Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 23 February 2012

புதுவை அரசு கல்லூரியில் முட்டிபோட சொன்னதால் மாணவி தற்கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

0 comments

புதுவை முதலியார் பேட்டை ஜெயவிலாசம் நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம். மில் தொழிலாளி. இவரது மகள் மீனாட்சி (வயது 23). அரசு ஆசிரியை பயிற்சி கல்லூரி மாணவி. நேற்று காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு மீனாட்சி சென்றார்.
 
அவர் வகுப்பறையில் இருந்தபோது அந்த கல்லூரி முதல்வர் வந்து மீனாட்சியிடம் சில கேள்விகள் கேட்டார்.   ஆனால் மீனாட்சி உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவரை முட்டி போடுமாறு கல்லூரி முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
 
அந்த தண்டனையை மீனாட்சி ஏற்க நேர்ந்தது. சக மாணவிகள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணி மீனாட்சி மனவேதனையடைந்தார். பின்னர் மாலையில் அவர் சோகத்துடன் வீடு திரும்பினார்.இதுபற்றி குடும்பத்தினர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் இரவில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாகும்முன்பு மீனாட்சி தனது வீட்டில் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் மீனாட்சி எழுதியிருப்பதாவது:-
 
என் சாவுக்கு எங்கள் கல்லூரி முதல்வர்தான் காரணம். நான் எந்த தவறும் செய்ததில்லை. நான் செய்த ஒரே தவறு அந்த கல்லூரியில் சேர்ந்ததுதான். என்னை சொற்களால் துன்புறுத்தியிருக்கிறார். நான் இறந்து போவதற்கு இவரே காரணம்.
 
அம்மா, சாரி! நான் போகிறேன். சுமதி, கிட்டு அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியா பார்த்துக்கோ. மனசு சரியில்லை. அதுதான் இப்படி செஞ்சுக்கிட்டேன். நான் இறந்ததற்காக ஒருநாள் கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அம்மா! தினம், தினம் ஏதாவது சொல்கிறார், பிரின்சிபால். சுகந்தி நான் என்ன தப்பு செய்தேன்னு என்கிட்டே பேசலை- நான் தப்பு பணியிருந்தா மன்னிச்சுக்கடி. என் சாவுக்கு ஒரே ஒரு காரணம் பிரின்சிபால், பிரின்சிபால்தான்.
 
இப்படிக்கு...
 
குறிப்பு:- இதனை என் சுயசிந்தனையோடு எழுதுகிறேன். பாரபட்சம் பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்க, அனைத்து ஆசிரியர்களிடமும். இதை ஒரு சட்டமாக்கவும். புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
 
இந்திய மாணவர் சங்கம் சார்பில் இது குறித்து விசாரணையை மேற்கொண்டது.அதன் அடிப்படையில் இறந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமான கூட்டுறவு அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மீது மாணவியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவு 306 இன் கீழ்  வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுவை பிரதேச குழு புதுச்சேரி அரசையும்,உயர்கல்வித்துறையையும் வலியுறுத்துகிறது.
Read more...
Tuesday, 21 February 2012

உலக மக்களை ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஊடகங்களின் பிரச்சாரம் துவங்கியுள்ளது - இது உலக அமைதிக்கான போர் என்று..!

0 comments

ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்துகிறது அமெரிக்கா...!

                   அமெரிக்கா எப்போதுமே ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து சீரழிக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அந்த போருக்கான நியாயத்தை உலக மக்கள் நம்பும்படியான வேலைகளில் இறங்கிவிடும். அதை பரப்புவதற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் துணையாக நிற்கும்.  
          இப்படியாகத் தான், உலக அளவில் தீவிரவாதத்தை பரப்பும் பின்லேடனை பிடிக்கப்போகிறேன் என்கிற காரணத்தைக் காட்டித்தான் ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைந்து அமெரிக்கா அந்த நாட்டையே நாசப்படுத்தியது. 
              அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு நாடகத்தை நடத்தி, அதை காரணம் காட்டி அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் இராக் நாட்டில் ஆயுதங்களை தேடப்போகிறேன் என்று சொல்லி அந்த நாட்டினுள் நுழைந்து இராக் நாட்டையே சின்னபின்னாமாய் சீரழித்து, அந்த நாட்டு மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாய் மாறிவிட்டது. 
                  அடுத்து  ''அமெரிக்காவின் சீரழிப்பு பட்டியலில்'' உள்ள நாடுகளில், இப்போது அமெரிக்காவின் கழுகு பார்வை ஈரான் மீது பட்டிருக்கிறது. ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தான் நேற்று புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் எரிப்பும், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
                    இப்படித்தான் நேற்று, திங்களன்று மாலை நடந்த இச்சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசுகளாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
                 தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
               இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
                  இது குறித்த விசாரணை தொடங்கவே இல்லை. விசாரணை முடிந்த  பிறகே இது தாக்குதலா, தற்செயல் விபத்தா என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இதற்காகவே காத்திருந்தது போலவே, “இது ஈரானின் சதி; உலகம் முழுவதும் ஈரான் இதுபோன்ற பெரும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுமதி செய்துகொண்டி ருக்கிறது” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை வெளியிட்டார். அது எப்படி...?
               இப்படித்தான், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தகர்ப்பில் கூட,அந்த தகர்ப்பை பார்த்து அதிர்ந்து போன காவல் துறை அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், அந்த தகர்ப்பு நடக்கும் போதே அதற்காகவே காத்திருந்தாற்போல் அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இது தீவிரவாதிகளின் செயல் - இது பின்லேடனின் செயல் சென்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியது இப்போது இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது வருகிறது.
               இதிலிருந்தே விஷயத்தைப் பளிச்சென்று புரிந்துகொள்ளலாம்.
           பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைக்கூலியான இஸ்ரேலையும் போர் வெறி உச்சத்திற்கு ஏறி ஆட்டிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலை ஏவி, ஈரானைத் தாக்கி, ஒரு பெரும் போரை நடத்தி, தத்தளிக்கும் முதலாளித் துவத்தை போரால் தக்கவைத்துக்கொள்ள எத்தனிக்கிறது ஒபாமா நிர்வாகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
               ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் பணியை தான் இன்று  ஊடகங்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு கைக்கொடுக்கின்றன.


                                                                                      நன்றி:புதுவை ராம்ஜி
                                                                                 ஆயுதஎழுத்து இணையதளம் 
Read more...

கிரீஸ் கல்வி நிதி வெட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

0 comments

அரசின் தொடர் சிக்கன நடவடிக்கைகளைக் கண் டித்து நாடாளுமன்றத்தின் முன்பாகக் கூடி ஆயிரக் கணக்கான கிரீஸ் மாணவர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர்.பல்வேறு வகையான மக்கள் விரோத நடவடிக் கைகளைத் தொடர்ந்து கல் வித்துறைக்கான நிதி ஒதுக் கீட்டிலும் கிரீஸ் ஆட்சியா ளர்கள் கை வைத்துள்ளனர். இதற்கும், பொதுவான ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுகளையும் கண்டித்தே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட் டங்களை ஒடுக்கும் நோக் கத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறாத வகையில் மாணவர்களைத் தள்ளி விடுவதில் அவர்கள் குறியாக இருந்தனர்.

