Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 29 July 2011

காற்று, இப்போது மாறி வீசுகிறது...

0 comments
-கே.எஸ்.கனகராஜ்
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடை முறைப்படுத்திட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தக விநி யோகத்தை உடனே துவக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம்  மற்றும்  புதுவையில் முழுவதும் ஜூலை 26 அன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத் திருந்தது. அதை ஏற்று தமிழகம் முழுவதும் (ஜூலை 26) அன்று சென்னை துவங்கி கன் னியாகுமரி வரை பள்ளி, கல்லூரி மாணவர் கள் பெருமளவில் வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வகுப்பு புறக்கணிப்பு பற்றிய செய்திகள் வந்தவண் ணம் இருந்தபோது, திமுக தலைமைக் கழ கம் தனது போராட்ட அறிவிப்பை வெளியிட் டது. சமச்சீர் கல்வியை பாதுகாக்க வரும் ஜூலை 29ல் மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக வும், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக இந்தப் போராட்டம் எனவும், மாணவர்கள், ஆசிரியர் கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தரவேண் டும் எனவும் திமுக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பையொட்டி சில கேள்வி கள் எழுகின்றன?

இதுவரை திமுக மாணவரணி சமச்சீர் கல்விக்காக போராட்டம் நடத்தாதது ஏன்?

‘பல்வேறு அமைப்புகளின் போராட்டத் திற்கு வலுச்சேர்க்கவே இந்தப் போராட்டம்’ என்றால், அறிவிப்பு வெளியானவுடன், கலை ஞர் செய்திகள் தொலைக்காட்சியில், அது வரை காட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத் தின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டு, ஏதோ மாணவர் திரள் தன்னெழுச் சியாய் போராட்டம் நடத்தியதுபோல் காட்டப் பட்டதே ஏன்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை அவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறுகின்றது. இப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்திற்கு இக்கூற்றில் உடன்பாடில்லை. தனியார்மயத்திற்கு ஆதரவான நிலைபாடே இதற்குக் காரணம். பல தனியார் பள்ளி நிர்வா கங்களின் நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.

சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என, அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.

ஆட்சியிலே இருந்தபோது திமுகவும், இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தது.

இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான். மாநிலம் முழுவதும் பயணம் செய்து, விரி வான ஆய்வு நடத்தி, ஏற்றத்தாழ்வான தமிழ கத்தின் பள்ளிக்கல்வி முறையை சீரமைக்க சமச்சீர் பள்ளிக்கல்வி முறை பற்றிய தனது அறிக்கையை 2007 மார்ச்சிலேயே தமிழக அரசுக்குக் கொடுத்தது முனைவர் முத்துக் குமரன் குழு.

முனைவர் முத்துக்குமரன் குழுவின் 109 பரிந்துரைகள் பற்றியும், அதில் தமிழக அரசு ஏற்று செயல்படுத்துவன எவை? நிராகரிப் பவை எவை? என்பது குறித்தெல்லாம் விரி வான அளவில் தனிசட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டுமென கோரிக் கை வைத்தது இந்திய மாணவர் சங்கம். திமுக அரசு அதைக் காதில்கூட வாங்க வில்லை.

2007 செப்டம்பரில், சென்னையில், முனைவர் முத்துக்குமரன் குழுவின் பரிந் துரைகளில் ஏற்றுக்கொள்ளத்தக்கவை எவை? நிராகரிக்க வேண்டியவை எவை? என்பது குறித்த கருத்தரங்கை இந்திய மாண வர் சங்கம் நடத்தியது. அதில் தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்கள், ஆசிரியர் இயக்கத் தினர், அறிவியல் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். கருத்தரங்க தீர்மானம் விரிவான அளவில் அவ்வாய்வறிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசுக் கும் அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்கு பிறகும் சட்டமன்றத்தில் விவா திக்கவில்லை. மாறாக, விஜயகுமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சமச்சீர் குழுவின் அறிக்கை ஆய்வு செய்யப் பட்டது. அதன்பிறகு பிற மாநிலங்களில் பள் ளிக்கல்வி குறித்து ஆராய மீண்டும் விஜய குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக் கப்பட்டது. ஒரே நேரத்தில், இந்நோக்கங் களுக்கான குழுக்களை அமைத்திருக்கலாம். ஆனால், காலதாமதப்படுத்தும் நோக்கமே அதில் விஞ்சி நின்றது.

அடுத்தடுத்த இரு குழுக்களும் 2008ல் அறிக்கையை தந்துவிட, அதன்பின் கிணற் றில் போட்ட கல்லானது முத்துக்குமரன் குழுவின் அறிக்கை. 2009, ஜூன் மாதம் 5ம் தேதி சமச்சீர்கல்வி கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டது மாணவர் சங்கம். ஜூன் 7ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னும் கேளாக் காதினராய் திமுக அரசு இருந்த தால்தான் 2009, ஜூலை 14ல் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

அமைதியான பேரணி மீது கடுந்தாக் குதலை ஏவிவிட்ட திமுக அரசு, ஏதோ ஆயுதந் தாங்கி சட்டமன்றத்தில் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாய் பொய்யைப் புனைந்தது.

