Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 7 January 2012

பல்கலைக்கழக மானியக்குழு நிதியை முழுமையாக செலவிடாத பாரதியார் பல்கலைக்கழகம் : இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

0 comments




பல்கலைக்கழக மானி யக்குழு 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கிய நிதியை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முழுமை யாக செலவிடவில்லை என தெரியவந்துள்ளது. மாண வர்கள் நலனில் அக்கறை இல்லாத இச்செயலுக்கு மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக மானி யக்குழு 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கிய நிதியை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முழுமை யாக செலவிடவில்லை. மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் கல்வி வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி களுக்கு ஒதுக்கப்பட்ட 1.20 கோடி ரூபாயில் ரூ.20 இலட்சம் மட்டுமே செல விடப்பட்டுள்ளது. இதை யும் மாணவர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது.

பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டிற்காக 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழு ரூ.43,000 கோடி நிதி ஒதுக்கியது. நிதிப் பற்றாக் குறையால் இந்தியப் பல் கலைக் கழகங்கள் தள்ளாடி வருகின்ற நிலையில், மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத் துள்ளது.

இந்நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு ஒதுக்கப்பட்ட நிதி யான ரூ.15.31 கோடியில் இது வரை ரூ.7 கோடிநிதி விடு விக்கப்பட்டு, அதில் ரூ.4.75 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் திட்டகாலம் முடிவடைய வுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.

ஏராளமான நிதிச் செல வினங்களை பல்கலைக்கழ கம் எதிர்நோக்கியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியை முழு மையாக செலவிடாதது பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத் தையும் மாணவர்கள் மீதான அக்கறையின்மையும் காட்டு கிறது.

உயர்கல்வி வளர்ச்சியின் மையமான பல்கலைக்கழ கங்கள் இவ்வாறு நடந்து கொள்வது தேசவளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத் தும். எனவே தமிழக அரசு இவ்விசயத்தில் உரிய தலை யீட்டை செய்ய வேண்டும்.

தமிழகத்தின் வேறு எந்த பல்கலைக்கழக மையத் தையும் விட, பாரதியார் பல்கலைக்கழக மையத்தில் வழங்கப்பட்டுவரும் முது கலை மற்றும் இதர படிப் பிற்கு மிக அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன. எம்பிஏ மற் றும் எம்சிஏ படிப்புகளுக்கு ரூ.25000க்கும் மேல் பருவ கட்டணம் வசூலிக்கப்படு கின்றது.

பொருளாதாரம், சமூக வியல் போன்ற அடிப்படை படிப்புகள்கூட வணிகமய மாக்கப்பட்டு கடுமையான கட்டண உயர்வு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத் தர மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழ கத்தை நாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டண உயர்வுகளுக்கு காரணம் கேட்டால், நிதிப் பற்றாக்குறை என பதில் தருகிறது பல்கலைக்கழக நிர் வாகம். ஆனால், மானியக் குழு நிதியை செலவிடாமல் அப்படியே வைத்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வா கத்தின் இத்தகைய செயல் களை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண் டிப்பதுடன், செலவிடப் படாமல் உள்ள நிதியைக் கொண்டு, பல்கலைக்கழக மையத்தில் வழங்கப்பட்டு வரும் படிப்புகளுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் பல்கலைக் கழக தேர்வு கட்டணத்தை யும் குறைக்கவேண்டு மென கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com