Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 28 January 2012

யானாம் - தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிசூடு !

0 comments
  யானாம் - புதுச்சேரி பிரஞ்ச் காலணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிறு பகுதி. புதுச்சேரியை பொறுத்தவரை பல பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறிய  மாநிலம். இங்கு  பல்வேறு வரிச் சலுகைகளும், மானியங்களும், இலவசமாக இடமும், இலவச மின்சாரமும், குடிநீரும், மிக குறைந்த சம்பளத்திற்கு மனிதவளமும், கண்டுகொள்ளப்படாத தொழிலாளர் சட்டங்களும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவான இலஞ்ச  செலவுகளும் - ஆகிய அனைத்தும்  ஒட்டு  மொத்தமாக ஒரே இடத்தில் வசதியாக கிடைக்கும் மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே  பெரிய - சிறிய தொழிற்சாலைகளை தொடங்கி இலாபத்தைக் குவிக்கின்றனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர்ஸ், வேர்ல்பூல், நெய்செர், எல் அண்ட் டி, ஜெனரல் ஆப்டிகல்ஸ், குட் நைட், ஏ. டி. எம் மெஷின் - போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
                 அப்படித்தான், ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைத்து, தனகளது பணி நிரந்தரத்திற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இருபது நாட்களாக போராடி வருகின்றனர். இந்த உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர்.                         போராடிய தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன்யும்  மற்றும் சில தொழிலாளர்களையும் , அந்த தொழிற்சாலை முதலாளிகளின் அடிவருடிகளாக இருக்கும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு ''நடந்தது'' என்னவென்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீஸ்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட தொழிலாளர் தோழர்கள் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். தொழிலாளர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள்.  

புதுச்சேரி காவல்துறை சீனியர் எஸ்.எஸ்.பி.சந்திரன் கூறுவது வேடிக்கையானது!
புதுச்சேரி சீனியர் எஸ்.பி  சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது
தொழிலாளர்கள் மேல் தான் தவறு இருப்பதாகவும் காவல் துறையினர் தங்கள் கடமையில் இருந்து தவறாமல் உரிய நடவடிக்கை எடுத்ததாகவும் கலவரத்தை  கட்டுப்படுத்தவே துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று கூறுவது வேடிக்கையானது.தொழிலாளர்களின் பிரச்சனையை பேசி தீர்க்காமல் இப்படி கலவரத்தை தூண்டும் வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை  கைது செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக யானம் காவல்துறை இறங்கியதால் தான் போராட்டம் தீவிரமானது.காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்க தலைவர் இறந்தது எப்படி? ஏற்கனவே யானம் காவல்நிலையத்தில் ஒரு கைதி போலீஸ் காவலில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
 
புதுச்சேரி முதல்வர் மௌனம் காப்பது ஏன்?
முதலமைச்சரின் வீட்டின் அருகே அவருடைய கட்சிகாரர்  கொலையில் சரண்டர் ஆன குற்றவாளிகள் உண்மையான குற்றவாளிகள் தானா என்ற சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அப்போது  கேள்வி எழுப்பினர்.அதே சமயத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி மோதிலால் நேரு அரசு  பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஒருவன்  ஊசுடு ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வழக்கில் இது வரை குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.புதுச்சேரி ஜி கெஸ்ட்ஹௌசில் பதினாறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி எங்கு இருக்கிறார் என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத காவல்துறையாக செயல்பட்டுவருகிறது.
                                 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி யானம் காவல்துறையினர் மீது உரிய விசாரணைக்கு நீதி விசாரணைக்கு  உத்தரவு பிரபிக்காதது ஏன்?காவல் துறையின் அடக்குமுறையினால் இறந்த,பாதிப்புக்கு உள்ளான காவல் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?இதன் பிறகாவது பாதிக்கப்பட்ட,இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடவேண்டும்.

Read more...
Friday, 27 January 2012

கபில்சிபலின் குரலில் ஒளிந்துள்ள காங்கிரசின் கோரமுகம் :

0 comments

இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் ‘மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாக இந்தியாவின் மிகமோசமான குட்டிச்சுவர் ஆட்சியான UPA-IIவின் மாண்புமிகு மந்திரி கபில்சிபல் வருத்தப்பட்டு கண்ணீர்,மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டுள்ளார்.  டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களானட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்கார்ர்களுகே கூட எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம்! கபில்சிபலுக்கும் இந்த அதிர்ச்சி ஏற்பட்டதில் நமக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை – ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு! தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்குப் பின்னால் காந்தி என்ற பின்னொட்டை சேர்த்துக்கொண்டு இந்தக் குடும்பம் செய்கின்ற அட்டூழியம் கொஞ்சநஞ்சம் அல்லவே! இக்குடும்ப ஆட்சியின் நாசங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தும்போதுதான் கருத்துரிமையை, பேச்சுரிமையை அடியோடு புதைக்கின்ற 1975 எமெர்ஜென்சி போன்ற காட்டுமிராண்டி சட்டங்களை காங்கிரஸ் கட்சி தயக்கம், வெட்கம் ஏதும் இன்றி மக்கள் மேல் திணிக்கும்! இப்போது கபில்சிபல் போன்ற நபர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கடுப்பெடுத்துப் புலம்புவது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.

2)  விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரிய முதல் ஊழலை தொடங்கி வைத்த பெருமை கபில்சிபலின் காங்கிரஸ் கட்சிக்குத்தான் உண்டு! தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே இந்த புண்ணியகாரியத்தை செய்தார்கள்! 1948இல் காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கினார்கள். தொடர்ந்து முத்கல் வழக்கு (1951), முந்த்ரா வழக்கு (1957), மாளவியா-சிராஜுதீன் ஊழல் (1963), பிரதாப் சிங் கைரோன் (1963), இந்திராகாந்தியின் குரலில் தொலைபேசியில் பேசி லட்சக்கணக்கான ரூபாய்களை அரசு வங்கியில் இருந்து சுருட்டிய நகர்வாலா வழக்கு (1975) (அதாவது இந்திரா காந்தி சொன்னால் வங்கியில் இருந்து  மக்கள் பணத்தை சுருட்டலாம் என்று நிரூபித்த சம்பவம்!), அப்துல் ரஹ்மான் அந்துலே செய்த சிமெண்ட் ஊழல்...என அத்தனையும் நூறு வருட பாரம்பரியம் உள்ள கபில்சிபலின் காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்கள்!  உச்சக்கட்டமாக ஒரே இரவில் அவசரநிலையை அறிவித்து லட்சக்கணக்கான மக்களையும் எதிர்க்கட்சித்தலைவர்களையும் சிறைகளில் தள்ளிக் கொடுமை செய்தது காங்கிரஸ்தான்! ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்ததும்  காங்கிரஸ்தான்! பல்லாயிரக்கணக்கானோர் வீடு திரும்பவில்லை! கோட்டுசூட்டோடு இங்லீசு பேசி திரியும் கபில்சிபல் போன்ற காங்கிரஸ்காரர்கள் இந்திய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய பதில்கள் வண்டி வண்டியாக மிச்சம் உள்ளன! இதுதான் காங்கிரசின் ரத்தம்தோய்ந்த வரலாறு!


3)  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையை பி.வி.நரசிம்மராவ் பெறுகின்றார்! அவரது காங்கிரஸ் ஆட்சிக்கு பெருமை சேர்த்த ஊழல்களை பட்டியல்தான் போட வேண்டும்: ஃப்ரான்ஸ் தேச ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் வாங்கியது (ரூ.2500 கோடி அளவுக்கு), ஹர்ஷத்மேத்தா முக்கியப்புள்ளியாக இருந்த பங்குச்சந்தை ஊழல் (1992), கோல்ட் ஸ்டார் ஸ்டீல்ஸ் அண்ட் அல்லாய்ஸ் (1992), ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், ஹவாலா ஊழல் (ரூ.65 கோடி), யூரியா ஊழல் (1996)...என காங்கிரஸின் மெடல் பட்டியல் நீண்டு நாறுகின்றது!

