Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 21 December 2011

Why This கொலவெறி பார்ட் - 2 (அல்லது) சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள்

0 comments


கடந்த பல தினங்களாக அனைத்து ஊடகங்களும் சனிப்பெயர்ச்சியை பற்றி பக்கம் பக்கமாக அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திருநள்ளாருக்கு சிறப்பு பேருந்துகளை அம்மையார் அரசு முடுக்கி விட்டுள்ளது. கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி மாறுவதால் ஏற்படும் நன்மைதீமைகள் பற்றி தொலைக்காட்சிகளில் பல அக்கப்போர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நமது பங்குக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா? 

சனியின் நன்மை தீமைகள் குறித்து குத்துமதிப்பாக ஜோதிட வள்ளுனர்கள் எழுதியதை கேள்விகேட்டாள் என்னவாகும்? அவர்களுக்கு நம்மீது கொலவெறி உண்டாகுமா இல்லையா? இவிங்க அக்கிரும்பு ஜோதிடத்தை கேள்வி கேட்டது மட்டுமே நாம்.

துலாம் ராசிக்காரர்களே! 

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், சொந்த அத்தை அத்தை, எதிர்த்த வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பாட்டி. தாத்தா, அம்மம்மா, பெரியம்மா, இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து, கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. 

*நீங்கள் வெளிநாடு போகப்போறீங்களாண்ணா?

சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். (அதனால?)

1. உங்கள் உடம்பின் நிறம் மங்கும்

* கருப்பா இருக்கறவா கண்டுகாதீங்கோ. 

2. ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்

* ஏற்கனவே சீக்காளியா இருந்தா அபீட்டு! 

3. உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால் வேலை நடக்காது.

* எப்பவுமே நாம இப்பிடிதானுங்க! 

4. எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள் 

* அப்புறம் வேற வேலை வேண்டாமா?  

5. உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள் *என்னா மேக்கப் பன்னாலும் ம்ஹ¨ம் நம்ப மூஞ்சி தேறாது! 

6. ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், ஆரோக்கியத்தைப் பெற முடியும்

* வைத்தியம் பார்த்தா சரியா பூடும்னு எங்களுக்கு தெரியாதாடா டுபுக்கு? 

7. இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட  ஏற்படுத்தலாம் ஏற்படுத்தாமலும் போகலாம். 

*கரக்கிட்டா சொல்லிட்டா அப்புறம் என்ன ஜோசியம்? 

8. ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

*அதுசரி மத்த ராசிகாரவங்களுக்கு இதெல்லாம் நடகாதாடா அப்பாடக்கருங்களா?

9. பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. *எலேய் இத சொல்றத்துக்கு எதுக்குடா நீங்க

10. பணவரவு சீராக இருக்கும்

*அப்பா... டேய்...  நீ சொன்னதுல இதுதான் கொஞ்சம் உருப்படியானதுடா?

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

 (மக்களே இனிவருவது பலன்களாம்!  படிங்கோ)

 சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம் உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம், களத்திரஸ்தானம்;  ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதனால் மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.  கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது.

 *இந்த பலன்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம்  தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

ஆக ஒன்னும் உருப்படாது என முடிக்கலாம்? 

அது சரி ஜோசிய சிகாமணிகளே! இந்த பால் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, 15 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலக இடமாற்றம், பரமகுடி துப்பாக்கிச்சூடு, முல்லைபெரியாறு, கூடங்குளம் போன்ற பாதிப்புகள் எந்த ராசிகாரர்களை பாதிக்காது என சொல்லுவீர்களா? சனியாவது வந்துதான் பிடிக்கும்.. நாம போயி பிடிச்ச சனிக்கு என்ன பரிகாரம்??
                                         நன்றி :தோழர்:எஸ்.ஜி.ரமேஷ்பாபு 
                                         பதிவு  :மானுட விடுதலை இணைய தளம் 
Read more...
Monday, 12 December 2011

வில்லியனூர் கரிக்கலாம்ப்பாக்கம் மாணவர்கள் சாலை மறியல்:

