Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 29 May 2012

இந்திய மருத்துவ துறையின் லட்சணம் - தோலுரித்த ஆமிர்கான்..!

0 comments
இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்..!

“மக்களை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்” இது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதம் செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் வைத்த கோரிக்கை.

ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.

முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சத்ய மேவ ஜெயதே ?

 இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றி அமீர்கான் கூறினார். மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள் இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும் நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம் அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ பெறக்கூடாது என்பது கொள்கை.

இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

இதையேதான் ரமணா படத்தில் விஜயகாந்த், “ கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது டாக்டர்களைத்தான். உங்களை நம்பி வந்த நோயாளிகளை பணத்துக்காக இப்படி ஏமாத்துறீங்களே” என்று கேட்பார். இன்றைக்கு பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளின் கழுத்தில் கத்திவைக்கும் வேலையைத்தான் செய்கின்றன. வசூல்ராஜாக்களாக செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு பெருகி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.

மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்

இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.

நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் அரசு மருத்துவமனை செயல்பாடு..!
வரமா? சாபமா ?

புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் 26.05.2012 அன்று மாலை விபத்து ஒன்றின் காரணமாக சேர்க்கப்பட்ட வாலிபர் சங்கத்தின் கிளை உறுப்பினர் அருள்  இன் தம்பி இளங்கோ மூன்று மணி நேரத்துக்கு பின் புதுவை அரசு பொது 
மருத்துவமனையில் பணிக்கு வர வேண்டிய  டாக்டர் வராததால் மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து 
செல்லப்பட்டு  பின்னர் மூளை சாவு ஏற்ப்பட்டு இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் கூறும் போது இரண்டு மணி நேரம் முன்னாள் அழைத்து வந்திருந்தாள் உயிரை 
காப்பாற்றிருக்கலாம்  என்றனர்.அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு அரசு 
மாணவர் சிறப்பு பேருந்து கவிழ்ந்த விபத்தின் போது பணியில் இருக்க 
வேண்டிய டாக்டர்கள் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது 
தான் இன்று ஒட்டு மொத்த தேசத்தின் மருத்துவமனைகளின் நிலை ஆகும்.

                                                                                                  SOURCE : Face Book... Moideen Basha...
                                                                                      
Read more...
Friday, 25 May 2012

வேகமாகச் சரிந்து வரும் பொருளா தாரம் - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

0 comments

ஊழல், வேலையில்லாத் திண் டாட்டம், அத்தியாவசியப் பொருட் கள் விலை உயர்வு மற்றும் இந்தியர் களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தைப் பறிமுதல் செய்வது போன்ற அனைத்துத் துறைகளிலும் ஐ.மு.கூட் டணி அரசு தோல்வியடைந்து விட் டது.ஐமுகூட்டணி அரசின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்று சிபிஐ(எம்) மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி பத் திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.  

அதிகரித்து வரும் விலைவாசி, வேகமாகச் சரிந்து வரும் பொருளா தாரம் மற்றும் ஊழல் போன்ற பிரச் சனைகளைச் சுட்டிக்காட்டிய யெச் சூரி, அரசு தனது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார். பெண்கள் இட ஒதுக் கீடு மசோதா மற்றும் உணவுப் பாது காப்பு மசோதா போன்றவற்றை முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற் றுவோம் என்று குறிப்பிட்ட ஐ.மு. கூட்டணி, அரசு இவை எதனையும் நிறைவேற்றவில்லை.ஐ.மு.கூட்டணி அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இதுதான் ஐ.மு.கூட்டணி அரசின் 3 ஆண்டு கால சாதனை என்று சீத்தாராம் யெச்சூரி தெரி வித்தார்.2006ம் ஆண்டு அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த கறுப்புப் பணம் ரூ.23,373 கோடி. ஆனால் 2010ம் ஆண்டு அது ரூ.9,295 கோடியாக குறைந்துள்ளது என்று ஐ.மு.கூட்டணி அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இக்கறுப் புப் பணம் எங்கே போனதென்று அரசுக்கு எதுவும் தெரியவில்லை. இந்தியாவிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்று எந்தக் கணக்கு மில்லை.இந்தியர்கள் வெளிநாட்டு வங்கி களில் பதுக்கி வைத்திருக்கும் பணத் தைப் பறிமுதல் செய்ய வேண்டும். கறுப்புப் பணத்தைச் சமாளிக்க இது தான் ஒரே வழி என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஊழல்களில் சிக்கி தவிக்கும் அரசு:

