Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 29 November 2011

"WHY THIS கொலவெறி டீ" பாடல் எழுத காரணம் என்ன?

0 commentsநடிகர் தனுஷ் எழுதி அவரது சொந்த குரலில் பாடிய இந்த பாடல் இப்போது மிகவும் பிரபலமாக பேசபடுகிறது அல்லது பேசவைக்கப்படுகிறது. இந்த பாடல் எப்படிபட்டது? ஏன் எழுதப்பட்டது? என்ற ஆராய்ச்சிகள் நடக்கத்துவங்கியுள்ளது. நல்ல வேலை கலைஞர் ஆட்சி இப்போது இல்லை, இருந்திருந்தால் இநத் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியராகவும் சிறந்த பின்னணி பாடகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் தனுஷ். ஏனெனில் அவர் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற கூடுதல் தகுதி கொண்டவராயிற்றே..

 இன்று இந்த பதிவு எழுதும் நேரம் வரை இணையத்தின் வழியாக இந்த பாடலை 55 லட்சம் பேர் பார்த்திருப்பதாக புள்ளிவிபர புலிகள் அறிவித்து உள்ளனர். இந்த இம்சைகள் ஒருபக்கம் இருக்க இந்த பாடல் பின் நவீநத்துவ பாடலாக இருக்கலாம் என பின் நவீநத்துவ வாதிகள் கட்டுரை எழுத கொலைவெறி எடுத்து அலையும் தகவலும் வெளியாவது பீதியை கிளப்புகிறது. நமது பிளாக்கர்களுக்கு (அதாங்க வலைப்பூ மன்னர்களுக்கு) அடிச்சு துவைச்சு காயப்போட ஒரு சூப்பர் மேட்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் ஒரு ஆறுதலான நிகழ்வு.

 இது ஒருபுறம் இருக்க இந்த பாடலை அவர் எழுத கீழ்கண்ட காரணங்களும் இருக்கலாமா என "அரசியல் நோக்கர்கள்" கருதுகிறார்கள். இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். (யார்ரா இவனுவ அரசியல் நோக்கர்கள் என தாங்கள் குழம்புவது புரிகிறது! எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் சொந்த கருத்துக்களை இப்படிதானே எழுதுகிறார்கள். நாமும் எழுதுவோம்!?)

 "WHY THIS கொலவெறி டீ"
 உழைப்பாளி மக்கள் பைகளிலிருந்து அதிகார பூர்வமாக பகல் கொள்ளையடிக்க தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை மனதில் வைத்து இவர் எழுதினார் என ஒரு பகுதியினரும்.. இல்லை இல்லை அவர் பேருந்தில் பயணம் செய்பவர் அல்ல அதனால் அது குறித்து இல்லவே இல்லை என ஒரு பகுதியினரும் வாதிடுகின்றனர்.

 ஏழைக் குழுந்தைகளின் உணவாக பசியாற்றிய பால் விலையை ஏற்றி அக்குழந்தைகளுக்கு இலவசமாக "பால்தெளி சடங்கை" நடத்தியுள்ள கொடுமையை கண்டு சகிக்காமல் "பொல்லாதவன்" தனுஷ் பொங்கி எழுந்து எழுதியிருக்கலாம் என பலரும் வாதிடுகின்றனர்.

 அதுக்கூட இல்லை.. 400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தினார்கள். இவர்கள் உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை அம்மா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளதை கண்டித்துதான் இந்த பாடல் எழுதப்பட்டதோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 அல்லது.. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, அண்ணா நூலக இடமாற்றம், சமச்சீர் கல்விக்கு ஆப்பு, மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களி நடுரோட்டில் நிற்க வைத்தது போன்ற சம்பவங்களை வைத்து அவர் எழுதி இருக்கலாம் என சொல்கிறார்கள். அதில் வரும் வாழ்க்கையே டார்க்கு, பிளாக்கு போன்ற வார்த்தைகள் சூட்சுமமாக இவைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்திய தனுஷ் இன்னும் பல பாடல்களை எழுத வேண்டும் என்றும் "அரசியல் நோக்கர்கள்" கூறுகிறார்கள்.

 ஆகவே நண்பர்களே.. இந்த பதிவின் நோக்கம் கீழ்காணும் ஒரே ஒரு "நல்ல" நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அதிமுக நண்பர்கள் இதை "கவனித்து"  படித்து அதன் "விளைவாக" இனிமேல் தனுஷ் பாடல் எழுதுவதை நிறுத்தலாம் என்ற ஆசையின் விளைவே இந்த பதிவு.
                                                          
                                                                 கட்டுரையாளர் : எஸ்.ஜி.ரமேஷ்பாபு
Read more...
Monday, 28 November 2011

''WALMART SUPER MARKET '' ஐ வெளிநாட்டினரை அனுமதித்து மீண்டும் நம் தேசத்தை அடிமையாக விட மாட்டோம்:

0 comments

கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடுமுங்க...!

நல்ல காலம் 
பொறக்கப்போவுது...                    
நல்ல காலம் 
பொறக்கப்போவுது... 

                  சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடும்னு பாராளுமன்றத்துல மந்திரிங்கல்லாம் சொல்லுறாங்க. 
               ஒரு மந்திரி சொல்லுறாரு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். நல்ல விஷயம்தானுங்கள... 
                    அப்புறம் இன்னொரு மந்திரி சொல்லுறாரு... சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தாக்கா... அந்த பணவீக்கம் குறைந்து போயுடுங்கலாம்... இதுவும் நல்ல விஷயம்தானுங்கள...
                    அப்புறம் இன்னொருத்தர் சொல்லுறாரு... ''வால் மார்ட்'' சூப்பர் மார்கெட் வந்துடுச்சினா... குறைவான விலைக்கு பொருட்களெல்லாம் கிடைக்குமாம்... அப்புறம் என்னங்க நமக்கு கஷ்டம்...  இதை ஏங்க நாம எதிர்க்கணும்...?
                மேலே பாத்தீங்களா எவ்வளவோ பெரிய சூப்பர் மார்கெட்... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இருக்குல்ல... சூப்பருங்க...
50,000 முதல் 75,000   சதுர மீட்டர் வரை பரப்பளவு உள்ள மெகா சுப்பர் மார்கெட்டுங்க இது.. இதுல கெடைக்காத பொருட்களே இல்லைங்கலாம்... அம்புட்டு பொருட்களும் கிடைக்குமாம். ஒரு லட்சம் நம் வீட்டுக்குத் தேவையான ஒரு லட்சம் பொருட்கள் இங்கே கிடைக்குமாம்.
           