Student protest over Greek budget cutsஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களோடு, மற்ற பகுதியினரும் சேர்ந்து பங் கேற்றனர். எங்கள் அனை வரையும் இணைத்ததற்கு நன்றி என்று கூறும் அட் டைகளைத் தாங்கிப் பிடித்த வாறு ஆர்ப்பாட்டக்காரர் கள் பங்கேற்றனர். கலவரச் சூழலை உருவாக்க வேண் டும் என்கிற காவல்துறை யினரின் முயற்சி பலிக்கவில் லை. அவர்களின் நோக்கத் தைப் புரிந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்ட நோக்கத்தை முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

சர்வதேசக் கடன் நிறு வனங்களின் இரண்டாவது தவணையை வாங்கும் நோக் கத்தில் புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஓய்வூதியத்தில் 1,955 கோடி ரூபாய் வெட் டும், குறைந்தபட்ச ஊதியத் தில் 4 ஆயிரத்து 880 கோடி ரூபாயும் வெட்டு செய்யப் போகிறார்கள். இது ஒட்டு மொத்த உழைப்பாளி வர்க் கத்தை போர்க்கோலம் பூணச் செய்திருக்கிறது. அதோடு, கல்விக்கட்டண உயர்வு மற்றும் நிதி வெட்டு போன்றவை மாணவர் களின் போராட்டங்களை அதிகரித்ததோடு, அனைத் துப் பிரிவினரும் இணைந்து போராடுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது.

2011 ஆம் ஆண்டுத் துவக் கத்திலிருந்து அரசின் மக் கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகப் போராட் டம் நடந்து வருகிறது. ஏராளமான போராட்டக் காரர்கள் காவல்துறை யினரின் அடக்குமுறை நட வடிக்கைகளால் காய மடைந்து மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ள னர். இவற்றையும் மீறி மக்க ளின் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. அரசோ, கடன் பெறுவதற்காக எந்த நிபந்த னையையும் ஏற்கத் தயாராகி யுள்ளது. இந்தக் கடன்கள் நெருக்கடியை அதிகரிக் கவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
                                                                        நன்றி : தீக்கதிர்
Read more...
Monday, 20 February 2012

முதலாளித்துவம் காரணமாக புதைகுழியை நோக்கிப் பொருளாதாரம்

0 comments
 முதலாளித்துவத்தால் பொருளாதாரம் மட்டுமின்றி நாட்டு மக்களின் அன்பு, கருணை, கலாசாரம் என அனைத்தும் புதைகுழியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந் நிலைக்கு எதிராகப் போராட மக்கள் ஒன்றிணைய வேண்டுமென, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பேசினார். 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பாரதி விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  அதில், புதை குழியில் பொருளாதாரம் என்ற தலைப்பில் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பேசியது: பொருளாதாரம் என்பது மிகப்பெரும் பிரச்னை. நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு, பெருமுதலாளிகள் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக வங்கிகளில் பெற்ற பல்லாயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளதே காரணம். தங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பெருமுதலாளிகளுக்கு எதிராக அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டுள்ளனர். அடிப்படையில், உலக ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாகும் இது. 
இப் போராட்டம் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும். இப்போது நிலவும் தொழில் நெருக்கடிகளுக்கும், விவசாயப் பாதிப்புகளுக்கும் வளர்ச்சி பெற்றுள்ள விஞ்ஞானம் மூலம் தீர்வு காண முடியும். ஆனால், அத் தீர்வை நோக்கிப் போகாதது தான் முதலாளித்துவம். நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஊழலின் ஆணி வேரை அறுக்காதவரை ஊழலை ஒழிக்க முடியாது.  
மிகப் பெரிய வறுமையில் நாடு இருக்கும்போதும், விவசாயிகள் தற்கொலை செய்தும், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தும், வேலைக்காக கிராமங்களை விட்டு பெண்கள் வெளியேறிக் கொண்டுள்ளபோதும் கோடி கோடியாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. கிராமங்கள் அழிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகும்போதும் நாட்டில் வேலைவாய்ப்பு உருவாவதில்லை. இதனால், வேலை கிடைக்காமல் வீதிக்குத் தள்ளப்படும் இளைஞர்கள், கிடைக்கிற கூலிக்கு அலைமோதுகின்றனர். அங்கு, உழைப்புச் சுரண்டலை திணிப்பது முதலாளித்துவத்தின் நோக்கம். இதற்கு லாப வெறியும், மூலதன ஆசையுமே காரணம். இந்நிலைமைக்கு எதிராக அமெரிக்காவில் துவங்கியுள்ள போராட்டம், உத்வேகம் அளிக்கும் போராட்டமாகும். அதை எதிர்த்துப் போராடாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி அன்பு, கருணை, கலாசாரம் என அனைத்தும் புதை குழிக்குள் தள்ளப்படும் என்றார். முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன், கவிஞர் நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 நன்றி - தினமணி, 12.12.2011 

   
Read more...
Thursday, 16 February 2012

தமிழ்நாடு அரசுக்கல்லூரி மாணவர்கள் - வகுப்பு புறக்கணிப்பு

0 comments
அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பிடக்கோரி (பிப்.16) வியாழனன்று மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய மாணவர்சங்கம் அறிவித்தது. இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோ. ராஜ்மோகன் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல் லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பங்களை சார்ந்தவர்கள். இக்கல் லூரிகளில் குடிநீர், கழிவறை, வகுப்பறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப் படாமல் உள்ளன.

இக்கல்லூரிகளில் 1025 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டு 5 மாதங்கள் கடந்தும் நிரப்பப்படவில்லை. மேலும் 1661 கவுரவ விரி வுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 37 நூலகர் பணியிடங்கள், 45 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இது தவிர மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 புதிய விரிவுரை யாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பிட வேண்டும். இப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது.

மேலும் அரசு கல்லூரி இல்லாத மாவட்டமான ஈரோடு, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய கல்லூரிகளை திறக்க வேண்டும். கல்லூரியில் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இன்று வரைக் கும் செய்து கொடுக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப் பட்ட மாணவர்களிடமே புயல் நிவாரண நிதி வசூல் செய்வது மோசமான நடவடிக்கையாகும். எனவே வசூ லிக்கப்பட்ட பணத்தை மாணவர்களிடமே திரும்ப கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
Read more...
Wednesday, 15 February 2012

திறன்மிக்க இளைஞர்கள் இந்தியாவில் இல்லை - பிரதமர் புதுத்தகவல்

0 comments
44வது இந்திய தொழிலாளர் மாநாடு
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தமது அரசின் முதன்மைப் பணியாக இருந்தபோதும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான கட்ட மைப்பு எதிர்பார்த்ததைவிட மந்தமாக உள்ளது என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.தலைநகர் தில்லியில் 44வது இந்தியத் தொழிலா ளர் மாநாடு செவ்வாய்க் கிழமை துவங்கியது.


