Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 7 February 2012

அரசுக் கல்லூரிகளின் அவலம் தீருமா?

0 comments
-கே.எஸ். கனகராஜ்
தமிழக மனிதவள மேம்பாட்டில் உயர்கல்வி முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிடுகிறது, தமிழக அரசால் வெளி யிடப்பட்ட உயர்கல்விக்கான கொள்கை விளக்க குறிப்பேடு. ஆனால், தமிழக உயர் கல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் நிலையோ பரிதாபகரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழக உயர்கல்வியின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்து ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கும், முதல் தலைமுறையாக கல்லூரிக்குள் காலடி வைப் போருக்கும் உயர்கல்வி வழங்குவதில் சமூக நீதி காத்து முன்னணியில் உள்ளது அரசு கலை கல்லூரிகளே. இக் கல்லூரிகளில் பயின்று பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்று விளங்குவோர் பலர் உள்ளனர்.

உயர்கல்வி வாய்ப்புக்கான வாசலில் நின்று வரவேற்றதோடு, மாணவர்களது திறன் களை ஆரத்தழுவி வளர்த்தெடுத்து, பல் துறை திறமை பெற்றவர்களை உருவாக்கி தமி ழகத்துக்கு அளித்த அரசு கல்லூரிகள் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வருகின்றன.

நவீன தாராளமயமாக்கல் கொள்கை களை நீயா? நானா? எனப் போட்டிப்போட்டு மத்திய - மாநில அரசுகள் கடைப்பிடித்ததன் விளைவாக, புற்றீசல்கள் போல தனியார் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டன. மறுபுறம் புதிய அரசு கல்லூரிகள் துவக்கப்படவே யில்லை. மேலும், உயரும் மாணவர் எண் ணிக்கைக்கு ஏற்ப அரசு கல்லூரிகளை மேம் படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆசிரியர் பற்றாக்குறை, போதிய அடிப்படை வசதியின்மை, பன்முக திறன் வளர்த்தலுக்கு வாய்ப்பின்மை என இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை வளர்த்தெடுக்க வாய்ப்பின்றி தள்ளாடு கின்றன அரசு கல்லூரிகள்.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் +பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை கணக்கில்கொண்டு, புதிய அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மாணவர் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், கடந்த திமுக அரசு, அரசு கல்லூரிகள் உருவாக்கம் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைத் துவக் கியது. இக்கல்லூரிகளை நடத்தும் மொத்தப் பொறுப்பும் பல்கலைக்கழகங்களின் தலை யில் சுமத்தப்பட்டது. ஏற்கெனவே, நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் பல்கலைக் கழகங்கள், உறுப்புக் கல்லூரிகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டன. இந்த அனுப வத்தை கொஞ்சம்கூட கணக்கில் கொள் ளாமல், அதிமுக அரசும், புதிதாக பொறுப் பேற்றவுடன் தன் பங்கிற்கு 10 உறுப்புக் கல் லூரிகளை துவக்கியுள்ளது. திமுக, அதிமுக அரசால் துவங்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் பரிதாப நிலையில் உள்ளன.

தமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுக் கல்லூரிகளில் 53,632 பேரும், பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 3,954 பேரும் பயின்று வருகின்றனர். இதுதவிர இரண்டா வது ‘ஷிப்ட்’ முறையில் சுமார் 15000 மாணவர் கள் பயின்று வருகின்றனர். இது தவிர 133 அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளும், 416 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.

சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட தலித் மாண வர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுமே அரசு கலைக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். சென்னை, நந்தனம் அரசு கலைக் கல் லூரியில் 95 சதவிகிதமும், கரூர் அரசு கலைக் கல்லூரியில் 70 சதவிகிதமும், இராமநாதபுரம் அரசு ஆண்கள் கல்லூரியில் 90 சதவீதமும் தலித் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பெரும்பாலான இதர அரசு கலைக்கல்லூரி களிலும் இதுபோன்ற நிலையே உள்ளது.

சமூக நீதி காத்து உயர்ந்து நிற்கும் அரசு கல்லூரிகளைத்தான், திமுக மற்றும் அதிமுக அரசுகள் மாறிமாறி சிதைத்து வந்துள்ளன.

அரசு கல்லூரிகளில் 1025 விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப அதிமுக அரசு அறிவிப்பு வெளி யிட்டு 5 மாதங்கள் ஆகியும், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. 1661 கௌரவ விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் இன் னும் நிரப்பப்படவில்லை.

அந்த பணியிடங்கள் நிரந்தர விரிவுரை யாளர் பணியிடங்களாக மாற்றப்பட வேண் டும். மேலும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 500 விரிவுரையாளர் பணி யிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அதேபோல் 37 அரசு கல்லூரிகளில், நூலகர் பணியிடங்களும், 45 கல்லூரிகளில் விளையாட்டு இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. விரிவுரையாளர் பணி யிடங்களும் காலியாக உள்ள சூழலில், பல கல்லூரிகளில் முதல் இரண்டு பாடநேரத் திற்கு பிறகு, மாணவர்கள் வகுப்புகள் இல் லாமல் வெளியே சுற்றுவதை காண முடியும். பல்வேறு சமூக சீர்குலைவிற்கு மாணவர்கள் உள்ளாகும் அபாயத்தை இச்சூழல் தோற்று வித்துள்ளது.

