Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 3 February 2012

பிரதமரே, குறுக்கு வழிகளால் பயனில்லை - சீத்தாராம் யெச்சூரி எம்.பி.

0 comments
பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர் கள் 2012-ம் ஆண்டை குறிப்பிடும்படி யான இரு உரைகளோடு தொடங்கியுள் ளார். ஜனவரி மாதம் 3ம் தேதி இந்திய அறிவியல் காங்கிரசில் உரை நிகழ்த் தினார். மீண்டும் 10-ம் தேதி, இந்நாட்டின் வறுமை மற்றும் சத்துணவுக்குறைபாடு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இரு உரைகளும் வெவ்வேறு பிரச்சனை களைக் குறிக்கின்ற போதிலும், இணைத் துப் பார்க்கையில், இந்தியாவின் தகுதி களைச் செயல்வடிப்பதில் கவலைய ளிக்கும் அணுகுமுறையையே உணர்த்து கிறது. 

சீனா முந்தி விட்டதாம்!
கணித மேதை ஸ்ரீனிவாச இராமானு ஜன் அவர்களின் 125-வது பிறந்த தின உரையிலும், பிரபஞ்சத்தின் நுண்ண ணுப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் (போசோன் என்று இவரது பெயரிலேயே ஒரு நுண்ணணுப்பொருள் அழைக்கப் படுகிறது) அவர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தும் போதும், அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மிகக் குறைவாகவும் தேக்கமடைந்த நிலையில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்திற்கும் குறைவாகவே செல விடப்படுகிறது. இவ்விஷயத்தில் சீனா நம்மை முந்திவிட்டதாக வருந்திய பிரதமர், 12-வது திட்டக் காலம் முடிவு றுவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் குறைந்தபட்சம் 2 சதவீதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடவேண்டுமென்று வற்புறுத்தி யுள்ளார்.

பிரதமரின் பாராட்டத்தக்க நோக்கங் களை மறுக்க இயலாது. இத்தகைய செலவினங்களை அதிகரிக்க, அவர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளில்தான் பிரச்சனை இருக்கிறது. “மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினத்தில் மூன்றல் ஒரு பங்கினை மட்டுமே அளிக்கும் தொழிற்சாலைகள் தங்களது பங்களிப்பைக் குறிப்பிடும்படியாக உயர்த் தினால் மட்டுமே அதை எட்டிட இயலும்; மேலும் அரசின் பிரபலமான தாரக மந்திர மான, பொதுத்துறை-தனியார்துறை பங் கிணைப்பின் (ஞரடெiஉ ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ-ஞஞஞ) மூலமே இந்நோக்கங்களை அடைய இயலும்” என்று பிரதமர் கூறுகிறார். ஆய்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்ப தில் தனியார்கள் காட்டும் ஆர்வத்தின் பின்புலம் லாப நோக்கங்களை அதி கரிப்பதே என்பது உலகெங்கும் அங்கீ கரிக்கப்பட்ட விஷயமாகும். அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடை வதில் அறிவியலின் பங்கு என்று பிரதமர் கூறியிருப்பது முரண்பட்டதாக இருக் கிறது. செயல்முறை சார் அறிவியல் ஆய் விற்கு நிதியைத்திரட்டுவது சுலபமாக இருப்பதால், அரசு, தனியார் நிதியைப் பெறுவதற்கான கொள்கைகளை வடி வமைக்கும் என்று கூறியுள்ளார். இத் தகைய எண்ணப்போக்கைப் பலப் படுத்த, “தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச் சிக்காக அரசு அளிக்கும் நிதி, செயல் முறை சார் அறிவியல் ஆய்வினைக்காட் டிலும் அடிப்படை ஆய்விற்கே பயன் படுகிறது என்று பிரதமர் வருத்தம் தெரி வித்தார். அப்படியெனில், அடிப்படை ஆய்வினைப் பலப்படுத்துவதற்கு பதி லாக தனியார்களின் லாபங்களை ஊக்கு விக்கும் தனியார்-பொதுத்துறை இணைப்பை பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதே இதன் பொருள். இப்போக்கிலே சிந்தித்தால், இராமானுஜன் மற்றும் போஸ் போன்ற விஞ்ஞானிகள் இந்தியா வில் உருவாவது சாத்தியமல்ல. 

மெலிந்துவரும் தேசம்! 

பிரதமர், அவரது இரண்டாவது உரை யில், ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச் சனை நாட்டின் அவமானமாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுள் 42 சதவீதம் எடை குறைவாகவும் 59 சதவீதம் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது. இருப்பினும், இத்தகைய கண்டு பிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிதி மந்திரியான மன்மோகன்சிங் அவர்க ளால் கொண்டுவரப்பட்ட பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், பொருளாதார வேறு பாட்டின் அடிப்படையில் இரு வேறு இந்தியாவை உருவாக்குவதிலேயே வெற்றி கண்டுள்ளன என்ற உண்மை யினை பரந்த ஆய்வைக்கொண்ட அறிக் கைகள் சில ஏற்கனவே உறுதிப்படுத் தியுள்ளன. 