இந்த மாநாட்டில் துவக் கவுரையாற்றிய பிரதமர் மன் மோகன்சிங், இளைஞர்க ளின் திறன் மேம்பாட்டு அவசியத்தை வலியுறுத்தி னார். “இந்தியப் பொருளா தாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் பணியாளர் தேவையை பூர்த்திசெய்ய இளைஞர் களை திறன் மிக்கவர்களாக உருவாக்கவேண்டியுள்ளது. 2004ம் ஆண்டு முதல் இந் தியப் பொருளாதார வளர்ச்சி, மிக வேகமாக வளர்ந்துவருகிறது.

இந்த வளர்ச்சி நிலை யில் நாட்டின் திறன் மேம் பாட்டு கட்டமைப்பு நட வடிக்கையில் குறைபாடு இருப்பது தெளிவாகவே தெரிகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையாக திறன் வாய்ந்த இளைஞர்கள் உள்ளனர். தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்று பிரதமர் கூறினார். 

இளைஞர்களின் திறன் மேம்பாட்டு கட்டமைப்புத் திறனை உருவாக்குவதில் தனியார் துறையினர் தாங்க ளாக, தங்களை தீவிரமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனது உள்ளக்கிடக்கையை தெளி வாக வெளியிட்ட பிரதமர், தனியார் பங்கேற்பு மூலம் அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதி கொண்டுள்ளது என்றார்.

சிஐடியு பிரதிநிதிகள்

புதனன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ள இம் மாநாட்டில் நாட்டின் பல் வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் பங் கேற்றுள்ளனர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்ம நாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி., அகில இந்திய செயலாளர்கள் டாக்டர் கே.ஹேமலதா, ஸ்வதேஷ் தேவ் ராய் ஆகி யோர் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் நிலவி வரும் தொழில்துறை மந்த நிலைமை மற்றும் தொழி லாளர்களின் நிலைமை குறித்த பல்வேறு விபரங்கள் அடங்கிய குறிப்புகளையும், இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு மேற் கொள்ள வேண்டிய ஆலோசனைக ளையும் இம்மாநாட்டில் சிஐடியு சமர்ப்பிக்கிறது.
                                             
                                                   நன்றி:  தீக்கதிர் 
Read more...
Tuesday, 14 February 2012

புதுச்சேரி பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகம் - மாணவர்கள்முற்றுகை

0 comments
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களே உணவு விடுதிகளை நடத்தி கொள்ள  அனுமதி வழங்க கோரி துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை.புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைகழகம் உள்ளது.இப்பல்கலைகழகத்தில் கேரளா,ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட 32 மாநிலங்களை கொண்ட 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி எம்.பில், பி.ஜி, உள்ளிட்ட உயர்கல்வி படித்து வருகின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு 9விடுதிகளும்,
மாணவிகளுக்கு 7விடுதிகளும் உள்ளது.இவ்விடுதியில் தங்கிபடிக்கும் மாணவர்களிடம்; மாதத்திற்கு தலா ஆயிரத்தி 500 உணவு கட்டணம் வசூலிக்கபடுகிறது.கடந்த இரண்டு வருடமாக மாணவர்களுக்கு வழங்கபடும் உணவு தரமற்றதாக உள்ளது என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதுகுறித்து விடுதியின் தலைமை வார்டனிடம் பல முறை புகார்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை (பிப்-12) மதியம் அமுதம் மெஸ்சில் வழங்கபட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக கூறுப்படுகிறது.இதனையடுத்து  தகவல் அறிந்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச து.தலைவர் ரஞ்சித்,தலைவர் அரிகரன்,செயலாளர் ஆனந்து உள்ளிட்ட பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் பல்கலைகழக இரண்டாம் வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்கள் கோரிக்கைகள் ஏற்றுகொள்ள மறுத்ததால் போராட்டம் தோடர்நது திங்களன்று மாணவர்கள் பல்கலைகழகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் பல்கழைகம் தரப்பில் போலிஸார்;  வரவழைக்கப்பட்டு குவிக்கபட்டனர்.இதனால் பல்கலைக்கழகமே ; போர்களமாக காணப்பட்டது.
இப்போராட்டத்ததையொட்டி இரண்டு நாளும் மாணவர்கள் தாங்களாவே சமைத்து சாப்பிட்ட சம்பவமும் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

துணைவேந்தர் பேச்சு வார்த்தை:
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் டெல்லி ஜெ.என் பல்கலைகழகத்தில் உள்ளதை போல் மாணவர்களே தங்களுக்கான உணவுவிடுதிகளை நடத்தி கொள்ள பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும்; மற்ற பல்கலைகழகத்தில் உள்ளதை போல் மாணவர் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றனர்.இதற்கு பதிவாளர் லோகநாதன் ஏற்றுகொள்ள மறுத்தார்.இதனை அடுத்து திங்களன்று மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தரீன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.உடனே சம்பந்தபட்ட விடுதியில் தரமான  உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்,தலைமை வார்டனை உடனடியாக மாற்றவும்,விடுதியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும் போலிஸாரை ஏன் பல்கலைகழகத்தில்
அனுமதித்ததீர்கள் என்று மாணவர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டது.

போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு:                                                                  இரண்டு  நாள் போராட்டத்தையொட்டி மாணவர்கள் கோரிக்கையான விடுதியினை மாணவர்கள் நடத்தி கொள்ளவும்,மாணவர்சங்க தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்காத நிலையில் மேற்கண்ட
கோரிக்கைகளுக்காக துணைவேந்தரின் உறுதிமொiழியை ஏற்று
மாணவர்கள் இப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு ஆதரவு தெரிவித்து இருந்தது.

Read more...
Sunday, 12 February 2012

அமெரிக்க பொருளாதார நெருக்கடி இளைஞர்களுக்கே அதிக பாதிப்பு வாஷிங்டன்

0 comments

2008 ஆம் ஆண்டில் துவங்கிய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி யால் அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் இளைஞர்கள் தான் என்று பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

லட்சக்கணக்கான மக்களின் வேலைகளைப் பறித்த பொருளாதார நெருக்கடி, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முத லாளித்துவக் கொள்கைகள் தான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று கூறி அமெ ரிக்கா முழுவதும் “கைப்பற் றுவோம்” போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின் றன. அதில் லட்சக்கணக் கான மக்கள் பங்கேற்று வரு கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று துவங் கிய போராட்டங்கள் இன் றுவரை தொய்வில்லாமல் தொடர்கின்றன.

இந்நிலையில் இந்தப் பொருளாதார நெருக்கடி பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்கா வில் உள்ள பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், 18 வயது முதல் 34 வயது வரை யிலான இளைஞர் கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த இளைஞர் களில் வெறும் 54 விழுக் காட்டினர்தான் வேலையில் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு தொடர்பான புள்ளிவிபரங்களை 1948 ஆம் ஆண்டிலிருந்துதான் அமெரிக்க அரசு சேகரித்து வைத்துள்ளது. அந்த ஆண் டிலிருந்து தற்போது வரை இவ்வளவு எண்ணிக்கை யில் வேலையில்லா இளை ஞர்கள் இருந்ததில்லை.