            இங்கே கிடைக்காத பொருட்களே இல்லைங்க... அன்றாட உணவு தயாரிப்புகளுக்கு தேவையான...சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் முதல் அனைத்து வகை மளிகை சாமான்கள்...  காய்கறி வகைகள்... பழ வகைகள்... ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி வகைகள்... மீன் வகைகள்... கொறித்து சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள்... பாணி பூரி... பிசா வகைகள்...  டீ, காபி... குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்... இப்படி எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.  
             எல்லா வகை மருந்துப்பொருட்களும் அங்கெ கிடைக்கும்... டாக்டர்களும் உள்ளே இருப்பார்கள்... மற்றும் திருமணம் ஆகி புதுக்குடித்தனம் நடத்த வீட்டுக்குத் தேவையான அத்துணை பொருட்களும்... பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், பிரிட்ஜி, மேசை, நாற்காலி, பாத்திரங்கள், செல்போன், டி.வி., அழகு சாதனப்பொருட்கள், பரிசுப் பொருட்கள்... என அப்பப்பா... இப்படி பல வகைகள் அங்கெ கொட்டிக்கிடக்குமுங்க ...
               பசி ஆறுவதற்கு டிபன் கடை கூட உள்ளே இருக்கும்... மயங்கி கிடப்பதற்கு மதுபானக்கடைகளும், பார்களும் அங்கே மிதந்து வரவேற்கும்.
            இவை எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்கு ''அனாவசியமாக'' கியூவில் நிற்கவேண்டாம்.  ஏ.டி.எம். மிஷின் போல ஆங்காங்கே பில் போடுகிற மிஷின் வைக்கப்பட்டிருக்கும். நாமே பில் போட்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். இங்கே போயி பொருட்களை வாங்கினா... காசையும் மிச்சப்படுத்தலாமாம்... நேரத்தையும் மிச்சப்படுத்தலாமாம்... இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
              
                 நீங்களும்,  உங்க வீட்டு அம்மணியும்  காலையில எழுந்து பிரஷ் பண்ணிட்டு... உங்க காரை எடுத்துகிட்டு வால்மார்ட் போனிங்கன்னா... அங்க சர்வீஸ் ஸ்டேஷன் -இல் காரை விட்டுட்டு... அங்கேயே முடிவெட்டுற கடை இருக்கும்... அங்கே முடி வெட்டிகிட்டு... பக்கத்துலேயே ''மசாஜ்'' பண்ணி... ''பாத்'' பண்ணி விடுவாங்க.... அதெல்லாம் முடிச்சிகிட்டு... அங்கேயே ''ரெடிமேடு டிரஸ்'' எல்லாம் விற்பாங்க... அதை வாங்கி போட்டுக்கிட்டு...  
                 நல்லவேளையா அங்கேயே அம்மணிக்கு ''பியூட்டி பார்லர்'' இருக்கும்... அங்கே போய் அழகு படுத்திக்கொள்ளலாம்... பிறகு அங்கேயே டிபன் முடிச்சிட்டு ... அப்புறமா வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், மட்டன், சிக்கன், பிஷ், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்... இப்படியாக எல்லாத்தையும் வாங்கிட்டு... இடையில டீ..காப்பி சாப்பிட்டிட்டு, இப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா...''லஞ்ச் டைம்'' வந்துடும்... அதுக்கும் கவலைப்பட வேண்டாம்... அங்கேயே ''ஹோட்டல்...''  சாரி ''ரெஸ்டாரென்ட்'' இருக்கும்... அங்கே சாப்டுட்டு... மீண்டும் ''ஷாப்பிங்'' பண்ணிட்டு...    
                அதுக்குள்ளே மாலை நேரம் வந்துடும்... அப்போது சாப்பிடவேண்டிய ''ஸ்நாக்ஸ், டீ, காப்பி'' எல்லாம் சாப்பிடுட்டு... மீண்டும் ஷாப்பிங் செய்து டி.வி. விளம்பரத்தில் பார்த்த விடுபட்ட  பொருட்களையும் தேடி அலசி பார்த்து வாங்கிட்டு... நீங்க வாங்கினப் பொருட்களையெல்லாம் கையிலயோ.. தலையிலேயோ தூக்கிகிட்டு அலையவேண்டாம்.. அங்கேயே ''ட்ராலி'' நிறைய இருக்கும்... அம்புட்டு பொருளையும் அதுக்குள்ளேயே அடுக்கிக்கலாம்...
                    அதுக்குள்ளயே..  இரவும்  வந்துடும்... அப்படியே சுத்தி நோட்டம் விட்டீங்கன்னா... கவர்ச்சியா லைட்டெல்லாம் போட்டு ''பார்'' உங்களை வரவேற்கும்... அங்கே போகாம வீட்டுக்கு போயிட்டா நமக்கும் மரியாதை கிடையாது... அந்த ''பாருக்கும்'' மரியாதை கிடையாது... அரசாங்கம் நடத்துற  ஒயின் ஷாப்பை விட... பார் - ஐ விட இது சூப்பரா இருக்கும்... நைட்டு படுத்தா தூக்கம் வர்றதுக்கு இங்க போயி கொஞ்சம் ஊத்திகிட்டு... அங்கேயே ''டின்னர்'' - ஐயும்  முடிச்சிகிட்டு... நீங்க காலைல சர்வீஸ் ஸ்டேஷன் -ல உங்க காரை விட்டீங்கள ஞாபகம் இருக்கா... அது இப்போ சர்வீஸ் எல்லாம் முடிஞ்சி புதுப்பொலிவுடன்  ''கார் பார்கிங்''- ல உங்களுக்காக ''வெயிட்'' பண்ணும்...  
            நீங்க வீட்டுக்கு கிளம்பரத்துக்கு  முன்னாடி, காலையிலிருந்து இரவு வரை வாங்கின அத்துணை பொருட்களின் ''பில்''லையும் செட்டில் செய்யணும்... உங்க ''பர்ஸ்''-ல இருக்கிற ''கிரடிட் கார்டை''யோ... ''ஏ. டி. எம்  கார்டை''யோ கொடுத்தீங்கன்னா... நீங்க கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்... அல்லது கையில பணத்தை வெச்சிருந்தீங்கன்னா... உங்க பர்சையும், பாக்கெட்டையும் காலிப் பண்ணிட்டு  தான் உங்கள வெளியே விடுவாங்க...   பிறகு நீங்க சந்தோஷமா உங்க காரை எடுத்துக்கொண்டு அங்கேயே பெட்ரோலும் போட்டுக்கிட்டு, பிறகு  உங்க வீட்டுக்குப் போயி படுத்து தூங்கிட வேண்டியது தான்...
             இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
             இப்போ நாம் இவ்வளவு பொருட்களையும் வாங்கணும்னா... நாலு நாட்கள் ஆகும்... மாளிகைக்கு ஒரு இடம் போகணும்... காய் - பழத்துக்கு ஒரு இடம் போகணும்... துணி - மணிங்க வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... மீன் வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... ஹோட்டலுக்கு ஒரு இடம் போகணும்... காரை ஒரு இடத்துல விட்டுட்டு காலு வலிக்க நடக்கணும்... இந்த கஷ்டமெல்லாம் இந்த ''வால்மார்ட்'' - ல  கிடையாதுங்க...  
            இங்கு விலைகளும், வெளியில நாம் வாங்குற விலையை விட இங்கு மிக குறைவுங்கலாம்... காசும் மிச்சம்... நேரமும் மிச்சமுங்க...
               அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல  துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
                      இந்தியாவுல இந்த வால் மார்ட் சூப்பர் மார்கெட்ட.. இந்திய பெருமுதலாளி மிட்டலுக்கு சொந்தமான பாரதி நிறுவனத்தோடு சேர்ந்து நடத்தப்போறாங்கலாம் ... அந்த சூப்பர் மார்கெட்டுக்கு இந்தியாவுல என்ன பேரு  வெச்சிருக்காங்க தெரியுமா...? ''பெஸ்ட் பிரைஸ் - BEST PRICE''.
     இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை   குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
              பாராளுமன்றத்திலேயும், வெளியிலேயும் இடதுசாரிகளும் மற்றவர்களும்... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும், வால்மார்ட்டை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லவா...?  அப்படின்னா என்ன அர்த்தம்... வால்மார்ட் நடத்துற ''பெஸ்ட் பிரைஸ்'' கடையையும் எதிர்க்கிறார்கள்  என்று தானே அர்த்தம்.... இந்தியாவுல பெஸ்ட் பிரைஸ் கடைகளெல்லாம் மக்களுக்கு பொருட்களெல்லாம் விலை மலிவா கொடுக்குற கடைகள்... நமக்கெல்லாம் நல்லது செய்யற கடைகள்  என்கிற எண்ணத்தை மக்களுக்கு உண்டுபண்ணிவிடுவதால்... அந்த கடைகளெல்லாம் இந்தியாவிற்கு   வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னால் - போராடினால், இடதுசாரிகள் - கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க    தங்களுக்கு  வேண்டாதவர்களாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்புவதற்காகவே    பெருமுதலாளிகள் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்...                  அதுமட்டுமல்ல... இப்படி விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் நாமெல்லோரும் நிச்சயமாக அங்கே தான் பொருட்களை வாங்குவோம்... அப்படி வாங்கும் போது, பரம்பரை பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்போரின் கடைகள் என்னவாகும்... மக்கள் வருகை இல்லாவிட்டால், பொருட்களின் வியாபாரம் நடக்காவிட்டால் அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டியது தான்.... அப்படி மூடினால் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்யும் ஏழு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும்... சில்லறை வர்த்தகம் என்றால் சிறு சிறு முதலாளிகள் மட்டுமல்ல... அதில் வேலை செய்பவர்கள், விற்பனையாளர்கள், மற்ற பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், மாட்டு வண்டி - ரிக்சா - மூன்று சக்கர வண்டி - ஆட்டோ தொழிலாளர்கள் இப்படியாக பல கோடி பேர் வேலை இழப்பார்கள்... அதைப்பற்றி நமக்கென்னங்க கவலை... அப்படின்னு நாம் வழக்கம் போல் இருந்துவிடலாம்....
                ஆனால்... இந்த கடைகளெல்லாம் மூடப்பட்ட பின், இந்த ''பெஸ்ட் பிரைஸ்'' கடையில விக்கிற பொருட்களின் விலைகள் எல்லாம் நான்கு மடங்கு - ஐந்து மடங்காக தாறுமாறாக உயர்ந்துவிடும். அது எவ்வளவு விலையானாலும், நாம் உண்டு உயிர்வாழ்வதற்கு  அவ்வளவு விலைகளையும் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். 
             இந்திய மக்களே... தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்... ''வால்மார்ட்'' நமக்கு தேவையா...?  ''பெஸ்ட் பிரைஸ்'' நமக்கு தேவையா...? சில்லறை வியாபாரிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய ''அந்நிய நேரடி முதலீடு'' நமக்கு தேவையா..? சிந்தித்துப் பாருங்கள்...! செயல்படுங்கள்..!
Read more...

