Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 25 October 2011

வெடிச்சத்தம் தாங்க முடியாமல் வெளியே வந்த மாண்புமிகு கல்யாணசுந்தரம்?

0 comments
காணாமல் போன ஆள்மாறாட்ட அமைச்சர் சட்டசபைக்கு தீடீர் விஜயம்:
கடந்த இரண்டு வாரங்களாக திண்டிவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலக கோரி இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.மேலும் காங்கிரஸ்,அ.இ.அ.தி.மு.க உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

தலைமறைவான அமைச்சர் :

தமிழக காவல் துறை எந்நேரத்திலும் கைது செய்யும் என்பதை அறிந்த அமைச்சர் புதுவையில் இருந்து தலைமறைவானார்.ஒரு மாநிலத்தின் கல்வி அமைச்சர் இரண்டு வாரங்களாக எங்கு இருக்கிறார் என்பது கூட மாநிலத்தின் முதலமைச்சருக்கும்,சபாநாயகருக்கும் தெரியவில்லை என கூறியிருப்பது சாதாரண மக்களையும்  சந்தேகமடைய செய்கிறது.கல்விஅமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர்களையெல்லாம் பதவியில் உட்கார வைத்ததால் தான் என்னவோ  முதலமைச்சர் ரங்கசாமி போகும் இடங்களில் எல்லாம் புதுவையின் கல்விதரம் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்கிறாரோ?

 யார் வெடித்த வெடியோ வெளியே வந்த அமைச்சர் :

கிராமங்களில் வயக்காட்டில் உள்ள எலிகளை விரட்ட பட்டாசுகளை கொளுத்தி போடுவார்கள்.பொந்துகளில் மறைந்து கிடக்கும் எலிகள் எல்லாம் வயக்காட்டை விட்டு வெளியே ஓடி வரும் அது போல எதிர்கட்சிகள் கொளுத்தி போட்ட வெடிகளால் இரண்டு வாரங்களாக காணமல் போன அமைச்சர் தீடீரென சட்டசபைக்கு வந்துள்ளார்.

இலவச அறிவிப்புகளும் கண்துடைப்பு நாடகங்களும்:


தீபாவளிக்கு இலவச சக்கரை,கோதுமை என மக்கள் நல திட்டங்கள் என புதிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் தீடீரென அமைச்சர் சட்டசபைக்கு வந்து தனது வழக்கமான பணிகளை செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் இருப்பவர் யார்?முதலமைச்சர் மௌனமாக இருந்ததற்கு காரணம் என்ன?ஒரு வேலை அமைச்சர் செய்த தவறுக்கு உடந்தையாக இருக்கிறவர்கள் யார்?என்ற கேள்விகள் நம் முன் எழுகிறது.

முதலமைச்சரின் பிடி கல்யாணசுந்தரதிடமோ?

அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் கூட வழக்கம் போல் மௌனத்தை கலையாதவராய் முதலமைச்சர்  காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவே தெரிகிறது.இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது பல்வேறு கட்சி தலைவர்கள் ஆங்காங்கே பேசும் போது ஏதோ சி.டி வெளியிடுவோம் என பேசி வருகிறார்கள்.ஒரு வேலை அது உண்மையாக இருக்குமோ ?அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இன்னும் அப்பா பைத்தியம் சாமி உத்தரவு அளிக்கவில்லையோ என்னவோ? முதலமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி மாணவர் இளைஞர் சமுதாயத்தை  பாதிப்படைய செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

                                                                                            கட்டுரை:அ.ஆனந்த்,செயலாளர்
                                                                                                இந்திய மாணவர் சங்கம் 
                                                                                                      புதுச்சேரி 
Read more...
Sunday, 23 October 2011

உலகம் முழுவதும் வீழத்தொடங்கும் முதலாளித்துவம்:

0 comments

“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்

            வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!
                         அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது.
                                       கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க வில்லை.
                                 அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத் திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.
                           பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங் கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
                         'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதி யத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
                        உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட் ங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.
                                முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் நிச்சயம் நம்நாட்டிலும் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Read more...
Tuesday, 18 October 2011

ஐந்து மாதமாக ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிய பள்ளி:

0 comments
இந்தியாவிலேயே  முதல் இடத்தில் புதுச்சேரியின் கல்விதரம்?
                          -புதுவைஅமைச்சர்கள் ...                                             

புதுவை வில்லியனூர் அருகே உள்ள கூடபாக்கம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் நியமிக்க படாததை கண்டித்து 18-10-2011 காலை கூடபாக்கம் எம்.ஜி.ஆர் சிலை அருகே மறியலில் ஈடுப்பட்டனர்.
பின்னர் பள்ளியை இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் , தலைவர் ஹரிஹரன் தலைமையில் முற்றைகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறையினர் மற்றும் கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த ஊசுடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திகேயன் ( MLA ) மாணவர்களை பள்ளியின் உள்ளே செல்லுமாறு கேட்ட பிறகும் மாணவர்கள் களைந்து செல்ல தயங்கினர்.பின்னர் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவர்களை போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வகுப்பு அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதால் வகுப்பறைக்கு சென்றனர்.
Read more...
Monday, 17 October 2011

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: மறு ஆய்வு இல்லை

0 comments
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெளிவுபடுத்தினார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் திட்டம் ஏதுமில்லை. இந்தச் சட்டம் தொடர்பான அனுபவங்களை இப்போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். சில காலத்துக்குப் பிறகு, அனுபவம், தேவை மற்றும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நாம் சில மாற்றங்களைச் செய்யலாம். இவையெல்லாம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இவை குறித்து இப்போதே நான் எதுவும் கூற இயலாது.

 இந்தச் சட்டத்தினால் அரசு மட்டுமல்ல, நீதித்துறையும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.


 அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணமும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. ரகசியத்தை ஒரு குமாஸ்தா மூலம் அறிந்துகொள்ள முடியுமெனில், நாம் ரகசிய காப்புப் பிரமாணத்தை மாற்ற வேண்டியதுதான். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம்.

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமா என்று என்னைக் கேட்டால், 'தேவையில்லை' என்றுதான் நான் கூறுவேன்.

 எந்தச் சட்டத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விரிவு படுத்த வேண்டுமெனில் விரிவுபடுத்தலாம்: மேலும் ஆழமாக்க வேண்டுமெனில் ஆழப்படுத்தலாம்: விதிவிலக்குகள் தரவேண்டுமெனில், விதிவிலக்கு தரலாம். தற்போது இச்சட்டத்திலிருந்து சிபிஐக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இச்சட்டத்தால் கேள்வி கேட்கப்படுகின்றன. ஏன் குறிப்பிட்ட நீதிபதி மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்? மற்றவருக்கு ஏன் அத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை? என்பது போன்ற கேள்விகளும் இச்சட்டத்தின் உதவியால் எழுப்பப்படுகின்றன என்றார் சல்மான் குர்ஷித்.
 
