Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 5 March 2012

அரவான்- விமர்சனம் !

0 comments
கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழுந்த திருடுவதை தொழிலாக செய்து வந்த ஒரு சிறு இனக்குழு பற்றிய கதை தான் அரவான்.இக்கதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலின் சில பக்கங்களை கொண்டது.


அரவான் திரை படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பது  மகிழ்ச்சி.அதே சமயத்தில் கடந்த கால வரலாற்றை மறு வாசிப்பு செய்வது அவசியம் என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.நொலையாளாக  நடித்திருக்கும் பசுபதி,தெசக்காவல் காரனாகவும் சின்னாலனாக நடித்த  நாயகன் ஆதி உட்பட அனைவரின் நடிப்பும் திரைப்படத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது,என்றாலும் ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகளால் படம் ஜவ்வென்று இழுக்கிறது.


குறிப்பாக பணம் உள்ளவர்கள் மட்டுமே தவறுகள் செய்கிறார்கள் என்பதும்,பணம் அற்றவர்கள் தங்களது கால்வயிறு கஞ்சிக்காக பெரும் வசதி படைத்தவர்களிடம் இருந்து களவு செய்து,அந்த  பொருட்களை ஒரு கிராமம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்வதும் என கதை நகர்கிறது.அதே போல் நரபலி கொடுக்கும் வழக்கம் என்பது பண்டைய தமிழ் மக்களின் பழக்கமாக இருந்தது.அதை எதிர்த்து தான் செய்யாத தவரிர்க்காக பலியாக போவதை எண்ணி நடிகர் பரத்தின் மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடிப்பதர்க்காக நாயகன் ஆதி எடுக்கும் முயற்சிகள் என அனைத்தும்  இயக்குனர் வசந்தபாலன் உண்மையாகவே ஒரு மாறுபட்ட 
புதிய கதைவெளியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது தான்.இன்றைய இளைஞர்கள் மாற்று சினிமாக்களை நோக்கி பயணம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.


இருளுக்குள் மங்கலாகத் துலங்கும் மனிதர்களின்   அடர்த்தியான வாழ்க்கை அது .மரண தண்டனையை ஒழிப்போம் என்று படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.திரைக்கதை மற்றும் இயக்கத்தை இன்னும் சற்று கவனமாக கையாண்டிருக்கலாம்.....
                                                                                           கட்டுரை:அ.ஆனந்த்
                                                                                                               புதுவை.....

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com