
அரசு பள்ளிகளில் மதிய உணவு காலதாமதமாகவும்,பல பள்ளிகளில் உணவு கிடைக்காமலும் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.இதனை கண்டித்து புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி இந்திய மாணவர் சங்க கிளையின் சார்பில் பள்ளி வளாகத்தில் கல்வித்துறையின் அவல நிலையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மதிய உணவு கிடைக்காததால் பல மாணவர்கள் மயக்கத்துடன் வீட்டுக்கு சென்றனர்.இதற்கு காரணமான கல்வித்துறை அதிகாரிகள் மீதும்,ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் இது வரை நடைபெற்றது இல்லை.இனிமேல் இது போன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கேட்டுகொள்கிறது.
க.ஹரிஹரன் அ.ஆனந்த்
தலைவர் செயலாளர்