Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 18 August 2011

கல்வி உரிமைப் போராட்டம் :

0 comments
-இல.சண்முகசுந்தரம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒருவழி யாக பொதுப்பாடத் திட்டம் அமலுக்கு வந்துவிட் டது. புத்தகங்களும் கலைஞரின் குடும்ப புரா ணம், சுய காவியங்கள் அடித்து, கிழிந்து வந்து சேர்ந்துவிட்டது. மெட்ரிக் பாடத்திட்டம் ஓய்ந்து, பொதுப்பாடத்திட்டம் அமலுக்கு வந்துவிட்ட தாக அனைவரும் கொண்டாடிவருகின்றனர். சமச்சீர் கல்வி என்ற வார்த்தையை அறியாதவர் இன்று தமிழகத்தில் யாரும் இல்லை. ஆனால் மெட்ரிக் பள்ளிகள் எப்போது ஓயும்? கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் எப்போது ஒழியும்? இக்கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்ல இயலாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, தன் அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என புளகாங்கிதப் பட்டு அறிக்கை விட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். கலைஞர் காலத்து கண்டுபிடிப்பு களில் முதன்மையானது சமச்சீர் கல்வியா? காப்பீட்டுத் திட்டமா? என புதிய பட்டிமன்ற தொடர்களை நடத்துவதற்கான ஆயத்தப்பணி களை கழகக் கண்மணிகள் தமிழகமெங்கும் துவக்கிவிட்டனர்.

ஆனால் சமச்சீர் கல்வி என்றால் என்ன? முனைவர் ச.முத்துக்குமரன் ஜூலை23ல் கொடுத்த பேட்டி இதோ- “நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அப்போது தான், நாடு முன்னேறும்; நாட்டின் பொருளாதாரம் மேம்படும். அனை வருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ப தில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடி யாது. அனைவருக்கும் கல்வி என்ற கருத்தில், அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்தும் இருக்கிறது.அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமெனில், முதலில் அனைத் துப் பள்ளிகளும் தரமானவையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கி னால், மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அரு காமையில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள்.

இதை பொதுப்பள்ளி முறை என்றும், அண் மைப்பள்ளி முறை என்றும் அழைக்கலாம். இது, அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்துக் குள் அடங்குகிறது. இந்த நிலையைத் தான் சமச்சீர் கல்வி என்கிறோம்.

சமச்சீர் கல்வி திட்டத்தைப் பற்றி மக்கள் முழுமையாக புரிந்துகொள்வதற்கு தற்போதைய சூழ்நிலை ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இத்திட்டத்தில், மக்களின் பங்கு அதிகம் என் றும், அதன் அவசியத்தைப் பற்றியும் எனது பரிந் துரை அறிக்கையில் விரிவாக கூறியுள்ளேன். 109பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அப்போ தைய அரசிடம் வழங்கப்பட்டது. அதில், எத் தனை பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற் றது; எத்தனை பரிந்துரைகளை ஏற்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்.

நான் அளித்த அறிக்கையைப் பார்த்து அமல் படுத்தும் பொறுப்பை ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜய குமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்ய வில்லை என்பதை, பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் பார்த்து நான் தெரிந்துகொண் டேன். சமச்சீர் கல்வி திட்டம் என்பது திடீரென வந்துவிடவில்லை. இதை ஏதோ பிச்சை போடு வது போல் நினைக்கக் கூடாது. 1950களிலேயே கூறப்பட்டுவிட்டது. அனைவருக்கும் தரமான கல்வி என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட் டுள்ளது. அதை இப்போது தான் அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கல்வித் திட்டங்களை அமல்படுத்த, தன்னாட்சி அதிகா ரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தியபின்,அதன் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. ஆனால், எதற்கெடுத்தாலும் அரசு மூக்கை நுழைப்பது இங்கே நடக்கிறது. இதுதான் பிரச்சனைகளுக்கு காரணம்.”