அநீதிக்கு எதிராக SFI, DYFI, AIDWA சங்கத்தின் சார்பில் போராட்டம்:

0 comments
புதுச்சேரியில் பிரபல ஜவுளி கடையான சத்யம் சில்க்ஸ் உரிமையாளரின் G- கெஸ்ட் ஹவுஸ்ல்

கடலூரை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.அதனை தொடர்ந்து அந்த கெஸ்ட் ஹவுஸ்ஐயும் அதன் உரிமையாளரையும் கைது செய்ய வலியுறித்தியும் மாணவர்,வாலிபர்,மாதர் சங்கம் சார்பாக கெஸ்ட் ஹவுஸ்ஐ இழுத்து பூட்டி போராட்டம்.

Read more...
Saturday, 26 November 2011

‘கல்விக்காக போராடுவது மாணவர் உரிமை அனுமதி கொடுப்பது காவல்துறை கடமை'

0 comments
எஸ்எப்ஐ தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்புமதுரை திருமங்கலம் பிகே என் பள்ளியில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் உண்ணாவிரதம் நடத்த லாம் என சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் வரு மாறு:

திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் பள்ளியில் கூடுதலாக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய மாணவர் சங் கம் ஆட்சியரிடம் புகார் அளித் துள்ளது. இது தொடர்பாக பள்ளியில் படிக்கும் மாணவ னின் பெற்றோர் ஒருவர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார்.

இதேபோன்று பிகேஎன் பெண்கள் பள்ளியில் கூடுத லாக கல்விக்கட்டணம் வசூ லிப்பது குறித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரை ஆட்சியர் உ.சகாயத்திடம் புகார் அளித்தனர். மாவட்ட நிர் வாகத்தின் சார்பில் அதிகாரி ஒருவர் பள்ளிக்குச் சென்று நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில், பெற்றோர்கள் பலர் கூடுதலாக வசூலிக்கப் பட்ட கட்டணம் குறித்து எழுத்துப்பூர்வமான மனுவை அளித்தனர். விசாரணை அதி காரி இவ்விஷயத்தை ஆட்சி யரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், பள்ளி வசூ லித்த கட்டணத்தை திரும்பத் தரவேண்டும். கூடுதலாக கல்விக்கட்டணம் வசூலித்தால் பள்ளியின் அங்கீகாரமே கூட ரத்து செய்யப்படும் எனக் கூறினார்.

