Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 3 April 2012

கொலை நகரமாகும் புதுச்சேரி?சட்டம் ஒழுங்கு சீர்குலைவு...!காரணம் என்ன ?தீர்வு என்ன?

0 comments
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செல்வம் மதுபானக்கடையில் மது அருந்தி கொண்டு இருந்த அகஸ்தியன் என்ற வாலிபர் வெட்டி படுகொலை  செய்யப்பட்டார்.குறிப்பாக அந்த நபரை கொலை செய்தவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு ரவுடி என்பது தெரிய வருகிறது.கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் ராஜீவ் காந்தி சிக்னல் அருகே உள்ள சிங்கம் ஒயின்ஸ்ல் மது அருந்தி கொண்டு இருந்த ஒரு நபர்  அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டு இருந்த ஜிப்மர் ஊழியரை குடி போதையில் கழுத்தை அறுத்து கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடரும் குடி போதை மரணங்கள்!
புதுவையில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற செயல்கள் அதிகரித்துவருகிறது.அதே போல் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் புதுச்சேரி இந்நாள்,முன்னாள் முதலமைச்சர்  எல்லாம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தி எதிர்க்கட்சிகளின் வாய்யடைக்க முயற்சிப்பார்கள்.ஆனால் குற்றம் செய்த நபர் மூன்றே மாதத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வருவது மீண்டும் ஒரு கொலையை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு சென்று ஜாமீனில் வருவது தொடர் கதையாக புதுவையில் நடந்து வருகிறது.


கடுமையாக்க பட வேண்டிய சட்டங்கள்:
சட்டத்தை கடுமையாக்காமல் புதுவையில் ரௌடிகளை ஒடுக்க முடியாது.குறிப்பாக குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் அதிக அளவில் பெருகி கிடக்கும் மதுபானகடைகளே.மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு குற்றவாளி தன்னுடைய தண்டனை பெற்று மூன்று முதல் நான்கு மாதங்களில் வெளி வருவதே குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு காரணம் என போது கருதுகிறார்கள்.அதே சமயத்தில் ஒரு சில தவறான அரசியல் வாதிகளின் உதவியால்  இது போன்ற குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளிவருகிறார்கள்.

புதிய குற்றவாளிகளை உருவாக்கும் வேலையில்லா திண்டாட்டம்..!
புதுச்சேரியில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்து காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சத்து பதினாராயிரத்தை தாண்டியுள்ளது.அதே போல் புதுவையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இது போன்ற குற்ற சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையாது.மேலும் இந்திய மாணவர் சங்கமும்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரியில் உள்ள பாரதி,சுதேசி,எ.எப்.டி.மில்களை நவீனப்படுத்தினால் பதினைந்து ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்திவருகிறது.எனினும் புதுவையில் இதற்க்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசும்,தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசும் இதனை செவிடன் காதில் ஊதிய சங்கை போலவே பார்க்கின்றன.

கல்வி மறுக்கபடுவதால் குற்றவாளிகலாகும் மாணவர்கள்..!
புதுவையில் கடந்த பத்து வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பதினான்கு ஆயிரம் முதல் பதினாருஆயிரம் வரை புதுவை மற்றும் காரைகாலில் எழுதுகின்றனர்.ஆனால் இதில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒன்பது ஆயிரம் முதல் பதினோராயிரம் வரை மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.மீதம் நான்காயிரம் முதல் ஐய்ந்தாயிரம் வரையிலான மாணவர்கள் இடை நிற்கின்றனர்.இவர்களுடைய கல்வி குறித்து புதுச்சேரி கல்வித்துறை கவலை அடைந்ததா என்றால் கேள்விக்குறியே?அதே போன்று ஒரு பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் படிப்பை பாதியில் இடைநிற்றல் குறித்து இது வரை எந்த கல்வித்துறை அதிகாரிகளும் கவலையடைந்ததாக தெரியவில்லை.இப்படி பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் இன்று அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்றால் இது யாருடைய அலட்சியம்!
எழுதுகிறேன் .....தொடரும் .... 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com