Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 6 May 2012

மணக்குளவிநாயகர் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை - இந்திய மாணவர் சங்கம் கண்டனம்..!

2 comments
புதுச்சேரி மணக்குளவிநாயகர் மருத்துவ கல்லூரியில் நிவேதித்தா என்ற முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்து அக்கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடம்  விசாரித்த போது கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருகினைப்பாளர் அம்மாணவி தன் வகுப்பு சக மாணவருடன் பேசியதை வைத்து தவறாக பேசியுள்ளார்.ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அதன் ஒருங்கினைபாளர் திட்டியதன் விளைவாகவே அம்மாணவி தூக்கில் தொங்கியுள்ளார் என சக மாணவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் கல்லூரி நிர்வாகம் அம்மாணவியின் மரணத்தை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அனால் அம்மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஒழுங்குநடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பெயர் வெளிவராமல் ஏதோ மாணவி மட்டுமே தவறு செய்ததாக கல்லூரி நிர்வாகம் பழி சுமத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தொடர்ச்சியாக தனியார் கல்லூரிகளில் நிகழக்கூடிய தற்கொலை சம்பவங்கள் கல்லூரி நிர்வாகத்தாலும், காவல்துறையின் உதவியினாலும் வெளிவராமல் மூடிமறைக்கப்படுகிறது.இந்திய மாணவர் சங்கத்தை பொறுத்தவரைதனியார் கல்லூரிகளில் நிகழும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் குறித்து ஓய்வு பெற்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறது.

2 Responses so far.

  1. vasdev says:

    இது தொடர் கதையாக உள்ளது .பிள்ளைகள் மன அழுத்தத்தால் மன்ம் நொந்துபோகின்றனர். மாற்றம் வேண்டும்.



    வரும் ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி வரும் நிலை உள்ளது.மாணவர் பற்றாக்குறை உள்ளதால் ,ஆங்கில வழி ஏற்படுத்தினால்தான் பள்ளிகள் மூடப்படாமல் பாதுகாக்க முடியும் .ஆஅசிரியர் நியமன்ம் கிடையாது ,ஏனெனில் மாணவர் எண்ணிக்கைக்கு தேவைக்குமேல் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசுபள்ளிகளை மூடாமல் காக்க ஏதாவது செய்தாக வேண்டும்

  2. sfi says:

    நிச்சயமாக அரசு பள்ளிகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் இந்திய மாணவர் சங்கம் மேற்கொள்ளும்,அதேபோல் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகளை கட்டுப்படுத்த விரைவில் இந்திய மாணவர் சங்கம் பிரச்சாரம் மற்றும் மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com