சும்மா வந்த சட்டமல்ல என்பது முனைவர் முத்துக்குமரன் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிகிறது.ஆனால், நான் தான் கொண்டு வந் தேன் என்றும்,அவர் கொஞ்சம் மட்டுமே கொண்டு வந்தார், நான் முழுக்க கொண்டு வருவேன் எனவும் பேசியவர்கள் சமச்சீர் கல் வியை சந்தியில் நிறுத்தினார்களேயொழிய, முழு வதும் அமல்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவில் லை. ஆனால் இந்நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்த அவர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.

தனியார் பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவோம் என தேர்தல் வாக்குறுதியில் யாரும் அறிவிப்பதில்லை. ஆனால், நடைமுறையில்...? நான்கு ஆண்டுகளாக சமச் சீர் சமச்சீர் என குழு மேல் குழு அமைத்து வீராப்பு காட்டிய திமுக ஆட்சி, முனைவர் முத்துக்குமரன் கூறியதில் நான்கை மட்டும் அமல்படுத்திவிட்டு, மற்ற பரிந்துரைகளை மக்களுக்கே சொல்லாமல் மறைத்தது.

தாய்மொழி வழியிலான கல்வி என்பது சமச்சீர் கல்விக்குழுவின் முக்கிய பரிந்துரைக ளில் ஒன்று. ஆனால், ஆங்கில வழிக்கல்வியும் தொடரும் என்று அறிவித்தார் கலைஞர். நியாய மாகப் பார்த்தால், செம்மொழி தமிழ்மொழியில் தான் தமிழக மாணவர்கள் கற்க வேண்டும் என இவர் உத்தரவு போட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழுக்கு ஒரு கவிதையை மட்டும் காணிக்கை யாக்கிவிட்டு, ஆங்கிலத்துக்கோ தமிழகக் கல்வியையே காணிக்கையாக்கியவர் கலைஞர் தான். இந்தியாவிலேயே மெட்ரிக் கல்வி என் பதும், தாய் மொழி மறுப்புக்கல்வி என்பதும் எந்த மாநிலத்தில் இல்லாத போதும், தமிழகத்தில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி எப்படி கோலோச் சுகிறது? அதை ஒழிப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு கிட்டியபோது, சமச்சீர் கல்விக்கான கல்வியாளர் குழு அதை பரிந்துரைத்த போது, மறுக்க மனம் எப்படி வந்தது? கல்வியாளர் கருத் தை ஆட்சியாளர்கள் மறுப்பதில் உள்ள அரசி யல் நோக்கமும், தனியார் கல்வி முதலாளிகளின் பொருளாதார நலனும் திமுகவின் திட்டத்தில் இருப்பதால்தானே. ஆனால், இன்று கல்வியாளர் களின் கருத்துக்களைக்கொண்டு மேற்கோள் காட்டிப் பேசுகிறார். கருணாநிதி தலைமையி லான திமுக அரசு மறுத்தது இவைகளை மட்டு மல்ல. அவையனைத்தையும் மக்கள் முன் பட் டியலிட்டால் தான், துரோக வரலாற்றை மக்கள் முழுமையாக புரிந்து கொள்வார்கள்.

1. நான்கு கல்வி வாரியங்களை கலைத்து விட்டு, கல்வியாளர் தலைமையில் தமிழ்நாடு மாநில பள்ளிக்(சமச்சீர்)கல்வி வாரியம் அமைக்கவேண்டும்.

2. அனைவருக்கும் கல்வித்திட்டம் வெற்றி பெறும்வகையில் மழலையர் கல்வியை முழு மையாக அரசுச் செலவில் வழங்கிட வேண்டும்.

3. ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் 1:30 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. அருகமைப்பள்ளி உரிமையை அடிப் படை உரிமையாக்க வேண்டும்.

5. அறிவியல் பூர்வமான, தாய்மொழி வழியி லான கல்வியை வழங்குவதோடு, ஆங்கிலத் தையும் தரமாக கற்றுத்தர வேண்டும்.

6. முரண்பாடுகள் மிக்க தமிழக பள்ளிக் கல்விச் சட்டங்களை ஒருங்கிணைத்து, தேவை யான மாற்றம் செய்து, தமிழ்நாடு பள்ளிக்கல்விச் சட்டம் என ஒரே சட்டமாக்குதல். அதன் மூலம் கல்வி வியாபாரத்தை ஒழித்தல்.