மன்மோகன்சிங் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் 2வது ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 3 ஆண் டுகளுமே ஊழலில் சிக்கி, காங்கிரஸ் தலைமையிலான அரசை எழ முடி யாத வகையில் தலைகுனிய வைத் திருக்கிறது. உலகம் இன்னும் பொரு ளாதார மந்த நிலையில் தவித்துக் கொண்டு இருக்கிறது. முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 3 வருடம் 9 சதவீதம் வளர்ச்சி இருந்ததால், இந் தியப் பொருளாதாரம், இப்போதும் கொஞ்சம் தடுமாறாமல் இருக்கிறது.கடந்த ஆண்டுகளில் தொழில் துறை, வேளாண்மை செழிப்பாக இருந்தது. ஏற்றுமதியும் குறிப்பிடத் தக்க வகையில் இருந்தது. நுகர்வோர் வாங்கும் சக்தி நன்றாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங் கும் சக்தி, எல்லோருக்கும் இருந்தது என, காங்கிரஸ் அரசு கூறினாலும், ஏழைகள், ஏழைகளாகவே, ஒரு வேளை உணவுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் பரிதாபம், இந்திய கிராமங்களில் இன்னும் தொடரும் துயரமாக உள்ளது.ஐ.மு.கூட்டணியின் முதல் ஆட் சிக் காலத்தில் வருமானமும் வேலை வாய்ப்புகளும் அதிகரித்ததாக பரபரப்பாக தெரிவிக்கப்பட்டுள் ளது. 2010ம் ஆண்டு தலைநகர் தில் லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இந்தப் போட்டி யில், மாபெரும் ஊழல், பல நூறு கோடி ரூபாய் அளவில் அரங்கேறி யது. காங்கிரஸ் எம்பியான சுரேஷ் கல்மாடிதான்,காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழு தலைவர். அவர் மீது ஊழல் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையிலும் இருந்தார்.

வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மிகவும் குறைந்து வருகிறது. அக்டோபர் - டிசம்பர் மாத காலகட் டத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய குறைந்த நிலையான 6.1 சதவீதத்தை எட்டியது. உயர் வட்டி விகிதம் மற் றும் அரசின் மந்த நடவடிக்கையால் முதலீடு மற்றும் நுகர்வோர் தேவை யில் பெரும் சரிவு ஏற்பட்டது. வளர்ச்சியும் தடைபட்டது. தொழில் துறை வளர்ச்சி மார்ச் மாதம் 3.5 சதவீதமாக குறைந்தது. அமெரிக்கா வின் மதிப்பிலும், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, 1 டால ருக்கு ரூ. 54.75 என்ற சரிவு நிலையை இந்திய கரன்சி கண்டது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் செலவினம் செய்ய வேண்டியுள்ளது.ரூபாய் மதிப்பு அதல பாதாளத் தில் சரிந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.

2011-12 ம் ஆண்டு காலகட்டத்தில் 18 ஆயிரத்து 500 கோடி வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்று மதி வருவாய் குறைந்துள்ள தால் ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந் துள்ளது.பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்க நிலைக்கு எகிறி உள்ளது. இதனால் உயர் வட்டி விகிதத்தை முத லீடு மற்றும் நுகர்வோர் தேவை விஷ யத்தில் குறைப்பது என்பது ரிசர்வ் வங்கிக்கு கடினமாகி உள்ளது.நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.சுரங்கத் துறையின் பெரும் திட் டங்களில் அரசு முடிவெடுக்க தாம தம் செய்துள்ளதால் வளர்ச்சி விகி தம் எதிர்மறை நிலையை அடைந் துள்ளது.காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களும் அரசின் கொள்கைகளில் தேக்கநிலை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Read more...

சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகள் - கல்வித்துறையை முற்றுகையிட எஸ்எப்ஐ அழைப்பு

0 comments
சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகள்

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு அளிக்காமல் சேர்க்கையை முடிப்பதா? முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட எஸ்எப்ஐ அழைப்பு