நிகழ்வில்:
தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைத்து பொது மக்களும் பயன்படுத்த வேண்டும்.தற்போது திகார் சிறையில் உள்ள பலரும் இச்சட்டத்தின்  மூலமாக எழுப்பப்பட்ட கேள்விகளாலே ஊழல் புகாரில் இருந்து தப்ப முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
Saturday, 15 October 2011

ஆள்மாறாட்ட புகாரை திசை திருப்பும் முயற்சியில் கல்வித்துறை அமைச்சர்:

0 comments

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் பத்தாம் வகுப்பு  தேர்வு எழுதியதில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது தமிழகத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வழக்கை திசை திருப்பும் முயற்சி: 
தலைமறைவு ஆகியுள்ள அமைச்சர் கல்யாணசுந்தரம் அவருடைய தேர்வு           ( HALL-TICKET )மைய நுழைவு சீட்டு தொலைந்துவிட்டதாகவும் தனக்கு வேண்டாதவர்கள் தம்மை வேண்டும் என்றே ஆள்மாறாட்ட புகாரில் சிக்க வைக்க வேறு ஒரு நபரை தேர்வு மையத்துக்கு அனுப்பி தன்னை சிக்க வைத்துள்ளதாக கூறபோகிறாராம் .நீதி மன்றத்தில் வழக்கை திசை திருப்பும் முயற்சியில்  சட்டநிபுணர்களின் துணையோடு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பொய் என்று கூற உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

அமைச்சர் பதவியில் இருந்து விலக மாட்டாரம்:
புதுச்சேரி கல்வி அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில் இடியே தலையில் விழுந்தாலும் ,சுனாமியே வந்தாலும் எனக்கென்ன என்பது போல்  அப்பா பைத்திய சாமியின் உத்தரவுக்கு பிறகே  மௌனத்தை கலைப்பாரா  முதலமைச்சர் ரங்கசாமி என்பதை பொறுத்திருந்து பார்போம்.

விரைவில்.....

அதுவரையில் மௌன சாமியாக.........

வாக்களித்த மக்களையும் மௌன சாமியாக மாற்றும் முயற்சியில்..................


Read more...

அரசு விழாவில் விடுபட்டுள்ள அமைச்சரின் பெயர்:

0 comments
புதுச்சேரி கல்வி மற்றும் கலைப்பண்பாட்டு 
துறை அமைச்சர் 
கல்யாணசுந்தரம் 10ஆம் வகுப்பு தேர்வில் 
ஆள்மாறாட்டம செய்து சிக்கியதை அடுத்து 
அவர் தற்போது 
எங்குதான் இருக்கிறார் என்றே 
தெரியவில்லை.தற்போது 
கலைப்பண்பாட்டுதுறையின் 
சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி 
நடைபெறும்.இக்கண்காட்சியை அமைச்சர் தான் திறந்து 
வைப்பார்.ஆனால் அமைச்சர் காணததால் 
துறையின் செயலரே திறந்து வைக்கும் துர்பாக்கியம் புதுச்சேரிக்கு 
ஏற்பட்டுள்ளது.

Read more...
Friday, 14 October 2011

Chile's Commander Camila, the student who can shut down a city

0 comments

World news | Chile

Camila Vallejo's call for better and cheaper education has seen student protests transform into a two-day nationwide shutdown

You're the first person to read this; we're updating now
Chilean student leader Camila Vallejo sits among a peace sign created from empty teargas canisters used by police against protesters. Photograph: Roberto Candia/AP Chilean student leader Camila Vallejo sits among a peace sign created from empty teargas canisters used by police against protesters. Photograph: Roberto Candia/AP Not since the days of Zapatistas' Subcomandante Marcos has Latin America been so charmed by a rebel leader. This time, there is no ski mask, no pipe and no gun, just a silver nose ring.
Meet Commander Camila, a student leader in Chile who has become the face of a populist uprising that some analysts are calling the Chilean winter. Her press conferences can lead to the sacking of a minister. The street marches she leads shut down sections of the Chilean capital. She has the government on the run, and now even has police protection after receiving death threats.
Yet six months ago, no one had heard of Camila Vallejo, the 23-year-old spearheading an uprising that has shaken not only the presidency of the billionaire businessman Sebastián Piñera, but the entire Chilean political class. Opinion polls show that 26% of the public support Piñera and only 16% back his recently ousted Concertación coalition.
Wednesday saw the start of a two-day nationwide shutdown, as transport workers and other public-sector employees joined the burgeoning student movement in protest.
"There are huge levels of discontent," said Vallejo in a recent interview. "It is always the youth that make the first move … we don't have family commitments, this allows us to be freer. We took the first step, but we are no longer alone, the older generations are now joining this fight."
Elected as only the second female leader in the 105-year history of the University of Chile's student union, Vallejo, who is also a member of the Chilean Communist party, is the face of a movement the likes of which has not been seen since the last years of Augusto Pinochet in the 80s.
Hundreds of thousands of high-school and university students have refused to go to lessons since early June, calling for better and more affordable education and an end to a two-tier system that creates a few wealthy, elite colleges amid many underfunded public ones. Vallejo has organised several cacerolazos – protests in which participants bang pots and pans. Some demonstrations have turned violent.
"We don't want violence, our fight is not versus the police or to destroy commercial shops … our fight is to recover the right to education, on that we have been emphatic and clear," said Vallejo as she stood outside the presidential palace.
The government has rushed out a number of initiatives to try to head off protests, promising to amend Chile's constitution to include a guarantee of quality education and cutting interest rates on student loans from 6.4% to 2%. But the promise of an extra 1.9 trillion Chilean pesos (£2.5bn) in education spending has done little to quell the uprising. Few analysts believe the students will back down despite a heavy police presence at recent demonstrations.
As she spoke, Vallejo was surrounded by students laying out a huge peace sign made up of hundreds of empty teargas canisters that had been used against students.
"Here we have more than 50m pesos' worth of teargas bombs," said Vallejo. "Imagine how much was used on the regional or the national level? This is unacceptable, we want to reiterate our demand that we made to the minister of the interior that he step aside."
Tatiana Acuña, a government official in the ministry of culture, was recently fired for suggesting that the assassination of Vallejo would end the protests. On Tuesday, Chile's supreme court ordered police protection for the student leader.
Vallejo has become a cult figure – with odes on YouTube and predictions that her charisma may well catapult her into Chilean politics. "We are all in love with her," said the Bolivian vice-president, Álvaro García Linera.
At a recent gathering of Bolivian youth leaders he urged students to follow the example of the youth movements in the rest of South America. "You need to talk about what is happening in Argentina, Brazil or Chile, where there is a young and beautiful leader, who is leading the youth in a grand uprising," said García Linera.
Vallejo said on the subject of her looks: "You have to recognise that beauty can be a hook. It can be a compliment, they come to listen to me because of my appearance, but then I explain the ideas. A movement as historical as this cannot be summarised in such superficial terms.
"We do not want to improve the actual system; we want a profound change – to stop seeing education as a consumer good, to see education as a right where the state provides a guarantee.
"Why do we need education? To make profits. To make a business? Or to develop the country and have social integration and development? Those are the issues in dispute."
Read more...
Wednesday, 12 October 2011

விலை பேசப்படும் புதுச்சேரி மாணவர்கள் ?