பியூ ஆய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான கிம் பார்கர், கடைசிப்படி யில் இளம் தொழிலாளர் கள் காத்துக் கொண்டிருக் கிறார்கள். நெருக்கடிக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது கடுமை யான அதிருப்தியோடு இளைஞர்கள் உள்ளனர். இவர்களில் பலர்தான் கைப்பற்றுவோம் போராட் டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான வர்கள் பத்து மாதங்களாகத் தொடர்ந்து வேலையில்லா மல் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க மத்திய வங்கி யின் தலைவரான பென் பெர்னான்கே, அமெரிக்கா வின் பொருளாதார நிலை பற்றிக் கவலை தெரிவித்துள் ளார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நெருக்கடிகள் ஏழை களைப் பெரும் ஏழைகளா கவும், நடுத்தர மக்களை ஏழைகளாகவும் மாற்றிவிட் டது என்று கைப்பற்று வோம் போராட்டங்களை நடத்தும் குழுவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

Read more...
Saturday, 11 February 2012

கண்ணுக்கு எட்டிய பிறகு சூரிய நமஸ்காரம் - புதுச்சேரி அரசியல்

0 comments

சின்ன சிங்கபூராக அமைதிப்பூங்காவாக மாற்றுவோம் என கூறிய புதுவை முதல்வர் ரங்கசாமி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை,கொள்ளை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவில் தலைவலியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த 2009ம் ஆண்டு 36 கொலைகளும்,2010 ம் ஆண்டு 29 கொலைகளும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளதாகவும் அதை வைத்து பார்க்கும் போது தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது கேள்வி குறியாக எல்லாம் இல்லை என மக்கள்முதல்வர் சின்ன காமராஜர் பேட்டி அளித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் சட்டம் ஒழுங்கை காக்க அவசர ஆலோசனை கூட்டமா ?
வழக்கம் போல் புதுச்சேரி காவல் துறையினரின் உயரதிகாரிகள் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்று உள்ளது.இக்கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் ரங்கசாமி ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும்,இனி ரௌடிகளின் மாமுல் தொல்லை இருக்காது எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு எடுத்து வருவதாக கூறியுள்ளார்.இருப்பினும் இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சரின் வீட்டின் அருகே நடைபெற்ற கொலையின் போதும் இதே போல் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய முதலமைச்சர் ரங்கசாமி அப்போதும் ரௌடிகள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பாதி பேர் தற்போது சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். 

காவல்துறையின் செயல்பாடு யாருக்கு சாதகம்!
சமீபத்தில் புதுவை சிறையில் இருந்து  யானம் சிறைக்கு மாற்றப்பட்ட கைதி கருணா அங்கிருந்து தொலைபேசி மூலம் புதுவை முன்னாள் தி.மு.க.நகரமன்ற து.தலைவரும் கேபிள் நெட்வொர்க் தொழிலை நடத்திவரும் ஜான்குமாரை மாமுல் கேட்டு மிரட்டியதாகவும்,கைதி கருணா மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுவை வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்ற போதும் தொலைபேசியில் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.அதே போன்று ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள கார் உதிரிபாகம் விற்கும் தொழிலதிபரை நடு ரோட்டில் மாமுல் தராததால் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.புதுச்சேரி எல்லையோர பகுதியான மதகடிபட்டு,பாகூர் பகுதிகளில் மாமுல் கேட்டு தராத மதுக்கடைகளை ரௌடிகள்  சூறையாடினர்,செயின் பறிப்பு போன்ற சம்பவங்களால் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிறார்கள்.

பிரச்சனைகளை திசை திருப்பும் புதிய அறிவிப்புகள்:
புதுச்சேரி முதலைமச்சர் திரு.ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பிரச்சனை பூகம்பமாக உருவெடுக்கும் போது அதை சமாளிக்க புதியதாக ஒரு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்புவதில் வல்லவர்.அதுபோலவே தானே புயலினால் பெரிய அளவில் மீனவகிராமங்கள் பாதித்தன,குடிசை வீடுகள் காற்றில் சூறையாடப்பட்டன,இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் சென்று அடையாத நிலை உள்ளது.ஆனால் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாயை நிவாரனதொகையாக வழங்கி உண்மையில் புயலினால் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் இல்லை,உரிய கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இன்று புதியதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பத்தாம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் பெற்றால் லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.ஆனால் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள இலவச சைக்கிள்,சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது.

எனினும் இவரது அறிவிப்புகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர இது வரை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறார் என்பது தான் சந்தேகம்!
                                                                                                                -அ.ஆனந்த் 
                                                                                                      இந்திய மாணவர் சங்கம்
Read more...
Friday, 10 February 2012

வெண்மணி வாச்சாத்தி முறையில் இன்னொரு கொடுமை...

0 comments
எத்தனை தலைமுறைகள் மறைந்தாலும் இன்னும் மனிதனை மனிதன் அவமதிக்கும்
கொடுரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது .தன்னிடம் வேலை செய்பவர்கள்
தங்களுக்கு அடங்க மறுக்கும் போது அவர்களை அடித்து உதைத்து சாணிப்பால்
கொடுத்த கொடுரம் எல்லாம் நடந்தது என்பதை நாம் அறிந்ததே .ஆனால் இன்று
விழுப்புரம் மாவட்டம் ,திருவக்கரை கிராமத்தில் மனித மலத்தையே தின்னவைத்த
காட்டுமிராண்டித்தனம் அரங்கேரியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ,வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் ஒரு
கல்குவாரியின் முதலாளிதான் துரை @ பழநியாண்டி. இவனிடம் 50க்கும்  மேற்ப்பட்ட
தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றார்கள் .தொழிலாளிகளை தொழிலாளி போல்
நடத்தாமல் கொத்தடிமை போல் நடத்துவதே இவன் வேலை. அந்த தொழிலாளிகளின்
வெள்ளையன் மற்றும் தாம்பரத்தில் இருந்து ஒரு தொழிலாளியும் [ பெயர்
தெரியவில்லை ]  வேலை செய்துவந்தனர் . 31 .02 2012 அன்று மதியம் 12
மணியளவில் கல்குவாரியின் முதலாளி துரை தன்னிடம் இருந்து சம்பட்டியை
வெள்ளையனும் தாம்பர தொழிலாளியும் திருடிவிட்டார்கள் என சொல்லி வெள்ளையன்
விட்டுக்கு சென்றான் ...
வீட்டில் இருந்த வெள்ளையனின் மனைவி பூபதியம்மளிடம் எங்க அந்த
தே.....பையன் என்றுகேட்டு அவன் வீட்டில் இருந்த 3 T.V ஒரு DVD.மற்றும்
வெள்ளையனின் TVS SUPER XL. ஆகியவற்றை எடுத்து கொண்டான் அது மட்டும்
அல்லாமல் வெள்ளையனின் மனைவி பூபதியம்மாள் அவனின் அம்மா அகியோரின் தலை
முடியை பிடித்து தரதர என வீட்டுக்கு வெளியே இழுத்து கிடாசினான்..துரையின்
ஆட்கள் வெள்ளையனையும் தாம்பர தொழிலாளியையும் இழுத்து கொண்டு
வந்தார்கள். ஊரே வேடிக்கை
பார்க்க வெள்ளையனை அடித்து உதைத்தான். எதற்கு அடிவாங்குகிறான் என்பதே
தெரியாமல் இருந்தவனிடம், சம்பட்டிய ஏன்டா திருடினா என்று
கத்தினான்.தனக்கு சம்ப்பட்டி சம்மந்தமாக எதுவும் தெரியாது என
சொன்னான் வெள்ளையன்.. பொய்ய சொல்லுர உன்னலாம் அடிச்சா பத்தாது பீய
தின்னவச்சாதான் சரிப்பட்டு வருவ என சொல்லிவிட்டு பக்கதுல இருந்த
கொள்ளையில் மலத்தை கழித்துவிட்டு அந்த தாம்பர தொழிலாளியை ஒரு சட்டியில்
எடுத்துட்டு வர சொன்னான்.பின்பு வெள்ளையனையும் அந்த தாம்பர
தொழிலாளியையும் தின்ன சொல்லி அடித்தான்..அந்த அருவெறுப்பான செயலை பாக்க
முடியாமல் கிழே குனிந்த பூபதியம்மாளையும் வெள்ளையனின் அம்மாவையும்
கொடூரமாக அடித்து வலுக்கட்டாயமாக பார்க்க வைத்தான்.இந்த அசிங்கம்
தாங்காமல் வெள்ளையனும் தாம்பர தொழிலாளியும் எங்கு சென்றார்கள் என்பதே
தெரியாமல் இருங்கிறது.இச்சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியினர் தலையிட்ட பின்னரே F.I.R பதியப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறையினர்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஆய்வாளர் முரளி என்பவர் 
துரையை பாதுக்காகும் முறையிலியே முழுமையாக ஈடுப்பட்டு
வருகின்றான்.இன்னமும் காவல்துறை காணாமல் போனவர்களை தேடும் பணியில் 
ஈடுபடவும் இல்லை துரை திருடி சென்ற வெள்ளையன் பொருட்களை திரும்பி தரவும்
இல்லை.....
Read more...
Thursday, 9 February 2012