4)  இவை அன்றி இந்தியாவின் பெயரை உலகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பரப்பிய ஃபேர்ஃபாக்ஸ், HPJ பைப்லைன், HDW நீர்மூழ்கிக்கப்பல், அனைத்திற்கும் மேலாக ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி குடும்பங்கள் முழுமையாக மூழ்கி முத்தெடுத்த போஃபார்ஸ் பீரங்கி ஊழல், போபால் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய மக்களை ஒரே ராத்திரியில் கொன்று குவித்த அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை காசு வாங்கிகொண்டு தப்பிக்க வைத்த சாதனை...என கபில்சிபல்,சிதம்பரம் போன்ற முதலாளிகள் சட்டையில் குத்தி பெருமைப்பட்டுக்கொள்ள காங்கிரஸ் மெடல்கள் ஏராளம்! பல கோடி ரூபாய் ஊழல் செய்து இமெல்டா மார்க்வெஸ் போல தங்கத்தால் தனது வீட்டை அலங்கரித்துக்கொண்ட டெலிஃபோன் மந்திரி சுக்ராம் காங்கிரசை சேர்ந்தவர்தான்! பிற்பாடு இவர் தன் கட்சியில் இருப்பதே பொருத்தம் என பாரதீய ஜனதா கட்சி தனக்குள் சேர்த்துக் கொண்டது! (பாஜகவின் ஊழல் பட்டியல் தனியாக உள்ளது, அதாவது ரேஸில் ரெண்டாவது இடம், தனியே எழுதுவோம்).

5)  இந்த ஊழல் ஓட்டப்பந்தயப் போட்டியில் யார் ஓடினாலும் எப்போதும் முன்னால் வந்து பதக்கத்தை வெல்வது காங்கிரஸ்தான்! காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்! மற்றவர்கள் எல்லாம் வாயில் நுரை தள்ள தரையில் விழ வேண்டியதுதான்! பாருங்கள், இப்போது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஆல்டைம் சாம்பியன் ரூ.176000 கோடி அளவுக்கு 2ஜி ஊழல்! காங்கிரசைத்தவிர யாரால் முடியும்? தொடர்ந்து 3ஜி, காம்ன்வெல்த் விளையாட்டு, மும்பையில் சட்டவிரோதமாக கடற்கரையில் கட்டப்பட்ட பலமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆதர்ஸ் ஊழல்...என காங்கிரசை காங்கிரசால்தான் ஜெயிக்க முடியும்!

6) இப்படி கபில்சிபலின் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு, ஒரு சில வருடங்களுக்கு முன்பு அச்சு ஊடகங்களின் பங்கே பிரதானம். ஆனால் கால மாற்றம், தகவல் தொழினுட்ப வளர்ச்சி, இணைய தளம் எல்லாமும் சேர்ந்து கடந்த காலத்தை விடவும் இந்த ஊழல்களை நொடியில் உலகம் பூராவும் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தன, பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி காங்கிரசை சந்தி சிரிக்க வைத்தன என்பது, முதலில் சொன்ன அரபு எழுச்சியின் காரணமாக ஆட்சி மாற்றங்களே நிகழ்ந்தன என்பதும் காங்கிரசுக்கு எரிச்சலையும் எச்சரிக்கையையும் ஒருங்கே வர வைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின்  எரிச்சல்தான் கபில்சிபலின் வாய் வழியே வெளியே வந்துள்ளது என்பதை நாம் மறக்கவேண்டாம்.  முடிந்தால் மீண்டும் ஒரு எமர்ஜென்சியை கொண்டுவரவும் காங்கிரஸ் தயங்காது என்பதை  காங்கிரசின் ரத்தக்கறை படிந்த நீண்ட வரலாறு, குறிப்பாக 1975 வரலாறு நமக்கு சொல்லியுள்ளது. ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Read more...
Wednesday, 25 January 2012

நண்பன் - கல்வியில் புதிய மாற்றத்தை உருவாக்குவோம்!

0 comments

பெற்றோர்களுக்கும்,
இளைஞர்களுக்கும் 
ஒரு நல்ல பாடம்...!
                                   
        தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கேளிக்கை வரிவிலக்கு  பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் இது தான்.          
                   இந்த திரைப்படம் பழைய இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டதால், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விஜய்யின் வழக்கமான முத்திரைகளும், அடையாளங்களும் இந்த படத்தில் இல்லை. வழக்கமாக விஜய் படமென்றால், விஜய்யை அறிமுகப்படுத்தும் போதே ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும்  இருக்கும். ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளும், கார்கள் பறப்பதும் உருளுவதும், எதிர்களின் எலும்புகள் உடைக்கப்படுவதும், கத்தியால் வெட்டப்படுவதும், பன்ச் டயலாக்கும், படம் முழுக்க விஜய் முகமும்  - என நம் மண்டைய பொலந்துகட்டும். தாங்கவே முடியாது. ஆனால் அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இல்லை. விஜய் மட்டுமல்லாமல், அவருடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் சமமான வாய்ப்பு. படம் முழுக்க நகைச்சுவை. பரவாயில்லை... காசு கொடுத்து கடைசிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
                இந்த படம் மற்றப் படங்களைப்போல் குறைகளும் நிறைகளும் கொண்ட படமாக இருந்தாலும், நிறைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தான். அதில் படிக்கும் மாணவர்கள்,  கல்லூரி நிர்வாகம், இன்றைய கல்வி முறை, அந்த கல்லூரியில் படிக்கும் நாயகர்களின் குடும்பம், அவர்களின் எதிர்பார்ப்பு - போன்ற இன்றைய பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பையும்,  அறிவையும், திறமையையும் வளர்க்காமல், கோழைத்தனத்தை மட்டுமே வளர்த்து, கடைச் சரக்காகிப் போன கல்விமுறையில் உண்டான போட்டி மனப்பான்மையையும்,   அதனால் படிக்கும் மாணவர்களிடத்தில் உருவாகியிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் படம் பிடித்து காட்டுகிறப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
                 பிள்ளைகள் விருப்பப்பட்டதை படிக்கவும், அதில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும்  பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள்  விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. ''ஏ. ஆர். ரகுமான் கிரிக்கெட் பிளேயர் ஆனாலோ... சச்சின் மியூசிக் டைரக்டர் ஆனாலோ... அவர்கள் இந்த அளவுக்கு சாதனையாளர்களாக வந்திருக்க மாட்டார்கள்'' என்ற வசனம் அருமை. ஆர்வம் இருக்கும் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் தான் சாதனையாளர்களாக வரமுடியும் என்று அழுத்தமாக இந்த திரைப்படம் கூறுகிறது. 
         அதேப்போல் இன்றைய தனியார் பொறியியல் கல்லூரிகள் எப்படியெல்லாம் மாணவர்களிடையே  போட்டிகளையும், வெறித்தனத்தையும்  உண்டாக்கி அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறார்கள் என்பதையும்  காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட கல்லூரிகள் உண்டாக்கும் மன அழுத்தத்தினால் வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள், கிராமப்புறத்து இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிற பயங்கரத்தையும் இந்த படம் எடுத்துக் காட்டுகிறது. 
              கதாநாயகர்களில் ஒருவனான ஜீவா தான் நன்றாக படிப்பதற்கும், தேர்வில் தேர்ச்சிப்பெருவதற்கும் ஏகப்பட்ட சாமிப்படங்களை வைத்து பூஜை செய்வதும், தன்னுடைய கைகளில் சாமிக்கயிறுகளை கட்டிக்கொள்வதுமாக இருப்பதையும் காட்டி, பிறகு உனக்குள் இருக்கும் கோழைத்தனத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்துகொள்... உனக்குள் இருக்கும் திறமைகள் தானாக வெளியேவரும் என்று சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அந்த கதாநாயகனே மனம் மாறி தன் கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளை கழற்றி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ''மலத்தொட்டியில்'' போடுவது போல் காட்டியிருப்பதும் மூடநம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த விஷயத்தில்  இயக்குனரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.
              மேலே ''நண்பன்'' படத்தில் உள்ள நிறைகள் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். படத்திலுள்ள குறை என்று கேட்டால்  சிலது இருக்கிறது.
          படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, படிப்பே வராத தன் எஜமான் வீட்டு பையனுக்காக அவன் பெயரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்கி அவனிடம் கொடுத்து, அந்த பையனை பட்டதாரியாக ஆக்கியிருப்பது என்பது ''ஆள்மாறாட்டத்தை'' அல்லவா குறிக்கிறது...?  அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை  எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா...?  எவ்வளவோ நல்ல கருத்துக்களை உதிர்க்கும் கதாநாயகன் விஜய், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது என்பது நெருடலாக இருக்கிறது.
             தமிழ்நாட்டுப் பெண்கள்  கருப்பாக - குண்டாக - குள்ளமாக இருப்பது போன்ற கேலியான சித்தரிப்பை இயக்குனர் சங்கர் வரும் காலங்களில் தூக்கி எறியவேண்டும். இது போன்ற செயல்களும்  ஒரு சமூக குற்றம் தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. 
           கடைசியா ஒன்னேஒன்னு சொல்லிபுடுறேங்க.... அந்த கதாநாயகியா வர்றாங்களே இலியானா... ஒல்லியானான்னு வெச்சிருக்கலாம்... அம்புட்டு கோடி பணத்தைப் போட்டு இந்த படத்தை எடுத்ததா சொல்லுறாங்களே....இந்த டைரக்கேட்டருனால.... அந்தம்மாவுக்கு சரியான சாப்பாடு போட முடியலையாக்கும்... அது மட்டுமில்லைங்க... பாட்டு சீன்ல கூட  இலியானாவுக்கும், அவங்க கூட ஆடுற பொண்ணுங்களுக்கும் கூடவா முழு டிரஸ் வாங்கிக்கொடுக்க காசு இல்ல... ஆம்புளைங்கல்லாம்  மூணு நாலு டிரஸ் போட்டு ஒடம்பு பூரா மறைச்சிகீறாங்க... பாவமுங்க இந்த பொம்பளை புள்ளைங்க ரெண்டே பீசை போட்டு ஆடுதுங்க... எவ்வளவோ செலவு பண்றீங்க...அவங்க ஒடம்ப மறைக்கிறதுக்கு நல்ல டிரஸ் - ஆ வாங்கிக்கொடுங்க அய்யா...  அவங்க உடம்பையும் காசாக்கிற வேலையை விட்டுடுங்க அய்யா...
Read more...
Friday, 20 January 2012

அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி மாணவர்கள் மறியல்

0 comments

FRIDAY, DECEMBER 24, 2010நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித்,வாலிபர் சங்க இடைகமிட்டி செயலாளர் பாஸ்கர்    உட்பட மூன்று பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் போராட்டத்தை கலைப்பதற்காக புதுச்சேரி  காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
Read more...

கல்வி போராட்டங்கள் புகைப்படம்

0 commentsStudents Federation of IndiaEducation is a major tool of social transformation and this is especially relevant
in a country like India, where regressive forces still prevail. Proper education
will be a barrier against such forces and will help to build a new society based on
rationality and justice. Any student organization must evaluate its raison d'être
against this background. The Students Federation of India, abbreviated SFI,
is an organization of students which is ever aware of its social role. It identifies
with all the progressive forces in the society and is totally committed to the
ideals of independence, democracy and socialism. It includes students from all aca-
demic institutions of the country - from schools and colleges, from professional
institutions and research academies.
On the global front, SFI is against the colonization of any country by any other country and pledges allegiance to all international peace movements. 
  • In 2008-2009 academic year  a Cycle rally was conducted by SFI puducherry pradesh committee to bring up govt medical college in puducherry 
  • to improve the quality and education standard     of the student's who were studying in govt school's and colleges in puducherry
  • to implemement Common Education Syllabus in puducherry as well it as on Tamilnadu.
  • to get 50% of govt seats in private medical and in engineering colleges in puducherry

Read more...

முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

0 comments

WEDNESDAY, JANUARY 19, 2011புதுச்சேரி ஜன 17
இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா லா°பேட்டை அசோக் நகரில் நடைப்பெற்றது.
சிறுவருக்கான ஓட்டப்பந்தயம், ஓவியம் வரைதல், உரி அடிப்பு, பெண்களுக்கான கோலப்போட்டி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாணவர் சங்க தமிழ் மாநில இணை செயலாளர் ஸ்டாலின், வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், கமிட்டி செயலாளர் கதிரவன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் லெனின் துரை, நகர உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
இவ்விழாவையொட்டி புதுவை சிகரம் கலைக்குழுவினரின் தப்பாட்டம், சிறுவர்களின் இசை நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர். 
Read more...

மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

0 comments

SUNDAY, JANUARY 30, 2011


புதுச்சேரி ஜன 30
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லா°பேட்டையில் நடைப்பெற்றது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு, தீண்டாமைக்கு எதிராக வாலிபர்கள், சிறுவர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் அசோக் நகர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிஒய்எப்ஐ கிளைத் தலைவர் வைத்தியநாதன் தலைமைத் தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, துணை செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை நிர்வாகிகள் பாலாஜி, ராமகோபால், ரோஹன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 
Read more...

நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல - மாணவர்,வாலிபர் சங்கங்கள் நூதன பிரச்சாரம்

0 comments

SUNDAY, MARCH 6, 2011

வாக்குகளை விலைபேசுவதை கண்டித்துபுதுச்சேரி மார்ச் 5
சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளை விலைபேசுவதை கண்டித்து வாக்காளர்களை விழிப்புணர்வு  ஏற்படுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் துண்டு சுவரொட்டிகள் புதுவையில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலையொட்டி லாஸ்பேட்டை,உருளையன்பேட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு புடவைகள்,சமையல் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிவந்து இருப்பதை கண்டித்தும் இத்தகைய இலவசங்களை வழங்குபவர்களை மக்கள் அடையாளம் கண்டு புரக்கணிக்க வேண்டும் என வலியுருத்தி டிஒய்எப்ஜ,எஸ்எப்ஜ சார்பில் நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு சுவரொட்டிகள் மக்களிடையே விழிபுனர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.
வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துரைமுருகன், மாணவர்சங்க செயலாளர் ஆனந்து,ரஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சனிக்கிழமை சுவரொட்டிகளை வெளியிட்டனர்.மேலும் இந்த சுவரொட்டிகளை லா°பேட்டை,பாகூர்,திருபுவனை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து வழங்க உள்ளோம் என்றும் கூறினர்.
Read more...

அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்:

0 comments

WEDNESDAY, MAY 11, 2011

SFI  - DYFI Comrade pleased public for donation for to start medical college admission at Puducherry due order of MCA

புதுச்சேரிமே11அரசுமருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதை கண்டித்து மாணவர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கல்வி பிச்சை எடுக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. 
கதிர்காமம் இந்திராகந்தி அரசு மருத்துவகல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாததால் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்கைக்கான அங்கீகாரத்தை ரத்தசெய்தததை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும். இந்தாண்டே மாணவர் சேர்கை நடத்த வேண்டும்.தொடர்ந்து தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து இந்நூதன போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்கத்தின் தலைவர் சந்துரு ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.டிஒய்எப்ஐ செயலாளர் தமிழ்ச்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,நகர தலைவர் சரவணன்,மற்றும் நிர்வாகிகள் அரிதாஸ்,பாஸ்கர்,ராஞ்சித்,பார்த்தசாரதி ஆகியோர் பேசினார்கள்.திரளான மாணவர்கள்,வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பொது மக்களிடம் இருந்து பிச்சை எடுத்த பணத்தை சுகாதாரத்துறை இயக்குநருக்கு டிடி எடுத்து அனுப்படும் என்று சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.
Read more...