0 comments

புதுவை வில்லியனூர் கரிக்கலாம்பாக்கம் வழியாக நெட்டப்பாக்கம் மற்றும் பாகூர் செல்லும் மாணவர் சிறப்பு  பேருந்துகள் கடந்த 01-12-2011 முதல்  இயக்கப்படாததை கண்டித்து  இன்று காலை 12-12-2011 இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் மற்றும் ஹரிஹரன் தலைமையில் சுமார்60க்கும் மேற்பட்ட  மாணவர்களும் 
பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில்
கலந்து  கொண்டனர்.இப்போராட்டம் நடைபெறுவதை அறிந்த அத்தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.ராஜவேலு இந்திய மாணவர் சங்க செயலாளரிடம் இரண்டு நாட்களுக்குள் அப்பகுதியில் பேருந்துகளை முறையாக இயக்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.எனினும் இரண்டு நாட்களுக்குள் பேருந்துகள் இயக்காவிட்டால் அனைத்து பகுதி மாணவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்திய மாணவர் சங்கம் சார்பாக அமைச்சரிடம்தெரிவிக்கப்பட்டது.இப்போரட்டதிற்கு  ஆதரவாக 
 கரிகலாம்பாக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் சண்முகம்,கிளை தலைவர் ஹரி மற்றும் ரத்னவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read more...
Saturday, 10 December 2011

முல்லை பெரியார் அணை விவகாரம் : இந்திய மாணவர் சங்கம்

0 comments
சகோதர உறவை சீர்குலைக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு இந்திய மாணவர் சங்கம்  கண்டனம்!

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்,  இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் (SFI)அரசியல் தலைமைக்குழு தனது நிலைபாட்டை அறிவித்திருந்தது.

இதற்கிடையில் பிரதேச, இன, மொழி என பிரிவினைகளைத் தூண்டி, இரு மாநிலத்து மக்களிடையேயும் பகைமையையும், சகோதர உறவையும் சீர்குலைக்கும் காரியங்கள் நடந்தன. சில பகுதிகளில் வன்முறைச்செயல்களும் நடைபெற்றன.

இந்த நிலையில், டிசம்பர் 7ந்தேதி சி.பி.எம் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு  விவாதித்தது. தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு   இந்திய மாணவர் சங்கத்தின்  கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்து விடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்ட மாகும்.

தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட் டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.

அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கையையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்குதலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச்சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகிவிடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

இவ்வாறு  இந்திய மாணவர் சங்கத்தின்  கேரள மாநிலச் செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது!
Read more...
Friday, 9 December 2011

Ban foreign universities’ entry to India..!!!

0 comments


As part of the nationwide campaign of the SFI against the proposed Foreign University Bill -The Foreign Educational Institutions (Regulation of Entry and Operation Bill, 2010-, SFI Pondicherry University Committee organised a Students Protest Demo, raising concern over the bill and dangerous provisions in it. The function was conducted near the second gate, Pondicherry University at 5.00 pm on Friday (December 09, 2011). Around hundred students have participated and shared their concern over the bill.
Welcome:         Manabendu Sarkar (SFI, PU)
Presided by:     Muhammed Saheed (Convener, SFI PU)
Key note Address: Swathwik Banarjee (SFI, Chennai)
Also spoke:      Arun (SFI, PU)
                        Anand (Pradesh Committee Secratery, SFI, Puducherry)
                        Prabhuraj (DYFI, Puducherry)
                        Saravanan (DYFI, Puducherry)
Vote of Thanks: Jasmine (SFI, PU)

We raise our protest against the bill for various reasons that include:
·        FDI in higher education sector.
·        Opportunity for substandard institutes to enter into the higher
·        Potential to undermine our Universities
·        These institutions will be like Special Economic Zones [SEZ] meant for the elite, by the elite and for the elite,”
·        They will be free to charge fee at their wish
·        Will be free to select any student with no standard criteria
·        no provision for SC/ST/OBC reservations in the Bill.
·        They are not required to submit reports to the UGC or to the Central government -implying that neither the UGC, nor any other regulatory authority in India will have control over the functioning of these foreign universities.
·        It would be almost impossible, given that ‘extra freedom’, to withdraw the recognition given to a foreign university, even on the situations when it is found serious problem/threat.


·        International experience indicates that such legislation can neither attract truly ‘world-class’ institutions, but can only allow unreliable educations shops to sell sub-standard wares (relatively free of regulation) to Indian students.

