Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 30 April 2012

சைக்கிள் வழங்குவதில் பாரபட்சம் இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு..!

0 comments
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுவை அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் வேளையில் மிக தீவிரமாக சமூக நலத்துறை  வழங்கி  வருகிறது.ஆனால் கடந்த 2009 - 2010 ம் கல்வி ஆண்டில் அப்போது புதுவையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தது.புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அரசு நடப்பு கல்வியாண்டு மற்றும் வருகின்ற ஆண்டுகளில்  இலவச சைக்கிள் திட்டம் தொடரும் என அறிவிப்பு வெளியிட்டு அதன் படி இலவச சைக்கிள் வழங்கப்பட்டு  வருகிறது.நடப்பு கல்வி ஆண்டிலேயாவது புதுச்சேரி அரசு விடுபட்ட அனைத்துபள்ளி மாணவர்களுக்கும்  சைக்கிள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.ஆனால் கடந்த ஆண்டு இலவச சைக்கிள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்காமல் உள்ளது.புதுச்சேரி அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து புதுவை பங்குர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தின் முன் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த்,து.தலைவர் ரஞ்சித்,வாலிபர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மணிபாலன் ஆகியோர் இக்கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பாக கல்வித்துறை இயக்குனர் வல்லவன் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் உத்தமன் ஆகியோரை சந்தித்து நடப்பு கல்வி ஆண்டிலேயாவது இலவச சைக்கிள் வழங்க வலியுறுத்தி  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
Sunday, 29 April 2012

தேர்தல் சீர்திருத்தத்தை முதலில் அமெரிக்கா கொண்டு வரட்டும் - சாவேஸ் அறிவுரை..!

0 comments
நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் புதிய அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் குடியரசுக் கட்சி தற்போது ஈடுபட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் மிட் ரோம்னி வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருக்கிறார். ஒபாமாவைப் பொறுத்தவரை, மிட் ரோம்னிக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கி விட்டார். பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள வேளையில், நெருக்கடி தீர்ந்து விட்டது என்று தேர்தலுக்காக அறிக்கையும் வெளியிட்டார். தனது தேர்தல் பிரச்சார மும்முரத்திலும், தங்களுக்குத் தலையாட்டாத நாடுகளை சீண்டுவதை அவர் நிறுத்தவில்லை.

வெனிசுலாவில் தேர்தல் நடைமுறை பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். வெனிசுலாவிலும் நடப்பாண்டில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. சாவேஸ் மீண்டும் களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவர்களுக்குள் அதில் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டிருக்றது. வெனிசுலா தேர்தல் நடைமுறை பற்றி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் பாரக் ஒபாமாவும் வெனிசுலாவின் தேர்தல் நடைமுறை பற்றிக் கருத்து தெரிவித்திருக்கிறார். வரக்கூடிய வெனிசுலா ஜனாதிபதித் தேர்தல் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதேவேளையில், புற்றுநோய்ச் சிகிச்சைக்காக கியூபா சென்றுள்ள சாவேஸ், இறந்து விட்டார் என்ற பொய்ச் செய்திகளையும் அதே நாளில் மேற்கத்திய ஊடகங்கள் பிரசுரித்தன.

நடக்குமா வெளிப்படையான தேர்தல்?

கடந்த பத்து நாட்களாக சாவேஸ் எடுத்து வந்த சிகிச்சைகள் வீடியோ காட்சிகளாக தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல்14 அன்றுதுவங்கி, சாவேஸ் எத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார் என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில் சாவேஸ் மக்களிடம் சாவேஸ் சொல்ல விரும்பிய செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்கள். வெனிசுலாவின் அரசே இந்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அதில் பேசியுள்ள சாவேஸ், வெனிசுலாவில் வெளிப்படையான தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக ஒபாமா கூறியிருக்கிறார். நாங்கள் என்ன எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அமெரிக்காவில் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றுதான். அங்கு மக்கள் நேரடியாக வாக்குகள் அளித்து அதிபரைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உருவாக வேண்டும். அதிபர் வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்கும் அதே வேளையில், தங்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடிய “தேர்தல் குழுமம்” ஒன்றிற்கும் வாக்களிக்கிறார்கள். இரண்டு வகையான தேர்தல் நடக்கிறது. இந்தப் பிரதிநிதிகள்தான் யார் அதிபர் என்பதை முடிவு செய்கிறார்கள். மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்வதில்லை. மக்களின் வாக்குகளை அதிகமான அளவில் பெற்றவர், அதிகமான அளவில் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறாமல் இருந்தால் தோல்வியைத் தழுவுவார். அமெரிக்காவை ஜனநாயகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்கு நடக்கும் ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் வெனிசுலா தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல், பல தென் அமெரிக்க நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. பல நாடுகளிலும் இந்த வீடியோ காட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. அதில் மேலும் பேசியுள்ள சாவேஸ், இந்த பூமிப்பந்தில் வெனிசுலாவின் தேர்தல் நடைமுறையைப் போன்ற வெளிப்படையான, மிகவும் திறமையான, சிறந்த தேர்தல் நடைமுறை வேறெங்கும் இல்லை என்று நான் சொல்கிறேன். எனது உடல்நிலை பற்றி மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது நடைபெற்று வரும் சிகிச்சை மிகவும் நல்ல முறையில் இருக்கிறது. விரைவில் நாடு திரும்புவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, முதலில் வெளிப்படையான தேர்தலை நடத்தி முறையான ஜனநாயகத்தை அந்நாட்டுமக்களுத்குதரும்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வெனிசுலாவின் ஆளும்கட்சியான வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

----------------

அதிக வாக்குகள் வாங்கியும் தோற்ற அல் கோரே
1993 ஆம் ஆண்டு முதல் துணை அதிபராக இருந்தவர் அல் கோரே. இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். கிளிண்டன் அதிபராக இருந்த எட்டாண்டுகள் இவர் அவருக்கு துணை அதிபராகப் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். புளோரிடா மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஜார்ஜ் புஷ்சை எதிர்த்து அவர் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு தேர்தல் குழுப் பிரதிநிதிகள் அதிகமாக வாக்களித்ததால் இந்த முடிவு என்றும் கூறினர். அதாவது 271 வாக்குகள் புஷ்சுக்கும், 266 வாக்குகள் அல் கோரேவுக்கும்கிடைத்தது.நேரடியாக மக்கள் அளித்த வாக்குகளின்படி பார்த்தால், புஷ்சை விட அல் கோரே ஐந்து லட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். மக்களின் தேர்வு அல் கோரேவாக இருந்தாலும், தேர்தல் குழு வாக்களிக்காததால் அவர் அதிபராக முடியவில்லை. இந்தப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் நடைமுறையும் மாகாணத்திற்கு, மாகாணம் மாறுகிறது. சில இடங்களில் மக்களும், சில இடங்களில் மாகாண சபைகளும் இந்தப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் குழப்பமான நிலை இருக்கிறது.

                                                                                                   நன்றி: தீக்கதிர்


Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com