Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 4 August 2011

பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கி இருபது ஆண்டுகள்: சாதித்தது என்ன?

0 comments
நவீன தாராளமயக் கொள்கைக்கு வக் காலத்து வாங்கும் தலைவர்கள் இன்னமும் மகிழ்ச்சியுடன் அவற்றைத் தாங்கிப் பிடிப்பது உண்மையிலேயே மிகவும் வியப்பாக இருக் கிறது. தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து கூட அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள மறுக் கிறார்கள். 1991 ஜூலை 24 அன்று அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படை யில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டைக் கொண்டாடும் விதத்தில் சீர்திருத்தங்களை, அதிலும் குறிப்பாக நிதித்துறையில் தாராள மயத்தை மேலும் விரிவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று கொக்கரித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஓய்வூதிய நிதியைத் தனியாரி டம் தாரை வார்த்திட அரசு மேற்கொண்ட முயற் சிகள், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள், அந்நிய நாட்டு வங்கிகளுக்கு அதிக அளவி லான பங்கினை அனுமதிக்கக்கூடிய விதத் தில் கொண்டு வரப்பட்ட வங்கிச் சீர்திருத்தங் கள் முதலானவற்றை ஐ.மு.கூட்டணி-1 ஆட் சிக் காலத்தின்போது அதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியாலும் பொருளாதார மந்தத்தாலும் இந்தியாவும் கடுமையான முறையில் பேரழி விற்குள்ளாகி இருக்கும் என்பதை அவர்கள் மறந்ததுபோல் தோன்றுகிறது. சரியாகச் சொல்வதென்றால் வேண்டுமென்றே கண்டு கொள்ள மறுக்கிறார்கள்.

மிகவும் தம்பட்டம் அடிக்கப்படும் அன் றைய பட்ஜெட் உரைக்கு வருவோம். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பறைசாற்றக்கூடிய வகையில் பட்ஜெட் மட் டும் அமைந்திடவில்லை. பட்ஜெட் சமர்ப்பிக் கப்படுவதற்கு முன் இரு முறை ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டது. இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கிறேன் என்று ராஜீவ்காந்தி விடுத்த அறைகூவலுக் கிணங்க மிகவும் வரம்புமீறிய வகையில் இறக்குமதிகளை அனுமதித்ததானது, அந்நி யச் செலாவணி சேமிப்பு நெருக்கடி (கடிசநபைn நஒஉாயபேந சநளநசஎந உசளைளை)யைக் கொண்டு வந்தது. இவ்வாறு பொருளாதாரச் சீர்திருத்தங் கள் கொண்டு வந்த பின் அடுத்த நான்காண்டு களிலேயே - 1985 முதல் 1989 காலத்திற் குள்ளேயே -வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அனுமதி வாங்கியிருந்த 350க் கும் மேற்பட்ட இந்திய கார்ப்பரேட் நிறுவனங் கள் அந்நியச் செலாவணியில் 5,751 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பினைப் பதிவு செய் திருந்தன. இறக்குமதியில் திடீர் பாய்ச்ச லானது அந்நியக் கடனில் கூர்மையான உயர் விற்கு இட்டுச் சென்றது. 1984க்கும் 1991க்கும் இடையே, நாட்டின் அந்நியக் கடன் 28 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 425 (1,00,425) கோடி ரூபாயாக உயர்ந்தது.

ஆட்சியாளர்கள் நவீன தாராளமயக் கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கி இரு பதாண்டுகள் கழித்து ஒரு விஷயம் மிகவும் தெளிவாகிவிட்டது. இரு வித இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர். நாட்டு மக்களிடையே கடுமையான முறையில் ஏற் றத்தாழ்வு உருவாகி இருப்பதைக் காண முடி கிறது. ஒருசிலருக்கு வருமானம் அதிகரித் திருந்த போதிலும், மிக விரிவான அளவில் விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை கள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் விளைச்சல் குறைந்திருப்பது - ஆகிய அனைத்தும் நாட்டு மக்களில் சில பிரி வினரை முழுமையாக வறுமையில் தள்ளி யிருப்பதைக் காட்டுகிறது. ஒரு பக்கம் ‘ஒளி ரும் இந்தியா’ உருவாகி இருக்கும் அதே சம யத்தில், அவ்வாறு உருவாவதற்கு ‘அவதிக் குள்ளாகி இருக்கும் இந்தியா’வும் நேரடிக் காரணமாக அமைந்திருக்கிறது.

