Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 3 June 2012

நெருக்கடியில் பயணிக்கும் இந்திய பொருளாதாரம் - பேரா.வெங்கடேஷ்ஆத்ரேயா

0 comments
இந்திய பொருளாதாரம் ஒரு நெருக்கடியை நோக்கி பயணம் செய் கிறது என்று பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசியுள்ளார். திண்டுக்கல்லில் இந்திய சமூக விஞ் ஞானக் கழகத்தின் சார்பாக மே 30ந் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, இந்தியாவின் வளர்ச் சியும் நம் முன்னுள்ள சவால்களும் என்ற தலைப்பில் பேசியதாவது:சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்ற சமயத்தில் அதனை ஒரு சாக்காக பயன் படுத்திக் கொண்டு இந்திய நாட்டிற் குள் அந்நிய நிறுவனங்களுக்கு கதவு களை அகலத் திறந்து விட அரசு யோசித்ததோடு, சோசலிசத்திற்கு எதி ராக பிரச்சாரமும் தொடங்கியது. சோசலிசத்தைக் கைவிட்டால் இந்தி யாவில் ராமராஜ்ஜியம் ஏற்படும் என் பது போல் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் தனியார் மயம், உலகமயம், தாராளமயம் அமல்படுத் தப்பட்டு அரசு கண்ட கனவு நிறை வேறியதா? என்றால் அது இல்லை. பணவீக்கம் மேலும் மேலும் அதி கரித்த வண்ணம் உள்ளது. வறுமை குறையவில்லை. என்.எஸ்.எஸ் என்று சொல்லக் கூடிய ஒரு நிறுவனம் நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் குடும்பங்களில் ஆய்வு நடத்தியது. 2004-05ல் நடத்தப் பட்ட இந்த சர்வேயில் 45.6 கோடி பேர் தான் வேலை செய்கிறார்கள். 


இதில் ஐ.டி. துறையில் 10 லட்சம் பேர் பணி புரிகிறார்கள். 2010-12ல் இது 0.5 சத வீதம் ஆகும். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையில் பணியாற்றக்கூடியவர்கள் வேலை பாதுகாப்பு இல்லாத முறை சாராத் தொழிலாளர்களாகவே உள்ள னர். எந்தவித சட்ட சலுகைகளும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த 45.6 கோடியில் 7 கோடி பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். 13 கோடி பேர் ஒப்பந்தக் கூலிகளாக உள்ளனர். 25.6 கோடி பேர் சுயவேலை செய் கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்பவர்களும் இந்த சுயவேலை செய்பவர்கள் பட்டி யலில் வருவார்கள். மேலும் கைவினைஞர் களும் அடங்குவர். நமது நாட்டில் உழைக்கும் சமூகம் நிறைந்து உள்ளனர். கூலி வேலை கிடைக்கவில்லை எனில் வேறு ஏதா வது கூலி வேலைக்குச் சென்றுவிடு வார்கள். இவர்கள் மிக மலிவான கூலி உழைப்பாளர்கள். கடந்த 32 ஆண்டு களில் இந்த நாடு எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் 6 சதவீத வளர்ச்சியைப் பற்றி பெரிய தாக பேசிக்கொண்டிருக்கையில் 2 லட் சத்து 75 ஆயிரம் விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் பாதிக்கும் மேற் பட்டவர்களிடம் செல்போன் இருக் கிறது என்று அரசு கூறுகிறது. செல் போன் வைத்திருப்பதால் மட்டும் நாடு வளர்ச்சி பெற்றதாகக் கூற முடியாது. 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சர்வே, 5 வயதுக்குக் குறைவான குழந் தைகளில் 81 சதவீதம் பேருக்கு ரத்த சோகை நோய் உள்ளது என்று கூறு கிறது. 45 சதவீதம் இந்திய குழந்தைகள் எடைகுறைந்த குழந்தைகளாக பிறக் கின்றன. வாழ்கின்றன. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கூட இந்த எடை குறைந்த குழந்தைகள் 20 சதவீதம் பேர் தான் உள்ளனர். பல விசயங்களை ஊட கங்கள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன. குஜராத் மாநிலத்தை ஒரு மாடல் மாநிலமாக சித்தரித்தன. ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா போன்ற மாநிலங் களை விட குஜராத் பின்தங்கிய நிலை யில் உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு வளர்ச்சி பெற்று வருகிறது என்பது ஒரு மாயை.

ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடு என் றால், அந்த நாட்டில் வாழக்கூடிய மக் கள் ஆரோக்கியமாக இருக்க வேண் டும். கல்வியில் சிறந்து விளங்க வேண் டும். கிராமங்கள் தன்னிறைவடைந் திருக்க வேண்டும். இன்னும் கூட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நூற்றுக்கு 80 சதவீதம் பேர் குடிசை களில் தான் வாழ்கிறார்கள். இதைத் தான் ஒளிரும் இந்தியா என்றார்கள். இன்னும் 100 நாள் வேலை வாய்ப்பு முறையாக போய் சேராத குடும்பங்கள் கிராமங்களில் உள்ளன. அமெரிக்காவிற்கு ஜலதோசம் பிடித்தால் இந்தியாவிற்கு காய்ச்சல் வரும் என்பது தான் இப்போதைய நிலைமை. பன்னாட்டு நிறுவனங் களின் மூலதன வரவிற்காக, அந்த நிறு வனங்களுக்கு அஞ்சி நடுங்கக் கூடிய ஒரு அரசாக இந்தியா உள்ளது. ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் இந் திய பயணிக்கிறது. எதிர் வரும் காலங் களில் இந்த நெருக்கடி மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வெங்கடேஷ் ஆத்ரேயா பேசினார். இக்கருத்தரங்கிற்கு செயலாளர் எஸ். கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் க. மணிவண்ணன், பொரு ளாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். (நநி)

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com