Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 21 November 2011

வால் ஸ்ட்ரீட் போராட்டமும் - மத்திய,மாநில அரசுகளும் :

0 comments
உலக அளவில் வீழும் முதலாளித்துவம் :

முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை அமெரிக்க அரசு கடுமையான அடக்குமுறைகளால்  அடக்கி விட முயற்சிக்கிறது.கலிபோர்னியா மாகான பல்கலைகழக மாணவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக வால்ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள் என்ற காரணத்தினால் ஒபாமா அரசு மாணவர்கள் மீது மிளகு ஸ்ப்ரேயை அடித்தும் கைகளை பின்புறமாக கட்டியும் கடுமையான சித்தரவதை செய்து கைதும் வருகின்றனர்.ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள்,பொது மக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உலக அரசியலும் தேசிய ,உள்ளூர் அரசியல்  :

தற்போது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களும்,இளைஞர்களும் ,பொது மக்களும் வீதிகளில் இறங்கி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக போராடுகிற சூழலில் நம் நாட்டிலும் மத்திய , மாநில அரசின் தவறான கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து போராட வீதிகளில் இறங்கி போராடும் வரை,விடிவு காலம் நமக்கு இல்லை !மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வை கட்டுபடுத்துவதில் எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்ததாக தெரியவில்லை.அதே போல் தமிழகத்தில்  உள்ள அ.தி.மு.க மற்றும் புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பது இவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.

மக்கள் மனதில் செல்வாக்கை இழந்த மாற்று ஆட்சி ?

புதுச்சேரியில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் மாறாக  வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல முதலமைச்சரின் தொகுதியில் உள்ளவர்களுக்கே மீண்டும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளிவருகிறது.இது ஒரு தொடர் கதை என்பது போல் புதுச்சேரியில் அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பலர் பொது மக்கள் கூறக்கூடிய பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மக்கள் முதல்வரிடம் தெரியபடுதுகிறோம் என்றே கூறுகின்றனர்.புதுச்சேரி மக்கள் காங்கிரசுக்கு பதில்  ஒரு மாற்று அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு அமைய வேண்டும் என தீர்மானித்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாக்களித்தனர்,ஆனால் தற்போது இருக்கும் நிலையில் வருகின்ற மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட நிதி இருக்குமா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாற்றம் வந்ததா ?

ஊழலில் மூழ்கிப்போன தி.மு.க விற்கு மாற்றாக அ.இ.அ.தி.மு.க விற்கு வாக்களித்தனர்.ஆனால் வாக்களித்த மக்களுக்கு வாய்கரிசி போடுவதையே தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.தேர்தலின் பொது இலவச சலுகைகளை அள்ளி வீசிய அம்மா அவர்கள் தற்போது வாக்களித்த மக்களுக்கு ஏத்து ஏத்துன்னு  மின் கட்டணம்,போக்குவரத்து கட்டணம்,பால் விலை உயர்வு என சர மாறியாக வரலாறு காணாத வகையில் விலையை உயர்த்தியும் சாமர்த்தியமாக இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக தமிழக மக்களிடம் முதல்வர் நேரடியாக ஒரு நீண்ட உரையை ஆற்றினார் என்று பார்த்தால் வாழைபழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் விலைவாசி உயர்வு தவிர்க்கபடாதது என்று பேரிடியை மக்கள் தலையில் போட்டுள்ளார்.

நம் மண்ணில் போராட்டத்தை  எப்போது நாம் துவக்கபோகிறோம் ?

உலகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் , பொது துறைகள் தனியாருக்கு தாரை வார்பதர்க்கு எதிராகவும் ,வேலையின்மைக்கு எதிராகவும், கல்வி வியாபாரத்திற்கு எதிராகவும்,ஊழலுக்கு எதிராகவும்,அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் ஊதிய வெட்டுக்கு எதிரான பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு எதிராகவும்,உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகவும்,ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகவும்    ஐரோப்பா  மற்றும் அமெரிக்க நாடுகளில் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள்  என அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பெரும்எண்ணிக்கையில் கடுமையான அடக்கு முறைகளையும்  மீறி போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நம் தேசம் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்:

அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் எப்போது துவங்க போகிறோம்.அநீதியை கண்டு கோபப்படுபநேயானால் நாம் தோழர்கள் என்று மாவீரன் சே குவேரா கூறியிருப்பதை நினைவில் கொண்டு கோபப்படுவோம்.மத்தியில் ஆளும்  காங்கிரஸ் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்.
                                                             ஒன்றுபடுவோம் !
                                                                     போராடுவோம் !
                                                                             வெற்றிபெறுவோம் !
                                                                                                           கட்டுரை : அ.ஆனந்த்                         

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com