Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 4 February 2012

மெரினா திரைப்படம் ஒரு பார்வை !

0 comments


ஆசியாவிலேயே மிகப்பெரும் இரண்டாவது கடற்கரை என்ற பெருமை சென்னை மெரினா கடற்கரைக்கு  உண்டு என்று துவங்கும் திரைப்படம்.பல்வேறு ஊர்களில் இருந்து குடும்ப சூழல் காரணமாக பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டு பிழைப்பு நடத்த சென்னைக்கு ஓடி வந்தவர்களின் கதை.காதலிக்கும் இளைஞர்கள்,பிச்சைஎடுக்கும் தாத்தா,பூ விற்கும் அம்மா,பாடகராய் வருபவர்,ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் சிவகார்த்திகேயன்,தத்துவம் பேசும் அவருடைய நண்பர்,காவல்துறையை சேர்ந்த இரண்டு காவலர்கள் அப்பாவி சிறுவனிடம் பணத்தை அடித்து பிடுங்குவது,முக்கியமாக கல்வி குறித்து ஒரு தெளிவான பார்வையை உருவாக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

டைரக்டர் பாண்டிராஜின் தேசிய விருது பெற்ற பசங்க திரைப்படம்,வசந்தபாலன்  இயக்கிய அங்காடி தெரு திரைபடம் எப்படி வெளி ஊரில் இருந்து  சென்னை தியாகராயநகரில் உள்ள துணிக்கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்கையை மாற்றியதோ அதே போல் நிச்சயம் மெரினா திரைப்படம் நிச்சயம் ரோட்டுஓர சிறுவர்களின் கல்வி குறித்து இச்சமுதாயம் எண்ணிபார்க்க உதவும்.ஒரு சிலஆசிரியர்கள் செய்யும்  தவறினால் கல்வியை வெறுத்து குழந்தை தொழிலாளர்களாய்,கல்வியில்  இடைநிற்றல் போன்றவற்றை மிகதெளிவாக பதிவு செய்துள்ளார்.

அதே போல் சென்னை வாலிபர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்த்தும் பைக் சாகசங்களையும்,சைக்கிள் வீலிங் போன்ற ஆபத்துக்கள் நிறைந்த சாகசங்களையும் மிகதெளிவாக பதிவு செய்திருக்கிறார்.கல்வி அதிகாரியாக வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் போஸ்ட் மாஸ்டர் என அத்துணை கேரக்டர்களும் நெஞ்சில் பதிய வைக்கின்றன.ஒரு சிறு துளி கூட ஆபாசம் இல்லாமல்,முகம் சுழிக்கும் வசனங்கள் இல்லாமல் இறுதி வரை  நகைச்சுவையாகவும்,சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை அலசியும்,பார்கின்றவர்களை சிந்திக்க வைக்கிறது.அனைத்து தரப்பட்ட மக்களும்,இளைஞர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்...
                                                                                                      விமர்சனம்:அ.ஆனந்த் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com