மாணவர் சங்க தலைவர்களின் மண்டை யை உடைத்து, கை கால்களை முறித்தது மட்டுமல்லாது, பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குகளை புனைந்தது. சட்டமன்றத்தில் திமுக தலைவரும் முதல்வருமான கலைஞர் ‘சமச்சீர் கல்விக்காக அவசரப்படக்கூடாது. அதனால், சிலர் பாதிக்கப்படுவார்கள். யாரும் பாதிக்காமல் அதை நிறைவேற்ற காலதாமதம் ஆகும்’ என்று நா கூசாமல் சொன்னார்.

சீரான, சமமான மற்றும் தரமான கல்வி முறை கொண்டுவந்தால் பாதிக்கப்படப்போ வது யார்? இதர மாநிலங்களில் பள்ளிக்கல்வி முறை அப்படித்தானே இருக்கிறது. தமிழகத் தில் மட்டும் யார் பாதிக்கப்படுவார்கள்? இந்த கேள்விக்கு விடை சொன்னதே இல்லை திமுக.

தேச வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான ஒன்றான பள்ளிக்கல்வியை மிக மோசமான வியாபாரமாக ஆக்கியிருக்கின்ற கல்வி வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான கரிச னத்தாலேயே, சமச்சீர் கல்வியை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காலம் தள்ளிப் போட்டது திமுக அரசு.

2009ல் சமச்சீர் பள்ளிக் கல்விக்கான அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும், சமநிலையை குலைத்துவந்த நான்குவித வாரியங்கள் கலைக்கப்படவில்லை. மெட்ரிக் பள்ளி வாரியத்திற்கான அதிகாரங்கள் அப் படியே தொடர்ந்தன.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படவில்லை. பள்ளிக் கல்விக்கென, பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தஸ்தில் ஒரு தலை வரைக்கொண்ட தன்னாட்சிக்குழு அமைக் கப்பட வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை கண்டுகொள்ளப்படவே இல்லை. இவற்றை யெல்லாம்விட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு, காலி ஆசிரியர் பணியி டம் நிரப்புவது, மாணவர் எண்ணிக்கைக் கேற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் உரு வாக்குதல் போன்ற அடிப்படை பிரச்சனைக்கு திமுகவின் சமச்சீர்கல்வி சட்டம் முகம் கொடுக்க மறுத்தது.

2009, சமச்சீர் கல்விக்கான அவசர சட் டப்படி அமைக்கப்படப் போவதாக சொன்ன கண்காணிப்புக்குழுவின் 13 உறுப்பினர்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதிநிதித் துவமே இல்லை. 7 அரசு அதிகாரிகள், 3 நியமன கல்வியாளர்கள், 3ஆசிரியர்கள் அதில் மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்தியன், ஓரி யண்டல் பள்ளிக்கு என தலா ஒரு ஆசிரியர் என குழு அமைப்படும் என்று சட்டம் சொன் னது. தமிழகத்தின் 80 சதவிகித மாணவர் களை பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு அதில் இடமில்லை. கிட்டத்தட்ட அதிமுக அரசு அமைத்த நிபுணர்குழு போலவே.

அதே நேரத்தில் பொதுப்பாடத்திட்டம், ஒரே தேர்வு முறையும் வரவேற்கத்தக்கன. அது சமச்சீர் கல்வியின் முதல்படி என மாண வர் சங்கம் குறிப்பிட்டது. ஆனால், முதல்படி யிலேயே அமர்ந்துகொண்டது அரசு. அடுத் தடுத்த படிகளில் கால்வைக்க முயற்சி எடுக்க வில்லை. காரணம், சகவாச தோஷம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தது முதல் மத்திய காங்கிரஸ் அரசின் பொருளா தாரக் கொள்கைகளையே தனது கொள்கை களாய் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியது திமுக.

தாராளமயக் கொள்கைகளின் தாக்குத லான கல்வி வியாபாரத்திலிருந்து தமிழக மக் களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க திமுக அரசு தவறியது. அதனால் தான் சமச்சீர் பள்ளிக் கல்வியை நடை முறைப்படுத்த உறுதியான நடவடிக்கை களை எடுக்காமல், கல்வி வியாபாரிகளின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி தயங்கி நின்றது.

கல்வித்துறை மட்டுமல்லாது தமிழகத் தின் விவசாயம், தொழில்துறை, சுகாதாரம் என சகலதுறைகளும் நெருக்கடியில் சிக்கி வீழ் வதற்கு தாராளமயம் காரணமாக இருந்தது. ஊழல்களும், நில அபகரிப்பும் தாராளமயத் தின் குழந்தைகளே. திமுகவின் செயற்குழு விற்கும், பொதுக் குழுவிற்கும் இந்த உண்மை இன்னமும் புலப்படவில்லை.

தமிழகத்தின் பள்ளிக்கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் தாராளமயக் கொள்கைகளால் தடம்புரண்டு நிற்கின்றது. ஆட்சியிலிருக்கும் போது, கல்வி வியாபாரத்திற்கு சாமரம் வீசிவிட்டு, இப்போது, சமச்சீர் கல்வி கேட்டு போராட வாருங்கள் என அழைக்கும் திமுகவின் நாடகத்தை தமிழக மாணவர்கள் நன்கு அறிவார்கள்.

1967ல் திமுக ஆட்சியமைக்க மாணவர் போராட்டங்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. தனது வீழ்ச்சியை தடுக்கவும், அத்தகைய போராட்டங்கள் உதவும் என திமுக நினைக்கிறதுபோலும். காற்று இப்போது மாறி வீசுகின்றது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com