இந்நிலையில், கல்விக்கட் டணக் கொள்ளைக்கு எதிராக, உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு செய்து, திருமங்கலம் நகர் காவல்துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் சார்பில் துணைச்செயலாளர் எஸ்.கார்த்திக், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார் பில் வழக்கறிஞர் ஷாஜிசெல் லன் ஆஜரானார். இவ்வழக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, இந்திய மாணவர் சங்கம் நவம்பர் 30ம் தேதி, திருமங்கலம் தேவர் சிலை அருகில் உண்ணாவிர தம் நடத்தலாம் என்றும், நவம்பர் 29ம் தேதி இதுபற்றி பிரச்சாரத்தை நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து இந்திய மாண வர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜிசெல்லன் கூறியதாவது:

கூடுதலாக வசூலிக்கப் பட்ட கட்டணம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரி டம் புகார் அளிக்கப்பட்டுள் ளது. கல்வித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்ச னையில் இந்திய மாணவர் சங் கம் உள்ளே நுழைந்து ஆதா யம் தேடப்பார்க்கிறது என அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு நீதிபதி, மனுதாரர் உண்ணாவிரதம் இருப்பது தவறு என்றால், பள்ளி நிர்வா கத்தினர் நன்கொடை வாங்கு வதும் தவறுதான். கல்வி உரி மைக்காக போராடுவது மாண வர்கள் நலன் சார்ந்த விஷயம். இது போன்ற மாணவர் அமைப்புகளால்தான் கல்வி உரிமைக்கான சட்டம், நன் கொடைக்கு எதிரான சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட் டுள்ளன. சட்டம் இருந்தும், காவல்துறை இருந்தும் இத்த கைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மேலும், உண்ணாவிரதம் இருப்பது குறித்து கல்வி அதி காரியிடம் அனுமதி வாங்க வேண்டும் எனக்கூறுவதை ஏற்க முடியாது. கூடுதலாக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டியதில்லை. மாணவர்கள் கேட்கும் உரிமை யின்மீது அனுமதி கொடுப்பது தான் காவல்துறையின் பணி யாகும். உண்ணாவிரதத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப் படும் எனக்கூறுவது, வழக்க மாக காவல்துறை கூறும் அர்த்தமற்ற வாதம்” எனக்கூறி அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி யளித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read more...
Friday, 25 November 2011

தற்கொலைக்கு - நான் பயப்படவில்லை

2 comments
சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட என் நண்பனின் கடிதமொன்றை வெகுநாட்கள் கழித்து நேற்று படித்தேன். அதில் அவன் எழுதியிருந்த வரிகள் என்னை ஒரு கணம் புரட்டிப் போட்டு விட்டன.
                                             


    "தற்கொலைக்கு
     நான் பயப்படவில்லை
     ஏனெனில்
     மரணத்திற்குப் பயப்படும்
     கோழைகள் தான் இங்கு அதிகம்.
     எனது வலியை
     உங்களுக்குத் தந்து விட்டுப் பிரிகிறேன்
     என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே!"
இதோடு கடிதமும் அவன் கதையும் முடிந்து போகிறது.

உண்மையில் அனைவரும் மரணத்திற்குப் பயப்படும் கோழைகளாகத்தான் வாழ்கிறோம் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தின் சிறு எறும்பு தான் இந்த பூமி. இந்த பூமிக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாத சிறு எறும்புக்கூட்டம் தான் நாம்.

இந்த சிறு எறும்புக்கூட்டத்திற்குள் தான் எத்தனை மோதல்கள், எத்தனை சண்டைகள், எத்தனை பிரிவுகள், எத்தனை இழப்புகள். ஆனால் ஒரு மனிதன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடிவதில்லை. ஒரு மனிதன் விட்டுச் சென்ற நினைவுகளை யாராலும் அழிக்க முடிவதில்லை. ஒரு மனிதன் கொடுத்து விட்டுச் சென்ற வலிகளை யாராலும் ஆற்ற முடிவதில்லை.

தனக்குப் பிடித்த நடிகனின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதனையும், விபத்தில் தன் மொத்த உடம்பும் சிதைந்து போகும் சூழலிலும் மருத்துவமனைக்குச் சென்று எப்படியாவது தப்பித்து உயிர் வாழும் மனிதனையும் ஒரு சேர இங்கே நாம் பார்க்க முடிகிறது. வாழ வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் பொதுவானது தான். அது ஹிட்லராக இருந்தாலும் சரி சார்லி சாப்ளினாக இருந்தாலும் சரி. கோட்சேவாக இருந்தாலும் சரி காந்தியாக இருந்தாலும் சரி. ராஜபக்சேவாக இருந்தாலும் சரி கொத்துக்குண்டுகளால் மடிந்து போன என் ஈழத்து சொந்தங்களாக இருந்தாலும் சரி.

"ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்பு தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்"
1915 நவம்பர் 17ம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் கத்தார்சிங்கின் இறுதி முழக்கங்கள் இவை.

"நாளை காலையில் மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதைப் போல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய குறிக்கோள்கள், நம்பிக்கைகள், உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். இன்று போய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்கள் உருவில்........."
தூக்கிலேறுமுன் தன் தம்பிக்கு பகத் சிங் கடைசியாக எழுதிய வரிகள் இவை.

"எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல எங்கள் உடல், பொருள், ஆவியெல்லாம் இந்த நாட்டின் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம். தாய்நாட்டின் சேவையில் உயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்"
கையூர்த் தோழர்களை மரணம் தழுவிக் கொள்ளும் முன் மக்களுக்குச் சொன்னவை இவை.

இப்படி நாட்டுக்காக இறந்து போனவர்கள் எல்லாம் ஏதோ எல்லாம் அனுபவித்து முடித்து இனி அனுபவிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்கிற குல்லாக்காரர்களின் வார்த்தைகள் அல்ல. இவை முழுக்க முழுக்க எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவுகளோடு வாழ்ந்த இன்றும் வாழ்கிற நம்மைப் போன்ற இளைஞர்களின் வரிகள். இவர்களுக்கென்றும் சுய ஆசைகள் இருக்கவில்லையா? என்றால் இவர்களின் ஆசை இந்த தேசத்திற்கானது. மக்களுக்கானது. விடுதலைக்கானது. புரட்சிக்கானது.

இவர்கள் செய்த உயிர்த்தியாகத்தில் தான் நாம் இன்று சுகபோகமாய் வாழ்ந்து வருகிறோம். இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு இவர்களின் தியாகம் தெரிந்திருக்கிறது? எத்தனை பேர் இவர்களின் இலட்சியங்களை கையிலெடுத்துக் கொண்டார்கள்? எத்தனை பேர் இவர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்?

"நம்ம தலைவர் படம் எப்படா ரிலீஸ் ஆகும்?"
"நாளைக்கி அவ என்ன படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்லிருக்காடா எப்படியாச்சும் அப்பா கிட்ட இருந்து ஆயிரம் ரூபாய கரெக்ட் பண்ணனும்டா"
"இந்த செமஸ்டர்ல எப்படியாச்சும் 85% மார்க் வாங்கி பிளேஸ்மெண்ட்ல செலக்ட் ஆகி எப்படியாச்சும் பாரின் போய் செட்டில் ஆகிடணும்"
"அவ 9 நாளா என் கிட்ட பேசல மச்சி சாகணும் போல இருக்குடா"
இவைகள் தானே இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் வரிகள் ஆகிப் போனது.

