Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 14 May 2012

எஸ்.எப்.ஐ. அகில இந்திய மாநாடு வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு

0 comments
இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ் எப்ஐ) அகில இந்திய மாநாடு மதுரை யில் நடைபெறுவதையொட்டி சனிக் கிழமையன்று வரவேற்புக்குழு அலு வலகம் திறக்கப்பட்டது.

இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு மதுரையில் செப்டம்பர் 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற் காக 601 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அலுவலக திறப்பு விழா மதுரை காக்கா தோப்பில் உள்ள மூட்டா அலுவலகத் தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞரும் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வருமான ஆர்.வைகை அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற் காக 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன.

இந்த குழுக்கள் குறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் பா.விக்ரமன் எடுத் துரைத்தார். வரவேற்புக்குழுச் செயலா ளர் ஜோ.ராஜ்மோகன் நிறைவுரையாற் றினார்.தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப் பினர் இரா.அண்ணாதுரை, மதுரைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முரளி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செய லாளர் வீ.பிச்சை, வாலிபர் சங்க மாநில பொருளாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் வை.ஸ்டாலின், மாணவர் சங்க மாநில நிர்வாகிகள் கரிகாலன், மாரியப்பன், மூட்டா பொதுச்செயலா ளர் எஸ்.விவேகானந்தன், லிகாய் பொதுச்செயலாளர் சுத்தானந்தம், மாவட்டத்தலைவர்கள் அர்ஜூன், பூமி ராஜா மாணவர் சங்க மாவட்டசெயலா ளர்கள் ஜெ.லெனின், எம்.கண்ணன், உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                                                                                       ---நன்றி : தீக்கதிர்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com