Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 14 September 2011

புகார் அளிக்க சென்ற மாணவர்களை உள்ளே அனுமதிக்காத- புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் :

0 comments
ஆசிரியர்களை நியமிக்ககோரி மனு அளிக்க சென்ற மாணவர்களை  உள்ளே அனுமதிக்காத வாயில்  காவலர்கள்:
                                  கூடபாக்கம்  அரசு மேல்நிலைபள்ளி மாணவர்கள் பள்ளி துவங்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் ஆங்கில பாடத்திற்கு ஆசரியர் நியமிக்க கோரி மனு அளிக்க சென்றுள்ளனர்.ஆனால் கல்வித்துறை வளாகத்தில் பணியில் இருந்த காவலர்கள் மாணவர்களை உள்ளே செல்ல விடாமல் விரட்டியுள்ளனர்.
இந்திய மாணவர் சங்க  புதுச்சேரி  செயலாளர் ஆனந்த் கல்வித்துறை வழியாக சென்றுகொண்டிருந்தபோது    கூட்டமாக நின்றிருந்த  மாணவர்களிடம்  விசாரித்ததில் மனு அளிக்க சென்ற மாணவர்களை உள்ளே அனுமதிக்காததை கண்டித்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.அங்கு பணியில் இருந்த காவலர்கள் கல்வித்துறை இணைஇயக்குனர் கிருஷ்ணராசு தான் மாணவர்களை உள்ளே அனுமதிக்காதே என உத்தரவிட்டதாக கூறினர்.இதன் பின்னர் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.ஆனால் கல்வித்துறை இயக்குனர் இல்லாததால் அவருடைய அலுவலக உதவியாளரிடம் மனு அளிக்கபட்டது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com