0 comments
தாகூர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்:
 புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரதுக்கு ஆதரவாக தற்போது புதுவையில் சட்டக்கல்லூரி மாணவர்களும் இந்தியாவின்  தலை சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான தாகூரின் பெயரை கொண்ட தாகூர் கலை கல்லூரி மாணவர்கள் அமைச்சருக்கு ஆதரவாக போராட்டம் நடத்த விலை பேசப்பட்டுள்ளனர்.சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் நடிகை  சில்க்சுமிதா தற்கொலை செய்து இறந்த போது அதற்காக ஒரு நாள் வகுப்பை புறக்கணித்த கல்லூரியாக இருந்தது.குறிப்பாக  தற்போது  புதுவையில் உள்ள ஒரு சில தவறான பிற்போக்கான மாணவர் அமைப்புகளால் மீண்டும் மாணவர்கள் சீரழிக்கபடுகின்றனர்.
சட்ட மாணவர்கள் போராட்டம் :
இந்நிலையில் புதுவை சட்டகல்லூரி  மாணவர்கள் குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் தவறு இழைத்த அமைச்சருக்கு ஆதரவாகவும் போராட்டத்தை நடத்திவருவதாக தெரிய வருகிறது.
புதுவை சட்டகல்லூரி மாணவர்களை பொறுத்தவரை சுப்ரமணியபுரம் திரைபடத்தில் ஒரு காட்சியில் இடம்பெறும் வசனத்தில்  ஹீரோ எதற்காக நகரமன்ற தலைவரை ஏன் கொலை பண்ணீங்க  என்று கேட்கும் போது  பழக்கத்துக்காக செய்தோம் என்று வரும் அது போல என்ன கோரிக்கை என்று தெரியாமல் கூட போராட்டதில் மாணவர்கள் ஒருசிலர் கலந்து கொண்டுள்ளனர்.ஆனால் இப்போராட்டம் என்பது முதலமைச்சர் தூண்டுதலாலும்,அமைச்சருக்கு வேண்டியவர்களால் நடத்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகிறது.
N.R.காங்கிரஸின் மாணவர்கள் கூட்டத்தில்:
12/10/2011 மாலை புதுவை ஜவஹர் பால்பவனில் N.R.காங்கிரஸ் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது அதில் வரும் வெள்ளிகிழமை 14/10/2011 அன்று கல்வியமைச்சர் கல்யாணசுந்தரதுக்கு
ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனராம். 

உத்தமர் என்றும் ,அவர் மீது எந்த தவறும் இல்லையாம் ?
சமீபத்தில் ஒரு வார இதழில் இவர் செய்து வரும் பலான தொழில்கள் குறித்தும் ,இவர் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் குறித்தும் செய்திகள் வெளியாகின ,அது புதுவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கின.அப்போதே வாரஇதழில் வெளியான செய்தி குறித்து எதுவும் பேசாத முதலமைச்சர் இப்போது எங்கு பேச போறார்?

இது ஒரு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பழிவாங்கபடுவதாக மௌன சாமியார் அமைச்சருக்கு ஆதரவாக அனுதாபத்தை ஏற்படுத்திகொண்டு இருக்கிறார்?

புதுச்சேரி முதலமைச்சர் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய கல்வித்துறை  அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக,அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவர்களை போராட்டதிற்கு தூண்டும் வேலையை செய்துகொண்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யவில்லை தேவைபட்டால் அதையும் செய்வாரோ ?

மது,மாது ,பணம் என அத்துணையும் அமைச்சருக்கு ஆதரவாக போராடுபவர்களுக்கு  வாரி இறைக்கபடுவதாக தகவல்கள் வெளிவருகிறது.முதலமைச்சர் கல்வியமைச்சருடன் ஏதோ ஒரு விஷயத்தில் சரண்டர் ஆனதாகவும்,அதனால் தான் கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக இப்பிரச்சனையில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசபடுகிறது? 
                                                                               கட்டுரை :அ.ஆனந்த் 
                                                                                           செயலாளர்,
                                                                               இந்திய மாணவர் சங்கம்,
                                                                                              புதுச்சேரி 
 
Read more...
Tuesday, 11 October 2011

புதுச்சேரி மந்திரியை காணவில்லை...!

0 comments

காணளியோங்க! அய்யய்யோ! கானலயொயங்க கல்வியமைச்சர தானே இங்கே காணளியோங்க!தண்ணி காற்றாருங்கோ!அய்யய்யோ! தண்ணி காற்றாருங்கோ தமிழ்நாடு காவல்துறைக்கே தண்ணி காற்றாருங்கோ !


