Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 19 July 2011

மாட்டுவண்டி எது? மெட்ரிக்குலேசன் பாடத்திட்டமா? சமச்சீர் கல்வி பாடத்திட்டமா?

0 comments
“ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்திவிட்டது தமிழக அரசின் க்கான ஆய்வுக் குழு” - ஆதங்கமும், வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது மூத்த கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவியின் குரலில்!
சமச்சீர் கல்வி தொடர்பான விவா தங்கள் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் நேரத்தில், அவரை சந்தித்தோம். “நீதி மன்ற விசாரணை நடந்துகொண்டு இருக் கும்போதே, புத்தகங்களை அச்சடித்து நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி யிருக்கிறது தமிழக அரசு. இப்படி ஓர் அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர் பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கை வைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர்க் கல்வித்திட்டத்தை எதிர்த்தவர்களைக் கொண்டே குழு அமைத்தது அரசு. அத னால்தான், இப்படி ஒரு மோசமான அறிக் கையை அவர்கள் தாக்கல் செய்திருக் கிறார்கள்.

‘இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுக் கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்...’ என் றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட் டுமே கொண்டு, 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்சனையே இல்லை. கல்விக் கட்டணக்கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் - நியாயமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பது தான் உண்மை!

மத்திய அரசின் கட்டாயக்கல்விச் சட் டம், ‘ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக் கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக் கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர் களுக்காக, பள்ளியில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கின்றன மெட் ரிக்குலேசன் பள்ளிகள், சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒருபடி மேலே போய், மிகவும் கண்டனத்துக்குரிய சர்க்குலர் ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி இருக் கிறது.

அதில், ‘மத்திய அரசு சட்டத்தின்படி

25 சதவிகிதம், ஏழை, பாமரக் குழந்தை களுக்கு இடஒதுக்கீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வி கற்கும் திறன் பாதிக் கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால், உங்கள் குழந்தை கள் பாழாகிவிடுவார்கள். தகுதியற்ற, ஒழுங் கீனமான குழந்தைகளை உங்கள் குழந் தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே, இந்தச்சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பள்ளியின் தாளா ளரைத்தான் சமச்சீர்க் கல்வி ஆய்வு கமிட் டியில் தமிழக அரசு நியமித்து உள்ளது. இவர்களிடம் இருந்து நியாயமான அறிக் கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முதலில், நீதிமன்றம் இந்தக்குழுவி னரிடம் சமச்சீர்க் கல்வித்திட்டம் வேண் டுமா.. வேண்டாமா? என்று கேட்கவில்லை. எந்தப் பாடத்திட்டம் தரமானது என்றுதான் கேட்டது. ஆனால் இவர்களாகவே, ‘சமச் சீர் கல்வித்திட்டம் வேண்டாம்’ என்கிறார் கள். அதைச் சொல்லவேண்டியது நீதிமன் றம் மட்டுமே!

தேசியக் கலைத் திட்டத்தில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழுதான், தேசிய அளவில் பள்ளிக்கல்விக் கான பொதுவான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் இதனடிப்படையில் மிகத்தர மான கல்வித்திட்டத்தை போதிக்கிறார்கள். இந்தக் குழுவின் வழிகாட்டுதலைக் கொண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால்,அதில் உப்புச் சப்பு இல்லாத குறைகளைக் கண்டுபிடித் துள்ளது அரசின் ஆய்வுக்குழு. மெட்ரி குலேசன் பாடத்திட்டத்தில் ஆயிரம் குறை களையும் ஓட்டைகளையும் நான் கண்டு பிடித்து சுட்டிக்காட்டவா?

‘சமச்சீர்க்கல்விப் பாடத்திட்டம், குழந் தைகள் மீதான சுமையை அதிகப்படுத்து கிறது. வயதுக்குத் தகுந்த கல்வி இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர். மெட்ரிக்குலே சன் பள்ளிகள்தான் ‘நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப் பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங் கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள்.

பத்திரிகையாளர் சோ, ‘சமச்சீர்க்கல்வி திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு’ எழுதியிருக்கிறார். அனைத்துத்துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர்க்கல்வி. மெட்ரிக்குலேசன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், ‘குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால் சமச்சீர்க்கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப்புத்தகத்தையும் படித்து, மெத்த அறிவு பெறுகிறான் மாண வன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிக்கு லேசன் பாடத்திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம், மாட்டுவண் டியா?” கேள்வியுடன் முடிக்கிறார் வசந்தி தேவி.

பதிலும் தீர்வும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com