வெறும் தேர்விலும், காதலிலும் ஏற்படுகின்ற தோல்வியால் உயிரை மாய்த்துக் கொள்பவர்களும், சாலையில் அடிபட்டு உயிருக்காக போராடும் மனிதர்களைப் பார்த்து வெறும் "உச்" மட்டும் கொட்டுபவர்களும், அதைக் கண்டும் காணாமலும் செல்பவர்களும் தானே இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.....

நேற்று எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் நள்ளிரவில் திடீரென்று போன் செய்து, "மச்சி அவள உண்மையா லவ் பண்ணுனேன்டா, அவ அவ ப்ரெண்ட்ஸ் பேச்ச கேட்டு என்ன கழட்டி விட்டுட்டாடா. என்ன கடைசி வர புரிஞ்சிக்காமலே போய்ட்டாடா. என்னால அவ கிட்ட பேசாம இருக்க முடியல. அவ நெனைப்பாவே இருக்கு. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. நான் சாகப் போறேன்டா. என் சாவுக்காவது அவ வருவாளான்னு பாப்போம்" என்று தழுதழுத்த குரலில் கண்ணீரோடு போனை தூண்டித்து விட்டான். எனக்கோ உள்ளுக்குள் ஒரே பயம். அவனது மரணத்திற்குப் பின்னான சம்பவங்கள் என்னை பாடாய் படுத்தி எடுக்கத் தொடங்கின. அவனுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன். கடைசி வரை எடுக்கவே இல்லை. போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டிருந்தான். வெகு நேரப் போராட்டத்திற்கு பின்பு என்னை அறியாமலே உறங்கிப்போனேன். காலையில் அவன் நினைவு வரவே மீண்டும் அவனுக்கு முயற்சி செய்தேன். ரிங் போய்க் கொண்டே இருந்தது. அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு அவனுக்குப் பதிலாக அவன் அம்மா போன் எடுத்து "தம்பி அவன் தூங்குறான்பா. 7 மணிக்கு அவன எழுப்பிப் பார்த்தேன். அவன் இப்ப தூங்க விடுங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துகிட்டான்" என்று சொன்னார்கள். அப்போது தான் எனக்கு உயிரே வந்தது போல இருந்தது. "சரிம்மா அவன் எந்திரிச்சதும் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க" என்று கட் செய்தேன்.

இரவு 10 மணி இருக்கும் மீண்டும் அவனிடமிருந்து போன் வந்தது. ஆனால் இம்முறை ரொம்ப அமைதியாக "மச்சி, சாரிடா நேத்து ரொம்ப டென்சன் ஆகிட்டேன். போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். நான் உண்மையா தான்டா அவள லவ் பண்ணுனேன். அவ மேல இருக்குற அக்கறையில தான்டா அவ கிட்ட கோபமா நடந்துகிட்டேன். அவ என்ன புரிஞ்சிக்காம போன அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்? அவ ப்ரெண்ட்ஸ் என்ன சொன்னாலும் அவளுக்கு புத்தி எங்கடா போச்சி? அவளுக்கு அவ மேல இருக்குற நம்பிக்கை அவ்வளவு தான்னு புரிஞ்சிகிட்டேன். இப்ப கூட அவள நெஜமாவே விரும்புறேன். அவள நான் தப்பாவே நெனைக்கல. அவ போயிட்டா என் காதல் பொய்ன்னு ஆகிடுமா? என்ன கல்யாணத்துக்கு அப்புறம் போறது கொஞ்சம் சீக்கிரமா போய்ட்டா அவ்வளவு தான். நா செத்துட்டா என் வீட்ட யாரு பார்த்துப்பா? நல்லா படிச்சி நாட்டுக்கு நல்லது பண்ணனும்ங்கிற என்னோட லட்சியம் என்ன ஆகுறது. ஒரு சப்ப விசயத்துக்காகவா உயிர விடப்போறோம்ன்னு தோணிச்சி. முடிவ மாத்திகிட்டேன். கொஞ்ச நாளைக்கி வலி இருக்க தான் செய்யும். அப்புறம் தானா பழகிக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணுனா அதுவே போதும்டா. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்" என்று சொன்னான். நிஜமாக அப்போது அவனுக்குள் உண்மையான ஒரு மாவீரன் எனக்குத் தெரிந்தான்.

"இயற்கையையும், வலிகளையும் எதிர்த்து எந்த உயிர் வாழப் பழகுகிறதோ அதுவே நிலைக்கும்"
                                                                                                                       - சார்லஸ் டார்வின்


                                                                       என்றும் புன்னகையுடன்
                                                                                வெ.அருண்பாரதி
Read more...
Monday, 21 November 2011

வால் ஸ்ட்ரீட் போராட்டமும் - மத்திய,மாநில அரசுகளும் :

0 comments
உலக அளவில் வீழும் முதலாளித்துவம் :

முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை அமெரிக்க அரசு கடுமையான அடக்குமுறைகளால்  அடக்கி விட முயற்சிக்கிறது.கலிபோர்னியா மாகான பல்கலைகழக மாணவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக வால்ஸ்ட்ரீட் கைப்பற்றும் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள் என்ற காரணத்தினால் ஒபாமா அரசு மாணவர்கள் மீது மிளகு ஸ்ப்ரேயை அடித்தும் கைகளை பின்புறமாக கட்டியும் கடுமையான சித்தரவதை செய்து கைதும் வருகின்றனர்.ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள்,பொது மக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உலக அரசியலும் தேசிய ,உள்ளூர் அரசியல்  :

தற்போது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களும்,இளைஞர்களும் ,பொது மக்களும் வீதிகளில் இறங்கி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக போராடுகிற சூழலில் நம் நாட்டிலும் மத்திய , மாநில அரசின் தவறான கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து போராட வீதிகளில் இறங்கி போராடும் வரை,விடிவு காலம் நமக்கு இல்லை !மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வை கட்டுபடுத்துவதில் எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்ததாக தெரியவில்லை.அதே போல் தமிழகத்தில்  உள்ள அ.தி.மு.க மற்றும் புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பது இவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.

மக்கள் மனதில் செல்வாக்கை இழந்த மாற்று ஆட்சி ?

புதுச்சேரியில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் மாறாக  வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல முதலமைச்சரின் தொகுதியில் உள்ளவர்களுக்கே மீண்டும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளிவருகிறது.இது ஒரு தொடர் கதை என்பது போல் புதுச்சேரியில் அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பலர் பொது மக்கள் கூறக்கூடிய பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மக்கள் முதல்வரிடம் தெரியபடுதுகிறோம் என்றே கூறுகின்றனர்.புதுச்சேரி மக்கள் காங்கிரசுக்கு பதில்  ஒரு மாற்று அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு அமைய வேண்டும் என தீர்மானித்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாக்களித்தனர்,ஆனால் தற்போது இருக்கும் நிலையில் வருகின்ற மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட நிதி இருக்குமா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாற்றம் வந்ததா ?