''அய்யா... எங்க ஊரு மந்திரிய காணளிங்கய்யா...''
''யோவ்... இது போஸ்ட் ஆபிஸ்யா.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் 
   சொல்லுயா...''
'' ஓ... சாரி...சாரி... சந்தோசத்துல எங்க சொல்லுறதுன்னே     
    மறந்துபோச்சிங்கைய்யா...''
             இப்படித் தான் பாண்டிச்சேரியில் இருக்கும்  காங்கிரஸ் கட்சிக்காரங்களும் அதிமுக கட்சிக்காரங்களும் கடந்த பத்து நாட்களாக ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க...
             ஏன்னா... புதுவை காமராசர் ரங்கசாமி எதுல மாட்டுவார்னு எதிர்பாத்துகிட்டே இருந்தாங்களா... எலிப்பொறியில தானே போய் மாட்டிகிட்ட
பெருச்சாலி மாதிரி எங்க அண்ண கல்யாணசுந்தரம் வகையா மாட்டிக்கிட்டாருங்க.. 
            அவரு ஒன்னும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்... இப்படி எதிலும் மாட்டலீங்க .. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதறது தப்புங்களா...பத்தாம் வகுப்பு தனித் தேர்வு பத்து நாளுக்கு முன்னாடி நடந்துச்சிங்க.. அதுல அறிவியல்.. சமூக அறிவியல் .. இந்த ரெண்டேரெண்டு பாடத்தை தாங்க அவர் எழுத இருந்தாரு... இன்னா ஒன்னு.. அத இவரு எழுதலைங்க.. வேற ஒரு பையன் இவருக்காக எழுதனாங்க...அதுவும் எதுக்குன்னா.. இவரு கல்வி அமைச்சருங்களா... ரொம்போ பிசீங்களா... அதனால இவரு போய் தேர்வு எழுதமுடியளைங்க... ஒரு கல்வி அமைச்சரு இதைக்கூட செய்யக்கூடாதுங்களா... இதப்போய் தப்புன்னு சொல்றாங்க படுபாவிப் பசங்க...
             எங்க அண்ணன் எப்பவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாம் வகுப்பு எழுதுனாருங்க.. ஆனா அதுல ரெண்டு பாடத்துல பெயில் ஆயிட்டாருங்க... அதுக்காக அவர முட்டாள்ன்னு  நெனச்சிடாதீங்க.. ரொம்ப பெரிய புத்திசாலி தானுங்க... ரொம்ப நல்லா படிச்சவருங்க...
              ஆனா அவரு அம்புட்டு படிப்பு படிக்கலனாலும் தன்னுடைய திறமையினாலும், புத்திசாலித்தனத்தினாலும் தாங்க அவரு ஒரு தொழிலதிபரா உயர்ந்தாரு.... அப்படி என்ன தொழில செயதாருன்னு நீங்க கேட்கறது என் காதுல விழுதுங்க... சொல்லுறேன் எழுதிகோங்க..
            முதல்ல அவரு செய்தது ''ரௌடி தொழில்'' தானுங்க.. அதுக்கு இவர மாதிரியே இருக்கிற புத்திசாலிப் பசங்கள செத்து வெச்சிக்கிடாருங்க... அமோகமா தொழில் நடந்ததும்...அடுத்து ''கட்டப்பஞ்சாயத்து'' தொழில்ல ஈடுபட ஆரம்பித்தாருங்க... அதிலேயும் நல்ல வருமானங்க.. 
               இப்படி நல்ல வளர்ச்சி ஆனதும், மது பாட்டில் கடத்தல், வீடு - நிலம் அபகரிப்பு... இப்படியெல்லாம் செய்து படிப்படியா உயந்துகிட்டே போனாருங்க... அப்புறம்.... தன் கூட இருக்கிற ரௌடிங்க  கூட்டத்துக்கு ''மனித உரிமைகள்  கழகம்'' - ன்னு பேரை வெச்சி ''அதிகாரப்பூர்வமா'' ரௌடி தொழில நடத்தினாருங்க...  . பாரதீய ஜனதா கட்சியில சேர்ந்து தேர்தல வேற நின்னாருங்க எங்க அண்ணன். ஆனா ஜெயிக்கலிங்க..
               அதுக்கப்புறமா.. போலீஸ்காரங்க கூட நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால போலீஸ்காரங்கள கையில போட்டுக்கிட்டு பொண்ணுங்கள வெச்சி ''பாலியியல் தொழில்'' செய்தார்ன்னா  பாத்துக்கோங்களேன். அவ்வளவு நல்லவருங்க எங்க அண்ணன்... இப்படி தான், அவரு ஒரு பெரிய ''தொழிலதிபராக''  வளர்ந்து  பல்வேறு ''சமூக நலப்பணி''களையும்    செய்துக்கிட்டு வர்ராருங்க.... ''மக்கள் சேவகர்'' ன்னு  பட்டத்தைக்கூட அவரா தான் வெச்சிக்கிடாருங்க.....
               இடையல சட்டமன்றத் தேர்தல் வந்ததா.. ஏற்கனவே காலாப்பட்டு தொகுதியில அண்ணனோட ''தொழில்'' ரொம்ப விஸ்தாரமா.. லாபகரமா நடக்குதுங்களா.... நல்ல பிரபலமான பிரமுகரா ஆயிட்டாருங்க... ரங்கசாமி வேற புது கட்சி ஆரம்பிச்சாரா.. அண்ணனும் அப்படியே அதுல போய் ஒட்டிகிட்டாருங்க..  அதுக்கு தகுந்த மாதிரி வீணாப்போன காங்கிரஸ் கட்சி சார்புல ஷாஜகான்னு ஒரு மூதேவிய நிக்க வெச்சாங்கங்க... அவரு பேருல மக்களுக்கு பெரிய அதிருப்திங்க... ஏன்னா.. எலக்சனுக்கு எலக்சன் தானுங்க அவரு தொகுதி பக்கமே வருவாரு... அதனால தான்  காலாபேட்டு ஜெனங்களும் அந்த மூதேவிக்கு இந்த மூதேவி பரவா இல்லைன்னு.. இந்த மூதேவிய ஓட்டு   போட்டு   தேர்ந்தேடுத்தாங்கங்க..
              எப்பவுமே பாண்டிச்சேரி மக்கள் நல்லவங்களுக்கு ஓட்டு போடமாட்டங்கங்க.. மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சாராய வியாபாரி, ஆள் கடத்தறவன், வழிப்பறி செய்யறவன், கட்டப்பஞ்சாயத்து செய்யறவன்.... இப்படிப்பட்டவங்கள தான் இந்த மக்கள் தேர்ந்தேடுப்பாங்கங்க...
                 அப்படி ஜெயிச்சவரு தான் எங்க அண்ணன் கல்யாணசுந்தரம்... ரங்கசாமிக்கும் தனியா கட்சி நடத்துவதற்கு,  ஆட்சி நடத்துவதற்கும் இப்படிப்பட்ட ஆளு தான் தேவை.. ஒரு மந்திரி பதவியைக் கொடுத்து பக்கத்துலேயே வெச்சிகிட்டாருங்க...
                   ஒரு அமைச்சரு.. அதுவும் ஒரு கல்வி அமைச்சரு... பத்தாவது கூட தாண்டலன்னா கேவலம்ன்னு நெனச்சி தான் எங்க அண்ணன் ரொம்ப திட்டம் போட்டு இந்த திருவிளையாடல நடத்தினாருங்க... அண்ணன் வரலாற்றிலேயே ''தனக்காக'' தானே திட்டம் போட்டு செய்த ஆள்மாறாட்ட திருவிளையாடளுங்க இது... கடைசியில வகையா மாட்டிகிட்டாருங்க... விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி ஆள்மாறாட்டம் நடந்திருப்பதை உறுதி செய்து காவல் துறையில் புகார் செய்த பிறகு, அண்ணன் பேர்ல எட்டு வழக்குகள் பதிவாகியிருக்குதுங்க.. தமிழ்நாடு போலீஸ் புதுவையில  எங்க அண்ணன் பாத்துபோகலாம்னு வந்து தேடுறாங்கன்னு  தெரிஞ்ச  பிறகு  தான்  எங்க அண்ணன காணலைங்க..
                   ரங்கசாமி வீட்டுலேயும், சட்டமன்றத்திலேயும் எங்க அண்ணன் ஒளிஞ்சிகிட்டிருந்தாருன்னு சொல்லுராங்கங்க... இதெல்லாம் நான் தான்  சொன்னேன்னு எங்க அண்ணன்கிட்ட சொல்லிடாதீங்க அய்யா...
Read more...
Monday, 10 October 2011

அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி விழும் அமெரிக்கா

0 comments
உலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத் துடன் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எண்ணற்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கத் தகவல் தொடர்பு ஊழியர்கள் சங்கம் தனது முழு ஆதரவை அளித்திருக் கிறது. அனைத்து அமெரிக்கர்களிடம் இருக்கும் கோபத்தை இந்தப் போராட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, வால் ஸ்டிரீட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் அமைந் திருக்கிறது என்று அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போக்குவரத்து ஊழியர் கள் சங்கம் ஒன்று ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கள் சங்கத்தைச் சேர்ந்த 38 ஆயிரம் பேரும் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்குவார்கள் என்று சங்கத்தின் தலைமை அறிவித்துள்ளது. போராட்டக்காரர் களை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனங்களை ஓட்ட மறுக்கும் ஓட்டுநர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றி ணைந்து உருவாக்கியுள்ள ஒன்றுபட்ட ஆசிரி யர்கள் சம்மேளனமும் விரைவில் போராட்டத் திற்கு ஆதரவாக களமிறங்கப் போவதாக அறிவித் திருக்கிறது. இதில் லட்சத்திற்கும் மேற்பட் டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவான ஊர்வலம் ஒன் றை நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கப் போகிறார்கள். பெரு நிறுவனங்களின் பேராசை யை விட மனிதர்களின் தேவைக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று தேசிய ஒன்றுபட்ட செவிலி யர்கள் சங்கம் அறைகூவல் விடுத் திருக்கிறது.

போராட்டம் தீவிரம்

ஆதரவு அலை பெருகியுள்ள நிலையில், போராட்டக்களத்தில் இருப்பவர்களின் உறுதி அதிகரித்திருக்கிறது. அமெரிக்க நிர்வாகத்தின் அடக்குமுறையை மீறி தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்ததோடு, பல மாநிலங் களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக் கிறார்கள். இதுவரை 700 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் போராட் டம் குலையும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தால், ஏமாந்து போய்விடுவார்கள் என்பது போராட்டம் நடத்துபவர்களின் கருத்தாகும்

வேலையின்மை, சமூக அசமத்துவம், வீழும் வாழ்க்கை தரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நியூயார்க்கில் கடந்த மாதம் ஆரம்பித்த போராட்டம் இப்போது அமெரிக்காவின் 900க்கு மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கவிருக்கின்றன. ஆடட்டும் ஏகாதிபத்தியக் கோட்டை!

போராடும் அமெரிக்க மக்களுடன் ஒற்றுமை காப்போம். ஏகாதிபத்திய எதிர்பியக்கங்களை இந்தியாவிலும் வளர்த்தெடுப்போம். முதலாளித்துவ இந்திய அரசு தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளும் மேலாதிக்க நடவடிக்கைகளையும் பிராந்திய வல்லரசாக உருப்பெற்றிடும் நோக்கோடு தனது செல்வாக்கை நிலைநாட்டிட ராஜீய மற்றும் ராணுவ ரீதியாக மேற்கொள்ளும் திட்டங்களையும் முறியடிக்கும் வகையில் உழைக்கும் மக்களின் போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுப்போம்.Watch live streaming video from globalrevolution at livestream.com
Read more...
Sunday, 9 October 2011

இந்திய மக்களே...! ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...!

0 comments
                மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம் தான் நடிப்புத் திறனை வெளிக்காட்டி விடுகிறார். ஏதோ இளவரசர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது போல்,  பார்க்கின்ற மக்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்கிறார்கள். 
                 அந்த அளவிற்கு ராகுல்காந்தி, தன் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா எல்லாருடைய நடிப்புகளையும் மிஞ்சிவிட்டார் என்றால் பாருங்களேன். இதெல்லாம் எப்படி ஓட்டுக்குப் பயன்படும் என்று தெரியவில்லை...
                            
                   உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்                                
Read more...
Saturday, 8 October 2011

SFI - DYFI Demonstration Education Minister to Resign his post 07/10/2011

0 comments


SUNDAY, OCTOBER 9, 2011

கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரிபுதுச்சேரி அக்-8
கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி புதுச்சேரியில் வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் தாகூர் பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பு துணைத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய குற்றத்தில் சிக்கிய புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.சுனாமி குடியிருப்பு கட்டியதில் தோடர்புள்ள முன்னால் மாவட்ட ஆட்சியர், ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் மகன்களுக்கு மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,எ°எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துனைதலைவர் ரஞ்சித்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,பொருளாளர் பிரபுராஜ்,துனைத்தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.வாலிபர்,மாணவர் சங்கங்களின் நிர்வாகிள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 
ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி கல்விதுறை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.திண்டிவனத்தை அடுத்துள்ள தனியார் பள்ளியான   தாகூர் மெட்ரிக்குளேஷன் பள்ளியில் நடந்த துணைத்தேர்வில் போலியான முகவரியை கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி சனிக்கிழமை (அக்-8)திண்டிவனம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி உடணடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்=என மார்க்சி°ட் கட்சி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read more...

புதுச்சேரி மக்கள் எப்போது உணருவார்களோ ?

0 comments
புதுச்சேரி கல்வி அமைச்சர் தேர்வில் ஆள்மாறாட்டம் உறுதி !
புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், அண்மையில் திண்டிவனத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் தனக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்திருக்கிறார் என்பதை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உறுதி செய்து, திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.. அமைச்சர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கைது செய்யபடுவாரா கல்வி அமைச்சர்?
அவர் மீது 8 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.இனிமேலும் புதுவை முதலமைச்சர்   மௌனத்தை கலைவாரா?அல்லது வழக்கம் போல் அமைச்சர் பதவி விலகலாமா கூடாதா என மீண்டும் அப்பா பைத்தியம் சாமியின் உத்தரவுக்காக காத்திருபாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்? 
வழக்கம் போல் மௌனம் காக்கும் முதலைமைச்சர் ரங்கசாமி ?

இனிமேலும் மௌனம் காப்பது தனக்கு வாக்களித்த மக்களை முட்டாள் ஆக்குகிறாரா?
அமைச்சரை பாதுகாத்து கொண்டு   இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன?
அமைதி காப்பது போல் இருப்பது தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பது தானே அர்த்தம்?


