Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 18 April 2012

மதுரையில் எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு - செப்டம்பர் 4-7,2012

0 comments
செப்டம்பர் 4-7 மதுரையில் எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு

601 பேர் கொண்ட வரவேற்புக்குழு கௌரவத்தலைவராக என்.சங்கரய்யா

இந்திய மாணவர் சங்க 14 வது அகில இந்திய மாநாட் டிற்காக 601 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்க ரய்யா மாநாட்டு வரவேற்புக் குழு கௌரவத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளார்.மதுரையில் வருகிற செப்டம்பர் 4,5,6,7 ஆகிய தேதிகளில் இந்திய மாண வர் சங்க 14 வது அகில இந் திய மாநாடு நடைபெறு கிறது. இம்மாநாட்டிற்காக வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் மதுரையில் செவ் வாயன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாணவர் சங்க மாநிலத்தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட் டச்செயலாளர் ஜெ. லெனின் வரவேற்புரையாற் றினார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், இந்திய மாணவர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் ரித்தோ பிரதோ பானர்ஜி, அகில இந்திய தலைவர் பி.கே.பிஜூ எம்.பி, அகில இந்திய துணைச்செய லாளர் சிவதாசன், சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆர்.கருமலை யான், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பா.பிரின்ஸ் கஜேந் திரபாபு, வாலிபர் சங்க மாநிலச்செய லாளர் ஆர். வேல்முருகன், மாதர் சங்க மாநிலத்தலை வர் என்.அமிர்தம், மாணவர் சங்க மாநிலச்செயலாளர் ஜோ.ராஜ்மோகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் பா.விக்ரமன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ, புறநகர் மாவட்ச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், எஸ்டி எப்ஐ அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.ராஜேந்திரன், மூட்டா தலைவர் எஸ்.விவேகானந் தன், அய்பெய்க்டோ பொதுச் செயலாளர் ஜெய காந்தி, அரசுக்கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் பேரா. சுரேஷ் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

மாண வர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.இம்மாநாட்டிற்காக வர வேற்புக்குழு அமைக்கப் பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங் கரய்யா மாநாட்டு வரவேற் புக்குழு கௌரவத்தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். வரவேற்புக் குழுத் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, செயலாளராக மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன், பொருளாளராக அகில இந்திய காப்பீட் டுக்கழக ஊழியர் சங்க மதுரைக்கோட்டத்தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும், 56 பேர் துணைத்தலைவர்களாகவும், 56 பேர் துணைச்செயலா ளர்களாகவும் தேர்ந்தெடுக் கப்பட் டனர். 601 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com