ஊழலில் மூழ்கிப்போன தி.மு.க விற்கு மாற்றாக அ.இ.அ.தி.மு.க விற்கு வாக்களித்தனர்.ஆனால் வாக்களித்த மக்களுக்கு வாய்கரிசி போடுவதையே தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.தேர்தலின் பொது இலவச சலுகைகளை அள்ளி வீசிய அம்மா அவர்கள் தற்போது வாக்களித்த மக்களுக்கு ஏத்து ஏத்துன்னு  மின் கட்டணம்,போக்குவரத்து கட்டணம்,பால் விலை உயர்வு என சர மாறியாக வரலாறு காணாத வகையில் விலையை உயர்த்தியும் சாமர்த்தியமாக இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக தமிழக மக்களிடம் முதல்வர் நேரடியாக ஒரு நீண்ட உரையை ஆற்றினார் என்று பார்த்தால் வாழைபழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் விலைவாசி உயர்வு தவிர்க்கபடாதது என்று பேரிடியை மக்கள் தலையில் போட்டுள்ளார்.

நம் மண்ணில் போராட்டத்தை  எப்போது நாம் துவக்கபோகிறோம் ?

உலகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் , பொது துறைகள் தனியாருக்கு தாரை வார்பதர்க்கு எதிராகவும் ,வேலையின்மைக்கு எதிராகவும், கல்வி வியாபாரத்திற்கு எதிராகவும்,ஊழலுக்கு எதிராகவும்,அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் ஊதிய வெட்டுக்கு எதிரான பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு எதிராகவும்,உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகவும்,ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகவும்    ஐரோப்பா  மற்றும் அமெரிக்க நாடுகளில் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள்  என அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பெரும்எண்ணிக்கையில் கடுமையான அடக்கு முறைகளையும்  மீறி போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நம் தேசம் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்:

அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் எப்போது துவங்க போகிறோம்.அநீதியை கண்டு கோபப்படுபநேயானால் நாம் தோழர்கள் என்று மாவீரன் சே குவேரா கூறியிருப்பதை நினைவில் கொண்டு கோபப்படுவோம்.மத்தியில் ஆளும்  காங்கிரஸ் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்.
                                                             ஒன்றுபடுவோம் !
                                                                     போராடுவோம் !
                                                                             வெற்றிபெறுவோம் !
                                                                                                           கட்டுரை : அ.ஆனந்த்                         
Read more...
Thursday, 17 November 2011

Occupy Wall Street Struggle : SFI Supports the Struggle

0 commentsDemonstration of Sfi puducherry to support the struggle Occupy Wall Street against the Capitalism.we will join together to support the struggle in India.
Read more...
Sunday, 13 November 2011

புதுவையில் வால்ஸ்ட்ரீட்க்கு ஆதரவாக நவம்பர் 17ல் வெற்றிகரமான போராட்டம் நடத்தப்பட்டது :

0 comments

mudhalஅம்பானிக்கு சலாம் போடும் மன்மோகன்சிங்ஐ  கண்டிப்போம் :

உலக உழைக்கும் மக்களின் ரத்தத்தை குடித்து வளரும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக வீரப்போராட்டம் நடத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம் !
                                              நம் தேசத்திலும் பக்கா சூர பன்னாட்டு கம்பனிகளிடம் அடகு வைக்கும் மன்மோகன் சிங்கை கண்டிப்போம்!கார்பரேட் கம்பனிகளின் சுரண்டலை தடுக்க ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.
                                               நியாயத்திற்காக  குரல் கொடுக்க நீங்களும் நாங்களும் இணைவோம்.உங்கள் வருகைக்காக காத்திருக்கும் இந்திய மாணவர் சங்கம் , புதுவை பிரதேச குழு .

                            சுற்றும் வரை பூமி!
                                       எரியும் வரை நெருப்பு !!
                                                   போராடும் வரை மனிதன் !!!
                                                                                                                நீ?
மிகச்சிறப்பான போராட்டம் அநேகமாக வால்ஸ்ட்ரீட் கைப்பற்றுவோம் போராட்டதிற்கு  ஆதரவாக  தென்னிந்தியாவில் நடைபெற்ற முதல் போராட்டமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.புதுவை முழுவதும் ஏறக்குறைய 40  க்கும்  மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
நாள்:17/11/2011                                                             இடம்:நெல்லித்தோப்பு மார்கெட் 
                                                                                                                     (புதுச்சேரி )
நேரம்:05:30 p.m.
Read more...
Saturday, 12 November 2011

சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்:

0 comments
வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் நடப்பாண்டிலேயே துவங்கும் என்று கூறிய அவர், வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு நவீன முறையில் பயிற்சிகள் தரப்படும்.
புதுமையான எண்ணங்களோடு அவர்கள் பணிகளில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். விவசாயம், உற்பத்தித்துறை, கட்டுமானம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக, 1,075 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில்பாதையை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்களோடு, பெரிய இளைஞர் பட்டாளத்தை
யும் இறக்கிவிடப் போகிறார்கள். கட்டுமானத்துறை வல்லுநர்களாக அந்த இளைஞர்களை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டத்தால் 3 ஆயிரத்து 500 கவுரவமாக வேலைகள் உருவாகப் போகிறது. இத்தனைக்கும் இப்பணியின் முதல் கட்டத்திலேயே இவ்வளவு வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

வெறும் உடலுழைப்பு மட்டுமல்லாமல், அறிவுசார்ந்த பணியாகவும் இவற்றில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சாவேஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.தொடரும் தேசிய மயம்
குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.

இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இருந்தன. அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்த நிலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய சாவேஸ், இது மக்களின் சொத்தாகும். ஒரு சிலரின் சொத்தாக மாற்றும் அவர்களது முயற்சி நீர்வழிகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தவே உதவும் என்று குறிப்பிட்டார். இந்த தேசமய நடவடிக்கையால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். மாடு வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள். அதைச் செய்ய தேசமய நடவடிக்கைதான் ஒரேவழி. அரசுத்தரப்பில் பேசியபோது நிறுவனத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் டாலர்கள் கேட்கிறார்கள். அதனால் வலுக்கட்டாயமாகத்தான் இந்த நிறுவனத்தை மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளோம் என்றார்.

