Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 4 August 2011

சமச்சீர் கல்விப் போராட்டம் 90 சதவீத மக்களின் போராட்டம்-முனைவர் வசந்திதேவி பேச்சு

0 comments


மதுரை, ஆக.3-

சமச்சீர்கல்விக்கான போராட்டம் இரண்டு அர சியல் கட்சிகளுக்கு இடை யிலான போர்க்களம் அல்ல. 90 சதவீத மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சார்ந்த போராட்டம் என முனைவர் வே.வசந்தி தேவி கூறினார்.மதுரையில் புதனன்று கல்விக்களத்தில் தமிழக அரசு செய்யவேண்டியது என்ன? என்பது குறித்தான சென்னைப் பிரகடனம் மற்றும் ஆவணத் திரைப் படம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முனைவர் வே.வசந்திதேவி பேசிய தாவது:

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் 2009ஆம் ஆண்டில் தான் கல்வி உரிமைச்சட்டம் நிறைவேறியிருக்கிறது. 2010ல் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் இயங்குவதற்கான அறிகுறியே இல்லை. எனவே இச்சட்டம் முழுமையாக உடனடியாக நிறைவேற் றப்பட வேண்டும். கல்வி கற்பிப்பதற்கு கட்டணம் என்பது வந்துவிட்டால், அது வர்க்கத்திற்கான கல் வியாகத்தான் இருக்கும். கல்வி வியாபாரம் இங்கு நடப்பது போல் வேறெங் கும் கிடையாது. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தமிழ கத்தில் சிவகங்கை, வேலூர், ஈரோட்டின் ஒரு பகுதியில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வு தமிழகப் பள் ளிகளின் வெட்கக் கேடான நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. கழிப்பறை கூட கட்டிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.தமிழகம் கல்வியில் முன் னணியில் இருக்கிறது என்ற மாயை பரப்பப்பட்டு வரு கிறது. இந்த மாயை எனும் முகமூடியை நாம் கிழித் தெறிய வேண்டும். 2005ம் ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு, 5ம் வகுப்பு படித்த 65 சதவீத மாணவர்கள் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க முடியவில்லை எனத் தெரி விக்கிறது.

கியூபா நாட்டில் கல் விக்கு 11 சதவீதம் ஒதுக்கப் படுகிறது. இன்றைக்கு கியூபா எழுத்தறிவின்மை இல்லாத நாடாக மாறி நிற் கிறது. ஆனால் இந்தியா வில் 3 சதவீதம் முதல் 3.5 சதவீத நிதியே கல்விக்காக ஒதுக் கப்படுகிறது. கல்விக்கு நிதி யை கூடுதலாக ஒதுக்க வேண்டும். அரசுப்பள்ளி கள் கல்வித்துறை அதிகாரி களின் கையில் உள்ளது. இந்த அதிகாரத்தை பள்ளி-நிர்வாகக் குழு என்ற அமைப் பிடம் அளிக்கவேண்டும். பள்ளி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அக்குழுவிற்கு அளிக்கப்பட வேண்டும். கல்வியில் சமத்துவம் கிடைத்தால் தான் அனைத் துத் துறைகளிலும் நாம் முன்னேற முடியும். சமச்சீர் கல்வி என்ற விஷயம் இன் றைக்கு அனைவரும் விவா திக்கக் கூடிய ஒரு பொரு ளாக மாறி நிற்கிறது.சமச்சீர்கல்விக்கான போராட்டம் இரண்டு அர சியல் கட்சிகளுக்கு இடை யிலான போர்க்களம் அல்ல. 90 சதவீத மக்கள் அவர் களின் குழந்தைகள் சார்ந்த போராட்டம் ஆகும்.இவ்வாறு அவர் கூறி னார்.மனித உரிமைக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்தி ருந்த இந் நிகழ்ச்சிக்கு மூட்டா முன்னாள் பொதுச்செயலா ளர் பேரா. ப.விஜயகுமார் தலைமை வகித்தார். முன் னாள் சட்டமன்ற உறுப் பினர் என்.நன்மாறன், ஜன தாதளம் பொதுச்செயலா ளர் க.ஜான்மோசஸ், பிம்லா சந்திரசேகர், ஜிம் ஜேசு தாஸ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் தலைவர் கே.ஏ. தேவராஜன், மூட்டா தலை வர் பேரா. விவேகானந்தன், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப் புப் பிரதிநிதி ஹென்றி திபேன், மனித உரிமைக் கல்வி நிறுவன இயக்குநர் இ.தேவசகாயம், இந்திய மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கண்ணன், பேரா. இராஜ மாணிக்கம், முதுகலை பட் டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த கே.பி.ஒ. சுரேஷ் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஏற் புரை நிகழ்த்தினார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com