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும்

0 comments

MONDAY, JUNE 6, 2011


புதுச்சேரி ஜூன் 5
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுக்க புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வெண்டும் என்று வாலிபர்,மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கத்தில் வலியுருத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கல்வி,வேலையை பாதுகாக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திறந்த வேளி கருத்தரங்கம் நடைபெற்றது.அண்ணசாலை,வைசியால் வீதி சந்திப்பில் நடந்த கருத்தரங்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் பிரதேசத்தலைவர் சந்துரு தலைமை தாங்கினார்.மாணவர் சங்க துணைத்தலைவர் ரஞ்சித் வரவேற்புரையாற்றினார்.அணைவருக்கும் பொதுவான கல்வி என்ற தலைப்பில் டிஒய்எப்ஜ மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமோஷ்பாபு ம், இந்தியாவில்ம இன்றைய உயர்கல்வி என்றத்தலைப்பில் எஸ்எப்ஜ தமிழ் மாநில துணைத்தலைவர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.அதேப்போல் புதுச்சேரியில் கனவாகும் வெலை என்ற தலைப்பில் வாலிபர் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வன், பெருகிவரும் வன்முறைக்கலாச்சாரம் என்றத்தலைப்பில் பொருளாளர் பிரபுராஜ் மற்றும் புதுச்சேரியில் கல்வி நிலைகுறித்து ஆனந்து ஆகியோர் பேசினார்கள்.இறுதியாக வாலிபர் சங்க நகரகமிட்டி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
தீர்மாணங்கள்
இக்கருத்தரங்கத்தில் புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல்,மருத்துவ கல்லுhரிகளில் 50சதவீத அரசு இடஒதுக்கீட்டை பெறவேண்டும்.அரசு பள்ளி,கல்லுhரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி அடிப்படை வசதிகளை நிறைவெற்ற வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா காலநிவாரணத்தை வழங்க வெண்டும் எனபன 9அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.கருத்தரங்கத்தில் திரளான மாணவர்,வாலிபர்கள் பங்கேற்றனர்.
Read more...

கும்பகோணம் தீ விபத்து கல்வி வியாபாரத்துக்கு எதிரான நாள்:

0 comments

கும்பகோனத்து தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி வியாபார எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு இலாஸ்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர்ஆனந்து,து.தலைவர் ரஞ்சித்,ஜெயராஜ் உள்ளிட்ட மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
Read more...

மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

0 comments


புதுச்சேரி நவ-14
மாஹே வளர்ச்சி திட்டங்களில் மிக பேரும் ஊழல் செய்திட்ட முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டிஒய்எப்ஜ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே பகுதிகுழு வின் செயலாளர் கே.பி.நௌஷாத்,பிரதேச செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
மாஹே மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிக்கு முதலில் ரூ.25கோடி ஒதுக்கப்பட்டது பின்னர் கட்டுமான பணிக்காக கூடுதலாக ரூ.75கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதேப்போல் மாஹே உள்விளையாட்டு அரங்கம் ரூ.19கோடிக்கு கட்டி முடிக்கப்பட்டு இதுநாள்வரை பூட்டப்பட்டுள்ளது.அதேப்போல் கேரள விருந்தினர் மாளிகைக்கு ஆற்று மேல் மேம்பாளம் கட்டியதிலும்,மாஹே ஆற்றையொட்டி உள்ள சுற்றுலாதுறைக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை தனியார் மதுபான கடைக்கு வாடகை விட்டதில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது. கடந்த மூன்று முறை மாஹே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு காங்கிர° அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொருப்பு வகித்த வல்சராஜ் ,மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பல்வேறு ஊழல் செய்து அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.எனவே முன்னால் அமைச்சர் வல்சராஜ் மீது புதுச்சேரி முதல்வர் சி.பி.ஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் மாஹேவில் உள்ள பாப்°கே நிறுவனம் கேரளாவில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் மூலம் விவசாய பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வதை போல் புதுச்சேரியிலும் அத்தகைய நிலையை அரசு கடைபிடிக்க வேண்டும்.மாஹே கல்லுhரிகளில் கேரளா மாணவர்கள் சிறமமின்றி படிக்க முடிந்தது.அதேப்போல் மாஹே மாணவர்களும் கேரளாவில் படித்தார்கள்.தற்போது மாஹேவில் கேரளா மாணவர்கள் படிக்க தடைவிதித்துள்ளதால் உயர் படிப்புக்கு கேரளா சென்று மாஹே மாணவர்கள் படிக்க முடியவில்லை எனவே பழைய முறையை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.மாஹே ஆயுர்வேதா மருத்துவகல்லுhரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி போது மான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.
பேட்டியின் போது மாஹே பகுதிகுழு நிர்வாகிகள் ஸ்ரீகாந்த்,வினெய்குமார்,பிரதேச நிர்வாகிகள் பிரபுராஜ்,சரவணன்,SFI பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் உடன் இருந்தனர்.
Read more...
Friday, 13 January 2012

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் புதிய பொருளாதார கொள்கை : உடும்பன் திரைப்படம்

0 comments

அமெரிக்கக்கொ டியை நேரடியாகவும், மறைமுகமாகவும் எவ்வளவோ தமிழ்த்திரைப்படங்களில் காட்டியுள்ளனர். ஆனால் உடும்பன் என்ற படத்தில் தலையில் அமெரிக்கக் கொடியை கட்டிக்கொண்டு கதாநாயகன் வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததை நீக்க வேண்டும் என்று தணிக்கைக்குழுவினர் கூறியுள்ளனர்.

அதற்குக் காரணம், புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவின் பண்பாட்டைக் கெடுப்பதாகக் கதை சொல்வதுதான். இக்கருத்தை வலுவாகச் சொல்வதற்காக பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி அப்படத்தின் இயக்குநர் பாலன் கூறுகையில், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கும்போது எந்த நாட்டிற்குள் நுழைகிறார்களோ, அந்நாட்டின் கலாச்சாரத்தைச் சீரழிப்பதில் கவனமாக இருப்பார்கள். இதை திரைக்கதையில் வலுவாக அமைத்திருக்கிறோம். தணிக்கைக்குழுவினரும் அமெரிக்கக் கொடி சின்னம் பொறித்த கர்சீப்பை தலையில் கட்டியிருப்பது போன்ற காட்சியை நீக்க வேண்டும் என்று கூறினார்கள். கேட்டால், இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையைப் பாதித்துவிடும் என்றனர். அவர்கள் பிடிவாதமாக இருந்ததால், மீண்டும் ஒரு காட்சியைப் படம்பிடித்து சேர்த்துள்ளோம். இதற்குத் தனியாக பல லட்சங்கள் செலவானது என்றார்.
                                                                                                   நன்றி : தீக்கதிர் 
Read more...
Thursday, 12 January 2012

சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது எளிதாக இல்லை : சீத்தாராம் யெச்சூரி

0 comments
இது ஒரு ஆபத்தான காலம். நல்லெண் ணங்களின் அடிப்படையில் அமைந்த சில புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து மறு பரிசீலனை தொடங்கிவிட்டது. சில தீர்மானங் களின் அடிப்படைகளைச் சிதைக்கும் வகை யில், வேறு சில தீர்மானங்களும் முன்வைக் கப்படுகின்றன. அவை குறித்தெல்லாம் என்ன சொல்வது? பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் புத் தாண்டு செய்தியில் நெருடலான கேள்வி இது தான்.

ஐந்து அம்சத் திட்டம்!

ஒரு சக்தி வாய்ந்த லோக் பால் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப் பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதனை மாநிலங் களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மேலவையில் இதை ஏன் நிறைவேற்ற முடிய வில்லை என பிரதமர் எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. ஊழல் எதிர்ப்புச் சட்டத் தினை எவ்வாறு நிறைவேற்றப்போகிறார்கள் என்றும் இதுவரை கூறவில்லை. எனினும், வாழ்க்கைப் பாதுகாப்பு (கல்வி, உணவு, சுகாதாரம், வேலை வாய்ப்பு குறித்த பாது காப்பு), பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாது காப்பு என ஐந்து அம்சத் திட்டத்தினை பிரதமர் அறிவித் திருக்கிறார்.