கட்டாயக்கல்வி உரி மைச்சட்டத்தின் அடிப் படையில் ஏழை-எளிய மாணவர்களுக்கு 25சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தாமல் தனியார் பள்ளி கள் சட்டத்தை மீறி செயல் பட்டு வருகின்றன.புதிய கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி - கல் லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கான பணிகள் துவங் கப்பட்டுவிட்டன. குறிப் பாக தனியார் மற்றும் மெட் ரிக் பள்ளிகள் பெரும் பாலும் மாணவர் சேர்க்கை யை முடித்துவிட்டன. மத்திய அரசின் கட் டாயக் கல்வி உரிமைச் சட் டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான நெறிமுறையின் அடிப்படையில், தமிழகம் அரசு விதிகளை வெளி யிட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரும் பான்மையான தனியார் பள்ளிகள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இச்சட்டத்தில் சொல் லப்பட்டுள்ள, 25சதவீத மாணவர் சேர்க்கை சாதா ரண ஏழை எளிய நலி வடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக் கீட்டின் அடிப்படையில் உறுதிபடுத்த வேண்டும், என் கின்ற கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தின் சரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கா மல் வழக்கம்போல் கல்வி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பள்ளி மேலாண்மை குழுவை உரு வாக்க வேண்டும் என்கின்ற சரத்தையும் நடைமுறைப் படுத்தவில்லை. ஆகவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும் எனவும், சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக் கும், சட்டத்தை மீறும் தனி யார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை தமிழக, புதுவை அரசு மேற்கொள்ள வேண் டும் எனவும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஜுன் 12ம் தேதி தமிழ்நாடு முழு வதும் ஆயிரக்கணக்கான மாணவர்களை திரட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட் டம் நடத்த இந்திய மாண வர் சங்கம் முடிவு செய் துள்ளது.புதுச்சேரியை பொறுத்தவரை கல்வித்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மே 21 அன்று மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க மாநிலக்குழுக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப் பட்டது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Read more...
Thursday, 24 May 2012

கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...!

0 comments

மாணவர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...!

        தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் CNN-IBN நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மம்தா மேற்கு வங்க முதல்வராக  பொறுப்பேற்று, ஓர்  ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். விவாதத்தில் பங்குபெற  ஜாதவ்பூர் மற்றும் பிரெசிடென்சி பல்கலைக்கழகங்களில்   பயிலும்  மாணவ - மாணவியர்களும் வந்திருந்தனர்.
            இந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாணவ - மாணவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு கடுகடுப்பாக இருந்தாலும் மம்தா  துவக்கத்தில் பொறுமையாகவே  பதிலளித்து வந்தார். நேரம் போகப்போக சூடேறிப் போனார். ஒரு கட்டத்தில்,  மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக  பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும்  மாணவ - மாணவியர்  சரமாரியாக கேள்வி கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல்  மம்தா கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். வெறிப்பிடித்தவர் போல் கத்தினார். மாணவர்களைப் பார்த்து ''நீயெல்லாம் மார்க்சிஸ்ட்... மாவோயிஸ்ட்....எஸ்.எப்.ஐ... மார்க்சிஸ்ட் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது'' என்று ஒருமையில் அழைத்து உரத்தக் குரலில் கத்தினார். ''ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் அழைத்ததற்கான காரணம் என்ன..? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?'' என்று கூச்சல் போட்டு கொண்டே நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். பாதியிலேயே நிகழ்ச்சி பரப்பரப்பானது. தொலைக்காட்சியின் துணை ஆசிரியர்  சாகரிகா கோஷ்  எவ்வளவோ சமாதானம் படுத்தியும் மம்தா சமாதானம் ஆகவில்லை.  வெறி பிடித்தவர் போல் மம்தா கத்திக்கொண்டே வெளியேறினார்.    
            இந்நிகழ்ச்சியை பார்த்து நாடே பரப்பரப்பானது. 
               சட்டமன்றமும், மக்கள் கூடும் இடங்களும் தங்களின் புகழ் பாடும் பஜனை 
மடங்களாக  இருக்கவேண்டும் என்று தான் மம்தா மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும், தங்களுக்கு எதிரான  விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.  இப்படி சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள் ஓராண்டு என்ன... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.
Read more...
Wednesday, 23 May 2012

பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வும் - புதுச்சேரி கல்வித்துறையும்

0 comments

                                                                    பத்திரிக்கை செய்தி :


புதுச்சேரியில் இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் எதிரபார்த்த நிலையில் புதுச்சேரி கல்வித்துறையின் மெத்தன போக்கால் அவதிக்குள்ளாகியதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டின் அரசு பள்ளிகளுடைய தேர்ச்சி விகதம் என்பது 1% மட்டுமே உயர்ந்துள்ளது.தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகதம் என்பது கவலையளிப்பதாக உள்ளது.புதுச்சேரியில்  அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட்டு இருந்தால் மாணவர்களின் தேர்ச்சி விகதம் மேலும் உயர்ந்திருக்கும்.ஆனால் புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் பற்றாக்குறையை பற்றியெல்லாம் கவலை பட்டதாக தெரியவில்லை?புதுச்சேரியில் கல்வித்துறை என்பது உள்ளதா?கல்வித்துறை அதிகாரிகளின் வேலை என்ன? புதுச்சேரி கல்வித்துறை வரும் கல்வி ஆண்டிலாவது  அரசு பள்ளிகள் மீது முழுமையான அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  இந்திய மாணவர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பனிரெண்டாம்   வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை   இருக்கிறது.
                                 

