சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துக! தமிழகம் முழுவதும் மாணவர்கள் கிளர்ச்சி
சென்னை, ஜூலை 26-
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். சமச் சீர் பள்ளிக் கல்வியை நடப்பு கல்வி யாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திற்கான வழிகாட்டுதல் நெறிமுறை களை வகுக்க வேண்டும் என்ற கோரிக் கைகளை முன் வைத்து ஜூலை 26 அன்று தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத் திருந்தது.
அதையேற்று செவ்வாயன்று தமிழ கம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் மாணவ-மாணவியர்கள் வகுப் புகளை புறக்கணித்து எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சென்னை, பெரம்பூர் சென்னை மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்தனர். சென்னை பச் சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் தில் மாநிலச் செயலாளர் ராஜ்மோகன். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். சென் னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மாநிலத் துணைத்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கந்த சாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராம் குமார் தலைமையில் போராட்டம் நடத் தினர். வட சென்னை தியாகராய கல் லூரியில் வகுப்புகளை புறக்கணிக்க திட்டமிட்டிருந்தனர். அதையொட்டி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். கீழையூர், திருக்குவ ளை, மணக்குடி, திருக்கடையூர், மயிலா டுதுறை, கிட்டப்பா நகராட்சி மேல் நிலைப்பள்ளி, தியாகி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி, சங்கரன்பந் தல் அரசுப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி, குடந் தை அரசு மகளிர் கலைக் கல்லூரி, சோழபுரம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் திரு.வி.க. கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். குளிக் கரை, அம்மையப்பன், கொர டாச்சேரி ஆகிய அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி அரசு சட்டக்கல் லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட் டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ராசிபுரம் திருவள்ளு வர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலைக்கல்லூரி மாண வர்கள் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுப்பட்டனர். முன்ன தாக ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட தயா ரான மாணவர்களை கல்லூரி முதல்வர் மிரட்டியபடி கல் லூரி கதவுகளை பூட்டினார். மாணவர்களின் போராட்டத் தால் கதவுகள் திறக்கப்பட் டன.
திண்டுக்கல் மாவட்டத் தில் பழனியாண்டவர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் போராட்டத் திற்கு தலைமையேற்க சென்ற திண்டுக்கல் மாவட்டச் செய லாளர் முருகேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
மதுரை மாநகரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல் லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். சமயநல் லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர்.
சேலம் சவன் ஆர்ட்ஸ் கல் லூரி மாணவர்கள் ஆயிரக்க ணக்கானோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத் தினர். வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் 200 பேர் கைது செய் யப்பட்டனர்.
பாண்டிச்சேரியில் 14 பள் ளிகளில் மாணவர்கள் வகுப் புகளை புறக்கணித்து போரா ட்டம் நடத்தினர்.
தாகூர் கலைக்கல்லூரி, சமுதாயக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாண வர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட் டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் அரசு கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து பேரணி யும், ஆர்ப்பாட்டமும் நடத்தி னர். ராஜபாளையம் ராஜீவ் கல் லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து சமச்சீர் கல்வி கேட்டு சாலை மறிய லில் ஈடுபட்டனர். 150 மாண வர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத் தில், சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியில் வகுப்புகளை 1700 மாணவ-மாணவிகள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் திரு வள்ளுவர் கல்லூரி, சங்கரன் கோவில் மனோ கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி மற்றும் நெல்லை அரசு சட்டக்கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத் தில் இலட்சுமிபுரம் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்தனர். மூர்க் கன் மேல்நிலைப்பள்ளி, குல சேகரம் அரசுமேல்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி உள் ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்தனர். குமரி மாவட்டத்தின் பல பள்ளி களில் வகுப்புகளை புறக்க ணித்த மாணவர்களை மிரட்டி காவல்துறையினர் திரும்பவும் பள்ளிகளுக்குள் அனுப்பினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு கலைக்கல் லூரி, திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். வேலூர் மாவட்டத்தில் குடி யாத்தம் அரசு கலைக்கல்லூரி மாணவர்-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தென்னா மூர் அரசு கல்லூரி மாணவர் களும் வகுப்புகளை புறக்க ணித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப் புகளை புறக்கணித்து மாண வர்கள் போராட்டம் நடத்தினர். குடியாத்தம் நகராட்சி மேல் நிலைப்பள்ளி, நகராட்சி உயர் நிலைப்பள்ளி, நெல்லூரி பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஜோதி உயர்நிலைப் பள்ளி, வள்ளலார் உயர்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, நேஷனல் மேல்நிலைப் பள்ளி, திருவள் ளுவர் மேல்நிலைப்பள்ளி, தட் டாம்பாறை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் வகுப்புகளை புறக்க ணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். குடியாத்தம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்க ணித்தனர்.
இந்திய மாணவர் சங்கத் தின் மாநில அளவிலான அறை கூவலை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு பலத்த காவல் போடப் பட்டிருந்தது. பல கல்விநிலை யங்களில் மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்த போதும் காவல்துறையினர் மாணவர் களை மிரட்டி கல்வி நிலை யத்திற்குள் அனுப்பி கதவு களை பூட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் உத் தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும், இரண்டு மாத மாக பாடங்கள் நடத்தாததைக் கண்டித்தும், நடந்த போராட் டத்தில் ஜனநாயகப்பூர்வமாக அணிதிரண்ட மாணவர்களை காவல்துறை மிரட்டி தடுத் துள்ள மோசமான செயலை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையி னரின் ஜனநாயக விரோத அடக்குமுறையையும் மீறி, தமிழகத்திலும், பாண்டிச் சேரி யிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
இந்திய மாணவர் சங்கத் தின் அறை கூவலை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மாநிலக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி றோம் என்று மாணவர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சமச்சீர் கல்வியை அமுல்படுத்த கோரி புதுவை முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் குறித்து
ஏறக்குறைய 6000க்கும் மேற்பட்ட பள்ளி , கல்லூரி மாணவர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் வகுப்புகளை

புறக்கணித்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர் .