Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 11 April 2012

வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வருக இளைஞர்களே - தோழர்:என்.வரதராஜன்

0 comments
“வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வருக இளைஞர்களே...” 
நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி தீக்கதிர் வெளியிட்ட சிறப்பு மலருக்கு தோழர் என்.வரதராஜன் அளித்த நேர்காணலில் சில பகுதிகளை இங்கு தருகிறோம்.

தனிப்பட்ட முறையில் உங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி வார்த்தது?

திண்டுக்கல் அருகில் ஒரு கிராமத்தில் சிறியதொரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். தாய்- தந்தை உறவுகளின் அடிப்படையில் திண்டுக்கல் நகருக்கு அடிக்கடி வந்து செல்வேன். எனது பள்ளிக் கல்வி திண்டுக்கல்லில்தான் கிடைத்தது. பின்னர் ஒரு பஞ்சாலைத் தொழிலாளியாக ஒரு ஆலையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த ஆலை அனுபவங்கள் நேருக்கு நேராக உழைப்புச் சுரண்டலின் பல்வேறு கூறு களைப் புரிந்துகொள்ளச் செய்தன. அந்தப் புரிதல்தான் தொடக்கத்தில் தொழிற்சங்கப் பணிகளிலும் பின்னர் கட்சிப்பணிகளிலும் என்னை முழுமையாக ஈடுபட வைத்தன. தொடக்கத்தில் நான் அன்றைய பல இளம் தொழிலாளிகளைப் போலவே, ஆலை முதலாளிகளின் சாதியோடுதான் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன்.

அந்தச் சாதியை சேர்ந்தவன் என்ற உணர்வோடு தான் இருந்தேன். ஆனால், ஆலைக்குள் தெரிந்துகொண்ட உண்மைகளும் ஆலை வாயிலில் நடந்த போராட்டங்களும் அந்த சாதி உணர்வின் பிடியில் இருந்து என்னை விடுதலை செய்தன. பிற்காலத்தில் தீண் டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நடக்கிற போராட்டங்களில் உணர்வுபூர்வமாக என்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அமைப்பு ரீதியான பல்வேறு தளங்களில் செயல்பட செயல்பட என்னுடைய புரிதல் மேலும் மேலும் கூர்மைப்பட்டது. ஓரளவுக்கே பள்ளிக் கல்வி பெற்ற எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம்தான் தத்துவக் கல்வியைப் புகட்டி யது, அரசியல் தெளிவை ஏற்படுத்தியது. அமைப்பு சார்ந்த பயிற்சிகள் சக தோழர் களுக்கும் இளம் தோழர்களுக்கும் எடுத் துரைக்கக்கூடிய தகுதியை எனக்கு ஏற் படுத்திக் கொடுத்தன.

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வருகிற இளைஞர்கள், வெளியே இருக்கிற இளைஞர்கள் இவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசு அமைப்பு, அதற்கு தலைமை தாங்குகிற ஏக போக முதலாளித்துவம் இவை முதலாளித் துவ ஜனநாயகத்தைக்கூட முடக்க முயல் கின்றன. எழுச்சியடையும் மக்களை திசை திருப்புகின்றன; ஒடுக்குகின்றன. சமத்துவ லட்சியங்கள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் சாதி-மதவேலிகளைத்தாண்டிஒன்று பட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தாக வேண்டும். அவ்வாறு இணைய விடாமல் பிற்போக்குக் கருத்துகள், சிந்தனையை சிதற டிக்கும் வெறும் பொழுதுபோக்கு மயக்கங்கள், சுயநலத்தில் மூழ்கடிக்கும் நுகர்வுக் கலாச் சாரங்கள் போன்றவை தடுக்கின்றன. பெண் களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய ஒடுக்கு முறைகளும் நவீன வடிவங்களில் தொடுக்கப் படுகின்றன.

இத்தகைய தடைகளை உடைத்து மக்களை அணிதிரட்டுகிற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன்வருக என்று இளம் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சமூகம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, அறிவியல் என அனைத்துத் தளங்களின் உண்மைகளையும் தேடிப்படித்துப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவ்வாறு புரிந்து கொள்வது நாளைய சமுதாயத்தில் சமத்து வத்தை நிலைநாட்டத் தேவைப்படுகிறது என்பதுதான் எனது செய்தி.
                                                               
                                                                                         நன்றி : தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com