Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 20 May 2012

புதுச்சேரி தனியார் கல்லூரி விடுதியில் மாணவி மர்மச் சாவு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: இந்திய மாணவர் சங்கம்

0 comments
மணகுள விநாயகர் மருத் துவக் கல்லூரி விடுதியில் மர்ம மான முறையில் மாணவி இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப் பதியை அடுத்துள்ள திருச் சனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடராயலு ரெட்டி -கயல்விழி தம்பதிய ரின் மூத்த மகள் பிரியதர் ஷினி. இவர் புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீமணகுள விநாய கர் மருத்துவக்கல்லுரியில் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். அவர் மே 17ஆம் தேதி காலை கல்லூரி விடுதியில் மர்ம மான முறையில் இறந்துள் ளார். பிரிதர்ஷினி இறந்த தக வல் அறிந்த அவரது பெற் றோர் புதுச்சேரி அரசு மருத் துவனை சவக்கிடங்கில் வைக்கப்பட்ட உடலை பார்த் தனர். பின்னர் பிரியதர்ஷினி யின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் தாயார் கயல்விழி திருபு வனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகா ரில் கூறியிருப்பதாவது:பிரியதர்ஷினி இறக்கும் முன்பு மே-16 ஆம் தேதி இரவு என்னிடம் செல்பேசி யில் பேசும்போது, கல்லூரி நிர்வாகத்தால் தனக்கு பாலி யல் தொல்லை இருப்பதாக அழுது கொண்டே கூறி னார். எனவே நான் சமாதான மாக, மறுநாள் புதுச் சேரிக்கு வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நடந்துள் ளது. எனவே என் மகள் பிரியதர்ஷினி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டுள்ள கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைஇது குறித்து இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதே கல்லூரியில் கடந்த மே 5ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி நிவே தித்தா கல்லூரி விடுதியில் இறந் துள்ளார். அவர் இறந்து இரண்டாவது வாரத்தில் இறுதியாண்டு மாணவி பிரி யதர்ஷினி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் அருகில் உள்ள திருபுவனை காவல் நிலையத்தில் அளித் துள்ள புகாரில் மாணவர் கள் காதல் தோல்வியில் தற் கொலை செய்து கொண்ட தாக கூறியுள்ளனர்.காவல்துறையும் இரு மாணவிகளின் மரணத்தை தற்கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளது. இந்த இரு மாணவிகளின் மரணத் தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் புதுச்சேரி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிக ளில் நடக்கும் புகார்கள் குறித்து கண்காணிப்புக்குழு அமைத்து கண்காகணிக்க வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி உயர் கல்வி துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததை போல் உள்ளது  எனவே தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என எஸ். எப். ஐ வலியுறுத்துகிறது.

மேற்கூறிய கோரிக்கைகளை கண்டித்து  வருகின்ற திங்கள் கிழமை காலை ( 21-05-2012 ) புதுவை சாரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மாணவியின் தந்தைஇறந்த மாணவியின் தந்தை வெங்கடராயலுரெட்டி தனது மகளை இழந்த சோகத் தோடு அழுது கொண்டே கூறுகையில்...

ஆந்திராவில் உள்ள கீழ் திருப்பதியை அடுத்துள்ள ரூரல் மண்டல் பகுதியில் உள்ள திருச் சானூரில் விவசாயம் செய்து வருகிறேன்.எனது மூத்த மகள் பிரியாதர்ஷினி அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பின்னர் மருத்துவம் படிப்ப தற்கு ஆசைப்பட்டால், அவ ளது விருப்பத்தின் படி எனது உறவினர்கள் மூலம் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குளவிநாயகர் மருத் துவக் கல்லுரியில் கடந்த 2008 ஆம் ஆண்டு சேர்த் தேன். தனது விவசாய நிலத்தை விற்று அவளை படிக்கவைத்தேன்.ஆண்டு ஒன்றுக்கு கல்லூரி கட்ட ணம் மட்டும் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரமும், தங்கும் விடுதி, உணவுக்கு ரூ.80ஆயிரமும் ஐந்தாண்டுக ளாக செலுத்தி வந்தேன். இதுவல்லாமல் கல்லூரிக்கு நன்கொடை யாக ரூ.30 லட்சம் கொடுத் துள்ளேன் என்று அழுது கொண்டே கூறினார்.உடலை வாங்க மறுப்புஇறந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை புதுச் சேரி அரசு மருத்துவனை யில் மாவட்ட உதவி ஆட்சி யர் தீபக் முன்னிலையில் சனிக் கிழமை நடைபெற்றது. சம் பந்தப்பட்ட கல்லூரியின் நிர்வாகிகள் மீது நடவ டிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது பெற் றோர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

                                                                                                                        நன்றி : தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com