Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 5 February 2012

திருச்சியில் - அரசுக் கல்லூரி மாணவர் மாநாடு

0 comments
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக அரசுக் கல்லூரி மாணவர்களின் மாநிலக் கோரிக்கை மாநாடு திருச்சியில் பிப்ரவரி 7ம் தேதி சங்கீத் மகாலில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வும், புதிய பாடப்பிரிவுகளை துவக்கிட வும், பேராசிரியர்கள் காலிப்பணியிடங் களை நிரப்பிடவும், உறுப்புக் கல்லூரி களை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி யும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் சிவக்குமார் (முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி) மாநாட்டைத் துவக்கி வைக் கிறார். அரசுக் கல்லூரிகள் மற்றும் உறுப் புக் கல்லூரிகள் குறித்த அறிக்கையினை மாநிலத் துணைத் தலைவர் வீ.கரிகாலன் முன்மொழிகிறார்.

கருத்துரையாளர்களாக கே.பாலபாரதி (சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் சி. திருச்செல்வம்(மாநிலப் பொருளாளர் டிஎன்ஜிசிடிஏ), பேரா.சிவராமன் (மாநி லப் பொதுச் செயலாளர் டிஎன்ஜிசிடிஎம்) ஆகியோர் பங்கேற்கின்றனர். அரசுக் கல்லூரிகள் குறித்த தீர்மானங்களை மாநில நிர்வாகிகள் பி.உச்சிமாகாளி, எம்.என்.குமார், ரெ.ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிகின்றனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

முன்னதாக திருச்சி மாவட்டத் தலைவர் பா.சரவணத் தமிழன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். திருச்சி மாவட்டச் செயலாளர் செ.ராஜ்குமார் நன்றியுரை யுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com