Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 15 April 2012

கட்டணக்கொள்ளைக்கு எதிராக எஸ்எப்ஐ போராட்டம் - தனியார் பள்ளி மீது வழக்கு..!

0 comments
மதுரை: கட்டணக்கொள்ளைக்கு எதிராக எஸ்எப்ஐ நடத்திய போராட்டம் எதிரொலி  -  தனியார் பள்ளி மீது வழக்கு..!



அரசு விதிகளை மீறி கூடு தல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி-கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை கண் காணிப்பாளர் அஸ்ரா கார்க் எச்சரித்திருந்தார். இந்நிலை யில் கூடுதல் கட்டணம் வசூ லித்த பள்ளி ஒன்றின் மீது காவல்துறை உயரதிகாரிகள் சனிக்கிழமையன்று வழக்கு பதிவுசெய்தனர்.மதுரை திருமங்கலத்தில் உள்ள பிகேஎன் குழும நிறு வன பள்ளிகளில் அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட கூடு தல் கட்டணம் வசூலிக்கப் பட்டு வருகிறது.

கட்டணக் கொள்ளைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடை யில் கூடுதலாக கல்விக்கட்ட ணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கின் உத்தரவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த அறிவிப்பு வெளியான வுடன் கூடுதலாக கட்டணம் வசூலித்த பிகேஎன் பள்ளி குறித்து காவல் கண்காணிப் பாளர் அஸ்ரா கார்க்கை சந் தித்து புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.கண்ணன், கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப் பட்டது குறித்த பல்வேறு விபரங்களை அளித்தார். காவல்துறை உதவி கண்காணிப் பாளரும், கண்காணிப்பாளரும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந் தனர்.இந்நிலையில் சனிக்கிழமை யன்று காலை பிகேஎன் பள் ளிக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள் ளனர்.இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப் போது மனுவை பெற்ற மாவட்ட நிர்வாகம், இது குறித்து விசா ரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. விசாரணை அதிகாரி ஒருவரையும் நியமித் தது. இதற்கு முன்னர் ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஞானதுரை என்பவர் விசாரணை நடத்தி, அங்கு கூடுதல் கட்டணம் வசூ லித்தது உண்மைதான் என்றும், அறிக்கையினை ஆட்சியரிடம் அளிக்கப்போவதாகவும் கூறி னார். மாதங்கள் பல கடந்தும் நடவடிக்கை இல்லை.காவல்துறை விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.கூடுதல் கட்டணம் வசூ லித்த பள்ளியின் அங்கீகாரத் தை ரத்து செய்யவேண்டும்.

கூடு தலாக வசூலித்த பணத்தினை மாணவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதே பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாண வர்கள் அவர்களது பெற்றோர் களின் கோரிக்கையாகும்.பிகேஎன் குழும பள்ளி களில் அரசு விதிமுறைகளை மீறி ரூ.600 முதல் ரூ.20ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியமாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 11, 12 ம்வகுப்புகளில் படிக்கும் மாண வர்களிடம் மட்டும் இப்பள்ளி பலகோடி ரூபாய் வசூலித் துள்ளது.தனியார் கல்வி நிறுவனங் கள் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதலாக வசூ லிக்கப்பட்ட பள்ளி மீது மது ரை மாவட்டத்தில் பதியப்பட் டுள்ள முதல்வழக்கு இது என் பது குறிப்பிடத்தக்கது.

                                                                             நன்றி : தீக்கதிர்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com