தமிழக அரசுக்கல்லூரி காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பிப்.16ல் போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் முடிவு

0 comments

தமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரை யாளர், கௌரவ விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப் பப்படாததால் அரசுக்கல் லூரிகள் தடுமாறிவருகின் றன. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருகிற 16ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மாணவர் சங்கத்தின் சார்பில் அரசுக்கல்லூரி மாணவர் மாநில கோரிக் கை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ் தலைமை வகித்தார்.

மாநாட்டை குடியாத் தம் அரசுக்கல்லூரி முன் னாள் முதல்வர் சிவக்குமார் துவக்கிவைத்தார். மாநில துணைத்தலைவர் வீ.கரி காலன் அறிக்கையை முன் மொழிந்தார். திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் கே.பாலபாரதி, டிஎன் ஜிசிடிஏ மாநிலப் பொருளா ளர் சி.திருச்செல்வம், மாநில பொதுச்செயலாளர் சிவரா மன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநி லச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன் நிறைவுரையாற்றி னார். முன்னதாக மாநாட் டுப்பிரதிநிதிகளை மாவட் டத் தலைவர் பா.சரவணத் தமிழன் வரவேற்றார். எஸ் எப்ஐ திருச்சி மாவட்டச் செயலாளர் சே.ராஜ்குமார் நன்றி கூறினார்.

இம்மாநாட்டில், தமி ழகம் முழுவதும் உள்ள அர சுக்கல்லூரிகளில் 1025 விரி வுரையாளர், 1661 கௌரவ விரிவுரையாளர், 37 கல் லூரிகளில் நூலகர் பணி யிடங்கள், 45 கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணி யிடங்கள் காலியாக உள் ளன. மேலும் பெருகிவரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 500 விரி வுரையாளர்கள் நியமிக்க வேண்டியுள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என அரசு அறிவித்து கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆன பின்னும் இதற்கான பணிகள் துவக்கப்படவில் லை. இதனால் அரசுக்கல் லூரிகள் தடுமாறி வருகின் றன. காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்பவேண் டும். அரசுக் கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண் டும்.

தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, விருதுநகர் மாவட்டங் களில் அரசுக்கல்லூரிகளை திறக்க வேண்டும். அரசுக் கல்லூரி விடுதிகளில் கழி வறை, குடிநீர்வசதி, ஓய்வு அறை, சுற்றுச்சுவர் வசதி செய்துதர வேண்டும். அனைத்துக் கல்லூரிகளி லும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் காலிப்பணியிடங் களை நிரப்பவேண்டும். முதுகலை மாணவர்களுக் கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் துவக்கத் திலேயே உதவித் தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவ தெனவும் முடிவெடுக்கப் பட்டது.

காவல்துறை நெருக்கடி

இம்மாநாட்டை நடத்த காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப் பட்டது. காவல்துறையும் மாநாட்டை நடத்த அனு மதியளித்தது. ஆனால் திடீ ரென மாநாடு நடத்துவதற்கு அனுமதியில்லை எனக்கூறி நெருக்கடி கொடுத்தது.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.
Read more...
Wednesday, 8 February 2012

தமிழகத்தின் தலைநகரப்பள்ளிகளின் அவலத்தை காட்டும் அறிக்கை :

0 comments

பொதுவாகத் தங்களது குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகளை விடுத்துத் தனியார் பள்ளி களையே நாடுமாறு எளிய குடும்பங்களைக் கூட தள்ளிய பெருமை அரசுக்கு உண்டு. தமி ழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மாநக ராட்சிப் பள்ளிகளின் நிலைமை பற்றி தலை மைத்தணிக்கை ஆணையர் அளித்துள்ள அறிக்கை இந்த விமர்சனம் முற்றிலும் உண்மை என்று எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. சென் னைப்பள்ளிகள் என்று கடந்த ஆட்சியின்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பள்ளி களில் வேறு முக்கியமான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


சென்னைப் பள்ளிகளின் கட்டுமானம் குறித்தும் அவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்தும் ஆய்வு செய்துள்ள தணிக்கையாளர், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், அதனால் குழந் தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநக ராட்சி நிர்வாகம் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, 2010 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டுக் கான அந்த அறிக்கை, 2005 முதல் 2009 வரையி லான காலகட்டத்தில் மாநகராட்சியின் 281 பள் ளிகள் நிலை குறித்துக் கூறுகிறது, தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் சட்டத்தின் கீழ் எந்த ஒரு பள் ளிக்குமே முறையான உரிமம் பெறப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள்தான் என்பதால் அவற் றுக்கு இப்படிப்பட்ட உரிமங்கள் தேவை யில்லை என்று அரசுத்தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஆணையம் தள்ளுபடி செய்து விட்டது. மாதிரிக்கு ஆய்வு செய்யப்பட்ட 79 பள் ளிகளில், 26 பள்ளிகளின் கட்டடங்களில் தீய ணைப்பு கருவிகளில் முறைப்படி புதிதாக வாயு நிரப்பப்படவில்லை. 2 பள்ளிகளில் தீயணைப் புக் கருவியே இல்லை.