“சமூக உற்பத்தி வர்த்தகம்”வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அடுத்த உத்தியாக சமூக உற்பத்தி வர்த்தகம் என்ற திட்டத்தையும் சாவேஸ் அறிவித்துள்ளார். அராகுவா மற்றும் கராபோபோ மாகாணங்களுக்கு இடையில் உள்ள டகாரிகுவாஸ் என்ற இடத்தில் இந்தத் திட்டத்தை வெனிசுலா அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் பத்து சமூக உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைக்கிறார்கள். இது பற்றிப் பேசியுள்ள சாவேஸ், முதலாளித்துவவாதிகளின் கைகளில் இந்த நிலங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உணவில் தன்னிறைவு என்ற இலக்கையும் சேர்த்து அடையும் நோக்கத்தோடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சாவேஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது வெனிசுலா மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருந்தனர். சாவேசின் முன்முயற்சிகள், தேசமய நடவடிக்கைகள் அந்த இறக்குமதியில் பெரும் அளவைக் குறைக்க உதவின. பதுக்கலை ஒழிக்கவே உணவுத்துறையில் செயல்படும் பெரும் நிறுவனங்களை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றி வருகிறோம் என்கிறார்கள் வெனிசுலா அரசு அதிகாரிகள்.

சே மிகவும் சரியாகவே சொன்னார். இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் என்கிறார் சாவேஸ்.
Read more...

பெட்ரோல் விலை - நிர்ணயத்தில் மறைக்கப்படும் உண்மைகள்:

0 comments
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை    -    ரூ. 24.23

சுங்கத்தீர்வை    -    ரூ. 14.35

கல்விவரி    -    ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன்    -    ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு    -    ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு    -    ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி    -    ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி-     ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி    -    ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு-     ரூ. 6.00

மொத்தம்    -    ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம்தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யத் துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

                         நிகரலாபம்        அரசுக்கு செலுத்திய வரி    மொத்த லாபம்
                        (கோடியில்)        (கோடியில்)            (கோடியில்)

ஐஒசி                        5294 .00                     832.27                6126.27   
எச்பிசிஎல்              2142.22                        90.90                2233.12
பிபிசிஎல்                2142.22                      198.00                2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட்ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்.

-எம்.கண்ணன்
Read more...
Monday, 7 November 2011

நவம்பர் புரட்சியும் - வால் ஸ்டிரீட் போராட்டமும்

1 comments


செப்டம்பர் மாதம்தான் அது நடந்தது. உலகம் அதிர்ந்து பார்த்த, யாரும் நெருங்க முடியாது என யூகிக்கப்பட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இரட்டைகோபுர தாக்குதல். அது நடந்து 10 ஆண்டுகள் வேகமாய் ஓடிவிட்டது. இதோ 2011 மீண்டும் அதே செப்டம்பரில் அமெரிக்காவின் தலைவலி துவங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகம் யாருக்காக படுகொலைகளை உகலம் முழுவதும் செய்து வருகிறதோ அந்த முதலாளிகளின் தலைமையகமான வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவேம் என்று பேர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள். 

செப்டம்பரில் சிலநூறு போராளிகள் துவங்கியப் போராட்டம் இரண்டு மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை வீதியில் இறக்கியுள்ளது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கூட அதிராதா அமெரிக்க "வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றியதால், நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என மக்கள் போராடுவதை பார்த்து பதறி துடிக்கிறது. எங்களுக்கு வேலை இல்லை. குடியிருக்க வாடகை வீடு இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன்தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர். ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள் ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாகரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி.எங்கள் வாழ்க்கையை நீங்கள் முடக்கினீர்கள் இதோ உங்களை நாங்கள் முடக்க வருகிறோம் என அணிதிரண்டுள்ளனர்.

  அமெரிக்காவில் 10 கோடி மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். 5 கேடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கேடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பெயர்கள்தான் வேற்றுமையுடையவை அவை இரண்டும் முதலாளிகளின் கைக்கூலி கட்சிகள்தான். அவர்களின் நிதியால்தான் இவர்கள் மாறிமாறி ஆட்சியை பிடிக்கின்றனர். ஆகவேதான் வால் ஸ்டிரீட் முற்றுகையை வர்க்கப்பேர் என்று புரிந்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். முதலாளித்துவப் பெருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகின்றனர். பாக்ஸ் நியூஸ் என்ற தெலைக்காட்சி வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதே அதுதான் உலகின் முதன்மை அபாயம் என அறிவிக்கிறது.

வர்க்க போர் என்ற சொல்லாடல் ஏன் உலக முதலாளிகளை, அல்லது ஏகாதிபத்திய சக்திகளை ஏன்அச்சுறுத்துகிறது?? அதுதான் நவம்பர் புரட்சியின் வெற்றி. 

நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெருமையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதி பாடிய புரட்சி. இந்த உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் மனித தன்மையில்லாமல் சுரண்டப்பட்டனர். பாட்டாளிகளின் உழைப்பை முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச்சுரண்டினர். மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது. 

இந்தப்புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியன் என்ற அதுவரை உலகம் கண்டிராத புதிய அரசுமுறை அமைந்தது. உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது.அதுவரை இருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. மக்கள் ஆட்சியாளர்களை சந்திக்கும் முறை மாறி அரசு மக்களை சந்தித்தது. மக்கள் வாழ்க்கை முன்னுக்கு நிறுத்தப்பட்டு அவர்களுக்கான வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட்டது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் கூட தவிர்க்க இயலாமல் சில சலுகைகளை தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சேமநல அரசு என்ற சொல்லாடல் இதன் பின்தான் வந்தது.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்பு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலேயே தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இதன் கதிர்வீச்சு ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், பேர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக தாவிப்பரவும் போராட்டம் இஸ்லாமிய நாடுகளிலும் பற்றியுள்ளது. 

பின்லேடனுடன் ஆயுதம் சுமந்த எகிப்து இளைஞர்கள் ஆயுதங்களை தூர எரிந்து உழைப்பதற்கு வேலை கொடு! பசித்தவனுக்கு உணவு கொடு என போராட்டகளத்தில் குதித்தனர். இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டம் உலக அரங்கில் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபிறகு தொழிலாளர்களைச் சுரண்டுவது அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒடுக்க முயல்கின்றன.

எப்போது நம் நாட்டில் ?
இப்போது நம்முன் ஒரே கேள்விதான் முன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது. மக்களை கொள்ளையடிக்கிறது. அமெரிக்க மக்கள் சுரண்டலுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றனர். போராடுகின்றனர். இந்திய அரசு அமெரிக்க அரசை பார்க்கிற போது, இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்? 

Read more...
Sunday, 6 November 2011

சரிந்து கொண்டு இருக்கும் ரங்கசாமி இமேஜ்!

0 comments
 
புதுவையில் மாண்புமிகு மக்கள் முதல்வர் பதவி ஏற்று 100 நாட்கள் ஆனா நிலையில்  அவருடைய  என்.ஆர்.காங்கிரஸ் அரசின் சாதனையாக தற்போது 
30 கொலைகளுக்கு மேல் நடைபெற்றுள்ளது.இருபினும் முதலமைச்சர் ரங்கசாமி இது வரையிலும் எந்த  ஒரு உருப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் சட்டம்  ஒழுங்கை பாதுகாக்கவும்  எடுத்ததாக தெரியவில்லை.

