Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 6 September 2011

விஜயகாந்த் உறவினர் கல்லூரியில் மோசடி..:

1 comments

புதுவை அடுத்த பங்குர் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி உள்ளது.இக்கல்லூரியில் கடந்த  2010-2011 கல்வியாண்டில் புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் 50 மாணவர்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் சுமார் 100 மாணவர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.கடந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் இக்கல்லூரியில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று மாணவர் சேர்கைகான அனுமதியை வழங்க மறுத்துள்ளது.இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டு முதலாம் ஆண்டு  மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளனர். கல்லூரி நிர்வாக தரப்பில் மருத்துவ கவுன்சிலின் விதிகளை பின்பற்றி  உரிய கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவோம் என நீதிமன்றத்தில் உறுதியளித்த பின்னணியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

 வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி பின்னணி :                                                                      இக்கல்லூரி தமிழக எதிர்கட்சி தலைவரான விஜயகாந்தின் உறவினருக்கு சொந்தமானது  என்பது குறிப்பிடதக்கது .மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவ கழகம் குறிபிட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்துவிடுவோம் என உறுதியளித்த கல்லூரி நிர்வாகம் அதை செய்யாததால் இம்மாணவர்களின் தேர்வு முடிவுகளை புதுவை மத்திய பல்கலைகழகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டம்:
                                                      இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பல்கலைகழக தேர்வினை மாணவர்கள் எழுதியுள்ளனர். பல்கலைகழக  தேர்வு முடிவுகள் 45 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டும் இக்கல்லூரி மாணவர்களின்
 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால் மிகுந்த மனவுளைச்சல்லுக்கு உள்ளாகியமாணவர்களும்,பெற்றோர்களும் 06-09-2011 அன்று காலை கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெற்றோர்கள் தரப்பில் வழக்கு:
                                                  சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் தரப்பில் 150 மாணவர்களின் வாழ்கையை கருத்தில் கொண்டு மாணவர்களின்  சார்பாக  தேர்வு முடிவுகளை உடனே வெளியிட  கோரி வழக்கு தொடர முடிவுசெய்யபட்டது.

மாணவர்களின் போராட்டமும் SFI வழிகாட்டுதலும்:
                                                                   கல்லூரி முன்பாக அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும்,பெற்றோர்களும் தற்காலிகமாக களைந்து சென்றனர். இப்போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை பிரதேச செயலாளர் ஆனந்த் மற்றும் பார்த்தசாரதி பங்கேற்றனர்.

One Response so far.

  1. jeya says:

    விஜயகாந்துக்கு புதுவையில் ஓர் மருத்துவக் கல்லூரி உள்ளது என்கிறார்களே அதுவா இது?

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com