார் பள்ளிகளே உயர்ந் தவை; தரமான கல்வி தனியார் பள்ளிகளில்தான் கிடைக் கும் என்ற பொய்யான தோற் றத்தை உருவாக்கவும் கல்வி வியாபாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையி லும், அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தும் விதமாக வும் அரசின் மேற்கண்ட அறிவிப்பு உள்ளது. ஆகவே அரசு இந்த முடிவை திரும் பப் பெற வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கம் மாநிலம் முழுவ தும் செவ்வாயன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவல கங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. சங்கத்தின் மாநிலச்செய லாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையில் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநரகத் தை முற்றுகையிடும் போராட் டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஸ்டாலின், மாநிலத்துணைத்தலைவர் எம்.என்.குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜான்சி, மாநிலக்குழு உறுப் பினர்கள் ஆறுமுகம் உள் பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அரசின் தவறான கல்விக் கொள்கைக்கு எதி ராக கண்டன முழக்கங் களை எழுப்பினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

நாகை

நாகப்பட்டினம் மாவட் டத்தில் 3 ஆயிரத்தற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகையில் போராட் டத்தை துவக்கி வைத்து சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசினார். அவுரித்திடலிலிருந்து மாணவர்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது.மயிலாடுதுறையில் ஆயி ரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.கண்டனம்திண்டுக்கல்லில் மாண வர்கள் மீது கண்மூடித்தன மான தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறைக்கு சங்கத்தின் தலைவர்கள் கே.எஸ்.கனக ராஜ், ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


திண்டுக்கல் போலீசார் கொடூரத் தாக்குதல்

திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ் தலைமையில் ஊர்வலமாக வந்த மாணவர்கள் முற்றுகை யிட முயன்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த போலீசார் சுற்றி வளைத்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் பாலச்சந்திரபோசை, சப்-இன்ஸ்பெக் டர் சசிக்குமார் உட்பட 3 போலீசார் கடுமையாகத் தாக்கினார். பாலச்சந்திரபோசை கழுத்தைப் பிடித்துத் திருகி தாக்கினர்.மாவட்டத் தலைவர் பாலாஜி, டேவிட், ராஜ்குமார் உள் ளிட்ட பலரும் போலீசாரின் தாக்குதலுக்கு ஆளானார்கள். பூட்சு காலால் ஸ்டீபன் என்ற மாணவரை போலீசார் உதைத்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவர் கள் கையில் வைத்திருந்த பேனர்களையும் கொடிகளையும் போலீசார் கிழித்தெறிந்தனர். அமைதியான முறையில் முற்றுகையிட வந்த மாணவர் சங்கத்தினரை போலீசார் மிகக் கொடுமையாக தாக்கியதைப் பார்த்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அதிர்ச்சியுற் றனர். இந்தத் தாக்குதலையடுத்து மாணவர்களை உட னடியாக அப்புறப்படுத்த எண்ணி அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். ஆனால் மாணவர்கள் போலீசாரின் அராஜக தாக்கு தலுக்கு எதிராக கைகளைக் கோர்த்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

                                                                                                      நன்றி: தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com