தாராளமயக் கொள்கைகளுக்கு வக்கா லத்து வாங்குபவர்கள் ஒன்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகளின் சர்வதேச ஏஜெண்டாக விளங்கும் சர்வதேச நிதியம் (ஐஆகு), இந்தியா குறித்து 2010இல் ஓர் ஆய்வினை மேற்கொண் டது. அந்த ஆய்வில் அது, இந்தியாவில் மக் களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு கடுமை யாக அதிகரித்திருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் ஏற்றத்தாழ்வின் இடைவெளி மிகவும் அதிகமான அளவிற்கு உயர்ந்திருப்பதாக அது சுட்டிக்காட்டியிருக் கிறது. ஆட்சியாளர்கள் மீது இதைவிடக் கடு மையான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்க முடியாது.

நவீன தாராளமயக் கொள்கைகளைக் கொண்டுவந்ததற்காக டாக்டர் மன்மோகன் சிங் பாராட்டப்படுவது தொடர்ந்தபோதிலும், இதனை முதலில் கொண்டுவந்தபோது நிதி அமைச்சராக இருந்தவர் அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்கள்தான். உண்மை யில் அதே நரசிம்மராவ் அரசாங்கம் முடிவுக்கு வந்த கடைசி ஆண்டில், “சீர்திருத்த நட வடிக்கைகள் மக்களுக்கு உணவு, வேலை, குடியிருப்புவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் அளிக்கும் உரிமைகள் எதையும் உத்தரவாதப்படுத்தவில்லை” என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். 1995 மார்ச் மாதத்தில் கோபன்ஹேகனில் நடை பெற்ற சமூக வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் (றுடிசடன ளுரஅஅவை கடிச ளுடிஉயைட னுநஎநடடியீஅநவே) அவர் பேசுகையில், ‘‘நாங்கள் மேற் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சிலவற்றில் நாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. எனவே நாங்கள் மற்றொரு பக்கத்திற்கு - சந்தைப் பொருளாதாரத்திற்கு தாவிக் கொண் டிருக்கிறோம். இது தொடர்பாக நாடுகளின் மத்தியில் உத்வேகம் ஏற்பட்டிருக்கும் அதே சமயத்தில், சந்தையின் ஏற்ற இறக்கத்திற் கேற்ப ஏழை மற்றும் நலிவடைந்தவர்கள் கடு மையாக ஓரங்கட்டப்படுவதைத் தவிர்த்திட ஏதாவது செய்தாக வேண்டும்” என்று கூறி னார்.

மேலும், வறுமையை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாடு ஆகிய அடிப்படைப் பிரச்சனை களும் போதுமான வள ஆதாரங்களின்றி தீர்வு கண்டிட முடியாது என்றும் அன்றைய பிரதமர் கூறியிருக்கிறார்.

மக்களுக்கு இத்தகையதொரு பொருளா தார மற்றும் சமூக முன்னேற்றத்தைத் தற் போதைய நவீன தாராளமயக் கொள்கைகள் மூலம் எய்துவது என்பது சாத்தியம்தானா?