ஆய்வு செய்யப்பட்ட சேதமடைந்த பள்ளி களில் கட்டடங்களைப் புதுப்பிப்பதற்கான பணி கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற தக வலைத் தெரிவிக்கும் அந்த அறிக்கை, தொடக் கக் கல்விக்கான நிதியில் 47 முதல் 53 விழுக் காடு வரையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 35.05 கோடி ரூபாய் நிதி வேறு நோக்கங்களுக் காகத் திருப்பிவிடப்பட்டது என்றும் கூறுகிறது. கல்வி வரியில் இருந்து 25 விழுக்காடு வரையில் பள்ளிக்கட்டடங்களை பராமரிப்பதற்காகச் செலவிடப்படலாம் என்று சட் டத்தில் வழிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் வெறும் 8 விழுக்காடு வரையில்தான் செலவிட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள், விளையாட்டுமை தானங்கள் இல்லாத நிலை, போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாதது போன்ற நிலைமை களையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

தலைநகர்ப் பள்ளிகள் பற்றிய அறிக்கை என் றாலும் கூட, தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை இப்படித்தான் இருக் கும் என்று ஊகிப்பது ஒன்றும் கடினமானதல்ல. இது முந்தைய ஆட்சியின் மீதான குற்றச்சாட்டு என்று கூறும் இன்றைய அரசு, இந்த நிலைமை களை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு சென்னைப் பள்ளிகளையும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளையும் வலுப்படுத்துகிற ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டும்.

                                                  நன்றி: தீக்கதிர் 
Read more...

அமெரிக்கா - இங்கிலாந்திடம் பேரம் பேசப்படும் இந்தியாவின் உயர் கல்வி!

0 comments

  கட்டுரையின் முதற்பகுதி :  வியாபாரமாகும் உயர்கல்வி -1நெருக்கடியில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் உயர்கல்வித்துறை 

அமெரிக்காவில் கல்விக்கான நிதி குறைப்பு

அமெரிக்காவின் பொருளாதார சரிவினைத்தொடர்ந்து, அந்நாட்டின் உயர்கல்வியும் கடும் நெருக்கடியை சந்திக்கத்துவங்கியது. குறைந்தபட்சம் 43 அமெரிக்க மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் மானியக்குறைப்பும், கல்விக்கட்டணம் பன்மடங்கு உயர்வும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வருமான வரி, விற்பனை வரி மற்றும் வரி வருமானம் குறைந்தமையால், அமெரிக்க மாநில அரசுகள் நேரடியாக உயர்கல்வி மானியத்தைக் குறைத்தன. மறுபுறம் பொருளாதார மந்தநிலையின் காரணமாக தங்களது வருமானம் குறைந்து, பழைய கல்விக்கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாமல் மாணவர்கள் திண்டாடினர்.

அலபாமா மாநிலம் - இம்மாநிலத்தில் கல்லூரியின் தரத்திற்கேற்ப 8 முதல் 23 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வு
அரிசோனா மாநிலம் - இம்மாநிலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களில் 9 முதல் 20 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வும், 2 .75 சதவீதம் ஆசிரியர்களின் ஊதியக்குறைப்பும்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 32 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 2300 குறைப்பு, ஒட்டுமொத்தமாக கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத் திட்டத்திலிருந்து 40 ஆயிரம் மாணவர்கள் இடங்கள் குறைப்பு.
கொலராடோ மாநிலம் - 2010 இலிருந்து உயர்கல்விக்கான நிதி 62 மில்லியன் டாலர்கள் குறைப்பு.
ப்ளோரிடா மாநிலம் - இம்மாநிலத்திலிருக்கும் 11 பொதுப்பல்கலைக்கழகங்களில் 2010 -2011 ஆண்டில், 15 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு. 2009 ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இது, 32 சதவீத உயர்வாகும்.
ஜார்ஜியா மாநிலம் - 151 மில்லியன் டாலர் நிதிக்குறைப்பு (அதாவது 7 சதவீதம்). அதனால், இளங்கலை படிப்பின் கல்விக் கட்டணமே 500 டாலர் (16 சதவீதம்) உயர்ந்திருக்கிறது.
மிச்சிகன் மாநிலம் - 135 மில்லியன் டாலர்  நிதிக்குறைப்பு  (61 சதவீதம்), மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் 50 சதவீதம் குறைப்பு
நியூயார்க் - 2009 இலிருந்து இளங்கலைக் கல்விக்கட்டணம் 14 சதவீதம் உயர்வு.
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 750 டாலர் அளவிற்கு ஒவ்வொரு மாணவரின் கல்விக்கட்டணமும் உயர்வு.
வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்திற்கான மானியத்தில் 26 சதவீதக்குறைவு. கல்விக்கட்டணம் 30 சதவீத உயர்வு. இம்மாநிலத்தின் பொதுக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் 26 சதவீதம் குறைப்பு.
அடுத்த இரண்டாண்டுகளில் விர்ஜினியா பல்கழைக்கலைக்கழகம் 27 மில்லியன் டாலரும், விர்ஜினியா டெக் 32 மில்லியன் டாலரும், ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழகம் 14 .5 மில்லியன் டாலரும் மானியக்குறைப்பை சந்திக்கவுள்ளன.
எம்.ஐ.டி. யின் மானியக்குறைப்பு 25 சதவீதம், ஹார்வர்டின் மானியக்குறைப்பு 23 சதவீதம், யால்சின் மானியக்குறைப்பு 30 %.

நிதிகுறைப்பை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள்:

ஊதியமில்லா விடுப்பில் ஆசிரியர்களை வீடுக்கனுப்புவது, நிரந்தரமாக வேலையைவிட்டு அனுப்புவது, பணியிடங்களை குறைப்பது, குறைந்த அனுபவமுள்ளவர்களை பணிக்கமர்த்துவது, ஒரே ஆசிரியரை நிறைநேரம் வகுப்பெடுக்கச்சொல்வது, ஒரே வகுப்பில் நிறைய மாணவர்களை அனுமதிப்பது, மருத்துவ  மற்றும் ஓய்வூதிய வசதிகளுக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்தே அதிகம் பிடித்தம் செய்வது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை குறைப்பது, ஊழியர்களின் ஊதியக்குறைப்பு போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டுவிட்டன.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரை கடும்கோபத்திற்குள்ளாக்கின இந்நடவடிக்கைகள். கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலிபோர்னியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்களில் 30 சதவீதம் கல்விக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து, 3200 மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழக கட்டிடமொன்றில் ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக அறைக்கதவுகளை அடைத்துக்கொண்டு தொடர்ந்து 24 மணிநேரம் உள்ளேயே இருந்து கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்துப் போராடினர். இறுதியில் (10 , மார்ச் , 2010 )  காவல்துறையினர் வந்து அறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று 26 மாணவர்களை கைது செய்தனர். அதே நாளில் அதே காரணங்களுக்காக பெர்கேலி உள்பட 3 இடங்களிலும் பல்கலைக்கழக கட்டிட ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் நடந்தன. 

ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு கல்விக்கான நிதிகுறைப்பினை எதிர்த்து கலிபோர்னியாவில் துவங்கிய போராட்டம், நாடுதழுவிய போராட்டமாக உருவெடுத்தது. 2010 மார்ச் 4 ஆம்தேதி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒக்லாந்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராடியதற்காக 160 பேரை காவல்துறை கைதுசெய்தது. டேவிஸ் நகரில், மிளகு போடி தூவி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர். மேலும் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பேண்டு வாத்தியங்களுடன் பாட்டு பாடிக்கொண்டே, பொதுக்கல்வியினை பாதுகாப்பதற்கான ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தம் செய்து போராட்டம்  நடத்தினார்கள். போராட்டங்களை மேலும் தொடரப்போவதாகவும் அன்று அறிவித்தார்கள்.

2010 ஆண்டு அக்டோபர் 7 ஆம்தேதி, பொதுக்கல்வியை பாதுக்கக்கவேண்டி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல்விடுத்தார்கள். லூசியானா பல்கலைக்கழகம் அருகில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகள் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். 637 மில்லியன் டாலர் அளவிற்கு கல்வி நிதிக்குறைப்பை சந்தித்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் நூலகம் நிரப்பும் போராட்டத்தினை   நடத்தினார்கள்.
"இது யாருடைய பல்கலைக்கழகம்? நம்முடைய பல்கலைக்கழகம்" 
என்கிற முழக்கங்களுடன் அன்றைக்கு மாபெரும் போராட்டம் நடந்தது. பொதுக்கல்வியினை பாதுக்காக்கும் நோக்கிலான போராட்டங்கள், நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.


இங்கிலாந்தில் கல்விக்கான நிதி குறைப்பு

அமெரிக்காவைப்போன்று இங்கிலாந்திலும் பெருமளவிலான கல்விக்கட்டண உயர்வும், கல்விநிதிக்குறைப்பும் பல்கலைக்கழகங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும், 8000 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கல்விநிதியினை குறைத்திருக்கிறது அரசு. இனி வரும் காலங்களில் நிதிக்குறைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை குறைக்க சசெக்ஸ் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதனை எதிர்த்து, பல்கலைக்கழக கட்டிடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டத்தினை மார்ச் 2010 இல் மாணவர்கள் நடத்தினார்கள்.
லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆட்குறைப்பை எதிர்த்துப் போராடினார்கள். இருப்பினும் சில ஆயிரம் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியாகிவிட்டது. கல்விக்கான நிதியினை அரசு மேலும் குறைத்தால், குறைந்தது 400 ஆசிரியர்களையாவது வீட்டுக்கனுப்ப வேண்டியிருக்குமென்று வட இங்கிலாந்திலிருக்கும் லீட்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது. 

சிறந்த பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலித்துக்கொள்ள அரசு அனுமதி வேண்டி, அரசுடன் இடைத்தரகு செய்துகொண்டிருக்கிறது ருசல் குழும பல்கலைக்கழகங்கள்.
2010 - 2011 கல்வியாண்டில்மட்டும் 3000 கோடி ருபாய் அளவிற்கு கல்விக்கான நிதியினை குறைத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. பிர்மிங்கம், பிரிஸ்டல், லண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்க்ஸ் கல்லூரி, லண்டன் பொருளாதாரப்பள்ளி, மான்செஸ்டர், செப்பீல்ட் மற்றும் சௌதாம்ப்டன் உள்பட பாதிக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் நிதியினை அரசு குறைத்திருக்கிறது. லண்டன் பொருளாதாரப் பள்ளியில்தான் அதிகபட்சமாக 12 சதவீத (50 கோடி ரூபாய்) அளவிற்கு நிதிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை. இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் குறைந்தபட்சம் 17 லட்சம் ரூபாய் கடனுடன் தான் பட்டப்படிப்பையே முடிப்பார்களென்றும், வெகுவிரைவில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தங்கள் கல்லூரிப்படிப்பையே பாதியில் நிறுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. 

இங்கிலாந்து மாணவர்களைவிட பத்து மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி படிக்கத்தயாராக இருக்கிற சர்வதேச மாணவர்களையே சேர்க்க அனுமதிப்பதற்கான வாய்ப்புகளையும் அலசாமல் இல்லை. சர்வதேச மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய குறைந்தபட்ச கல்விக்கட்டணத்தை உயர்த்தவும் அரசை நிர்பந்திக்கிறார்கள் சில பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டால், பல கல்விநிறுவனங்கள் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை சேர்ப்பதன்மூலம் நிலைமையினை சரிசெய்ய முயலலாம் என்று மூன்றில் இரண்டு துணைவேந்தர்கள் கருதுவதாக அவ்வாய்வறிக்கை சொல்கிறது. ஏனெனில் உள்நாட்டு மாணவர்களைவிடவும் சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூக்கலாம். எனவே இங்கிலாந்தைவிட்டு, வெளியேயும் கிளைக்கல்வி நிறுவனங்கள் துவங்கினால், அதன்மூலம் இங்கிலாந்திற்குள் படிப்பதற்கு பல சர்வதேச மாணவர்களை இழுத்துவரமுடியும்.

பல்கலைக்கழகங்களுக்கான நிதியினை குறைத்துக்கொண்டே போனால், உயர்கல்வியே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நிபுணர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உயர்கல்விக்கான நிதியினை 25 சதவீதம் குறைத்தால், 22,584 பல்கலைக்கழக ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.


நிதிகுறைப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள்:

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பல்கலைக்கழக-கல்லூரி சங்க உறுப்பினர்களும் (யு.சி.யு) மே 5 ஆம்தேதி 2010 இல் லண்டன் கிங்க்ஸ் கல்லூரி முன்பு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள்.  அடுத்தநாளும் தொடர்ந்த அப்போராட்டத்தில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பல லண்டன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றார்கள்.

ரிச்மன்ட் தேம்ஸ் கல்லூரி, க்ரோய்டான் கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம், பிராட்போர்ட் கல்லூரி, டான்காச்டார், லொப்போரோ கல்லூரி, பிர்மிங்கம் பெருநகர கல்லூரி, போர்ன்விள்ளே கல்லூரி, பிர்மிங்கம் நகர கல்லூரி மற்றும் தெற்கு பிர்மிங்கம் கல்லூரி ஆகிய கல்விநிறுவனங்களில் உள்ளிருப்புப்போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்தினர்.

பல்கலைக்கழகங்கள் 8000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்கவேண்டுமேன்றும், இனிவரும் கல்வியாண்டில் 3000 கோடி ரூபாய் அளவிற்கு அரசு மானியம் குறைக்கப்படுமென்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனைக்கண்டித்து 2010 ஜூன் 21 ஆம்தேதி நூறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாபெரும் போராட்டத்தை கல்விநிறுவன ஊழியர்களும் மாணவர்களும் நடத்தினார்கள். 

