Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 15 March 2012

சட்டக் கல்வியும் விற்பனைச் சரக்காக்க - தமிழக அரசு கொள்கை முடிவு..!

0 comments
சட்டக் கல்வியை விற்பனைச் சரக்காக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கி, கல்வித்துறையிலும் நீதித் துறையிலும் தனியாரின் லாபவெறிக்கு வாச லைத் திறந்து விட்டிருக்கிறது.

இது சமூக நீதிக் கும் ஜனநாயகத்துக்கும் பேராபத்தாக போய் முடி யும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல் கலைக்கழகத்தின்கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இயங்கிவரும் அரசு சட்டக்கல்லூரிகள் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றியும், நவீன உல கிற்கு தேவையான பயிற்சி முறைகள் இன்றியும் தள்ளாடுகின்றன.

அதற்கு நிதி ஒதுக்கவோ நிலைமையை சீர்செய்யவோ முன்வராத தமிழக அரசு, அவசர அவசரமாக தனியாரை வெற்றி லைப்பாக்கு வைத்து அழைப்பது ஏன்? ஏற்கெனவே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் தனியார்கள் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அதிலும் பொறியியல் கல்லூரிகள் காளான்களைப்போல் முளைத்து, பணம் கறந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் தகுதியோ தரமோ எதுவும் காப்பாற்றப்படுவதில்லை. மாணவர்கள் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்படுகி றார்கள். இதனால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்பு, தற்கொலைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண் டிருக்கின்றன. சட்டக் கல்லூரியை தனியார் மயமாக்கினால் இதேபோல் புற்றீசலாய் பல முளைக்கும். காசிருக்கிறவன் பட்டத்தை விலை கொடுத்து வாங்குவான். தான் செல வழித்த பணத்தை மீட்டெடுக்க சட்டமும் நீதியும் பேரம் பேசப்படும். இப்போதே பல நேரங்களில், நீதி வழங்கப்படுவதாக அல்லாமல் வாங்கப் படுவதாகவே உள்ளது. முதலமைச்சரும் இதனை நன்கு அறிவார்.

ஏழைகளுக்கு சட்டம் எட்டாத உயரத்திற்குப் போகும். வழக்கறிஞர் தொழிலில் அந்நியர்கள் அனு மதிக்கப்படலாமா என்கிற சர்ச்சை சில வருடங் களாக நடந்து வருகின்றது. ஜனநாயக சக்தி களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டிருக்கிறது. இப்போது தனியார் சட்டக் கல்லூரியைத் திறப்பதன் மூலம், எதிர் காலத்தில் இதில் பன்னாட்டு நிறுவனங்களும் மூக்கை நுழைக்க வழிபிறக்கும். அரசு மருத்துவமனைகளை நோய்க்கிடங் காக்கிவிட்டு, ஐந்து நட்சத்திர தனியார் மருத் துவமனைகளை வளரவிட்டு, காப்பீட்டு திட்டம் என்கிற பெயரால் அவர்களுக்கே அரசுப் பணத் தையும் இறைக்க வழி செய்துள்ளது. அதுபோல சட்டத்துறையும் மாற்றப்படுவது கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நம்பிக்கையையும் சிதைத்து விடும். இதற்கு எதிராகத்தான் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் மாணவர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

அவர்களின் நியாயமான குரலுக்கு செவிமடுக்காமல், தமிழக அரசு அடக்குமுறையை ஏவுவது தவ றானது; கண்டிக்கத்தக்கது. சட்டமும் நீதியும் விலைபோகாமல் ஓரளவுக் குத் தடுக்கப்பட-சமூக நீதி பாதுகாக்கப்பட- ஏழை, எளிய மாணவர்கள் எளிதில் ஒரு தொழிற் கல்வி என்ற முறையில் சட்டம் பயில கிடைத் துள்ள அரசு வாய்ப்புகளை பாதுகாத்திட - அரசு சட்டக்கல்லூரிகளின் கட்டமைப்பையும் தரத் தையும் மேம்படுத்திட - மாணவர்களின் இதயக்குமுறலை உணர்ந்து, அதற்கொப்ப மாற்றங்கள் கண்டிட தமிழக அரசு முன் வரவேண்டும். அதற் காக சட்டக் கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கும் கொடூர முடிவை குழி தோண்டிப் புதைத்திட வேண்டும்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com