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை களுள் 50 சதவீதத்தினர் சத்துக்குறை வுடன் காணப்படுவது மிகவும் பின்தங்கி யுள்ள ஆப்பிரிக்காவின் தென்சஹாரா பகுதியைவிட மோசமானதாக இருக் கிறது. குழந்தைகளுள் பாதிப் பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுவதில்லை. எனவே, தடுக்கக்கூடிய நோயினால் இறக்கின்றனர். மருத்துவத்துறையில், அரசு மற்றும் தனியாரின் மொத்த செல வினத்தை எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அந்த சதவீதம் ஆப்பிரிக்கா முழுவதையும் விட குறைவாக உள்ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளான பிறகும் கூட 50 சதவீத இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாத பரிதாப நிலையில் இருக்கின்றனர். 

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்பட்ட தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் மூன்றாம் பதிப்பில் வெளிவந்த நிலைமைகள், அதன் இரண்டாம் பதிப்பில் வெளிவந்ததை விட மோச மாகியிருப்பது கவலையளிப்பதாக உள் ளது. 6- லிருந்து 35 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகள் இரத்தசோகை யினால் பாதிக்கப்படும் சதவீதம் 74.2 லிருந்து 79.2 ஆக உயர்ந்திருக்கிறது. இவ் விகிதம், 15-49 வரை வயதுடைய திரு மணமான பெண்களை எடுத்துக் கொண் டால் 51.8 சதவீதத்திலிருந்து 56.2சதவீத மாக அதிகரித்திருக்கிறது. இரத்த சோகையினால் பாதிக்கப்படும் இதே வயதையுடைய கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம் 49.7 லிருந்து 57.9 ஆக உயர்ந் துள்ளது. நமது தாய்மார்கள் மற்றும் குழந் தைகளின் நிலை இதுதான். 

அரசின் வறட்சியான திட்டம்!

இந்தியாவின் ஊட்டச்சத்துக்கான தேசியக்குழுவின் தலைவராக பிரதமர் இருப்பது இதில் வேடிக்கையான விஷ யம். இத்தகைய கடுமையான நிலையை சீர்செய்ய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையை (ஐவேநபசயவநன ஊாடைன னுநஎநடடியீஅநவே ளுநசஎiஉநள-ஐசிடிஎஸ்) இந்தியா முழுமைக்கும் அமலாக்குவது என அரசு அறி வித்துள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பும் உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின் பேரிலேயே நடைபெற்றது. இருப் பினும், நம் நாட்டில் ஐசிடிஎஸ் கண்காணிப் பாளர்களின் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாகவே இருக்கிறது. மதிப்பிடப்பட்டுள்ள 14 லட்சம் மையங் களுள் 1 லட்சத்து 10 ஆயிரம் அங்கன் வாடி மையங்கள் செயல்படுவதே யில்லை. பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பரிதாபமான நிலையில் உள் ளன. பலருக்கு, அதிலும் குறிப்பாக பீகா ரின் 90சதவீத மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. பாதிக்கும் மேலான வற்றிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி யில்லை.

நாடாளுமன்றத்தில் கட்டாயமாக கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அங்கன் வாடிகளை ஆரம்பப்பள்ளிகளுடன் இணைப்பதற்கான கோரிக்கை இயக் கங்கள் தொடரும் நிலையிலும் அங்கன் வாடிப்பணியாளர்களின் நிலை மிக மோசமாகவே இருக்கிறது.

ஐசிடிஎஸ் திட்டத்தை பலப்படுத்து வதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆனால் மதிய உணவுத் திட்டத்தை பொதுத் துறை - தனியார் கூட்டு பங்கேற்பு (பிபிபி -ஞஞஞ) மூலம் தனி யாருக்கு தாரை வார்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 1 சதவீதம் மட்டுமே பொது சுகாதாரத் திற்காக செலவிடுகிறது. உடல்நல பட் ஜெட்டிற்கான தொகை ரூ. 22,300 கோடி மட்டுமே. இதை விட 8 மடங்கு அதிக மாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் அரசு இழந்திருக்கிறது. 

படிப்பினை!

பிபிபி மூலம் குறைபாடுகளை களைய எடுக்கும் முயற்சிகளும், அதற் காக அரசு, தனியாரைச் சார்ந்திருப்பதும் கவலை யளிக்கும் அம்சமாகும். நான் ஒரு விஷ யத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். மீண்டும் வலியுறுத் துவதும் அதுதான். செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகளை விலக்கி, உரிய வரிகளை கறாராக வசூலிக்க வேண்டும்; அதன் மூலம், நமது பொருளாதார சமூகக் கட்டமைப்பிற்காக அரசு பயன்படுத்து மானால், பெருமளவில் வேலைவாய்ப்பு பெருகும். அதைஅவ் வகையில் பெருக்கினாலொழிய, இந்தியாவின் உள்ளார்ந்த சக்தியினை செய லாக்கிட முடியாது.

தமிழில் : ஜெ. விஜயா 

நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (16.1.2012)

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com