                                             விரைவில்!முழுமையான தகவல்களுடன் தங்களை இந்திய மாணவர் சங்க இணைய நண்பர்களுக்கு முழு தகவல்களையும் வெளியிடுவோம் என இந்திய ர் சங்கம் புதுவை பிரதேச குழு சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

Read more...
Wednesday, 5 October 2011

கல்வி-ஆயுதபூஜை:

0 comments
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாடியிருக் கிறார் மகாகவி பாரதி. கல்விக்கு சரஸ்வதி என்று ஒரு கடவுளை உருவாக்கியது மட்டுமின்றி, சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.


எளிய மக்கள் இந்த நாளை ஆயுதபூஜை என்று அழைக்கிறார்கள். தொழில் கருவிகள் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரண மாக புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் தொழிலாளியின் உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வளர்ந்த போதும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது நவீன வடிவத்தில் தொடர்கிறது.


சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நாளில் சமச்சீர் கல்வியின் ஒருபகுதியான பொதுப்பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கே பட்டபாட்டையும் நடத்திய போராட்டங்களை யும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில் லை. தேசத்தின் செல்வ வளமும் அறிவு வளமும் அனைவருக்கும் சென்றுசேர நீண்ட நெடிய போராட்டத்தை தொடரவேண்டியுள்ளது. அதன் முதல்படியே சமச்சீர் கல்விக்கான போராட்டம் ஆகும். ஒரு காலத்தில் சாதியின் பெயரால் மறுக் கப்பட்ட கல்வி, இன்றைக்கு பணத்தின் பெய ரால் மறுக்கப்படுகிறது. சரஸ்வதி படத்திற்கு மாலை போடுவது அல்ல, எளிய குழந்தைகளின் கைகளில் பாடப்புத்தகங்கள் வந்து சேர்வது தான் கல்விக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.


இந்தநிலையில் வெளிவந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புதுவை மாநில கல்வியமைச்சர் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளாராம். 20 ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தோற்ற இவர், இப் போது கல்வி அமைச்சராகிவிட்டார். 10வது படிப் பை முடிக்கவேண்டும் என்று இவர் ஆசைப் பட்டதில் தவறில்லை. ஆனால் அது தம்மால் முடியாது என்று கருதி வேறு ஒரு ஆளை ஏற்பாடு செய்து தேர்வு எழுத அனுப்பி யிருக்கிறார். இப்போது இது சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இவரது நிர்வாகத்தில் கல்வித்துறை என்ன பாடுபடும்?


மறுபுறத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் பெரிய கல்விமான் என்றும் சட்டப்புலி என்றும் கூறப்படுபவர். ஆனால் இவருடைய பிரதானப் பணியே பெரும்பகுதி மக்களை கல்விச் சாலைக்குள் நுழையவிடாமல் தடுப்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்வதுதான். எதற்கெடுத் தாலும் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்று மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதோடு தாய்மொழி வழியிலும், அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை விரட்டும்வேலையில் ஈடுபட்டுள்ளார் இந்த உலகமய உபாசகர்.


அண்மையில், தில்லியில் ஒரு கல்லூரியில் 100க்கு 100 மார்க் வாங்கியிருந்தால்தான் பி.காம். படிப்பில் சேர முடியும் என்று நிபந்தனை விதிக் கப்பட்டது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி, இவர்கள் ஷேக்ஸ் பியர் வந்தால்கூட ஆங்கில இலக்கிய வகுப்பில் சேர்க்க மாட்டார்கள் என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.


கல்வி என்பது கல்விக்கூடங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த சமூகம் தொடர்புடைய ஒரு பிரச்சனை. வகுப்பறைகள் மட்டுமின்றி பாடத்திட்டமும் பயிற்று முறையும் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். மனப்பாட அறிவு மட்டுமே அறிவு என்ற மாயை மாற்றப்படவேண்டும். கல்வி பூஜைக்குரிய ஒன்றல்ல. அது சமூக மாற்றத்திற் கான ஆயுதம்.
Read more...
Tuesday, 4 October 2011

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தல் !

0 comments

                                                         
பத்திரிக்கை செய்தி  
புதுச்சேரி     கல்வித்துறை அமைச்சர் பதவி விலக கோரி இந்திய மாணவர் சங்க பிரதேஷ் தலைவர் ஹரிஹரன் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை :
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக அவர்மேல் புகார் எழுந்துள்ளது.தான் நேர்மையாக தேர்வு எழுதியாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.புதுவையில் பல பள்ளிகள் உள்ள போதும் அவர் திண்டிவனத்தில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் ஏன் தேர்வு  எழுதினார்?அவர் பதவி வகிக்க கூடிய புதுவை கல்வித்துறை மீது நம்பிக்கை இல்லையா?அவர் நேர்மையாக தேர்வு எழுதியவராக இருந்தால் அவர் வசிக்க கூடிய முகவரியை கொடுக்காமல் போலியான விலாசத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?கடந்த காலங்களில் தேர்வில் பல முறைகேடுகளை செய்ய உதவி செய்த திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏன் தேர்வு எழுதினார்?இது புதுச்சேரி மக்கள் மத்தியில் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் புதுச்சேரி கல்வி அமைச்சர் அவர்கள் பட்டபடிப்பு படித்தாக மாணவர்கள் நம்பியிருந்த நிலையில்  பத்தாம் வகுப்பு தேர்வில் மோசடி செய்தது, மாணவர் சமுதாயத்திற்கே வேதனையாக இருக்கிறது.அவர் மீது பல புகார்கள் எழுந்த போதும் அவர் பதவி வகிக்க கூடிய துறைக்கே களங்கம் விளைவிக்க கூடியவகையில் புகார் எழுந்துள்ளது.எனவே புதுவை உயர்கல்வித்துறைஅமைச்சர் பதவியில் இருக்கும் அமைச்சருக்குரிய மாண்பை காக்கும் விதமாக அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவரே முறையற்ற செயலில் ஈடுபட்டு இருப்பது நியாயமற்றது.இது சம்பந்தமாக புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் புதுவை பிரதேச குழு வலியுறுத்துகிறது. 


Read more...