Pondicherry University, Kalapet
December 09, 2011.

  • வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு!
  • AICTE,MCI,UGC உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை களைத்துவிட்டு நம் நாட்டின் பேருமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தும் தேசிய கல்வி ஆணைய மசோதாவை கைவிட கோரி!
  • மாநில அரசுகளின் கல்வி குறித்த அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசின் அதிகார குவியலை கண்டித்து!
 சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போராடியதோ,அதே போல் மாணவர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள உயர்கல்வியை சீரழிக்கும் ஐந்து மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் , புதுச்சேரி பிரதேச குழுவும் பல்கலைகழக கிளையும்  கேட்டுக்கொள்கிறது.
தலைமை :சாஹீத்ரூமி {கன்வீனர் SFI,பல்கலைகழக கிளை}
முன்னிலை:மானபெந்துசர்கார்,ஜாஸ்மின்,                                                                            அருண்குமார் {SFI,பல்கலைகழக கிளை}
கண்டனஉரை :பகத்சிங் {SFI,பல்கலைகழக கிளை }
                               ஆனந்த் {SFI,புதுவை பிரதேச செயலாளர்}
                               சாத்வீக்பாநர்ஜி {லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர்}            
                               பிரபுராஜ் {DYFI புதுச்சேரி பொருளாளர் }
வாழுத்துரை: ரஞ்சித் குமார் {து.தலைவர் SFI}
                            சரவணன் {DYFI நகர கமிட்டி புதுவை }
நன்றியுரை :ஜெய்ஸ்ரீகுமார் {SFI பல்கலைகழக கிளை }
Read more...
Thursday, 8 December 2011

வெளிநாட்டு பல்கலைகழகத்தை ஒரு போதும் இந்தியாவில் அனுமதியோம் !

0 comments
2010 மார்ச் 15 அன்று நாடாளுமன்றத் தில் மத்திய அரசு உயர்கல்வியில் அந்நிய பல் கலைக் கழகங்களை அனுமதிக்கும் சட்ட முன் வடிவை அமைச்சரவை ஒப்புதலுடன் கொண்டுவந்துள்ளது. மனித சமூகம் பாய்ச் சல் வேகத்துடன் முன்னேற வேண்டுமா னால் உயர்கல்வி அவசியம் என்று அதற்கான கல்வித் திட்டங்களை நேரு அரசாங்கம் முன்பு உருவாக்கியது. ஆனால் இன்று கொடுமை என்னவெனில், மத்திய அரசு கல்வி வியா பாரத்தில் அந்நியரை ரத்தனக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.

ஏனெனில், மத்திய காங்கிரஸ் அரசு நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக கடை பிடித்து வருகிறது. முன்பு உள்நாட்டு பெரு முதலாளிகள் நலனுக்கு மட்டும் பாடுபட்ட அரசு, தற்போது பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கும் பாடுபட உறுதி பூண்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதன் ஒரு பகுதி யாகவே, உயர்கல்வியில் அந்நிய பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கு மத்திய அரசு துடிக்கிறது. உயர்கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு முற்போக்கான அறிவுஜீவிகளை உருவாக்கும் தளமாகும். இதற்கு மாறாக சிறிய அளவில் பணம் போட்டு கவர்ச்சியூட்டி கோடிக்கணக் கான பணத்தை வெளிநாட்டு முதலாளிகள் எடுத்துச் செல்லவே உதவும். மத்திய அரசின் முயற்சி. இந்தக் கடையை விரிக்க அனும திக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கடுமையாக முயற்சிக் கிறார்.

இந்தியாவில் 1950களில் உயர்கல்வியில் 2 இலட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந் தனர். தற்பொழுது 99 இலட்சத்து 53 ஆயிரத்து 506 ஆக உயர்வு பெற்றுள்ளது. இதில் 86.97 விழுக் காட்டினர் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பவர்கள். 13.03 விழுக்காடு மாணவர்கள் டிப்ளமோ பல்லைக் கழகங்களில் பதிவு செய் துள்ளனர். மொத்தம் 90.25 விழுக்காடு மாண வர்கள் இளங்கலையில் படிப்பவர்கள், 65.47 விழுக்காடு மாணவர்கள் முதுகலையில் படிப் பவர்கள். இறுதியாக 10.9 விழுக்காடு மாணவர் கள் மட்டுமே ஆராய்ச்சி படிப்பிற்கு செல்கின்றனர்.