லோக்பால் நாடகம்!

முதலில் லோக்பால் சட்டத்தினை எடுத் துக்கொள்வோம். மாநிலங்களவை யில் சில முக்கியமான திருத்தங்களுடன்தான் மசோ தாவினை நிறைவேற்ற முடியும் என்ற நிலைமை முன்கூட்டியே தெரிந்தும் கூட, அங்கு ஒரு நள்ளிரவு நாடகம் நடத்தப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும், மக்கள வையிலும் எவ்வித ஆட்சேபணையினையும் எழுப்பாத ஐ.மு. கூட்டணியின் கூட்டாளி திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு திறம்பட உத வியது.

இந்த மசோதா மட்டுமே போதுமான தல்ல எனவும், வெளிப்படைத்தன்மையினை அதி கரிக்கும் வகையிலான ஆட்சியமைப்புச் சீர் திருத்தம் தேவைப்படுவதாகவும் அவர் வலி யுறுத்திக் கூறினார். பொருளாதாரத்தினை தாராளமயப்படுத்தியதன் பின்னணியில், ஊழலில் சில புதிய வடிவங்கள் தோன்றி யுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், அது உருவாக்கியிருக்கும் சலுகை சார் முத லாளித்துவம் (ஊசடிலே உயயீவையடளைஅ) குறித்து வாய் திறக்கவில்லை. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் சட்டத்திற்கு ஆதரவாகவும் எழுந்த மக்களின் ஆர்ப்பரிப்பில், இரண்டு விஷயங்கள் அமிழ்ந்து போய்விட்டன. நீரா ராடியா ஒலி நாடாக்களில் வெளிவந்த உண் மைகளும், பணம் கொடுத்துப் பெறும் செய்தி (ஞயனை சூநறள) ஆகிய இரண்டுமே அவை. ஊழல் மலிந்த அரசியல்வாதி - அரசு அதி காரி - முதலாளி - கார்ப்பரேட் ஊடகம் என்ற தகாத கூட்டே வளர்ந்து வரும் சலுகை சார் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வெளிப் பாடு. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதி ராக இலட்சக்கணக்கில் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்தபோது அந்தச் செய்தியினை பார்வை படாத மூலையில் வெளியிட்ட ஊட கங்கள்தான், இன்று அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் பின்னால், வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. கீழ்மட்ட ஊழலில் அரசு நிர்வாகத்தின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ( ஊ & னு) ஊழி யர்களை குறிவைக்கும் இந்த ஊடகங்கள் மெகா ஊழல் களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. அவுட்சோர்சிங் மூலம் வேலைகளை வெளி யாருக்கு தந்துவிட்ட நிலையில், ‘னு’ பிரிவு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இல்லா மல் போய்விட்டார்கள் என்பதை சி.பி.ஐ (எம்) உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவையில் சுட்டிக்காட்ட நேர்ந்தது. இந்தியா உலகில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உயரவேண்டும் எனில், நாட்டின் இயற்கை வளங்களில் நடக்கும் மெகா ஊழல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத் தப்படவேண்டும்.

“ஊக்குவிப்பும்” “சுமையும்”!

பிரதமரின் ஐந்து அம்சத் திட்டத்தில் உள் ளார்ந்த முரண்பாடுகள் உள்ளன. அதி கரித்து வரும் இந்தியாவின் நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பது பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. மானியங் களைக் குறைப்பதன் மூலம்தான் இது சாத் தியம் என பிரதமர் கூறுகிறார். மானியங்களுக் கான செலவு ஆண்டொன்றிற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என அண்மையில் நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை யில், பெட்ரோலியத் துறையிலிருந்து மட்டுமே அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானம் ரூ. 1,30,000கோடியெனஅரசுஒப்புக்கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்  ஆவ ணங்களின் படி, அரசு வசூலிக்காமல் விட்ட அதி பயங்கரமான சலுகைத்தொகை  ரூ. 14,28,028 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக் கும் அளிக்கப்பட்ட சலுகை ரூ.3,63,875 கோடி. இவ்வாண்டில் எதிர்பார்க்கப்படும் ரூ. 4,65,000 கோடி. வசூலிக்காமல் விடப்பட்ட சலுகைத் தொகையான ரூ.14,28,028 கோடி யுடன் ஒப்பிடும்போது, இந்த நிதிப்பற்றாக் குறை என்ன மிகப் பெரியதா? முதலாளி களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை “ஊக்குவிப்பு” என்கிறார்கள். இந்தியாவின் 80 கோடி ஏழை மக்களுக்குக் கொடுக்கப்படும் தொகையினை “சுமை” என்கிறார்கள். இந்த தொகை கூட, ஏழை மக்கள் மூச்சைப் பிடித் துக் கொண்டு வாழ்வதற்குத்தானே தவிர, அவர்களின் வசதியான வாழ்க்கைக்காக அல்ல. இதைத்தான், பொருளாதாரப் பாது காப்பில் சுமையாக உள்ளது எனவும், அதனைக் குறைப்பது அவசியம் எனவும் பிரதமர் கூறுகிறார். மக்களின் வாழ்க்கைப் பாது காப்பினை இதன் மூலம் எப்படி உறுதி செய்ய முடியும்? பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி களை கறாராக வசூலித்து, அத்தொகையினை பொது முதலீடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தானே அதனைச் சாதிக்க முடியும்?

சர்வதேச விலை சரிதானா?

எரிசக்திப் பாதுகாப்பு குறித்துப் பேசும் போது, எண்ணெய் விலையினை சர்வ தேச விலையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்நாட்டில் பெட்ரோலியப் பொருட் களின் உண்மையான உற்பத்தி விலை எது வாக இருந்தாலும் சரி, அதைத்தாண்டி சர்வதேச விலையுடன் இணைப்பது என்பது, தொடர்ந்து அதன் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் ரூ. 10,998கோடி எனவும், வரவுக்கும் செலவிற்கும் இடையிலான கையிருப்பு உபரி (சுநளநசஎந சுநஎநரேந ளுரசயீடரள) ரூ. 49,470 கோடி எனவும் அதன் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடு கிறது. இப்போது மின் கட்டணத்தையும் சர்வ தேச விலை அளவுடன் இணைக்க வேண் டும் என்பது மக்களின் மீதான சுமையினை மேலும் அதிகரிப்பதற்குத்தானே உதவும்?

சுற்றுச் சூழல் பாதுகாப்பு!

அதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகள், எரிசக்தி தேவைகளுடன் முரண்பட வேண்டுமென்பதில்லை. அண் மையில் டர்பன் நகரில் நடந்த வெப்ப-தட்ப மாற்றங்கள் குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் கார்பன் புகை வெளியேற்றத் தினைக் கட்டுப்படுத்துவோம் என இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், வளர்ச் சியடைந்த நாடுகளிடமிருந்து அத்தகைய வாக்குறுதிகளை பெறாமல் இந்தியா வாக் குறுதி அளித்தது துரதிருஷ்டமே.

எரிசக்தி உற்பத்தி கணிசமாக உய ராமல், வறுமை ஒழிப்பு சாத்தியமல்ல என பிரதமர் கூறுகிறார். இன்றைக்கு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப்பு கிடை யாது. மூன்றில் இரண்டு பகுதியினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. குழந்தைகளில் சரி பாதி சத்துணவின்றி வாடு கின்றனர். மூன்றில் இரண்டு பகுதி கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

2011 உணர்த்தும் பாடம்!

இந்நிலையில், பிரதமர் வெளிப்படுத்தி யிருக்கும் கவலைகளுக்கும், அவர் கூறியிருக் கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள் ளன. வாழ்க்கைப் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் உள்ளீடற்றவை. உண்மை யிலேயே மக்களின் வாழ்க்கைப் பாதுகாப் பினை உறுதி செய்ய வேண்டுமென்றால், பொருளாதரச் சீர்திருத்தங்களையும், தாராள வாதக் கொள்கைகளையும் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

பிரதமரும், ஐ.மு.கூட்டணியும் விஷயங் களை மெள்ள மெள்ள மறு பரிசீலனை செய் வார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் இந்திய மக்கள் மன நிறைவடைய முடியாது. வாழ்க் கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டு மெனில், அரசாங்கத்தின் முரண்பட்ட அணுகு முறைகளிலிருந்து அதனை விலகச் செய் வதற்கு, மக்கள் சக்தியினை திரட்டுவதும் நிர்ப் பந்திப்பதும் தேவை. 2011 அனுபவம் அதைத் தான் உணர்த்தியிருக்கிறது.


