Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 8 December 2011

வெளிநாட்டு பல்கலைகழகத்தை ஒரு போதும் இந்தியாவில் அனுமதியோம் !

0 comments
2010 மார்ச் 15 அன்று நாடாளுமன்றத் தில் மத்திய அரசு உயர்கல்வியில் அந்நிய பல் கலைக் கழகங்களை அனுமதிக்கும் சட்ட முன் வடிவை அமைச்சரவை ஒப்புதலுடன் கொண்டுவந்துள்ளது. மனித சமூகம் பாய்ச் சல் வேகத்துடன் முன்னேற வேண்டுமா னால் உயர்கல்வி அவசியம் என்று அதற்கான கல்வித் திட்டங்களை நேரு அரசாங்கம் முன்பு உருவாக்கியது. ஆனால் இன்று கொடுமை என்னவெனில், மத்திய அரசு கல்வி வியா பாரத்தில் அந்நியரை ரத்தனக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.

ஏனெனில், மத்திய காங்கிரஸ் அரசு நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக கடை பிடித்து வருகிறது. முன்பு உள்நாட்டு பெரு முதலாளிகள் நலனுக்கு மட்டும் பாடுபட்ட அரசு, தற்போது பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கும் பாடுபட உறுதி பூண்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதன் ஒரு பகுதி யாகவே, உயர்கல்வியில் அந்நிய பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கு மத்திய அரசு துடிக்கிறது. உயர்கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு முற்போக்கான அறிவுஜீவிகளை உருவாக்கும் தளமாகும். இதற்கு மாறாக சிறிய அளவில் பணம் போட்டு கவர்ச்சியூட்டி கோடிக்கணக் கான பணத்தை வெளிநாட்டு முதலாளிகள் எடுத்துச் செல்லவே உதவும். மத்திய அரசின் முயற்சி. இந்தக் கடையை விரிக்க அனும திக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கடுமையாக முயற்சிக் கிறார்.

இந்தியாவில் 1950களில் உயர்கல்வியில் 2 இலட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந் தனர். தற்பொழுது 99 இலட்சத்து 53 ஆயிரத்து 506 ஆக உயர்வு பெற்றுள்ளது. இதில் 86.97 விழுக் காட்டினர் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பவர்கள். 13.03 விழுக்காடு மாணவர்கள் டிப்ளமோ பல்லைக் கழகங்களில் பதிவு செய் துள்ளனர். மொத்தம் 90.25 விழுக்காடு மாண வர்கள் இளங்கலையில் படிப்பவர்கள், 65.47 விழுக்காடு மாணவர்கள் முதுகலையில் படிப் பவர்கள். இறுதியாக 10.9 விழுக்காடு மாணவர் கள் மட்டுமே ஆராய்ச்சி படிப்பிற்கு செல்கின்றனர்.

மேற்கண்ட புள்ளி விபரங்களைப் பார்த் தாலே இந்திய அரசு உயர்கல்வியில் கொண் டுள்ள மாற்றங்கள் புரியும்.

“கல்வியில் சேவை, தரம், சமூக வளர்ச்சி என்பதற்கு மாறாக கல்வியில் முதலீடு, லாபம் செழிக்கும் அபரிமிதமான வளர்ச்சி என்று மத் திய, மாநில அரசுகள் பார்க்கிறது. எனவே கல் வியை தயக்கமில்லாமல் கூறுபோட்டு விற் கிறார்கள்”.

ஆய்வு படிப்பில் 2005ன் புள்ளிவிபரங் கள்படி இந்தியா 25,227, சீனா 72,362. இன்னும் சொல்லப் போனால் சீன ஆய்வு கட்டுரைகள் நடைமுறை சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது அரிதிலும் அரிது. காரணம் நடைமுறை பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய விவாதங் களை, ஆய்வுகளை உயர்கல்வியில் முன்வைக்க வில்லை என்பதே.

இந்தியாவில் உள்ள 490க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை மேம்படுத்தினாலே உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். மத்திய அமைச்சர் கபில் சிபல் அந்நிய பல்கலைக் கழகம் இந்தியா விற்குள் வந்தால், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தொடர்ந்து திருவாய் மலர்ந்து வருகிறார். உண்மையில் இது உள்நாட்டு பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்பற்று ஆகியவற்றை சீரழித்துவிடும். நம்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பல்கலைக் கழகங்கள் அனைத்தின் வளர்ச்சியையும் தடுத்துவிடும். உயர்கல்வி யில் பாதிப்பை ஏற்படுத்தும். சகல விலையும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கின்ற நேரத் தில் உயர்கல்வியிலும் அந்நியர்களை அனு மதிப்பது ஆபத்தானது.