7. அரசுப்பள்ளிகளின் அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளை அனைத்து வகையிலும் உயர்த்தி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான ஏற்றத்தாழ்வற்ற கல்வி வாய்ப்பு என்பதை உறுதி செய்தல்.

இப்படியான பல கோரிக்கைகள் வலுவாக கல்வியாளர்கள் மத்தியில் எழுந்தபோதும், முனைவர். முத்துக்குமரன் பரிந்துரைகளில் வெளிப்பட்டபோதும் அதை ஏற்றுக்கொள்ளா மல் முழுமையாக புறக்கணித்தது கடந்த கால அரசு தான் என கல்வியாளர்களும் மறுக்க மாட் டார்கள்.

அதிமுக ஆட்சியும் முழுமையாக முழுமை யாக எனக்கூறி காலத்தை கடத்த மக்கள் அனுமதிக்கக்கூடாது. சுயமரியாதையை புகட் டும் கல்வியை மறுத்துவிட்டு, காசுள்ளவனுக்கு மட்டும் தரமான கல்வி கொடுத்துவிட்டு மக்களை திசை திருப்பக்கூடாது.

“சமச்சீர் கல்வித் திட்டம் மிக அவசரமாகச் செயல்படுத்தக்கூடியது அல்ல. அனைவருக் கும் தரமான கல்வி வழங்கப்படவேண்டு மெனில் முனைவர் முத்துக்குமரன் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்படவேண்டும் ” என சட்டசபை யில் தமிழக முதல்வர் 2011, ஜூலை 6 அன்று அறிவித்த உறுதிமொழி எந்த ஆண்டு அமலுக்கு வரும்? ஆளுநர் உரையிலும் அறிவிக்கவில் லை. பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை. நிதி யும் ஒதுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற் றும் அதிமுக அரசு?

சமச்சீர் கல்விச் சட்டம், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் ஒழுங்குபடுத்தும் சட்டம், இலவசக்கல்வி மத்திய சட்டம் என்ற மூன்று சட்டங்கள் இக்காலத்தில் வந்துள்ளன. பொது வுடைமைக்கொள்கையை கொண்ட இயக்கங் கள் அகில இந்திய அளவிலும், தமிழக அளவி லும் நீண்ட காலமாக நடத்திவரும் போராட்டங் களின் விளைவாக கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்கள் கானல்நீராக மாறக்கூடாதெனில் வலுவான மக்கள் போராட்டங்கள் அவசியம். கல்வியால் நெருக்கடிக்குள்ளான சாதாரண மக் கள், நடுத்தர மக்கள் இடதுசாரி இயக்கங்களின் கல்விப்போராட்டங்களில் திரண்டுவிடக் கூடாது என்ற அரசு எண்ணமே சட்டங்களின் பின்னணி. ஆனால், அரசின் திட்டம் பொய்யாகி யுள்ளது. மக்கள் கிளர்ந்தெழுந்துவிட்டதை அரசு உணர வேண்டும். கல்வி என்பது ஒரு சமூக, பொருளாதாரப்பிரச்சனை என்று மட்டுமல்ல, அரசியல் பிரச்சனை எனவும் உணரத்துவங்கிய மக்களின் போராட்டத்தை, இடதுசாரி இயக்கங் களால் மட்டுமே மாற்றத்தை நோக்கி உயர்த்திச் செல்ல முடியும்.

போராட்டத்தால் விளைந்த சமச்சீர் கல்வி சமூகம் முழுமைக்கும் கிடைக்காமல் ஒயக் கூடாது போராட்டங்கள். 2011-2012 முதல் முழு மையான சமச்சீர் கல்வி அனைவரும் பெறும் வகையில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பள் ளிக்கல்வி மானியக்கோரிக்கையில் அறிவிக்க வேண்டும் என புதிய போர்க்குரல்கள் ஒலிக்க வேண்டும். முழுமையான சமச்சீர் கல்வி வழங்குவோம் என்று மட்டுமல்ல, அரசின் உத்த ரவுகளை மதிக்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் எனவும் கடந்தாண்டில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பேசிய அதிமுக இன்று என்ன செய்யப்போகிறது?

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com