Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 13 April 2012

கட்டாய கல்வி உரிமை சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

0 comments
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்க்கு 25 சதவீத ஒதுக்கீடு கட்டாயம் உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு:

“மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட் டம் செல்லும். இது இந்திய அர சியல் சட்டத்திற்கு விரோதமா னது அல்ல” என்று உச்சநீதி மன்றம் வியாழனன்று பரபரப் பான தீர்ப்பு வழங்கியுள்ளது.பதினான்கு வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் அனைவ ருக்கும் 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி வழங்க வகை செய்யும் கல்வி உரிமைச்சட்டத்தை இடதுசா ரிக் கட்சிகள் மற்றும் மாணவர், வாலிபர் இயக்கங்கள் நடத்திய இடைவிடாத போராட்டம் ஏற் படுத்திய நிர்ப்பந்தம் காரண மாக, மத்தியில் ஆளும் காங்கி ரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இந்த சட்டம் அம லுக்கு வந்தது.இந்த சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஏழை மாணவ, மாணவியருக்கு 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும். அவர்களிடம் கல்விக்கட்ட ணம், சிறப்பு கட்டணம் உள்பட எந்தவித கட்டணமும் வசூலிக் கக்கூடாது.

அவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே வழங்கும். 8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது. மாணவர் சேர்க்கையின்போது இண்டர் வியூ நடத்த கூடாது. தகுதி தேர்வில் வெற்றி பெறும் ஆசிரி யர்களையே அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் கட்டா யம் அரசு அங்கீகாரம் பெற்றி ருக்க வேண்டும் என்பது உள் பட பல்வேறு முக்கிய ஷரத்துக் கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளித்து இலவச கல்வி வழங்க வேண் டும் என்ற விதியை எதிர்த்து தனியார் மற்றும் சிறுபான்மையி னர் பள்ளிகள் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது. உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதா கிருஷ்ணன், சுதந்தர் குமார் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசா ரித்து, கல்வி உரிமைச்சட்டம் செல்லும் என வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:மத்திய அரசு கொண்டு வந் துள்ள கல்வி உரிமைச்சட்டம் செல்லும். இது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோத மானது அல்ல. இந்தச்சட்டம் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள் ளிக்கூடங்கள் அனைத்துக் கும் பொருந்தும். அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் பள் ளிக்கு இந்த சட்டம் பொருந் தாது. இந்த தீர்ப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு முன் நடைபெற்றுள்ள மாண வர் சேர்க்கையை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.உலகம் முழுவதும் 135 நாடு களில் கல்வி அடிப்படை உரி மை ஆக்கப்பட்டுள்ளது. 2009ல் இச்சட்டத்தை நிறை வேற்றியதன் மூலம் இப்பட் டியலில் இந்தியாவும் சேர்ந்தது.6-14 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு இலவச கல்வி வழங் குவது இந்திய அரசியல் சட் டத்தின் 21-ஏ பிரிவின் கீழ் அடிப்படை உரிமையாக்கப்பட் டுள்ளது.கல்வியை அடிப்படை உரி மையாக்க வேண்டும் என்ற முயற்சி அரசியல் சட்டம் எழு தும் போதே மேற்கொள்ளப்பட் டது. ஆனால்,தனி மசோதா வாக 2005ல்தான் உருவாக்கப் பட்டது. தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்ட மாவதில் தாமதம் ஏற்பட்டது.குழந்தைகள் இலவச மற் றும் கட்டாய கல்வி பெறும் சட் டம் (கல்வி உரிமைச்சட்டம்) என்ற பெயரில் உருவாக்கப் பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி ஒப் புதல் வழங்கியது. மாநிலங்கள வையில் ஜூலை 20ம் தேதி யும் மக்களவையில் அதே ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதியும் நிறை வேற்றப்பட்டது. காஷ்மீர் தவிர்த்து நாடு முழுவதும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது.
கபில் சிபல் மகிழ்ச்சி

கல்வி உரிமைச்சட்டம் 2009 குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சர்ச்சைக ளுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மேலும் இத்தீர்ப்பு தெளிவையும் ஏற்படுத்தியுள் ளது என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் மகிழ்ச்சி தெரிவித்தார்.நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளி களிலும் ஏழை மாணவர்க ளுக்கு 25 சதவீதம் இலவச சேர்க்கை நடத்த வேண்டு மென்ற விதிக்கு உச்சநீதிமன் றம் அனுமதி அளித்துள்ளது.
இது இப்பிரச்சனையில் உள்ள மிகப் பெரிய விஷயமாகும். இந்த 25 சதவீத இட ஒதுக் கீடு அனைத்து தனியார் பள்ளி களுக்கும் பொருந்தும். எனி னும், இந்த ஒதுக்கீடு சிறுபான் மையினர் நடத்தி வரும் நிறு வனங்களுக்குப் பொருந்தாது. இந்த சர்ச்சையும் முடிவிற்கு வந்து விட்டது என்று தெரிவித் தார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com