Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 20 July 2011

அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எஸ்எப்ஐ வேண்டுகோள்!

0 comments
திண்டுக்கல், ஜூலை 19-

சமச்சீர் கல்விதொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் அனைத்துப் பள்ளி - கல்லூரி மாண வர்களும் பங்கேற்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் கள் கனகராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடைபெறாத சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்த எல்லா குழப்பங்களுக்கும் முடிவு கட்டும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

அனைத்து மாணவர்களையும் விட 10ம் வகுப்பு மாணவர்கள் தான் இந்த காலக் கட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசின் இந்த போக்கால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். எனவே உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு பதிலாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்போவதாக அறிவித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமி ழக அரசின் இந்த நடவடிக்கையை இந்திய மாண வர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் வருகிற 22ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநில அளவில் பல் வேறு விதமான போராட்டங்களை நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த போராட் டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com