Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 12 July 2011

ஆந்திரப்பிரதேசம் காலியாகக் கிடக்கும் “புற்றீசல்” கல்லூரிகள்!!

0 comments
“சேர்க்கைக் கட்டணம் இல்லை...

நூலகக் கட்டணம் கிடையாது...

போக்குவரத்து இலவசம்...

வீட்டு வாசலிலிருந்து கல்லூரி வரை இலவசமாக பயணிக்கலாம்...

தயவு செய்து உங்கள்

பையனையோ, பெண்ணையோ ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் சேருங்கள்...

அரசு சொல்லும் கட்டணத்தையே செலுத்தலாம்...”

என்கிற நீண்ட குறுஞ்செய்தி ஆந்

திர மாநிலத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தனியார் பொறி

யியல் கல்லூரிகள் இணைந்துதான் இந்த குறுஞ்செய்தியை அனுப்பி வரு

கின்றன.

தங்களிடம் உள்ள பொறியி

யல் படிப்புக்கான இடங்களை நிரப்ப ஆந்திராவில் உள்ள நூற்றுக்கணக்

கான கல்லூரிகள் தள்ளாட்டம் போட்டு வருகின்றன.

1990களில் அமெரிக்காவிற்கு சென்று டாலரில் சம்பளம் வாங்கலாம் என்று விளம்பரப்படுத்தி, தங்கள் கல்லாக்

களை நிரப்பிக் கொண்ட கல்லூரிக

ளில் பெரும்பாலானவை தற்போது வறட்சியாக உள்ளன. 30 ஆண்டுக

ளுக்கு முன்பு மாநிலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது ஆந்

திராவில் மட்டும் 640 (மொத்தம் 847 என்றொரு தகவலும் உண்டு!) பொறி

யியல் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்கள் கிடைக்

காமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் குறுஞ்செய்தி பிரச்

சாரம். அந்தப் பிரச்சாரத்திற்காக அனைத்துக் கல்லூரிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இக்கல்லூரிகளில் மொத்தம் மூன்று லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயிலலாம். ஆனால் மாநில அரசு நடத்திய நுழைவுத்

தேர்வில் சேர்க்கைக்குத் தகுதி பெற்ற

வர்களின் எண்ணிக்கையோ 2 லட்

சத்து 3 ஆயிரம் என்பதுதான். இத

னால் ஒரு லட்சம் மாணவர்களுக்

கான இடங்கள் கதி அபாயகரமான நிலைக்கு உள்ளாகியுள்ளது. இதில் கூடுதல் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கி

றது.

தொழில் நுட்பக்கல்விக்கான அகில இந்திய கவுன்சில், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் கூடுதல் இடங்களையும் அளித்துள்ளது. பிர

பலமான, பெரிய கல்லூரிகள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இத

னால் அக்கல்லூரிகளில் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் மீண்டும் அங்

கேயே சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற கல்லூரிகளை இது மேலும் பாதித்துள்ளது.

ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியும் தனது நிர்வாகத்திற்கான ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள இடங்க

ளில் 30 விழுக்காட்டை நிரப்புகின்

றன. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்

றாலும், பெறாவிட்டாலும் மாண

வர்கள் இந்த ஒதுக்கீட்டின்படி சேர்த்

துக் கொள்ளப்படுவார்கள். ஆண்

டுக்கு 70 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அவர்களிடமிருந்து நிர்வாகத்தால் வசூலிக்கப்படும். இத்தனைக்கும் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் என்பது

தான். போதிய அளவு மாணவர்கள் வராத நிலையில் விளம்பரங்கள் மூலம் மாணவர்களையும், பெற்றோர்களை

யும் கவருவதில் தனியார் கல்லூரிகள் முனைந்து நிற்கின்றன.

மாணவர்களைக் கவர முடியாத நிலையில் இருக்கும் கல்லூரிகளில் பெரும்பாலானவை முறையான கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்

லாதவை என்கிறார் ஆந்திர மாநில உயர்கல்வி கவுன்சில் அதிகாரியொ

ருவர். கடந்த ஆண்டுவரை, அரசு தந்த மானியத்தால் இந்த கல்லூரிகள் கூடு

தல் லாபத்தை சம்பாதித்து வந்தன. ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி முதல்வ

ராக இருந்தபோது தனியார் கல்லூரி

களில் மாணவர் சேர்க்கையை அதி

கப்படுத்த பல்வேறு வகையான மானி

யங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவற்றிற்கான காலம் தற்போது நிறைவு பெற்றுவிட்டது. தனியார் கல்

லூரி நிர்வாகங்கள் மாநில அரசிடம் மானியத்தைத் தொடருமாறு வலி

யுறுத்தி வருகின்றன.

மாணவர்கள் சேர்க்கையை முடுக்கிவிட, இலவச லேப்டாப், இல

வச புத்தகங்கள், என்றெல்லாம் கூறி அழைப்பு விட்டுக் கொண்டிருக்கின்

றன தனியார் பொறியியல் கல்லூரி

கள். தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்தக் கல்லூரிகள்(கடைகள்!) அனைத்தும் ஒன்றுசேர்ந்து இயங்கிக் கொண்டி

ருக்கின்றன. +

* கூடுதல் இடங்களை ஏற்கெனவே மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் கல்லூரிகளுக்குத்தான் தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் பரிந்துரை செய்தி

ருக்கிறது. இதனால் நிரப்பப்படாமல் இருக்கப்போகும் பொறியியல் படிப்புக்

கான இடங்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* இப்படிக் கவர்ச்சிகரமான அழைப்புகளை எல்லாம் கடந்த ஆண்டில் அளித்த கல்லூரிகளும் உண்டு. ஆனால் மாணவர்கள் சேர்ந்தபிறகு கட்டண அதிகரிப்பு மற்றும் சிறப்புக் கட்டணம் போன்றவற்றை வசூலித்து மாணவர்களுக்கு கடும் நெருக்கடி தரப்பட்டது. இதற்கு எதிராகப் பலமுறை மாணவர்கள் பெரும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com