Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 30 April 2012

சைக்கிள் வழங்குவதில் பாரபட்சம் இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு..!

0 comments
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுவை அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் வேளையில் மிக தீவிரமாக சமூக நலத்துறை  வழங்கி  வருகிறது.ஆனால் கடந்த 2009 - 2010 ம் கல்வி ஆண்டில் அப்போது புதுவையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தது.புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அரசு நடப்பு கல்வியாண்டு மற்றும் வருகின்ற ஆண்டுகளில்  இலவச சைக்கிள் திட்டம் தொடரும் என அறிவிப்பு வெளியிட்டு அதன் படி இலவச சைக்கிள் வழங்கப்பட்டு  வருகிறது.நடப்பு கல்வி ஆண்டிலேயாவது புதுச்சேரி அரசு விடுபட்ட அனைத்துபள்ளி மாணவர்களுக்கும்  சைக்கிள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.ஆனால் கடந்த ஆண்டு இலவச சைக்கிள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்காமல் உள்ளது.புதுச்சேரி அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து புதுவை பங்குர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தின் முன் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த்,து.தலைவர் ரஞ்சித்,வாலிபர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மணிபாலன் ஆகியோர் இக்கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பாக கல்வித்துறை இயக்குனர் வல்லவன் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் உத்தமன் ஆகியோரை சந்தித்து நடப்பு கல்வி ஆண்டிலேயாவது இலவச சைக்கிள் வழங்க வலியுறுத்தி  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com