Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 28 January 2012

யானாம் - தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிசூடு !

0 comments
  யானாம் - புதுச்சேரி பிரஞ்ச் காலணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிறு பகுதி. புதுச்சேரியை பொறுத்தவரை பல பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறிய  மாநிலம். இங்கு  பல்வேறு வரிச் சலுகைகளும், மானியங்களும், இலவசமாக இடமும், இலவச மின்சாரமும், குடிநீரும், மிக குறைந்த சம்பளத்திற்கு மனிதவளமும், கண்டுகொள்ளப்படாத தொழிலாளர் சட்டங்களும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவான இலஞ்ச  செலவுகளும் - ஆகிய அனைத்தும்  ஒட்டு  மொத்தமாக ஒரே இடத்தில் வசதியாக கிடைக்கும் மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே  பெரிய - சிறிய தொழிற்சாலைகளை தொடங்கி இலாபத்தைக் குவிக்கின்றனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர்ஸ், வேர்ல்பூல், நெய்செர், எல் அண்ட் டி, ஜெனரல் ஆப்டிகல்ஸ், குட் நைட், ஏ. டி. எம் மெஷின் - போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
                 அப்படித்தான், ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைத்து, தனகளது பணி நிரந்தரத்திற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இருபது நாட்களாக போராடி வருகின்றனர். இந்த உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர்.                         போராடிய தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன்யும்  மற்றும் சில தொழிலாளர்களையும் , அந்த தொழிற்சாலை முதலாளிகளின் அடிவருடிகளாக இருக்கும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு ''நடந்தது'' என்னவென்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீஸ்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட தொழிலாளர் தோழர்கள் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். தொழிலாளர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள்.  

புதுச்சேரி காவல்துறை சீனியர் எஸ்.எஸ்.பி.சந்திரன் கூறுவது வேடிக்கையானது!
புதுச்சேரி சீனியர் எஸ்.பி  சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது
தொழிலாளர்கள் மேல் தான் தவறு இருப்பதாகவும் காவல் துறையினர் தங்கள் கடமையில் இருந்து தவறாமல் உரிய நடவடிக்கை எடுத்ததாகவும் கலவரத்தை  கட்டுப்படுத்தவே துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று கூறுவது வேடிக்கையானது.தொழிலாளர்களின் பிரச்சனையை பேசி தீர்க்காமல் இப்படி கலவரத்தை தூண்டும் வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை  கைது செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக யானம் காவல்துறை இறங்கியதால் தான் போராட்டம் தீவிரமானது.காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்க தலைவர் இறந்தது எப்படி? ஏற்கனவே யானம் காவல்நிலையத்தில் ஒரு கைதி போலீஸ் காவலில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
 
புதுச்சேரி முதல்வர் மௌனம் காப்பது ஏன்?
முதலமைச்சரின் வீட்டின் அருகே அவருடைய கட்சிகாரர்  கொலையில் சரண்டர் ஆன குற்றவாளிகள் உண்மையான குற்றவாளிகள் தானா என்ற சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அப்போது  கேள்வி எழுப்பினர்.அதே சமயத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி மோதிலால் நேரு அரசு  பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஒருவன்  ஊசுடு ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வழக்கில் இது வரை குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.புதுச்சேரி ஜி கெஸ்ட்ஹௌசில் பதினாறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி எங்கு இருக்கிறார் என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத காவல்துறையாக செயல்பட்டுவருகிறது.
                                 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி யானம் காவல்துறையினர் மீது உரிய விசாரணைக்கு நீதி விசாரணைக்கு  உத்தரவு பிரபிக்காதது ஏன்?காவல் துறையின் அடக்குமுறையினால் இறந்த,பாதிப்புக்கு உள்ளான காவல் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?இதன் பிறகாவது பாதிக்கப்பட்ட,இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடவேண்டும்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com