Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 29 September 2011

பள்ளிகளில் தொடரும் பாலியல் வன்முறை இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

0 comments
சென்னை, செப். 28 -

பள்ளி மாணவி மீது பாலியல் வன்முறை நடத் திய ஆசிரியரை கைது செய் யுமாறு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லத் தலைவர் கே.எஸ். கனக ராஜ், செயலாளர் ஜோ. ராஜ் மோகன் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வரும் மாணவியிடம் இப்பள்ளி யில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் சுந்தரவடிவேல் கடந்த 16ம் தேதி ஆபாசமாக பேசியதோடு, மாணவி யிடம் தவறாக நடக்க முயற் சித்துள்ளார். மாணவி சத் தம் போட்டதால் ஆசிரியர் ஓடிவிட்டார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி, தலை மையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தரப்பில் காவல் துறையில் செப்டம்பர் 24 அன்று புகார் கொடுத்துள்ளனர். காவல்துறை புகாரின் பெய ரில் 354, 509, 506(1), ஐஞஊ4ஹஊ மானபங்கப்படுத்துதல், மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட வழக்கு களை மட்டுமே பதிவு செய் துள்ளதோடு, அவரை கைது செய்யாமல் பாது காத்து வருவது கண்டிக்கத் தக்கது.

இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவல ரிடமும் புகார் செய்யப்பட் டது. ஊநுடீ நேரிடையாக பள் ளியில் விசாரணை நடத்திய போது ஆசிரியர் சுந்தரவடி வேலால் அப்பள்ளியில் 80க் கும் மேற்பட்ட மாணவி கள் மனரீதியாக பாதிக்கப் பட்ட அதிர்ச்சியான தகவல் கள் கிடைத்துள்ளன. மாண விகளிடம் பொதுவாகவே ஆபாசமாக பேசுவதும், தொடுவது, கிள்ளுவது, அடிப்பது என உடல் ரீதி யாக பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம் என்று பெரும் பான்மையான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் புகார் கூறியுள்ளனர். ஆகவே ஆசிரியராக பணி செய்ய தகுதியற்ற இவர் மீது கல்வித் துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பாலி யல் துன்புறுத்தல், வன் முறைகளில் ஈடுபட்டிருப்ப தால் அதற்குரிய கடும் பிரிவு களில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சுந்தர வடி வேலை கைது செய்து சிறை யில் அடைக்க வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
 

வேதாரண்யம் ஆர்.டி.ஒ அலுவலகம் முன்பு செப்டம்பர் 28 SFI அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி யுள்ளது.

மேலும், தமிழகப் பள்ளி கள் முழுவதும் பாலியல் வன் முறைக்களமாக மாற்றப் படுவதும், குழந்தைகள் நல உரிமைகள் பறிக்கப்படு வதும் தொடர் கதை யாகியுள்ளது. இப்படிப் பட்ட நடவடிக்கைகளை தடுத்திட, தமிழக அரசு குழந்தைகள் உரிமை, பாது காப்பு, குழுக்களை பள்ளி கள் தோறும் அமைத்து, குழந்தைகள் உரிமை, பாது காப்பு குறித்து விழிப்புணர் வினை ஏற்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்து கிறோம்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com