தமிழில் : ஜெ. விஜயா நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’(3.1.2012)
Read more...

பொருளாதார நெருக்கடியும் இந்தியாவும் - பேரா. வெங்கடேஷ் பி. ஆத்ரேயா

0 comments
இந்திய அரசாங்கம் கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயக் கொள்கை களை பின்பற்றி வருகிறது. மத்திய அர சின் கொள்கைகள், அந்நிய மூல தனத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், அவற்றிற்கு வரிச்சலுகை என்ற பெயரில் ‘ஊக்கம்’ அளிப்பதாக உள்ளன. அதே நேரத்தில், மக்களின் தேவைகளைப் பற்றி துளியும் கவலை கொள்ளாததாகவும் உள்ளது.

பொருளாதார நெருக்கடியின் சூழ் நிலைகளில் அரசின் பற்றாக்குறையை குறைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. அரசின் செலவைக் குறைப்பது

2. அரசின் வரவை அதிகரிப்பது

ஒரு நல்ல, ஜனநாயகமிக்க அரசாங் கம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவை அதிகரித்து, அதை ஈடு கட்ட, பன்னாட்டுக் கம்பெனிகளிட மிருந்தும், இந்திய முதலாளிகளிடம் இருந்தும் வரவினை அதிகப்படுத்திட வேண்டும். ஆனால் இந்தியாவின் ஆளும் அரசாங்கம் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. அதாவது, அந்நிய நாட்டுக் கம்பெனிகளின் மீதும், பெரு முத லாளிகள் மீதும் வரி விதித்தால் அவர்கள் ‘ஊக்கம்’ இழந்து சோர்வடைந்து விடு வார்களாம். எனவே அவர்கள் மீது வரி விதிக்காமல், அந்த வரி இழப்பை ஈடு கட்ட, மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை, மானியத்தை வெட்டுகிறது.

1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை என்பதன் உண்மையான பொருள் ‘நெறிமுறை நீக்கல்” என்பதே. கடந்த காலங்களில் தனியார் கையில் இருந்த சாராயக் கடை கள் இன்று அரசு வசம் வந்துள்ளன. அர சிடம் இருந்த கல்வி, சுகாதாரம், விவசாய முதலீடு போன்றவை தனியார் கைக்கு சென்றுள்ளன. இதன் விளைவாக, இத்த கைய துறைகளின் நோக்கமே மாற்றப்படு கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் அரசிடம் இருந்த இந்தத் துறைகளில் தனியார் முத லீடுகள் செய்யப்பட்டதன் காரணத்தால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவை சேவையாக பார்க்கப்பட்ட நிலைமை மாறி, முழுமையாக சாராயக்கடை போன்று இலாபத்திற்காக மட்டும் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

சில்லரை வர்த்தகம்

இன்றைக்கு மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனு மதிக்கத் துடித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு சிறிய கடையின் பரப்பளவு சுமார் 200 சதுர அடி ஆகும். ஆனால் அந் நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வால் மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம் பெனிகள் சில்லரை வர்த்தகத்தில் கால் வைத்தால், அக்கடையின் சராசரி பரப் பளவு 1,08,000 சதுர அடி ஆகும். அப்படி யானால், ஒரு வால்மார்ட் கடை நமது ஊரில் இருக்கும் 1,300 கடைகளை விழுங்கிவிடும். அதேபோல் வேலை வாய்ப்பு பெருகும் என்று கூறுவதும் தவறு. ஒரு சிறிய கடையில் 2பேர் என்றால் 1300 கடைகளில் தற்போது 2600 பேர் வேலை செய்கிறார்கள். 1 வால்மார்ட் கடையில் அதிகபட்சம் 10-20 பேர் மட்டுமே வேலை செய்வார்கள். 2,600 ஏழை மக்களின் வேலை வாய்ப்பினைப் பறித்து 20 பேருக்கு வேலை அளிக்கும் வளர்ச்சி யாகவே இது இருக்கும். வேலை வாய்ப் பினை புதிதாக உருவாக்காமல், இருக் கின்ற வேலைவாய்ப்பினையும் அழித் தொழிக்கக்கூடிய வகையிலேயே வால் மார்ட்டை வரவேற்கிறது அரசு.

பொருளாதாரக் கொள்கைகளை அரசியல் பார்வையோடு உற்று நோக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில், 2007ல் இருந்து இன்றுவரை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெரு மந்தத்திற்குப் பின்னர், 70-80 ஆண்டு களுக்குப்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக முதலாளித்துவ நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறி வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளிலும் உற்பத்தி பெருக வில்லை. வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 4ல் 1 பங்கு பேரும், ஸ்பெயினில் 3ல் 1 பங்கு பேரும், கிரீஸ், இத்தாலி போன்ற ஜி- 7 நாடுகளில் பெருவாரியான எண்ணிக்கையிலும் வேலையில்லா இளைஞர் பட்டாளமாக மாறியுள்ளனர். தனிநபர் லாபத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவக் கட்டமைப்பில் வேலையின்மையும், வறு மையும் நிரந்தரமானவையே. உழைப்பாளி மக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இது பிரயோகிக்கப்படு கிறது.

பொருளாதார நெருக்கடி நிலையில், பெரும் கம்பெனிகளின் நிதிச் சந்தையும் பணச்சந்தையும் படுத்துக்கிடக்கிறது. திவாலாகும் நிலையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் முயற்சி யில் அரசு உதவி செய்கிறது. எவ்வித மதிப்பும் இல்லாத பங்குகளை, அரசு அதிகமான பணத்தைக் கொடுத்து வாங்குகின்றது. இதன் விளைவாக ஏற் பட்ட போராட்டம்தான் அமெரிக்காவில் நடக்கும் “வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்று வோம்”போராட்டம். 99 சதவீதம்மக்களை காப்பாற்றாமல், 1சதவீதமுதலாளிகளைக் காப் பாற்றும் அமெரிக்க அரசினை எதிர்த்தும், பெரும் முதலாளிகளை எதிர்த்தும் நடைபெறுகிறது. அமெரிக் காவின் மொத்த சொத்தில் 40 சதவீதம், இந்த 1 சதவீத முதலாளிகளிடம் குவிந்துள்ளது.

இந்தியாவில் 1991க்கு முன்பு, அதா வது, தாராளமயக் கொள்கைகளை அறி முகப்படுத்தும் முன்பு, பொருளாதாரம் உள்நாட்டுச் சந்தையை, மக்களின் வாழ்வை மையப்படுத்தி இருந்தது. 1991ல் ஏற்றுமதி, இறக்குமதியின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 14 சதவீதம். ஆனால் 2012ல் 50 சதவீதமாக அதிகரித் துள்ளது. அதிகமான ஏற்றுமதி -இறக்கு மதியைச் சார்ந்ததாக இந்தியப் பொரு ளாதாரம் மாற்றப்பட்டிருப்பதால், உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழலில் முன்பை விட பல மடங்கு இந்தியா தாக் கப்படும் அபாயம் உள்ளது.