                                                                                                                                      செயலாளர்,
                                                                                                                                          ஆனந்த் 
Read more...
Tuesday, 22 May 2012

மருத்துவகல்லூரி மாணவி மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - எஸ்.எப்.ஐ , டி.ஒய்.எப்.ஐ

0 comments
மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரி நடந்து வரும் மாணவர்கள் மர்மச்சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர் வாலிபர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள  மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரியில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் குற்றங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற  நீதிபதி தலைமையிலான தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.இறந்த மாணவியின் குடும்பத்தாரிடம் வசூலித்த நன்கொடை ரூ30லட்சத்தை கல்லுhரி நிர்வாகம் திரும்ப கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சாரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் ஹரிஹரன் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் கூட்டாக தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,பிரதேச செயலாளர் பி.சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பாஸ்கர்,தட்
சணாமூர்த்தி ,அரிதாஸ்,விஜி உள்ளிட்ட திரளான  வாலிபர்கள்,மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Sunday, 20 May 2012

புதுச்சேரி தனியார் கல்லூரி விடுதியில் மாணவி மர்மச் சாவு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: இந்திய மாணவர் சங்கம்

0 comments
மணகுள விநாயகர் மருத் துவக் கல்லூரி விடுதியில் மர்ம மான முறையில் மாணவி இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப் பதியை அடுத்துள்ள திருச் சனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடராயலு ரெட்டி -கயல்விழி தம்பதிய ரின் மூத்த மகள் பிரியதர் ஷினி. இவர் புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீமணகுள விநாய கர் மருத்துவக்கல்லுரியில் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். அவர் மே 17ஆம் தேதி காலை கல்லூரி விடுதியில் மர்ம மான முறையில் இறந்துள் ளார். பிரிதர்ஷினி இறந்த தக வல் அறிந்த அவரது பெற் றோர் புதுச்சேரி அரசு மருத் துவனை சவக்கிடங்கில் வைக்கப்பட்ட உடலை பார்த் தனர். பின்னர் பிரியதர்ஷினி யின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் தாயார் கயல்விழி திருபு வனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகா ரில் கூறியிருப்பதாவது:பிரியதர்ஷினி இறக்கும் முன்பு மே-16 ஆம் தேதி இரவு என்னிடம் செல்பேசி யில் பேசும்போது, கல்லூரி நிர்வாகத்தால் தனக்கு பாலி யல் தொல்லை இருப்பதாக அழுது கொண்டே கூறி னார். எனவே நான் சமாதான மாக, மறுநாள் புதுச் சேரிக்கு வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நடந்துள் ளது. எனவே என் மகள் பிரியதர்ஷினி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டுள்ள கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைஇது குறித்து இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதே கல்லூரியில் கடந்த மே 5ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி நிவே தித்தா கல்லூரி விடுதியில் இறந் துள்ளார். அவர் இறந்து இரண்டாவது வாரத்தில் இறுதியாண்டு மாணவி பிரி யதர்ஷினி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் அருகில் உள்ள திருபுவனை காவல் நிலையத்தில் அளித் துள்ள புகாரில் மாணவர் கள் காதல் தோல்வியில் தற் கொலை செய்து கொண்ட தாக கூறியுள்ளனர்.காவல்துறையும் இரு மாணவிகளின் மரணத்தை தற்கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளது. இந்த இரு மாணவிகளின் மரணத் தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் புதுச்சேரி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிக ளில் நடக்கும் புகார்கள் குறித்து கண்காணிப்புக்குழு அமைத்து கண்காகணிக்க வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி உயர் கல்வி துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததை போல் உள்ளது  எனவே தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என எஸ். எப். ஐ வலியுறுத்துகிறது.