மாணவர்களும், ஆசிரியர்களும், இன்ன பிற ஊழியர்களும் ஒரு புறம் போராட்டத்தினை வலுவாக நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி லார்ட் பிரவுன் 'பல்கலைக்கழகங்களுக்கான மானியம்' குறித்த தன்னுடைய அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்தார். அரசு மானியத்தை வெகுவாக குறைத்து, அதனை மாணவர்களின் மீது சுமையாக வைக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது அவ்வறிக்கையில். ஒவ்வொரு மாணவர்க்கும் அரசு செலவளிக்கும் தொகையினை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களே மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கவேண்டுமென்றும், மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் மானியம் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனின் வட்டியையும் உயர்த்தவேண்டும். இந்நடவடிக்கைகளின் மூலமாக, கல்விக்கான அரசு நிதியில் 80 % வரை குறைக்கமுடியும். இதனை நடைமுறைப்படுத்தினால், 8000 கோடி ரூபாய் அளவிற்கு ஆய்வுப்படிப்புகளிலும், 24000 கோடி ரூபாய் அளவிற்கு மற்ற படிப்புகளுக்கும், கல்விநிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக நிதிதிரட்டவேண்டிவரும். பெருமளவில் ஆசிரியர் எண்ணிக்கை குறைப்பும், வகுப்புகளின் எண்ணிக்கை குறைப்பும், சில துறைகளை ஒட்டுமொத்தமாக இழுத்துமூடுவதும் ஏற்கனவே துவங்கிவிட்டது.

ஏற்கனவே கல்வியின் தனியார்மயத்தால், இங்கிலாந்தில் வருடத்திற்கு 2 லட்சம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நடவடிக்கைகளினால், இவ்வெண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிடும் என்று கல்வி ஆர்வலர்கள் கணிக்கிறார்கள்.


காங்கிரஸ் அரசின் கல்விச்சீர்திருத்தத் திட்டங்களின் பின்னணியும், அமெரிக்க-இங்கிலாந்துடனான பேரங்களும்

அரசு நிதியினை எதிர்பார்க்காமல் தாங்களாகவே நிதிதிரட்டி இயங்கவேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் வலியுறுத்தத்துவங்கிவிட்டன. ஆனால் அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் மாணவர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பின் காரணமாக, அந்நாடுகளின் அரசுகள், இதற்கு மாற்று வழிகளை ஆராயத்துவங்கின. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களை துவங்கி மிகப்பெரிய அளவில் இலாபம் பார்க்கும் நோக்கில், பல ஆண்டுகளாகவே பேச்சுவாத்தை நடத்திவந்தன அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள். அதனை நிறைவேற்றுவதற்கு , கல்வியில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்தியாவில் தற்போது இருக்கும் தடைகளை நீக்கவேண்டுமென்று கூடுதல் அழுத்தம் கொடுத்தன அந்நாடுகளின் அரசுகள்.

இதன்பின்னனியில்தான், இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு "உயர்கல்வி கல்விச் சீர்திருத்தங்கள்" என்று பல சட்டங்களை வரையறுத்தது. 
அம்பானி-பிர்லா அறிக்கையின் மூலமாகவும் மாதிரிச்சட்டங்களின் மூலமாகவும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உயர்கல்வியில் இதேபோன்ற மாற்றங்களை கொண்டுவர முயன்றும் இயலாமற்போனது. அதன்பின்னர், முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசும் முயன்றுபார்த்தும், இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் எவ்வித மாற்றத்தினையும் அவ்வரசினால் கொண்டுவர முடியாமற்போனது. இறுதியில், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு, முறையான சட்டங்கள் வழியாக உள்நாட்டு தனியார் மற்றும் வெளிநாட்டு வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படுவதற்கென வடிவமைப்புச்சட்டங்கள் உருவாக்க முடிவுசெய்தது.

அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்களின் கல்விக்கடைகளை இந்தியாவில் திறந்து இலாபம் சம்பாதித்துக்கொள்ள வழிவகைசெய்வதே இச்சட்டங்களின் நோக்கம். இந்தியப்பிரதமரும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகளிடம் இதுதொடர்பான பேச்சுவார்த்தையினை துவக்கினார்கள்.

பேரங்கள்

அமெரிக்க அரசியல் விவகாரத்துரைச் செயலர் வில்லியம் பர்ன்சுடன் இந்தியா மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்தேதி புதுடெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-அமெரிக்க கல்வி கவுசில் ஒன்றினைத் துவங்க முடிவுசெய்யப்பட்டது. இக்கவுன்சிலில் தொழிற்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக்கொண்டு இயங்குமென்றும், கல்வித்துறையில் இருநாடுகளின் உறவுகள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவுன்சில் முடிவுசெய்யுமென்றும் அறிவிக்கப்பட்டது.

2009 நவம்பர் மாதத்தில், "ஒபாமா-சிங் : இந்திய-அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான 21 ஆம் நூற்றாண்டின் கல்வி முன்முயற்சி" துவங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2010 ஜூன் மாதத்தில், கபில்சிபல் அமெரிக்கா சென்று ஹிலாரி கிளிண்டனை சந்தித்து கல்வித்துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக 14 புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குமென்றும், அதில் முதல் பல்கலைக்கழகத்தை ஒபமா வெகுவிரைவில் இந்தியாவில் திறந்துவைப்பார் என்றும் தெரிவித்தார் கபில்சிபல். இந்தியாவில் கடையைத்திறக்கத் தயாராக இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் குறித்தும் அவர்களின் பேச்சுவார்த்தை இருந்தது.

"வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கிற முடிவினை எடுத்து, இந்தியா ஒரு மிக முக்கியமான கல்விச்சீர்திருத்தத்தை மேற்க்கொள்ளத்தயாராகியிருக்கிறது." என்று ஹிலாரி கிளிண்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

2010 செப்டம்பரில் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க விவாகரத்துறை அமைச்சகம் ஒரு வட்டமேசை மாநாடு நடத்தியது. ஆசியாவில் இந்தியா போன்ற நாடுகளுடன் பள்ளிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், தொழிற்கல்லூரிகள், ஆய்வுக்கல்வி நிறுவனங்கள் என அனைத்துவிதமான கல்விநிறுவனங்களிலும் ஒன்றிணைந்து கூட்டுமுயற்சியினை துவங்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 

2010 ஜூலை மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், "தேசிய வளர்ச்சிக்கு உதவுவதுமட்டுமல்ல கல்வி, இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய வளரும் வியாபாரமே கல்விதான். இருதரப்பு நன்மைக்காக நம்மிரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" என்கிற தத்துவத்தை உதிர்த்துவிட்டுச்சென்றார். "இந்தியா-இங்கிலாந்து கல்வி மற்றும் ஆய்வு முன்முயற்சி" என்னும் கூட்டுநடவடிக்கைகளின் மூலம் இருநாடுகளும் ஒன்றிணைந்து புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் புதுமையான பல்கலைக்கழகங்களை உருவாக்கும் தன்னுடைய எண்ணத்தினையும் வெளியிட்டது இங்கிலாந்து அரசு.

கேமரூனுடன் வந்த இங்கிலாந்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் டேவிட் வில்லெட்ஸ், "ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ், எஸ்ஸக்ஸ், பிர்மிங்கம், நியூகேசில், எக்சடர் ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதிலும், வடிவமைப்பிலும் உதவத்தயாராக இருக்கின்றன" என்றார். 

மையக்கட்டுரையாளர் -   விஜயேந்தர் ஷர்மா
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இ.பா.சிந்தன்

(தொடரும்...)
(அடுத்து : அமெரிக்க-இங்கிலாந்து நாடுகள் இந்தியாவில் கல்வி வியாபாரத்தினை துவங்குவதற்கு என்னென்ன சட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது...)
                                                                                                    நன்றி : www.maattru.com
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com