Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 12 September 2011

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு: சாய்நாத் கவலை

0 comments
இந்தியாவைப் பொறுத் தவரை கடந்த பத்தாண்டு களில் மக்கள் தொகை 18 சத வீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்கொலை மரணங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப் பாக விவசாயிகள் தற் கொலை என்பது மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ளது.
கடந்த 1997-ம் ஆண்டிலி ருந்து நம் நாட்டில் 2 லட் சத்து 41 ஆயிரத்து 600 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் 6 ஆண்டுகளில் ஒரு ஆண் டில் விவசாயிகளின் சராசரி தற்கொலை என்பது 16 ஆயிரத்து 267 ஆக இருந் தது. அதுவே, 2004-ல் இருந்து அடுத்த 6 ஆண்டுகளில் 17 ஆயி ரத்து 105 ஆக அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நாட்டிலேயே விவசாயி களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் மாநிலம் என்றும், முன் னோடியான விவசாய மாநி லங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆனால், இங்கேயே 2008-ம் ஆண் டோடு ஒப்பிடும்போது விவசாயிகளின் தற்கொலை என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள் ளன.
2008-ம் ஆண்டு தமிழ் நாட்டில் சுமார் 500 ஆக இருந்த விவசாயிகளின் தற் கொலை மரணம், அடுத்த ஆண்டிலேயே இரண்டு மடங்கு அதிகரித்து 1,260 ஆக உயர்ந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயி களின் கோரிக்கைகள் புறக் கணிக்கப்படுவதும், விவ சாயத் தொழிலில் ஈடுபட பெரும் பணக்கார நிறுவ னங்கள் ஊக்கப்படுத்தப் படுவதும், விவசாயத் துறை விவசாயிகளிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, முழுமை யாக வர்த்தகத் துறையாக மாற்றும் முயற்சிகளே விவ சாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.

விவசாயிகளின் நலன் களைப் பாதுகாக்கும் வகை யில் மத்திய, மாநில அரசு களின் விவசாயக் கொள்கை கள் மாற்றம் பெறாத வரை, இதுபோன்ற விவசாயி களின் தற்கொலை மரணங் களையும் தடுக்க முடியாது. குறிப்பாக வேளாண் விஞ் ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணை யம் அளித்த பரிந்துரை களை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com