அந்நியச் செலாவணி

1991ல் அந்நிய முதலீடுகளை அனு மதித்த பிறகு அந்நியச் செலாவணி இழப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால், அந்நிய முதலீடு என்ற பெயரில் அந்த பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்கின் றன. அந்த பணமும் இந்தியாவின் வளர்ச் சிக்கு எந்த வகையிலும் உதவுவ தில்லை. மாறாக பங்குச் சந்தையில் சூதாடி, அந்தப் பணத்தை இரட்டிப்பாக்கி, அந்நியர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

1 டாலரின் மதிப்பு 44 ரூபாயாக இருந் தது, இன்று 54 ரூபாயாக மாறியுள்ளது. இதற்கு, சரக்கு ஏற்றுமதி குறைவதும், அந்நியச் செலாவணி கையிருப்பு குறை வதும் முக்கிய காரணங்கள் ஆகும். அந் நிய முதலாளிகள் வெளிநாட்டில் வணி கக் கடன்கள் வாங்கியுள்ளனர்.இந்தக் கடன்களை எல்லாம் டாலர்களைக் கொடுத்து மட்டுமே திருப்பமுடியும். இந்திய முதலாளிகளின் இத்தகைய கடன்களால் இந்தியா கடுமையாக அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் நம் முன் உள்ளது.

ஏற்றுமதித் தொழில்கள் பாதிக்கப் பட்டால் நம்நாட்டில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம், ஜவுளி வேலைகள் பறிபோகும். ஏற்றுமதி குறையும் போது நாட்டின் மொத்த கிராக் கியில் ஏற்படுகிற மந்தநிலை ஏற்படுகிறது.

நம் ஏற்றுமதியில் 43 சதவீதம் ஐரோப் பிய ஒன்றியமும், அமெரிக்காவும் வாங்கு கின்றன. எனவே அரசு களத்தில் இறங்கி பொதுத் துறையை மேம்படுத்தினால் மட்டுமே மொத்த கிராக்கி உயரும்.

அவ்வப்போது ஏற்படும் நெருக்கடி, மந்த நிலை, ஏற்றுமதி-இறக்குமதி சரிவு, அந்நியச் செலாவணி வீழ்ச்சி, தொடரும் விவசாய நெருக்கடி போன்றவை வேலை யின்மையை கடுமையாக அதிகரிக்கும். பன்னாட்டுச் சந்தைகளில் விலைகள் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும். ஏற்றுமதி விலை சரியும் பொழுது, எவ்வித கட்டுப் பாடும் இல்லாமல் மலிவான வேளாண் பொருட்கள் நமது நாட்டிற்குள் வந்து, விவசாய நெருக்கடியை மேலும் அதிகப் படுத்தும்.

வேலையைப் பறிக்கும் வளர்ச்சி

இந்த நிலையில் தான் மத்திய அரசு இந்தியா 7 சதவீத வளர்ச்சியை அடைந்து விட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த வளர்ச்சியினை உற்று நோக்கி னால், மூன்றாவது துறையான சேவைத் துறை - 60 சதவீத வளர்ச்சியும், இரண் டாவது துறையான தொழில்துறை - 22 முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சியும், முதன்மைத் துறையான விவசாயம் வெறும் 15 முதல் 18 சதவீதம் வளர்ச்சியும் எட்டியிருப்பதைப் பார்க்கலாம். ஆனால், நாட்டின் உழைப்பாளர் படையில், 2009ம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வேயின் படி, 50 சதவீதம் பேர் விவசாயத் துறையில் தான் வேலை செய்கின்றனர். 28 சதவீதம் பேர் சேவைத்துறையிலும், 22 சதவீதம் பேர் தொழில்துறையிலும் வேலை களைச் சார்ந்திருக்கின்றனர்.

28 சதவீதமே உழைப்பாளிக்கு வேலையளிக்கிற சேவைத்துறை (கல்வி, சுகாதாரம் போன்றவை)யில் தனியார் முதலீடுகள் அதிகரித்து இருப்பதால் சற்று வீக்கம் (வளர்ச்சி) உள்ளதாக காட்டப்படுகிறது. ஆனால், 50 சதவீத மக்கள் சார்ந்துள்ள விவசாயத் துறையின் வளர்ச்சியை உறுதி செய்யாமலும், அதில் வேலை வாய்ப்பினை உருவாக்காமலும் கைகழுவிவிட்டது அரசு.

இதன் விளைவாக, நகர்ப்புறங்களில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

1991 முதல் 2011 வரை மத்திய அரசு, கூறக்கூடிய வளர்ச்சி என்பது வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய வளர்ச் சியாக இல்லை. மாறாக வேலை வாய்ப் பை இழக்க வைக்கிற, வேலையைப் பறிக்கிற வளர்ச்சியாகவே இருந்துள்ளது. 7 சதவீத வளர்ச்சி என்று கூறினாலும், வேலை வாய்ப்பில் 0 சதவீதமாகவே இருக்கிறது. கொஞ்ச நஞ்சம் நடந்த வேலை விரிவாக்கமும் முறைசாரா பணிகளாகவே உள்ளன.

2004 - 2005 ஆம் ஆண்டு கணக்குப் படி 45 கோடிப் பேர் கொண்ட இந்திய உழைப்புப் படையில் 7 கோடிப் பேர் மாதச்சம்பளம் பெறுபவர்களாகவும், 13 கோடிப்பேர் ஒப்பந்த மற்றும் அத்தக் கூலிகளாகவும், 25 கோடிப்பேர் சுய வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இங்கே “சுயவேலை” என்பதன் பொருள், பாட்டுப்பாடி பணம் கேட்பது, புத்தகம் விற்பது, பூக்கடை வைத்திருப்பது போன்ற தொழில்கள் தான். இவ்வாறாக கடந்த 20 ஆண்டுகளாக ஏழை மக்க ளுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்காத, அளிக்க முன்வராத நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

எனவே, அரசு உள்நாட்டுச் சந்தை யை விரிவுபடுத்திட வேண்டும். இந்திய மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்திட வேண்டும். இன்றைக்கு மக் களுக்கு வழங்கப்படுகின்ற இலவசங்கள் அனைத்தும் பெரிய முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்ற வரிச் சலுகையில் 1 சதவீதம் கூட கிடையாது. கடந்த 2008ல் டாடா, அம்பானி, பிர்லா போன்ற பெரிய முதலாளிகள் அரசாங்கத்தை அணுகி பெற்ற வரிச்சலுகையால் அரசுக்கு ஏற் பட்ட வரி இழப்பு மட்டும் 4,50,000 கோடி ரூபாய் ஆகும். பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகை மட்டுமின்றி, 40,000 கோடி ரூபாய் பொதுத்துறை பங்குகளையும் அரசு விற்று வருகிறது.

இதிலிருந்து நாட்டை மீட்க, ஊரக வளர்ச்சி, பாசனம், விவசாயம், விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி மேம்பாடு, கிராம அளவில் சேமிப்புக் கிடங்கு வசதி போன்றவற்றை உருவாக்கி அரசு முதலீடு செய்ய வேண்டும். வேலை வாய்ப்பை மையப்படுத்திய வளர்ச்சியாக இருக்க வேண்டும். அந்நிய மூலதனங்களின் வருகை, வெளியேற்றம் போன்றவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண் டும். இன்றைய அளவில் ஒரு இந்தியன் 2,50,000 டாலர்களை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறு வனங்கள் தங்களின் பினாமிகளைக் கொண்டு, அதிகமான நிதியை வெளியே கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதை முறைப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற சாகுபடி நிலப்பரப்பில் பாதிக்குமேல் முதலாளிகள் கையில் உள்ளது. இந்த நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகள் பெற, நிலமறு விநியோகம், நிலச் சீர்திருத்தம் போன்றவை மிக மிக அவசியம்.

இதையெல்லாம் செய்ய வேண்டு மானால் இப்பொழுதுள்ள அரசு தனது முதலாளித்துவ வர்க்கச் சார்பை கைவிட வேண்டும்.

ஆனால் அது, மக்கள் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே சாத்தியம்!

