Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 25 May 2012

வேகமாகச் சரிந்து வரும் பொருளா தாரம் - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

0 comments

ஊழல், வேலையில்லாத் திண் டாட்டம், அத்தியாவசியப் பொருட் கள் விலை உயர்வு மற்றும் இந்தியர் களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தைப் பறிமுதல் செய்வது போன்ற அனைத்துத் துறைகளிலும் ஐ.மு.கூட் டணி அரசு தோல்வியடைந்து விட் டது.ஐமுகூட்டணி அரசின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்று சிபிஐ(எம்) மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி பத் திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.  

அதிகரித்து வரும் விலைவாசி, வேகமாகச் சரிந்து வரும் பொருளா தாரம் மற்றும் ஊழல் போன்ற பிரச் சனைகளைச் சுட்டிக்காட்டிய யெச் சூரி, அரசு தனது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார். பெண்கள் இட ஒதுக் கீடு மசோதா மற்றும் உணவுப் பாது காப்பு மசோதா போன்றவற்றை முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற் றுவோம் என்று குறிப்பிட்ட ஐ.மு. கூட்டணி, அரசு இவை எதனையும் நிறைவேற்றவில்லை.ஐ.மு.கூட்டணி அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இதுதான் ஐ.மு.கூட்டணி அரசின் 3 ஆண்டு கால சாதனை என்று சீத்தாராம் யெச்சூரி தெரி வித்தார்.2006ம் ஆண்டு அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த கறுப்புப் பணம் ரூ.23,373 கோடி. ஆனால் 2010ம் ஆண்டு அது ரூ.9,295 கோடியாக குறைந்துள்ளது என்று ஐ.மு.கூட்டணி அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இக்கறுப் புப் பணம் எங்கே போனதென்று அரசுக்கு எதுவும் தெரியவில்லை. இந்தியாவிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்று எந்தக் கணக்கு மில்லை.இந்தியர்கள் வெளிநாட்டு வங்கி களில் பதுக்கி வைத்திருக்கும் பணத் தைப் பறிமுதல் செய்ய வேண்டும். கறுப்புப் பணத்தைச் சமாளிக்க இது தான் ஒரே வழி என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஊழல்களில் சிக்கி தவிக்கும் அரசு:

மன்மோகன்சிங் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் 2வது ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 3 ஆண் டுகளுமே ஊழலில் சிக்கி, காங்கிரஸ் தலைமையிலான அரசை எழ முடி யாத வகையில் தலைகுனிய வைத் திருக்கிறது. உலகம் இன்னும் பொரு ளாதார மந்த நிலையில் தவித்துக் கொண்டு இருக்கிறது. முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 3 வருடம் 9 சதவீதம் வளர்ச்சி இருந்ததால், இந் தியப் பொருளாதாரம், இப்போதும் கொஞ்சம் தடுமாறாமல் இருக்கிறது.கடந்த ஆண்டுகளில் தொழில் துறை, வேளாண்மை செழிப்பாக இருந்தது. ஏற்றுமதியும் குறிப்பிடத் தக்க வகையில் இருந்தது. நுகர்வோர் வாங்கும் சக்தி நன்றாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங் கும் சக்தி, எல்லோருக்கும் இருந்தது என, காங்கிரஸ் அரசு கூறினாலும், ஏழைகள், ஏழைகளாகவே, ஒரு வேளை உணவுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் பரிதாபம், இந்திய கிராமங்களில் இன்னும் தொடரும் துயரமாக உள்ளது.ஐ.மு.கூட்டணியின் முதல் ஆட் சிக் காலத்தில் வருமானமும் வேலை வாய்ப்புகளும் அதிகரித்ததாக பரபரப்பாக தெரிவிக்கப்பட்டுள் ளது. 2010ம் ஆண்டு தலைநகர் தில் லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இந்தப் போட்டி யில், மாபெரும் ஊழல், பல நூறு கோடி ரூபாய் அளவில் அரங்கேறி யது. காங்கிரஸ் எம்பியான சுரேஷ் கல்மாடிதான்,காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழு தலைவர். அவர் மீது ஊழல் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையிலும் இருந்தார்.

வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மிகவும் குறைந்து வருகிறது. அக்டோபர் - டிசம்பர் மாத காலகட் டத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய குறைந்த நிலையான 6.1 சதவீதத்தை எட்டியது. உயர் வட்டி விகிதம் மற் றும் அரசின் மந்த நடவடிக்கையால் முதலீடு மற்றும் நுகர்வோர் தேவை யில் பெரும் சரிவு ஏற்பட்டது. வளர்ச்சியும் தடைபட்டது. தொழில் துறை வளர்ச்சி மார்ச் மாதம் 3.5 சதவீதமாக குறைந்தது. அமெரிக்கா வின் மதிப்பிலும், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, 1 டால ருக்கு ரூ. 54.75 என்ற சரிவு நிலையை இந்திய கரன்சி கண்டது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் செலவினம் செய்ய வேண்டியுள்ளது.ரூபாய் மதிப்பு அதல பாதாளத் தில் சரிந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.

2011-12 ம் ஆண்டு காலகட்டத்தில் 18 ஆயிரத்து 500 கோடி வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்று மதி வருவாய் குறைந்துள்ள தால் ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந் துள்ளது.பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்க நிலைக்கு எகிறி உள்ளது. இதனால் உயர் வட்டி விகிதத்தை முத லீடு மற்றும் நுகர்வோர் தேவை விஷ யத்தில் குறைப்பது என்பது ரிசர்வ் வங்கிக்கு கடினமாகி உள்ளது.நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.சுரங்கத் துறையின் பெரும் திட் டங்களில் அரசு முடிவெடுக்க தாம தம் செய்துள்ளதால் வளர்ச்சி விகி தம் எதிர்மறை நிலையை அடைந் துள்ளது.காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களும் அரசின் கொள்கைகளில் தேக்கநிலை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com