Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 13 July 2011

அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த பயன்களை பெரும்பான்மை மக்களால் நெருங்க முடியவில்லை

0 comments
சென்னை, ஜூலை 12-

நாட்டில் உள்ள மக்க ளில் பெரும்பாலான பிரிவி னருக்கு அடிப்படை உத்தர வாத விதிமுறையை பயன் படுத்த முடியாத நிலை உள் ளது என வரலாற்று ஆய் வாளரான கே.என்.பணிக்கர் கூறினார்.

சென்னையில் ஆசியன் இதழியல் கல்லூரி யின் 2012ம் ஆண்டின் துவக்க வகுப்பு நிகழ்ச்சியில் வர லாற்று ஆய்வாளரும் கேரள உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவருமான கே.என். பணிக்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகை யில், அரசியலமைப்பு கவ ரக் கூடிய வகையில் ஜனநாயக உரிமைகளை அளித்துள்ளது. அந்த ஜனநாயக உரிமை களை பரவலாகவும் வர வேற்கப்பட்டுள்ளது. பல் வேறு அடிப்படை அரசி யலமைப்பு உத்தரவாதங் களை இன்னும் நாட்டின் பெரும்பாலான பிரிவின ரால் பயன்படுத்த முடிய வில்லை. இந்திய ஜனநாய கம் கொள்கை மற்றும் குறிப்புகள் அடிப்படையில் உருவாகியுள்ளது. ஆனால், பொதுவிதிகளுக்கும் செயல் பாட்டுக்கும் பெரும் இடை வெளி உள்ளது என்றார்.

இந்த இடைவெளியோ முழுமையாக இணைக்கப் படாவிட்டாலும் அதன் அளவு குறுகுவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட வேண் டும். மக்களிடம் தொடர்ந்து பேசி, கருத்து கேட்டு தீர்வு காணப்பட வேண்டும். இது வரை 95 சட்டத் திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால், அடிப் படை உத்தரவாத உரிமைச் சட்டம், பார்க்கப்படாத நிலையில் உள்ளது. ஆட் சிக்கு அடுத்தடுத்து வருகிற அரசுகளில் உயர் சமூகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்பு அளிப்பதாக உள்ளது. தற்போது அவை பல கோடி ரூபாய் மதிப் புள்ள நபர்கள் கூடும் கிளப் பாக உள்ளது.

சாதாரண குடிமகன் தேர்தலில் தனித் திறனுடன் போராட முடியாத நிலை உள்ளது. ஜனநாயகத் தேர் தலும் அதிக செலவு செய் யக் கூடியதாக ஆகிவிட் டது. இந்திய நாகரிக வளர்ச் சியில் பல்வேறு சமூக கலாச் சாரமே நாட்டின் வலிமை யாக உள்ளது. கலாச்சார சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அது இல்லாத பட்சத்தில் பலர் முக்கியத் துவ வாழ்க்கை நிலையில் விலக்கி வைக்கப்படும் சூழலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மதச்சார்பற்ற அரசியலில் மதம் சார்ந்த குறுக்கீடு அதிகரித்து வரு கிறது. இவ்விஷயத்தில் அர சின் சமரசப் போக்கால் இந் திய ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பொருளாதார சம உரிமை குறித்து கே.என். பணிக்கர் கூறுகையில், நவீனமயமாக்கத்தின் வேட் கை யில் தாராளமய மக்கள் எதிர்பார்க்கப்பட்டது, இந்த தாராளமயமாக்கலில் உள் உலகம் வசதி வாய்ப் புகளுடனும் வெளி உலகம் வறுமையிலும் வாடிக் கொண்டு இருக்கும் வகையில் நாடு துண்டாடப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com