கட்டுரையாளர் : எஸ்.கார்த்திக்

துணைச் செயலாளர்,

இந்திய மாணவர் சங்கம், மதுரை புறநகர்.
                                                                                                            நன்றி :தீக்கதிர்
Read more...
Tuesday, 10 January 2012

தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா - இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

1 comments
மதுரையில் உள்ள சில தனியார் பள்ளிகளில் கண் காணிப்பு கேமிரா பொருத் தப்பட்டுள்ளதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் மதுரை புற நகர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் எஸ்.பூமி ராஜா தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்கத் தின் மாநிலத்தலைவர் கே. எஸ்.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப் பட்டுள்ள தற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளி களில் வகுப்பறைகளில் மாணவர்கள் கேமிரா வைத்து கண் காணிக்கப் படுவதாக புகார்கள் எழுந் துள்ளன. இத்தகைய மிக மோசமான செயலை மாண வர் சங்கம் கண்டிக்கிறது. கேமிரா வைத்து கண் காணிப்பது பள்ளிக்கல்வித் துறையின் உயரிய நெறி களுக்கு எதிரான செயலா கும். மேலும் இவ்வாறு கண்காணிப்பது மாணவர் விரோதச் செயலாகும். கண் காணிப்பதால் மாணவர் களின் கல்வித் தரம் உயர் கிறது என் பது எங்கும் நிரூபிக்கப்பட வில்லை.

மேலும் இதுபோன்ற செயல்களினால் மாணவி கள் பல்வேறுவிதமான இன் னல் களுக்கு உள்ளாகின் றனர். இது அடிப்படை மனித உரிமை மீற லாகும். இத்தகைய பள்ளி களின் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கேமிராக்களை பறி முதல் செய்யவேண்டும். இல் லையெனில் குறிப் பிட்ட பள்ளி களின் முன்பு இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தும் எனக் கூறியுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளில் உடன டியாக தேவையான அடிப் படை கட்டமைப்பு வசதி களைத் துவக்கவேண்டும். பல பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 கல்வி யாண்டு நிறைவு பெறுவதற் குள் 10, பிளஸ் 2 அரசுத் தேர்வுக்கான பாடங்களை நடத்தி மாணவர்கள் மன ரீதியான நெருக்கடிக்கு உள் ளாக்கப்படுகின்றனர். இதன் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read more...
Monday, 9 January 2012

புதுவையை புரட்டி போட்ட தானே புயல் :

0 comments
  புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  ''தானே'' புயல் தாக்கி சென்று பத்து நாட்கள் கடந்த பின்னும் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை. அடித்த புயல் வேகத்தில் வேலை நடக்காவிட்டாலும் வேலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இடிந்த வீடுகளையும், கூரைகளையும் சரிசெய்வது, மின்சாரம் - குடிநீர் - பால் விநியோகங்களை சீர்செய்வது, சாலைகளில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது  போன்ற வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த வேலைகளெல்லாம் முடிந்து சகஜநிலைக்குத் திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தான் சொல்லப்படுகிறது.
                இவ்வளவு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விஷயத்தை அரசாங்கமும், மக்களும் கவனிக்க தவறிவிட்டனர். அடித்தப் புயலில் வேரோடு  பிடுங்கி எறியப்பட்டும்,  கிளைகளோடு ஒடிந்து வீழ்த்தப்பட்டும், புயலின் வேகத்துக்கு அசராமல் நின்றுகொண்டிருந்தாலும் கிளைகளையும், இலைகளையும் இழந்தும் சோகமாக நின்றுகொண்டிருக்கும் மரங்களைப் பார்க்கும் போது போர் நடந்தது போல் - அணுகுண்டு வெடித்தது போல் காட்சியளிக்கிறது.  அந்த மரங்களை எல்லாம்  பார்க்கும் போது நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
                 அப்படி வீழ்ந்த மரங்கள் அனைத்தும்   பல ஆண்டுகள் வயதான மரங்களாகவும், பல அரிய வகை மரங்களாகவும், பல வகையான பறவைகளுக்கு சரணாலயமாகவும், பல வகையான சிறு விலங்குகளுக்கு புகலிடமாகவும், உழைப்பாளி  மக்கள் ஓய்வெடுக்கும் கூரையாகவும், அடிக்கும் வெய்யிலில் அருமையான குடையாகவும்,  ஊரின் வெப்பத்தைக் குறைக்கும் குளிர் சாதனப்பெட்டியாகவும், பூக்களையும், காய்கனிகளையும் அள்ளித்தந்த வள்ளலாகவும்  இருந்திருக்கின்றன என்பது நாம் கண் கூடாக பார்த்த உண்மையாகும். தாகத்தைத் தனித்து குளிர்ச்சியைத் தந்த நெடிய தென்னை மரங்களும் நிலம் சாய்ந்து போயின.
               இன்று அந்த மரங்கள் எல்லாம் விறகாக மாறிவிட்டன. அந்த மரங்களை எல்லாம் வெட்டியும் அறுத்தும், எந்திரங்கள் அள்ளி தூக்கி போட்டு, லாரியில் ஏற்றிச்செல்லும் போது நமக்கெல்லாம் மனது பதைக்கிறது. எத்தனை தலைமுறைகளை காத்த மரங்கள், இன்று இன்றைய தலைமுறையினால் கூட காப்பாற்ற முடியாமல் வீழ்ந்து போயிற்று என்பதை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது. நம்முடைய முன்னோர்கள் எத்தனைக் கனவோடு இந்த மரங்களை வைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு  இந்த மரங்கள் எல்லாம் காவல் தெய்வங்களாக இருக்கும் என்று அல்லவா கனவு கண்டு இருப்பார்கள். இந்தனை காலமாக நம்மை காப்பாற்றிய மரங்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் பொருமுகிறது.
                ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை (Oxygen) 22 மரங்கள் தருகின்றன என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜெனை 18 பேர் சுவாசிக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
                  ஒரு மனிதனுக்கு ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க ஏழிலிருந்து எட்டு லிட்டர் வரை ஆக்சிஜென் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் ஆக்சிஜெனை சுவாசிக்கிறான்.
அப்படியென்றால் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த மரங்கள் எவ்வளவு உதவிபுரிகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 
               இன்று தொண்ணுறு சதவீத மரங்களை  நாம் இழந்துவிட்டாதால், நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை பல கோடி லிட்டர் அளவுக்கு இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.  அதுமட்டுமல்ல, நாட்டிலுள்ள தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியிட்ட கரியமில வாயுக்கள் என்று சொல்லக்கூடிய கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூமி சூடாகும் போது இந்த மரங்கள் வெளியிட்ட ஆக்சிஜென் தான் பூமியின் சூட்டைக் குறைத்தது.
             இன்று மரங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், புயலுக்குப் பிறகு நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் தெரியும், புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் வெப்பம் அதிகமாகத் தெரிகிறது. இரவு நேரம் கூட பனி தெரிவதில்லை. இரவும் சூடாகத்தான் இருக்கிறது. மின்விசிறி இல்லாமல் தூங்க முடியவில்லை. பகலில் வெய்யில் சுளீரென்று அடிக்கிறது. மரங்களே இல்லாமல் ஊரே பளீர் வெளிச்சமாக இருக்கிறது. இப்போதே இப்படி இருக்கிறதென்றால், கோடை மிகக் கடுமையாக இருக்கும் என்பது தான் மிகப்பெரிய கொடுமையாகும்.
                எனவே மரத்தைப் பற்றிய கவலை இப்போதே தொற்றிக்கொண்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மின்சாரம், குடிநீர், பால் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்ற மத்திய - மாநில அரசுகள் மரங்கள் நடுவதிலும் அக்கறைக்காட்ட வேண்டும். இப்போது மரக்கன்றுகளை நட்டால் தான் குறைந்தது பத்தாண்டுகளிலாவது நிலைமை சீரடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
               இந்த விஷயத்தில் அரசுகளை மட்டும் எதிர் பார்க்காமல், பொது மக்களும்  அக்கறை காட்டவேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் எதிரே வீதிகளின் இருப்பக்கங்களிலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலும், முக்கிய சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களான மருத்துவமனை, திருமணக்கூடம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், பார்க், மார்க்கெட், வழிப்பாட்டுத்தலங்கள்  போன்ற இடங்களிலும் கண்டிப்பாக மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
                 இப்படி செய்தால் தான் வரும் காலம் குளிர்ச்சியாக இருக்கும். நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜென் கிடைக்கும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கமுடியும். 
                                                                                        கட்டுரை:புதுவை  ராம்ஜி 
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com