இந்தியாவில் கழிப்பறையை விட கைப்பேசிகள் அதிகம் - கவலைப்படாத மத்திய அரசு

0 comments

சுகாதார வசதி பற்றாக்குறை : யுனிசெப் மதிப்பீடு


                இந்தியாவில் திறந்தவெளியில் 63.8 கோடி பேர் மலம் கழிக்கிறார்கள். அதனால்  சுகாதார வசதி என்பது இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கிறது என்று அண்மையில் யுனிசெப் (UNICEF) நிறுவனம் உலகளவில் மதிப்பீடு செய்ததில் இந்தியாவைப் பற்றி இவ்வளவு அழகாக குறிப்பிடுகிறது.
                 இந்தியாவில் போதிய சுகாதார வசதி இல்லாததால் 63.8 கோடி மக்கள் திறந்தவெளிப் பகுதிகளில் மலம் கழிக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் அத்தனை கோடிப்  பேருக்கும் கழிப்பிடவசதி கிடையாது என்பது தான் அதற்கு பொருள் ஆகும்.
                உலக அளவில் உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில்,  58 சதவீதம் பேர் இந்திய மக்கள் என்பதை கேட்கும் போது நாமெல்லாம் வேதனைப்படவேண்டும். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்த பின்னும் 
மக்களுக்கு கழிப்பறை வசதி செய்துத்தராத ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.  கடந்த 64 ஆண்டுகளாக எத்தனை முறை மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவரை பதினோரு ஐந்தாண்டு திட்டங்களை பார்த்துவிட்டு, இதோ பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்தை பார்க்கப் போகிறார்கள். மத்திய திட்டக்குழுவில் இதுவரையில் எத்தனை தலைவர்களையும், துணைத் தலைவர்களையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. 
ஆனால் இதுவரையில் எந்த அரசும் அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
                  யுனிசெப்பின் 2008ம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கிறார்கள். அப்படியென்றால் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் என்பது தானே இதற்கு பொருள்.  என்ன தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி பிரதமரும் மற்றவர்களும் பீற்றிக்கொண்டாலும், இத்தனை கோடி மக்கள் கழிப்பறையே இல்லாமல் இருக்கும் போது நாடு பொருளாதாரத்தில் முன்னேறி என்ன பயன்..? அல்லது இத்தனை கோடி மக்கள் கழிப்பறைக்கே வசதியில்லாத போது யாருடையப் பொருளாதாரம் தான் முன்னேறுகிறது என்பது தான் நமது கேள்வி..?
                அனால் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும், உரிய சுகாதார வசதி இல்லாத நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவைக் காட்டிலும் இந்த நாடுகளில் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தன் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை  செய்து கொடுக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
                    இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு கழிப்பறை இல்லாதது என்பது   மிகவும் வெட்கக் கேடானது என மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெட்கமில்லாமல் கூறியிருக்கிறார். 12வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு, 2017ம் ஆண்டில் இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையைத் தவிர்ப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை இந்திய மக்கள் வரும் ஆறு ஆண்டுகளில் மறந்துவிடக்கூடாது.
Read more...
Sunday, 2 October 2011

10 - ஆம் தேர்வு எழுதிய ஒழுக்கசீலரான கல்வி அமைச்சர்..!

0 comments
புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் 
பி. எம். எல்.  கல்யாணசுந்தரம், 10-ம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையாம்.  ஒரு கல்வி அமைச்சர் பத்தாம் வகுப்புக் கூட முடிக்கவில்லை என்கிற லட்ச்சணம் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இன்னும் அவரைப் பற்றிய வரலாறு என்னன்னா..இவர் ஏற்கனவே கடந்த 1991-ல் அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார் என்றும், அந்த தேர்வில்  தமிழ் பாடத்தில் 48 மதிப்பெண்ணும், ஆங்கிலம் பாடத்தில் 47 மதிப்பெண்ணும் , கணிதம் பாடத்தில் 75 மதிப்பெண்ணும் பெற்று மூன்று  பாடங்களில் மட்டுமே  தேர்ச்சி அடைந்திருக்கிறார் என்றும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  
                இருபது ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த கல்யாணசுந்தரம், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சரான பிறகு தோல்வியடைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை  மீண்டும் எழுதி  10-ம் வகுப்பை நிறைவு செய்ய முடிவு செய்து, விழுப்புரம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட - புதுச்சேரியிலிருந்து 40 கி. மீ. தொலைவிலுள்ள  திண்டிவனத்தில் உள்ள தாகூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி என்கிற தனியார் பள்ளியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார். இதற்கானத் தேர்வு சென்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்திருக்கிறது.  
                கல்வி அமைச்சராக பணியாற்றக்கூடியவர்  10 - ஆம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லையே என்று அதை நிறைவு செய்ய முயற்சி செய்ததை பாராட்டத்தான் வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது காமராசருக்குக் கூட இப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை.
                 இதில் என்ன பார்க்கவேண்டி இருக்குன்னா...புதுவையை சேர்ந்த அமைச்சர் ஏன் தமிழ்நாட்டிற்கு சென்று எழுதவேண்டும்..:? அங்கே என்ன ''விசேஷம்''..?  திண்டிவனத்தில் சில தனியார் பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேரங்களில், காசை வாங்கிக்கொண்டு புத்தகத்தை பார்த்து பதில் எழுதவும், ஆள் மாறாட்டம் செய்து பதில் எழுதவும் அனுமதிக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். புதுவையை சேர்ந்த சில பெற்றோர்கள் படிப்பில் நாட்டமில்லாத தன் பிள்ளைகள் எப்படியாவது தேர்ச்சி  பெறவேண்டும் என்கிற நோக்கில்  திண்டிவனத்தில் உள்ளப் பள்ளிகளில் விண்ணப்பிப்பது இன்றும் வழக்கமாக தான் உள்ளது.
                 அதுவும் ஒரு கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் தன் சொந்த ஊரிலேயே விண்ணப்பித்து தேர்வு எழுதாமல், வேற்று மாநிலத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதுவது என்பது நமக்கெல்லாம் சந்தேகத்தை வரவழைக்கிறது.
                அது மட்டுமல்ல, நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் தேர்வின் போது அந்த பள்ளியில் இவருக்காக தேர்வு எழுதிய ஒரு இளைஞன் கல்வித் துறையின் பறக்கும் படையால் பிடிபட்டிருக்கிறான் என்றும், பிறகு பள்ளி நிர்வாகம் தலையிட்டு அந்த இளைனை தப்பவைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைகாட்சியாளர்களுக்கும் செய்தி பரவி அந்தப் பள்ளியில் ஒரே பரபரப்பாகியிருக்கிறது.
               அந்த பரபரப்பு புதுச்சேரியிலும் பரவி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென்று அமைச்சரின் தொகுதியிலேயே மறியல் போராட்டமெல்லாம் நடந்திருக்கிறது. 
               கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம்,  தான் தேர்வு எழுத அந்தப் பள்ளியில் விண்ணப்பித்தது உண்மைதான் என்றும், வியாழக்கிழமை நடந்த அறிவியல் தேர்வு மட்டுமே நான் நானே அந்தப்  பள்ளிக்கு சென்று தேர்வு எழுதியதாகவும், வெள்ளிக்கிழமை ஆளுநருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இருந்ததால் சமூக அறிவியல் எழுத செல்லவில்லை என்றும் ஒரு வாக்குமூலத்தை திருவாய் மலர்ந்திருக்கிறார்.
                    அப்படி இவரால் தேர்வு எழுத செல்ல முடியவில்லை என்றால், சமூக அறிவியல் பாடத் தேர்வு இவர் பெயரில் எழுதியது யார்..?  இவருக்கே தெரியாமல் இவரது தேர்வு அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு சென்று இவருக்காக இவரது ''சீடர்கள்'' எழுதினார்களா..? தெரியவில்லை. 
               திண்டிவனத்தில் கல்வித் துறை அதிகாரிகளை அணுகியபோது, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றத் தகவலை தெரிவித்தார்கள்.
               கல்யாணசுந்தரம் அமைச்சராக பதவியேற்ற போதே, எதிர்கட்சிகளிடமிருந்து - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. கல்யாணசுந்தரம் ஏற்கனவே சட்டவிரோதச்  செயல்களிலும், சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு கிரிமினல் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது. 
                இந்த சூழ்நிலையில் தான் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வகையாக சிக்கிகொண்டிருக்கிறார். இந்த தேர்வு முறைகேடு என்பது நிருபிக்கப்பட்டால், கல்யாணசுந்தரம் தானாக பதவி இறங்கவேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். அதுமட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படவேண்டும். ஒழுக்கமற்ற ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது கூட சமூகத்திற்கு கேடுவிளைக்கும்.
Read more...

