Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 12 April 2012

கல்வித்துறை அலட்சியம்..?புதுச்சேரி மாணவர் சிறப்பு பேருந்தில் சமூகவிரோதிகள் ஈவ்டீசிங்..!

0 comments
புதுவை லாஸ்பேட்டையில் இருந்து பாகூர் செல்லும் மாணவர் சிறப்பு பேருந்தில் கண்டக்டர் மற்றும் செக்கர் என்ற பெயரில் அரசு பெண்கள் கலை கல்லூரி மாணவியை ஈவ்டீசிங் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு புதுச்சேரி கல்வித்துறையின் மெத்தன போக்கே காரணம் என இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பல்வேறு புகார்களை கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்தும் எந்த பயனும் இல்லை.மாணவர் சிறப்பு பேருந்துகளை புதுச்சேரி போக்குவரத்து கழகம் மூலம் இயக்காமல் தனியார் பேருந்து முதலாளிகளின் லாபவேட்டைக்காக அரசு பேருந்துகள் இருந்தும் தனியாரிடம் கான்ட்ராகட் மூலம் இயக்குவதால் இது போன்ற அவல நிலை தொடர்கதையாகிறது.மேலும் மாணவர் சிறப்பு பேருந்தில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்களாகவும்,தனியார் பேருந்தில் வேலை செய்யும் செக்கர்களே.புதுச்சேரி காவல் துறையும்,கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர் சிறப்பு பேருந்துகளில் ஆய்வுகள் மேற்கொள்ளாவிடில் பெரும் விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொண்டு புதுச்சேரி கல்வித்துறையும்,காவல்துறையும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com