மேற்கண்ட புள்ளி விபரங்களைப் பார்த் தாலே இந்திய அரசு உயர்கல்வியில் கொண் டுள்ள மாற்றங்கள் புரியும்.

“கல்வியில் சேவை, தரம், சமூக வளர்ச்சி என்பதற்கு மாறாக கல்வியில் முதலீடு, லாபம் செழிக்கும் அபரிமிதமான வளர்ச்சி என்று மத் திய, மாநில அரசுகள் பார்க்கிறது. எனவே கல் வியை தயக்கமில்லாமல் கூறுபோட்டு விற் கிறார்கள்”.

ஆய்வு படிப்பில் 2005ன் புள்ளிவிபரங் கள்படி இந்தியா 25,227, சீனா 72,362. இன்னும் சொல்லப் போனால் சீன ஆய்வு கட்டுரைகள் நடைமுறை சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது அரிதிலும் அரிது. காரணம் நடைமுறை பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய விவாதங் களை, ஆய்வுகளை உயர்கல்வியில் முன்வைக்க வில்லை என்பதே.

இந்தியாவில் உள்ள 490க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை மேம்படுத்தினாலே உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். மத்திய அமைச்சர் கபில் சிபல் அந்நிய பல்கலைக் கழகம் இந்தியா விற்குள் வந்தால், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தொடர்ந்து திருவாய் மலர்ந்து வருகிறார். உண்மையில் இது உள்நாட்டு பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்பற்று ஆகியவற்றை சீரழித்துவிடும். நம்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பல்கலைக் கழகங்கள் அனைத்தின் வளர்ச்சியையும் தடுத்துவிடும். உயர்கல்வி யில் பாதிப்பை ஏற்படுத்தும். சகல விலையும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கின்ற நேரத் தில் உயர்கல்வியிலும் அந்நியர்களை அனு மதிப்பது ஆபத்தானது.

மேலும் தற்போது 55 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு, 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதாக சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் ஆக்கப்பூர்வ மான கல்வி வளர்ச்சிக்கு வித்திட சட்டம் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்துவதற்கு போதிய நிதி அளிக்க வேண்டும். இச்சட் டத்தை நடைமுறைப்படுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை 1,75,000கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் 1,76,000கோடி ரூபாய் பணம் இருந்தால் இது சாத்தியமே. இன்னும் எண்ணற்ற ஊழல் பணத்தை மீட்டெடுத்தாலே அனைவருக்கும் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு பட்ஜெட் போடமுடியும். 1992 முதல் 2011 வரை 18 ஆண்டுகளில் மட்டும் 73 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 2001ல் 42.6 விழுக்காடாக இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள், 2009ம் ஆண்டு 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கல்வியை தனி யார்மயம், அதாவது அரசிடம் போதிய நிதி யில்லை என கல்விக்கு நிதி ஒதுக்குவதி லிருந்து விலகிக் கொண்டது. இதன் விளைவு புதிய அரசுக் கல்லூரி துவங்கவோ, இருக்கின்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதிலிருந்து விலகியதோடு அரசு கல்லூரி, பல்லைக்கழகத்தை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்தது என மக்களை ஒப்புக்கொள்ள வைத்தன. ஆணித்தரமாக நம்பவும் வைத்தனர் நம் பெற்றோர்களை. இத னால் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் புதிதுபுதிதாக பாடப்பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளிப்பதோடு, அப்படியே அரசுப் பிரிவில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கினால் அது சுயநிதி பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டது. இதனால் பணம் உள்ளவனுக்கு தரமான கல்வி யும், பணம் இல்லாதவனுக்கு தரமற்ற கல்வி யும் என்ற நிலையை உருவாக்கினர். உதாரண மாக அரசுப்பிரிவில் உள்ள பி.காம். வணிக வியல் துறையைவிட பி.காம்.சி.ஏ. வணிக வியல் கணிப்பொறித்துறை சிறந்தது என தனியார் சுயநிதி கல்லூரிகளை ஊக்குவிக்க ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றது. இவ் வாறு காங்கிரசும், பிஜேபியும் கல்வியில் தனி யார் பங்களிப்பை ஊக்குவித்ததோடு, அவர் களை நியாயப்படுத்தவும் செய்தன.

வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா வும் உள்ளது. வளரும் இதர நாடுகளில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 36.5 விழுக் காடாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 12 விழுக்காடு மக்கள்தான். இந்திய அரசு 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவை யான நிதி ஒதுக்காமல், ஒருபோதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் மத்திய காங்கிரஸ் அரசு, கல்விக்கு நிதிஒதுக்குவதிலும் உதாரணமாய் உள்ளதா?. இல்லை. அமெரிக்காவில் உயர் கல்விக்கு செலவிடும் நிதி 17 விழுக்காடு, ஆனால் இந்தியாவில் 4.1 விழுக்காடு. அண்டை நாடான சீனாவில் 10 விழுக்காடு, அமெரிக்கா வில் 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் உள்ளது. ஒரே கல்வித் திட்டம் தான். ஆனால் இங்கு தமிழகத்தில் சமச் சீர் கல்வி முறை வந்தபின்பும் மாநில பாடத்திட் டம், மத்திய பாடத்திட்டம் என பள்ளிக் கல்வி இரண்டு வகைகளாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

எனவே, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதித்த சீனா உள்ளிட்ட நாடுகள் கல்வி யில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றே குறிப் பிடுகின்றன. சரி, அப்படியே இந்தியாவிற்குள் வரும் அந்நிய பல்கலைக் கழங்கள் உலகின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக் கழகங்களும் கிடையாது. தங்களது சொந்த நாட்டில் தோற்றுப்போன பல்கலைக் கழகம் தான் இந்தியாவிற்குள் நுழைந்து லாபம் சம்பாதிக்க வருகின்றது.

கல்வியின் முக்கியத்துவம் கருதி, மாணவர் களை உயர்கல்வி படிக்க வைக்கும் பெற்றோர் கள் பாக்கெட்டிலிருந்து அல்லது வேறு வகை யிலிருந்து மேலும் கோடிக்கணக்கில் கொள்ளை யடிக்கவே இந்த அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் நுழைய வருகின்றன. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தீரமிக்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. இடதுசாரி கட்சிகளும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக் கும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய காங் கிரஸ் அரசு அந்நிய பல்கலைக் கழகங்கள் உள் ளிட்ட ஐந்து முக்கிய உயர்கல்வியை சீரழிக் கும் மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்திய உயர் கல்வியை சீரழிக்கும், இந்திய இறையாண் மைக்கு வேட்டுவைக்கும் இம்மசோதாவிற்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. தனது மனப்பூர்வ ஆதரவைக் கொடுத்து, இந்திய மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந் நிய முதலீட்டை எதிர்த்துள்ள அ.தி.மு.க. அந் நியப் பல்கலைக்கழக மசோதாவை எதிர்க்க முன்வருமா? டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் நாடாளு மன்றம் முன்பு அந் நிய பல்கலைக் கழகத்திற்கு எதிராக மிகப் பெரிய தர்ணா போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்திய நாட்டின் உயர்கல்வி யில் உண்மை யான வளர்ச்சியை விரும்புவோர் அனைவரும் அந்நிய பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட் டத்தை நடத்திட வேண்டிய தருணம் இது.அந்நிய பல்கலைகழகம்

(கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்கத் தின் மாநில துணைச் செயலாளர்)

                                                                                          -சி. பாலச்சந்திரபோஸ்
Read more...
Wednesday, 7 December 2011

வெளிநாட்டு பல்கலைகழகத்தை அனுமதியோம் !

0 comments
வெளிநாட்டு பல்கலைகழகத்தை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை  மத்திய காங்கிரஸ் அரசு  தாக்கல் செய்கிறது.மேலும் உயர்கல்வியை சீரழிக்கும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற இருக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து 08/12/2011 அன்று கல்வி தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கண்டித்தும் ,பன்னாட்டு பெருமுதலாளிகள் லாபவெறிக்காக  நம் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.புதுவையில் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மோதிலால் நேரு தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் சார்பில் வகுப்பு புறக்கணித்து நேதாஜி சிலை அருகில் ஆர்பாட்டம்.Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com