இவற்றை அடைந்திட வேண்டுமானால் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு, சுகா தாரம் மற்றும் கல்வி அளிக்கக்கூடிய வகை யில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின் றன. மேலும் நாடு முழுவதும் நிலம் கையகப் படுத்தல் காரணமாக மக்கள் தங்கள் நிலங் களிலிருந்து வெளியேற்றப்படுவது போன்ற நிலைமைகளிலிருந்தும் மக்களுக்கு பாது காப்பு அளிக்கப்பட வேண்டிய நிலை உருவாகி யிருக்கிறது. நவீன தாராளமயத்தின் முத்திரை களில் ஒன்று, கொள்ளை லாபம் ஈட்டுவதற் காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களைக் கையகப் படுத்து வதாகும். இவ்வாறு “விவசாயிகளிடமிருந்த நிலங்களைக் கையகப்படுத்தி மூலதனக் குவி யலை ஏற்படுத்துவதென்பது” ஓர் அமெரிக்க அறிவுஜீவி வரையறுப்பதைப்போல, முதலா ளித்துவ வளர்ச்சி வரலாற்றில் புதிதொன்றும் இல்லை. 19ஆம் நூற்றாண்டில் தொழிற் புரட்சி ஏற்பட்ட சமயத்தில் ஐந்து கோடிக்கும் மேற் பட்ட மக்கள் தங்கள் நிலங்களை இழந்து ஐரோப்பாவிலிருந்து அன்றைக்கு சுதந்திர உலகமாக (`கசநந றடிசடன’) இருந்த அமெரிக்கா வுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந் ததை நினைவுகூர்க. ஆனால் இன்றைய தினம் அவ்வாறு நிலங்களை விட்டு வெளி யேற்றப்படுபவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கள் இல்லாததால், அவர்கள் வறுமைக் குழிக் குள் தள்ளப்படும் கொடுமை நடைபெறுகிறது. தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டமானது மாற்றப்பட வேண்டும் என்று இடதுசாரிகள் கோரி வருகிறார்கள். நாம் முன்வைக்கும் புதிய சட்டத்தின்படி, நிலங் களை இழப்பவர்களுக்குப் போதிய அளவு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு அளிப்ப தோடு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பு உயரும்போது, முந்தைய உரிமையாள ருக்கும் அதில் உரிய பங்கு அளித்திட வேண் டும். மேலும், நில முதலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் மாபியா கும்பலின் பிடியிலிருந்து விடுவிக்கக்கூடிய வகையில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும் புதிய சட்டம் அமைந்திட வேண்டும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும், கல்வி உரிமைச் சட்டத்தையும் கொண்டுவர போதுமான வளஆதாரங்கள் இல்லை என்று அரசுத்தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறுவது அபத்தம் மட்டுமல்ல, நவீன தாராளமயக் கொள்கைகள் வசதி செய்து கொடுத்திருப்பதை அடுத்து, கோடி கோடியாய் கொள்ளையடிக்கக்கூடிய அளவில் மெகா ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய காலத்தில் இது மோசடியான ஒன்றுமாகும். என்ன வளம் இல் லை இந்தத் திருநாட்டில்? இவ்வளங்களைக் கொள்ளையடித்துவரும் ஊழல்கறைபடிந்த அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கம்-வர்த்தகப்பேர்வழிகள்-கார்ப்பரேட் ஊடகங் களுக்கு இடையேயான பிணைப்பின் காரண மாக இவற்றை நிறைவேற்றக்கூடிய அரசியல் உறுதிதான் நாட்டில் இல்லை.

நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு துன்ப துயரங்களைத்தான் கொண்டுவந்திருக்கின்றன. இப்போது ஆட்சி யாளர்கள் சில்லரை வர்த்தகத்திலும் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டைக் கொண்டு வர அனுமதிக்கப் போவதாகக் கூறிக்கொண்டி ருக்கிறார்கள். இது சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைச் சூறையாடிவிடும். மக்களுக்குத் தற்போதுள்ள சமூகப் பொருளாதார வாழ்வையும் பறித்து அவர்களை மேலும் மிகப் பெரிய அளவில் துன்பத்திற்குள்ளாக்கிவிடும்.

எனவே இப்போது செய்ய வேண்டியது என்னவெனில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்க மானது இத்தகைய நவீன தாராளமயக் கொள் கைகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து முறி வினை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய விதத் தில் மக்கள்இயக்கங்கள் மூலமாக நிர்ப்பந் தத்தை ஏற்படுத்திட வேண்டும். நாட்டின் வளங்கள் மேலும் கொள்ளை போகாது தடுப் பதற்கும், நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட் டுள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் இது மிகவும் அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com