மேற்கூறிய கோரிக்கைகளை கண்டித்து  வருகின்ற திங்கள் கிழமை காலை ( 21-05-2012 ) புதுவை சாரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மாணவியின் தந்தைஇறந்த மாணவியின் தந்தை வெங்கடராயலுரெட்டி தனது மகளை இழந்த சோகத் தோடு அழுது கொண்டே கூறுகையில்...

ஆந்திராவில் உள்ள கீழ் திருப்பதியை அடுத்துள்ள ரூரல் மண்டல் பகுதியில் உள்ள திருச் சானூரில் விவசாயம் செய்து வருகிறேன்.எனது மூத்த மகள் பிரியாதர்ஷினி அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பின்னர் மருத்துவம் படிப்ப தற்கு ஆசைப்பட்டால், அவ ளது விருப்பத்தின் படி எனது உறவினர்கள் மூலம் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குளவிநாயகர் மருத் துவக் கல்லுரியில் கடந்த 2008 ஆம் ஆண்டு சேர்த் தேன். தனது விவசாய நிலத்தை விற்று அவளை படிக்கவைத்தேன்.ஆண்டு ஒன்றுக்கு கல்லூரி கட்ட ணம் மட்டும் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரமும், தங்கும் விடுதி, உணவுக்கு ரூ.80ஆயிரமும் ஐந்தாண்டுக ளாக செலுத்தி வந்தேன். இதுவல்லாமல் கல்லூரிக்கு நன்கொடை யாக ரூ.30 லட்சம் கொடுத் துள்ளேன் என்று அழுது கொண்டே கூறினார்.உடலை வாங்க மறுப்புஇறந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை புதுச் சேரி அரசு மருத்துவனை யில் மாவட்ட உதவி ஆட்சி யர் தீபக் முன்னிலையில் சனிக் கிழமை நடைபெற்றது. சம் பந்தப்பட்ட கல்லூரியின் நிர்வாகிகள் மீது நடவ டிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது பெற் றோர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

                                                                                                                        நன்றி : தீக்கதிர் 
Read more...
Saturday, 19 May 2012

Pondy VC manipulate University Low!!!

0 comments
Extension for pondy VC stirs a hornets' nest
Forums say Tareen Continues without Prez Nod
The extension of the Pondicherry University vice-chancellor JAK Tareen's term has stirred a hornet's nest.Various teachers' and student's forums have registered their strong opposition to the extension that they say is 'illegal'.

The Union HRD ministry has said that Tareen, whose five year term expired on April 15 this year, may continue to perform the duties of vice-chancellor till a successor is appointed . Pondicherry University Teacher's Association ( PUTA ), Government Arts and Science College Teacher's Association (GASCTWA ) and Students Federation of India (SFI) took strong exception to his extension arguing that the move suffers from 'several legal infirmities'.GASTWA general secretary K Balamurugan said the president, who is 'visitor' of the Pondicherry University is the only competent authority to appoint vice-chancellors, renew or extend their terms and not the HRD ministry.
                "The extension is illegal as it did not adhere to the statues of the university and the Pondicherry University Act, 1985. The statutes clearly state that the vice-chancellor or completion of  his term shall be eligible for reappointment for not more than another term another term or extension to a period not extending one year and after a direction from the President," Balamurugan told TOI. A spokesman of PUTA argued that when there was no direction from the visitor on or before April 15, that it was mandatory for the VC to demit office on completion of his term offive years in office.

still typing the article continues..... Source Times of India
Read more...
Friday, 18 May 2012

தொடரும் மாணவர்கள் தற்கொலை - செவி சாய்க்காத புதுச்சேரி அரசு..!

0 comments
புதுச்சேரி மணக்குளவிநாயகர் மருத்துவ கல்லூரியில் நிவேதித்தா என்ற முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி விடுதியில் தற்கொலை செய்து கடந்த 05-05-2012 அன்று  இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் (நேற்று) 17-05-2012 மேலும் ஒரு மாணவி அதே மணக்குளவினயாகர் மருத்துவ கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் பிரியதர்ஷினி என்ற ஆந்திராவை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து இறந்துள்ளார்.ஒரே மாதத்தில் அதுவும் இரண்டு மாணவிகள் ஒரே கல்லூரியில் இறந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.
                                     மேலும் இறந்த மாணவி பிரியதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனை 
செய்யும் போது வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் 
தொடர்ந்து மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களில்  ஏற்படும்  தற்கொலை சம்பவங்கள் குறித்து  மத்திய குற்ற புலனாய்வு துறை மூலம்   விசாரணையை புதுச்சேரி அரசு நடத்தவேண்டும் என இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்துகிறது.

Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com