Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 1 February 2012

புதுச்சேரியில் நாளை பந்த் : இந்திய மாணவர் சங்கம் ஆதரவு

0 comments
ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இங்கு பணி செய்யும் ஊழியர்கள் தங்களது பணி நிரந்திரதிர்க்காகவும்,ஊதிய உயர்வு கோரியும் போராடிய தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவி அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. முதலாளிகளின் அடிவருடிகளாக உள்ள காவல்துறையினர்  மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தொழிற்சங்க தலைவர்களை சிறையில் அடைத்தது.சிறையில் அடைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.இதனை எதிர்த்து போராடிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகளை புதுச்சேரி காவல்துறையினர் போட்டுள்ளனர்.

வேண்டுமென்றே பழி சுமத்தப்படும் தொழிலாளர்கள் :

அமைதியான முறையில் போராட்டம் செய்த தொழிலாளர்களின் போராட்டத்தை முறிடிப்பதாக நினைத்து காவல்துறை மேலும் பல தொழிலாளர்களின் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களை கைது செய்து 'எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊட்ருவது  போல்' தொடர்ச்சியான  அடக்குமுறைகளால் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு ,ஊரடங்கு உத்தரவு என வழக்கமாக ஒரு பிரச்சனையில் புதுவை போலீஸ் சிக்கிகொண்டால் எப்படியெல்லாம் மூடி மறைக்க முடியோமோ? அது போல நியாயம் கேட்டு ஜனநாயக முறைப்படி போராடிய தொழிலாளர்களின் மீதுதான்  தவறு உள்ளது எனவும்,நாங்கள் உத்தமர்கள் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறாதவர்கள் என்று அடையாளப்படுத்தும் விதமாக காவல் துறை உயர் அதிகாரத்தில் உள்ளவர்களின் நடவடிக்கை எடுத்துரைக்கிறது.ஏற்கனவே திட்டமிடப்பட்ட  படி காவல்துறையினரே தொழிற்சாலையின் நிறுவனர்களில் ஒருவரை கொலை செய்துவிட்டு தொழிலாளர்களின்  மீது வீண்பழியை சுமத்துபடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
எனினும் யானம் தொழிலாளர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து,உரிய நீதி விசாரணை கோரி அனைத்துதொழிற்சங்கங்கள்,
ஜனநாயக இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டதிற்கு இந்திய மாணவர் சங்கமும் (SFI)ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com