இன்று, அரசியல், சினிமா, இலக்கியம் என பல துறைகளில் புகழ்பெற்றுள்ள பலரை உருவாக்கிய சென்னை மாநிலக் கல்லூரிக் குள் மாணவர்கள் ஆயுதங்களோடு மோதிய சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள் ளக்கூடாது. கடந்த பதினைந்து ஆண்டு களில், பல்துறை திறமையாளர்களை உரு வாக்கும் சூழல், அக்கல்லூரி வளாகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது.

இளம் வயதின் உள்மனதில் உறைந்து கிடக்கும் ஆடல், பாடல் கொண்டாட்டங் களுக்கான வடிகாலாய் திகழ்ந்த கலை விழாக்களும், பேச்சு, கவிதை நாடகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களால் வளர்க்கப்பட்ட புதிய திறன்களை வெளிப்படுத்தும் இலக்கிய விழாக்களுக்கும் தடுப்பணை கட்டி மூடப் பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் நிதியே இல்லை என கைவிரிக்கின்றன அரசு கல் லூரி நிர்வாகங்கள். விளைவு, நெரிசல்மிக்க சென்னையின் “பஸ் டே” கொண்டாட்டங் களின்போது இவை அத்தனையும் அரங்கேறு கின்றன. விளையாட்டுப் போட்டிகளுக்கும் இதுவே கதி.

‘ஷிப்ட்’ முறை மூலமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக் கேற்ப, ஆய்வகங்களுக்கு உபகரணங்களும், மூலப் பொருட்களும் வழங்கப்படவில்லை. அதனால், ஆய்வகச் சோதனைகள் அரை குறையாக நடத்தப்பட்டு வருகின்றன. கூடு தல் புத்தகங்கள் வழங்கப்படாத கல்லூரி நூல கங்கள் பூட்டி பாதுகாக்கப்படுகின்றன.

பெரும் எண்ணிக்கையில் பயிலும் மாண விகளுக்கான அடிப்படை வசதிகள் மிகுந்த பற்றாக்குறையோடு உள்ளன. மாணவி களுக்கான ஓய்வறைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கழிவறைகளுக்கும் இதே நிலைதான். போர்க்கால அடிப்படை யில் இவை சரிசெய்யப்பட வேண்டும்.

இவற்றோடு, அரசு மேல்நிலைப் பள்ளி களிலும், தனியார் திருமண மண்டபங் களிலும் செயல்பட்டுவரும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றவேண்டும். வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட கல்லூரி களாக அவை மாற்றப்படவேண்டும்.

இவற்றோடு, புதிய அரசு கலைக் கல் லூரிகளையும் அரசு துவக்கவேண்டும். தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத் திலும், காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத் திலும் இதுவரை ஒரு அரசு கல்லூரிகூட கிடையாது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களிலும் அரசு கல் லூரிகள் கிடையாது. இந்த அவலத்திற்கு உடனே முற்றுப்புள்ளி தேவை.

2011-12ம் கல்வியாண்டு மாணவர் சேர்க் கையின்போது கோவை அரசு கலைக் கல்லூரியிலுள்ள 1100 இடங்களுக்கு விண் ணப்பித்த மாணவர் எண்ணிக்கை 14,000 ஆகும். தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டு களாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் கள் அங்கு விண்ணப்பித்து வருகின்றனர். பல அரசு கல்லூரிகளிலும் இதுதான் நிலை. தமி ழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்விக்கான ஒரே நம்பிக்கையாக அரசு கல் லூரிகள் உள்ளன. எனவே, புதிய அரசு கல் லூரிகள் துவங்கவேண்டும்.

அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாண வர் பேரவைக்கான தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி, கல்லூரி நிர்வாகத்தில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்திட வேண் டும். கல்வியாண்டின் இறுதியில் வழங்கப் படுவதே கல்வி உதவித்தொகை என்ற வழக்கமும் மாற்றப்பட வேண்டும். புத்தகங் கள் மற்றும் இதர செலவினங்களுக்காக துவக்கத்திலேயே வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். முதுநிலை ஆய்வு (எம்.ஃபில்) படிப்புகளுக்கான இடங்கள் கூடுதலாக்கப்பட வேண்டும்.

பெரும் பொருட்செலவில் மடிக்கணினி வழங்கும் தமிழக அரசு, அதன் மூலம் பெறப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவை, தனது எதிர்காலத்தோடும், சமூக வளர்ச்சி யோடும் இணைத்து திறம்பட பயன்படுத்தும் திறன்பெற்றவர்கள் உருவாகும் வண்ணம் அரசு கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும்.

இவற்றோடு, அரசு கல்லூரி மாணவர் களின் இதர கோரிக்கைகளையும் விவாதிக்க, அரசு கல்லூரி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு பிப்ரவரி 7 அன்று திருச்சியில் இந்கல்விதிய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.

கட்டுரையாளர்:
தோழர்:K.S.கனகராஜ்
மாநிலத்தலைவர்,
இந்திய மாணவர் சங்கம்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com