Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 5 October 2011

கல்வி-ஆயுதபூஜை:

0 comments
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாடியிருக் கிறார் மகாகவி பாரதி. கல்விக்கு சரஸ்வதி என்று ஒரு கடவுளை உருவாக்கியது மட்டுமின்றி, சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.


எளிய மக்கள் இந்த நாளை ஆயுதபூஜை என்று அழைக்கிறார்கள். தொழில் கருவிகள் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாக புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் தொழிலாளியின் உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வளர்ந்த போதும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது நவீன வடிவத்தில் தொடர்கிறது.


சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நாளில் சமச்சீர் கல்வியின் ஒருபகுதியான பொதுப்பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கே பட்டபாட்டையும் நடத்திய போராட்டங்களை யும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில் லை. தேசத்தின் செல்வ வளமும் அறிவு வளமும் அனைவருக்கும் சென்றுசேர நீண்ட நெடிய போராட்டத்தை தொடரவேண்டியுள்ளது. அதன் முதல்படியே சமச்சீர் கல்விக்கான போராட்டம் ஆகும். ஒரு காலத்தில் சாதியின் பெயரால் மறுக் கப்பட்ட கல்வி, இன்றைக்கு பணத்தின் பெய ரால் மறுக்கப்படுகிறது. சரஸ்வதி படத்திற்கு மாலை போடுவது அல்ல, எளிய குழந்தைகளின் கைகளில் பாடப்புத்தகங்கள் வந்து சேர்வது தான் கல்விக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.


இந்தநிலையில் வெளிவந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புதுவை மாநில கல்வியமைச்சர் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளாராம். 20 ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தோற்ற இவர், இப் போது கல்வி அமைச்சராகிவிட்டார். 10வது படிப் பை முடிக்கவேண்டும் என்று இவர் ஆசைப் பட்டதில் தவறில்லை. ஆனால் அது தம்மால் முடியாது என்று கருதி வேறு ஒரு ஆளை ஏற்பாடு செய்து தேர்வு எழுத அனுப்பி யிருக்கிறார். இப்போது இது சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இவரது நிர்வாகத்தில் கல்வித்துறை என்ன பாடுபடும்?


மறுபுறத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் பெரிய கல்விமான் என்றும் சட்டப்புலி என்றும் கூறப்படுபவர். ஆனால் இவருடைய பிரதானப் பணியே பெரும்பகுதி மக்களை கல்விச் சாலைக்குள் நுழையவிடாமல் தடுப்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்வதுதான். எதற்கெடுத் தாலும் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்று மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதோடு தாய்மொழி வழியிலும், அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை விரட்டும்வேலையில் ஈடுபட்டுள்ளார் இந்த உலகமய உபாசகர்.


அண்மையில், தில்லியில் ஒரு கல்லூரியில் 100க்கு 100 மார்க் வாங்கியிருந்தால்தான் பி.காம். படிப்பில் சேர முடியும் என்று நிபந்தனை விதிக் கப்பட்டது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி, இவர்கள் ஷேக்ஸ் பியர் வந்தால்கூட ஆங்கில இலக்கிய வகுப்பில் சேர்க்க மாட்டார்கள் என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.


கல்வி என்பது கல்விக்கூடங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த சமூகம் தொடர்புடைய ஒரு பிரச்சனை. வகுப்பறைகள் மட்டுமின்றி பாடத்திட்டமும் பயிற்று முறையும் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். மனப்பாட அறிவு மட்டுமே அறிவு என்ற மாயை மாற்றப்படவேண்டும். கல்வி பூஜைக்குரிய ஒன்றல்ல. அது சமூக மாற்றத்திற் கான ஆயுதம்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com