மேலும் தற்போது 55 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு, 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதாக சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் ஆக்கப்பூர்வ மான கல்வி வளர்ச்சிக்கு வித்திட சட்டம் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்துவதற்கு போதிய நிதி அளிக்க வேண்டும். இச்சட் டத்தை நடைமுறைப்படுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை 1,75,000கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் 1,76,000கோடி ரூபாய் பணம் இருந்தால் இது சாத்தியமே. இன்னும் எண்ணற்ற ஊழல் பணத்தை மீட்டெடுத்தாலே அனைவருக்கும் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு பட்ஜெட் போடமுடியும். 1992 முதல் 2011 வரை 18 ஆண்டுகளில் மட்டும் 73 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 2001ல் 42.6 விழுக்காடாக இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள், 2009ம் ஆண்டு 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கல்வியை தனி யார்மயம், அதாவது அரசிடம் போதிய நிதி யில்லை என கல்விக்கு நிதி ஒதுக்குவதி லிருந்து விலகிக் கொண்டது. இதன் விளைவு புதிய அரசுக் கல்லூரி துவங்கவோ, இருக்கின்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதிலிருந்து விலகியதோடு அரசு கல்லூரி, பல்லைக்கழகத்தை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்தது என மக்களை ஒப்புக்கொள்ள வைத்தன. ஆணித்தரமாக நம்பவும் வைத்தனர் நம் பெற்றோர்களை. இத னால் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் புதிதுபுதிதாக பாடப்பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளிப்பதோடு, அப்படியே அரசுப் பிரிவில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கினால் அது சுயநிதி பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டது. இதனால் பணம் உள்ளவனுக்கு தரமான கல்வி யும், பணம் இல்லாதவனுக்கு தரமற்ற கல்வி யும் என்ற நிலையை உருவாக்கினர். உதாரண மாக அரசுப்பிரிவில் உள்ள பி.காம். வணிக வியல் துறையைவிட பி.காம்.சி.ஏ. வணிக வியல் கணிப்பொறித்துறை சிறந்தது என தனியார் சுயநிதி கல்லூரிகளை ஊக்குவிக்க ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றது. இவ் வாறு காங்கிரசும், பிஜேபியும் கல்வியில் தனி யார் பங்களிப்பை ஊக்குவித்ததோடு, அவர் களை நியாயப்படுத்தவும் செய்தன.

வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா வும் உள்ளது. வளரும் இதர நாடுகளில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 36.5 விழுக் காடாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 12 விழுக்காடு மக்கள்தான். இந்திய அரசு 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவை யான நிதி ஒதுக்காமல், ஒருபோதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் மத்திய காங்கிரஸ் அரசு, கல்விக்கு நிதிஒதுக்குவதிலும் உதாரணமாய் உள்ளதா?. இல்லை. அமெரிக்காவில் உயர் கல்விக்கு செலவிடும் நிதி 17 விழுக்காடு, ஆனால் இந்தியாவில் 4.1 விழுக்காடு. அண்டை நாடான சீனாவில் 10 விழுக்காடு, அமெரிக்கா வில் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் உள்ளது. ஒரே கல்வித் திட்டம் தான். ஆனால் இங்கு தமிழகத்தில் சமச் சீர் கல்வி முறை வந்தபின்பும் மாநில பாடத்திட் டம், மத்திய பாடத்திட்டம் என பள்ளிக் கல்வி இரண்டு வகைகளாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

எனவே, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதித்த சீனா உள்ளிட்ட நாடுகள் கல்வி யில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றே குறிப் பிடுகின்றன. சரி, அப்படியே இந்தியாவிற்குள் வரும் அந்நிய பல்கலைக் கழங்கள் உலகின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக் கழகங்களும் கிடையாது. தங்களது சொந்த நாட்டில் தோற்றுப்போன பல்கலைக் கழகம் தான் இந்தியாவிற்குள் நுழைந்து லாபம் சம்பாதிக்க வருகின்றது.

கல்வியின் முக்கியத்துவம் கருதி, மாணவர் களை உயர்கல்வி படிக்க வைக்கும் பெற்றோர் கள் பாக்கெட்டிலிருந்து அல்லது வேறு வகை யிலிருந்து மேலும் கோடிக்கணக்கில் கொள்ளை யடிக்கவே இந்த அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் நுழைய வருகின்றன. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தீரமிக்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. இடதுசாரி கட்சிகளும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக் கும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய காங் கிரஸ் அரசு அந்நிய பல்கலைக் கழகங்கள் உள் ளிட்ட ஐந்து முக்கிய உயர்கல்வியை சீரழிக் கும் மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்திய உயர் கல்வியை சீரழிக்கும், இந்திய இறையாண் மைக்கு வேட்டுவைக்கும் இம்மசோதாவிற்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. தனது மனப்பூர்வ ஆதரவைக் கொடுத்து, இந்திய மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந் நிய முதலீட்டை எதிர்த்துள்ள அ.தி.மு.க. அந் நியப் பல்கலைக்கழக மசோதாவை எதிர்க்க முன்வருமா? டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் நாடாளு மன்றம் முன்பு அந் நிய பல்கலைக் கழகத்திற்கு எதிராக மிகப் பெரிய தர்ணா போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்திய நாட்டின் உயர்கல்வி யில் உண்மை யான வளர்ச்சியை விரும்புவோர் அனைவரும் அந்நிய பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட் டத்தை நடத்திட வேண்டிய தருணம் இது.அந்நிய பல்கலைகழகம்

(கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்கத் தின் மாநில துணைச் செயலாளர்)

                                                                                          -சி. பாலச்சந்திரபோஸ்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com