Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 2 August 2011

மதுரையில் தனியார் பள்ளிகயின் அட்டுழியம் !

0 comments
நன்கொடை தராத குழந்தைகளுக்கு  வகுப்பு நேரத்தை குறைத்த   தனியார் பள்ளி
  மதுரை,ஆக.1-
நன்கொடை தராத குழந்தைகளுக்கு வகுப்பு நேரம் குறைக்கப்பட்டு மாணவர்களிடம் பாரபட் சம் காட்டும் பள்ளியின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித் துள்ளது.இது பற்றிய விபரம் வரு மாறு:
மதுரை வீரபாஞ்சானில் உள்ள தனியார் பள்ளி ஒன்று நீதிமன்றத்தில் அளித்த ஒப்பந்தத்தை மீறி அனைத்து பெற்றோர்களி டமும் கட்டாய நன்கொ டையை ஆரோக்கியா வெல்பேர் டிரஸ்ட் என்ற பெயரில் வசூலித்து வருகி றது. நன்கொடை தராத குழந்தைகளுக்கு வகுப்பு நேரம் குறைக்கப்பட்டும், பள்ளி செய்ய வேண்டிய பல கடமைகளை நன் கொடை தந்தால் மட்டுமே செய்யமுடியும் என அறி வித்து உள்ளது.நன்கொடை தராத குழந்தைகளுக்கு பிற்பகல் 12.30 மணியுடன் வகுப்பை முடித்து விடுவதாகவும், மற்றவர்களுக்கு மாலை 4.30 வரை வகுப்பு நீட்டித்து நடத்துவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் நன் கொடை தராத மாணவர் களின் கல்வியில் பாரபட் சம் காட்டும் பள்ளியின் மீது நடவடிக்கை கோரி மதுரை யைச் சேர்ந்த சௌமியா என்பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு வை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நன்கொடை தராத மாணவர்களுக்கு பாரபட் சம் காட்டக்கூடாது. இம் மாணவர்களுக்கு 12.30 மணி யுடன் வகுப்பை முடிக்கக் கூடாது.மேலும் ஆரோக் கியா வெல்பர் டிரஸ்ட் பள்ளியில் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனக் கூறி , பள்ளியின் இந்த நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.தொடரும் விதி மீறல்நன்கொடை கொடுக் காத குழந்தைகள் பாகுபாட் டுடன் நடத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் நடந்துவருகிறது. இது குழந் தைகளின் உரிமை மீறிய செயலாகும், இந்திய கல்வி உரிமைச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.இப் பள்ளியின் விதி மீறல் குறித்து கல்வித் துறைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன் மைக்கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ன் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com