Probe against impersonation complaint :

1 comments
School Education Minister C. Ve Shanmugam on Saturday said he has ordered an inquiry into a complaint of impersonation of Puducherry Minister for Transport P. M. L. Kalyanasundaram, who also holds the Education portfolio, during the supplementary exam for Class X in a private school at Jayapuram in Tindivanam a few days ago.


'Decision only after report'
“The hall ticket is in the name of the Minister (Mr Kalyanasundaram) and he has given a temporary address in Tindivanam. However, the candidate was marked absent on September 30, when another examination was held. It requires a thorough probe. We can come to a conclusion after going through the report,” he said.
According to sources in the Education Department, the government had asked the Tindivanam District Educational Officer to give a report to the School Education Department detailing what actually happened. Reportedly, handwriting experts are to be engaged to look into the answer scripts of the candidate.

Denies charge
Denying that he had committed any fraud, Mr Kalyanasundaram said he appeared for the ongoing supplementary exam for Class X but could not make it on Friday as he had to attend a meeting chaired by Lieutenant Governor Iqbal Singh at Raj Nivas.

 “I quit studies in 1991 to help my family. After becoming a Minister I decided to complete Class X and so registered for the exam. I have passed all other subjects except for science and social science in 1991 itself,” he told The Hindu.


Terming the allegation as a political conspiracy, the Minister said he was ready to face any “impartial probe.”

                                                                                   Thank's : THE HINDU 02-10-2011
Read more...
Saturday, 1 October 2011

கல்விஅமைச்சர் தேர்வு எழுதினாரா?அல்லது ஆள்மாறாட்டமா?

0 comments
புதுவை கல்வியமைச்சர் தேர்வு எழுதிய பள்ளியின்  குறிப்பு :
திண்டிவனம் ஜெயபுரம் அருகே அமைந்துள்ள தாகூர் மெட்ரிக்குலேஷன்

 மேல்நிலைபள்ளியில் வழக்கமாக புதுவையில் இருந்து பல்வேறு 

நபர்கள் டுடோரியல் மூலமாக சிறப்பு துணை தேர்வுகளை 

எழுதிவருகின்றனர் . குறிப்பாக திண்டிவனம் போன்ற பகுதிகளில்  தேர்வு 

எழுத செல்லும் அனைவரும் முறைகேடான 

வழிகளில்  எளிதாக  வெற்றி பெற 

முடியும்  என்பதை புதுவையில் உள்ள அனைவரும் அறிவர்.  

 இது போன்ற  ஒரு பள்ளி தான் தாகூர் மெட்ரிக் பள்ளியும்  

என்பது  குறிபிடத்தக்கது . இப்பள்ளியில் இது போன்ற சம்பவங்களும் 

நிகழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.

கல்விஅமைச்சர்  தேர்வு எழுதினாரா?அல்லது ஆள்மாறாட்டமா??
                         ( 29-09-2011 )அன்று அறிவியல் பாடதேர்வினை தாகூர் 

பள்ளியில்  அனைத்து மாணவர்களும் வழக்கம் போல் தேர்வு 

 எழுதினர்.இதேபோல் (30-09-2011) அன்று 

தேர்வுமையத்தில் மாணவாகள் தேர்வுகளை 

எழுதினர்.அப்போது அங்கு வந்த  பறக்கும் படை வகுப்பு வாரியாக 

சோதனை செய்த போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு மாணவனை 

விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை 

தெரிவித்துள்ளார்.பறக்கும் படையிடம் அந்த மாணவன் கூறிய 

முகவரியும்  நுழைவு சீட்டில் இருந்த முகவரியும் வேறுபட்டு இருந்தது . 

இதனால் செய்வது அறியாது  திகைத்த அந்த மாணவன் அங்கிருந்து தப்பி 

ஓடிவிட்டான்.பின் அந்த மாணவன் அமைச்சருக்கு பதிலாக தேர்வு எழுத 

வந்தவன் என்பது தெரிய வந்தது. அதன்பின் போளிதேர்வாளருடன் 

வந்திருந்தஅமைச்சரின் சகாக்களால்    இப்பிரச்சனையை மூடி மறைப்பதற்கான 


அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற்றதாக தெரிகிறது.தகவல் 

அறிந்த பத்திரிக்கையாளர்கள் பள்ளியை சூழ்ந்து கொண்டனர்.காவல் 

துறை அதிகாரிகளும்  அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த செய்திகள் அனைத்தும் (01-10-2011) அன்று காலை    இந்திய மாணவர் 

சங்க  விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவை பிரதேச  நிர்வாகிகள்  தாகூர் 

பள்ளிமற்றும்அதை சுற்றுபுறத்தில் வசிக்கும் மக்களிடம் சேகரித்த 

 தகவல்கள்  என்பதை தெரிவித்து கொள்கிறோம் . 

விரைவில் இப்பிரச்சனை குறித்த விடியோவையும்  வெளியிடப்படும்

என்பதை தெரிவித்துகொள்கிறோம்..........அதற்கான முயற்சியில் 

ஈடுபட்டுள்ளோம் நல்ல தகவல்களுடன் .........மீண்டும் சந்திக்கிறோம் ......
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com