Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 1 August 2011

ஊதிய வெட்டை ஏற்க மாட்டோம்-அமெரிக்க ஆசிரியர்கள் போர்க்கொடி

0 comments

தங்கள் ஊதியத்தில் மேற் கொள்ளப்படும் வெட்டு மற்றும் மருத்துவ நலனுக்கான செலவை அதிகரிப்பது ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க மாகாண மான மிச்சிகன் அரசு ஆசிரி யர்கள் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.இந்த மாகாணத்தின் மிகப் பெரிய நகரான டெட்ராய்ட்டில் உள்ள ஆசிரியர்கள் பெரும் பேரணி ஒன்றையும் நடத்தியுள் ளனர். அவர்களின் ஊதியத் தில் பத்து விழுக்காடு வெட்டப் பட உள்ளது. இது கடுமையான நடவடிக்கைகள்தான் என்று அரசுப்பள்ளிகளின் நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான ராய் ராபர்ட்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கடுமையான நிதி நெருக்கடி என்று காரணம் கூறியுள்ளது நிர்வாகம். இந்த நெருக்கடி பெரும் நிறுவனங் கள் மற்றும் பணக்காரர்கள் மீது கைவைக்காதது ஏன் என்று பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி னர். மிச்சிகன் மாகாணத்தின் பட்ஜெட்டில் பெரும் துண்டு விழுவதை சமாளிக்க எங்கள் தலையில் கை வைப்பதை விட்டுவிட்டு, நெருக்கடியைப் பயன்படுத்தி கொழுத்த லாபத்தை சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரியை அரசு போட வேண்டும் என்பது அரசு ஆசி ரியர்களின் கருத்தாக உள்ளது.
                                    அரசுப்பள்ளிகளுக்கு செல விடப் போதிய பணமில்லாத தால் இந்த செலவு வெட்டு நட வடிக்கைகளை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என் கிறார் ராய் ராபர்ட்ஸ். ஆனால் இதை ஒப்புக்கொள்ள மறுக்கி றார் ஆசிரியர்கள் சங்கத்தலை வர்களில் ஒருவரான கெய்த் ஜான்சன். ஒவ்வொரு ஆசிரிய ருக்கும் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்ப தால் இந்த செலவு வெட்டு நட வடிக்கைகளை ஒப்புக்கொள் ளவே முடியாது என்கிறார் அவர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com