பட்ட பகலில் எஸ்.பி. அலுவலகம் அருகே கொள்ளை:

புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு கடையில் இன்று காலை பட்ட பகலில் ஒரு ரௌடி கத்தியை காட்டி அந்த துணி கடையில் உள்ள துணிகளை அள்ளி சென்றுள்ளனர்.குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமி வீட்டின் அருகே கடந்த வாரம் அவருடைய கட்சி காரர் வெட்டி படுகொலை செய்யபட்டார்.இக்கொலையில் சரண்டர் ஆன  குற்றவாளிகள் உண்மையான குற்றவாளிகளா?என்ற சந்தேகம் புதுச்சேரி மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனினும் இக்கொலையில் சரண்டர் ஆன குற்றவாளிகளில் சிலர் உண்மையான குற்றவாளிகள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாணவர் சிறப்பு பேருந்து விபத்து:
                                                  
 புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் இயக்கப்படும் மாணவர் சிறப்பு பேருந்து கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி 13 வயது மாணவி பலியானார்.இப்பேருந்து விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்திற்கு இரண்டரை லட்சம்  ரூபாயும்  படுகாயமடைந்த  மாணவர்களுக்கு தலா ரூ.5000 மும்எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவர்களுக்கு 
ரூ.10,000மும் வழங்க  உத்தரவிட்டார்  புதுவையின் மக்கள் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.ஆனால் பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
                     
   
நடவடிக்கை எடுக்காத முதலமைச்சராக ரங்கசாமி:
                                                               
தனியார் பேருந்து முதலாளிகளுக்கு சாதகமாக ஒரு கூட்டத்தை கல்வித்துறை வளாகத்தில் ஆள்மாறாட்ட அமைச்சர் தலைமையில் நடத்தி அக்கூட்டத்தில் புதுவை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டைக யோசிதிருப்பதும்,மாணவர் சிறப்பு பேருந்து ஓட்டுனர்கள் சீருடையுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என புதுவை கல்வித்துறையின் ஐடியா மணிகள் ஆலோசனைகளை கூற அதை அப்படியே பேருந்து முதலாளிகள்
ஏற்றுகொல்வார்களாம்! என்ன தான் பேருந்து  முதலாளிகள் ஏற்றுக்கொண்டாலும் பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள் செக்கரிடம் பேருந்தை ஓட்ட குடுக்காமல் இருப்பார்களா?
                              

          வழக்கம் போல் மக்கள் பிரச்சனைகள் குறித்து எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை சின்ன காமராஜர் எடுப்பார் என்று 
அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேருந்து முதலாளிகளுக்கு சாதகமாக  நடவடிக்கை எடுக்காத நிலை நீடித்து கொண்டு இருக்கிறது.முதலமைச்சர் ரங்கசாமி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களளுக்கு அவர்மீது இருந்த  செல்வாக்கு  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதாகவே
பேசப்படுகிறது.............
                                                                         கட்டுரை:அ.ஆனந்த்,செயலாளர்
                                                                                             இந்திய மாணவர் சங்கம் 
                                                                                                                 புதுச்சேரி 
Read more...
Tuesday, 1 November 2011

புதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை

0 comments


கல்வித்துறை முன்பு கொட்டும் மழையில் வாலிபர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி பகுதியில் 40 பயணத் தடங்களிலும் காரைக்காலில் 10 வழித்தடங்களிலும் இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த போருந்துகள் அனைத்தும் ஆளும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரின் பயன்பாட்டு நிலையில்லாத குப்பை பேருந்துகள் என்பதோடு, மோசமான பிரேக் சிஸ்டம், மழுங்கிப்போன டையர், மக்கிப்போன கூடு என ஏழை குழந்தைகள் பயன்பாட்டு மிக பெருந்தன்மையோடு பஸ் முதலாளிகள் கொள்ளை அடிக்கும் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு பேருந்து 43  சும்மா இருந்தபோதும் தனியார் பேருந்துகள் பயன்படுத்துவதன் நோக்கம் தெளிவு. 

மாணவர் சிறப்பு பஸ் கவிழ்ந்து விபத்தில் பலியான பள்ளி மாணவி  விவசாய தொழிலாளியின் ஒரே மகள் ஆவார். புதுவை அரசு கல்விதுறை சார்பில் பள்ளி மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்ய மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பாகூரில் இருந்து கரையாம்புத்தூருக்கு ஒரு பஸ் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்கிறது.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் இந்த பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ் வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்து மாணவர்கள் ஒருவரொடு ஒருவர் முட்டி மோதினர்.
 இதனால் படுகாயம் அடைந்த மாணவிகள் அலறி துடித்தனர். மாணவர்கள் அலறல் சத்தத்தை கேட்ட அந்த வழியாக வந்தவர்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை மீட்டனர். படுகாயமடைந்த மாணவர்கள் 40 பேர் கடலூர், பாகூர் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இதில் கடலூர் கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு மாணவி உயிரிழந்தார். அவள் பெயர் ஹேமாவதி. 12 வயதான இவள் பாகூர் கஸ்தூரிபாய் மேல்நிலைபப்ள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளது தந்தை மண்ணாங்கட்டி. தாயார் வென்னிலா. விவசாய கூலி இதில் ஹேமாவதி ஒரே மகள் ஆவார். விபத்தில் மாணவி பலியானதை தொடர்ந்து கடுவனூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்துக்கு உள்ளான பேருந்தை 17 வயது நபர் ஓட்டியதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த உடன் அவர்களை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை , அப்படி மீறி   மருத்துவமணைக்கு கொண்டு வந்தபோது பணியல் இருக்கவேண்டிய 4 மருந்துவர்கள் தனியார் கிளினிக்கு சென்று இருந்தனர், இப்படிப்பட்ட மோசமான அரசு நிர்வாகமும் அந்த பேருந்துகளை கண்காணிக்கவேண்டிய கல்வித்துறையும்  சேர்ந்து இந்த படுகொலையை நடத்தி உள்ளனர் என்றே கூற வேண்டும்.

 இந்த படுகொலையை கண்டித்து இன்று பந்த் நடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அனைத்து மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்தவுடன். புதுவை அரசு பள்ளிளுக்கு வேண்டும் என்றே விடுமுறை அளித்து உள்ளது. கண்டிக்கதக்கது.  இருந்தபோதிலும் இந்திய மாணவர் சங்கமும் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இனைந்து கல்வித்துறையை கண்டித்து முற்றுகைப்போராட்டம் நடத்தியது. மேலும் தீவிரமான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது. 

Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com