Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 10 September 2011

SFI மீண்டும் வெற்றிக்கொடி-இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத் தேர்தல் முடிவுகள்:

0 comments

ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர் பேரவையை பொறுப்பேற்கவிடாமல் செய்யும் நடவடிக்கைகள் சிம்லாவில் நடக்கின்றன. இதற்கு நிர்வாக எந்திரம் துணைபோயிருக்கிறது. பாஜக ஆதரவு ஏபிவிபி மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பு ஆகியவை வன்முறையைத் தூண்டி விட்டுள்ளன. இதைக் காரணம் காட்டி மாணவர் பேரவைப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தள்ளிப்போட்டுள்ளார். வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ள அமைப்புகளை விட்டுவிட்டு, எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களை தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்துள்ளனர். இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து எஸ்.எப்.ஐ. போராட்டம் நடத்தியுள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடந்தது.
இமாச்சலப்பிரதேச மாநில பல்கலைக்கழக மாணவர் பேரவை பிரதி
நிதிகள் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று இந்திய மாணவர் சங்கம்(SFI) மீண்டும் ஒருமுறை அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றும், இமாச்சல் மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமுமான சிம்லா பல்கலைக்கழக தேர்தலில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக இடங்களை கைப் பற்றி அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் சாதனை வெற்றியை எஸ்எப் ஐ பதிவு செய்துள்ளது.

இமாச்சலப்பிரதேசமாநிலத்தில் ஆளும்கட்சியான பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்சின் ஆதரவுடன் போட்டியிட்ட அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் (ஏபிவிபி) அமைப்பை மாணவ சமூகம் ஒட்டுமொத்தமாக புறம் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரத்தில் எஸ்எப்ஐயின் இவ்வெற்றி மாணவர் சமூகத்தின் இளம்தலைமுறையினர் மத்தியில் மார்க்சிய, இடதுசாரிக் கொள்கைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதுவும் இடதுசாரிகட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பிறகு இடதுசாரி கொள்கைகளுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை முதலாளித்துவ சக்திகள் நாடுமுழுவதும் எழுப்பி வருகின்ற சூழ்நிலையில், இந்திய மாணவர் சங்கம் இவ்வெற்றியை பெற்றுள்ளது. இந்தியாவில் இடதுசாரிகளின் அடித்தளமே விழ்ந்தது என எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இமாச்சலில் இந்திய மாணவர் சங்கம் பெற்றுள்ள இம்மாபெரும் வெற்றி திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.கடந்த பலவருடங்களாக எஸ்எப் ஐஅமைப்பேஇப்பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளது, அப்பாரம்பரிய வரலாற்றை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக கடந்த 32 ஆண்டுகால மாணவர் பேரவை தேர்தல் வரலாற்றில் மற்ற எந்த அமைப்பும் பெற்றிடாத மிகப்பெரும் வெற்றியையும், அதிகமான பிரதிநிதி இடங்களையும் எஸ்எப்ஐ அமைப்பு இம்முறை கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜேபியின் செல்வாக்குடன் போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பால் எஸ்எப்ஐ அமைப்பிற்கு சமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் மட்டுமல்ல, வாக்குகளை கூட பெற இயலாமல் படு தோல்வியை சந்தித்துள்ளது.மேலும்,இத்தேர்தலில் தலைமைக்குழுவின் நான்கு இடங்களுக்கான பிரதிநிதிகள் தேர்வில் அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ அமைப்பே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது.இதில் ஏபிவிபி அமைப்பை மாணவர் சமூகம் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளி துடைத்தெறிந்துள்ளார்கள்.மேலும், துறைவாரியான மாணவர் பொறுப்பாளர்களுக்கான பிரதிநிதிகள் தேர்விலும் எஸ்எப்ஐ அமைப்பே பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்பொறுப்புக்கான ஒட்டுமொத்தமாக உள்ள 44 இடங்களில் எஸ்எப்ஐ அமைப்பு 42 பிரதிநிதிகளை வென்றுள்ளது.ஏபிவிபி அமைப்பு வெறும் 2 பிரதிநிதிகளுக்கான இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.அதுவும் இமாச்சல் மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசின் மூலம் முறைகேடாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஏபிவிபி அமைப்பிற்கு ஆதரவாக மாணவர்களை மிரட்டியதன் மிரட்டலின் காரணமாக உடற்கல்வி மற்றும் சுற்றுலா துறைக்கான மாணவர் பிரதிநிதிகளை ஏபிவிபி அமைப்பு கைப்பற்றியுள்ளது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகள் இன்றி முறையாக வகையில் தேர்வு நடைபெற்றிருந்தால் நிச்சயமாக இவ்விரு இடங்களையும் எஸ்எப்ஐ அமைப்பே வென்று ஏபிவிபி அமைப்பினை முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கும்.அதேநேரம் கலை, அறிவியல்,மேலாண்மை,சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைக்கான பிரதிநிதிகள் தேர்வில் ஏபிவிபி அமைப்பை மாணவர்கள் துடைத்தெறிந்துள்ளார்கள்.இப்பல்கலைக்கழகத்தின்மாணவர் பிரதிநிதி தலைவராக எஸ்எப்ஐ அமைப்பின் சார்பாக போட்டியிட்ட புனித் தவுண்டா, எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பின் நபரை காட்டிலும் 536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல்துணைத்தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட லோகேந்திர குமார் 673 வாக்கு வித்தியாசத்திலும், செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட யோஷியார்சிங் 676 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.இவ்வாக்கு வித்தியாசம் என்பது ஏபிவிபி அமைப்பின் சார்பில் போட் டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையினை காட்டிலும் அதிகமாகும். மேலும் துணைசெயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மஞ்சு தாகூர் 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்திய மாணவர் சங்கம் கடந்த முறை நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் பெற்றதை இம்முறை அதிகமாக இடங்களில் பெற்றுள்ளது. குறிப்பாக, அம்மாநில முதல்வரின் சொந்த தொகுதி ஹமிர்பூர்க்குட்பட்ட கல்வி நிலையங்களில் எஸ்எப்ஐ வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் மாநில முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள 6 கல்லூரிகளில் 3 கல்லூரிகளை எஸ்எப்ஐ கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com